The BSE SENSEX 79,000 CE touched ₹337 in the final minutes and collapsed to just ₹0.20 by the close, completely wiped out.
Many traders may have suffered severe losses. The reported #CAS issue is extremely critical and requires an urgent investigation, a clear explanation, and appropriate safeguards from the exchange and regulators.
#BSE #SENSEX #SEBI #OptionsTrading
"பாதாள கரண்டி"
25 வருடங்களுக்கு முன் அனைவருக்கும் நீர் ஆதாரமே கிணறுதான்!
போர்வெல் அதிகமாக வருவதற்கு முன் எல்லோர் கிணற்றிலும் பத்து அடி ஆழத்திலே தண்ணீர் கிடக்கும்.கிணறு இல்லாத வீடுகளே இல்லை எனலாம்.
போர்வெல் வருகைக்கு பிறகு கிணறுகள் மெல்ல மெல்ல அரிதாகி போனது.
தினம் யாராது ஒருவர்,ஏதாவது ஒரு கிணற்றில் தண்ணி தூக்கும் போது வாளியை,குடத்தையை உள்ளே போட்டு விடுவார்கள்.
தண்ணீரில் ஊறிப்போய் இருக்கும் கயிறு குடத்தின் பாரம் தாங்காமல் அறுந்துவிடும்.
கிணற்றுக்குள் விழுந்த வெண்கல,எவர் சில்வர் குடத்தையோ,வாளியை எடுப்பதற்கு உதவும் கருவியின் பெயர் "பாதாள சங்கிலி"
இது அப்ப எல்லோர் வீடுகளிலும் இருக்காது.யாராவது ஒரு வீட்டில்தான் இருக்கும் அதனால் கிராக்கி அதிகம்.
விழுந்த குடத்தை எடுக்க கயிறு மூலம் இதை உள்ளே விட்டால் எப்பவோ உள்ள விழுந்த குடமும் சேர்த்து வரும்.
காலம் தின்று தீர்த்த விசயங்களில் இதுவும் ஒன்று.
#பகிர்வு
குரூப்பில் வந்தது
🔴 FII DERIVATIVES REPORT | 24 JULY 2026
📊 Today’s Net OI Change
▪️ Index Futures: Net 7,765 Short 🔴
▪️ Index Calls: Net 55,677 Bought 🟢
▪️ Index Puts: Net 11,350 Sold 🟢
▪️ Stock Futures: Net 27,563 Long 🟢
▪️ Stock Calls: Net 35,067 Sold 🔴
▪️ Stock Puts: Net 12,049 Bought 🔴
🚨 Full Cumulative Positioning
STOCK DERIVATIVES
🔹 Stock Futures: Net Long 574,712
🔻 Stock Calls: Net Sold 216,735
🔻 Stock Puts: Net Bought 193,753
INDEX DERIVATIVES
🔻 Index Futures: Net Short 270,847
🔻 Index Calls: Net Sold 258,810
🔻 Index Puts: Net Bought 535,178
Index Futures Composition:
🔴 Short 91.37% | 🟢 Long 8.63%
Verdict: Today’s Index Options showed relief, but cumulative FII positioning remains heavily short and defensively hedged. Downside risk remains elevated.
✍️@AlgoBoffin
:::
`FIRE’ (Financial Independence, Retire Early) என்றால் என்ன?
சமீப காலமாக சமூக வலைதளங்களிலும், பொருளாதார விவாதங்களிலும் அதிகம் பயன்படுத்தப்படும் வார்த்தை “FIRE”. அப்படி என்றால் என்ன எதைப் பற்றி பேசுகிறார்கள் என்பதை பற்றி இங்கே பார்ப்போம்.
FIRE (Financial Independence, Retire Early) என்பது “பொருளாதார சுதந்திரத்தை அடைந்து, வழக்கமான வேலை வாழ்க்கையிலிருந்து முன்கூட்டியே வெளியேறுவது” என்ற வாழ்க்கை முறை மற்றும் நிதி திட்டமிடல் கருத்தாகும்.
இதில் இரண்டு முக்கிய நோக்கங்கள் உள்ளன:
https://t.co/zMhgIsop3P Independence (FI)
உங்கள் மாத/வருட செலவுகளை உங்கள் சேமிப்புகள், முதலீடுகள், passive income மூலம் நிரந்தரமாக நடத்தும் நிலை.
2.Retire Early (RE)
55–60 வயதுக்கு முன்பே வேலை அழுத்தத்திலிருந்து வெளியேறி, விருப்பமான வாழ்க்கையை வாழ்வது.
FIRE எப்படி செயல்படுகிறது?
பொதுவாக FIRE பின்பற்றுபவர்கள்:
• அதிக வருமானம் ஈட்ட முயற்சிப்பார்கள்
• செலவுகளை கட்டுப்படுத்துவார்கள்
• வருமானத்தின் 40%–70% வரை சேமிப்பார்கள்
• Mutual Funds, Index Funds, Stocks, Real Estate போன்றவற்றில் நீண்டகால முதலீடு செய்வார்கள்
• Passive income உருவாக்குவார்கள்
FIRE Formula (பொதுவான விதி)
உங்கள் ஆண்டு செலவின் 25 மடங்கு பணம் இருந்தால் FIRE அடைந்ததாக கருதப்படும்.
உதாரணம்:
• வருட செலவு = ₹6 லட்சம்
• FIRE Corpus ≈ ₹6L × 25
• தேவைப்படும் தொகை ≈ ₹1.5 கோடி
இது “4% Rule” அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
FIRE\ Corpus = Annual\ Expenses \times 25
FIRE வகைகள்:-
1. Lean FIRE
• குறைந்த செலவு வாழ்க்கை
• சிம்பிளான வாழ்க்கை முறை
• சிறிய corpus போதும்
2. Fat FIRE
• வசதியான வாழ்க்கை
• அதிக passive income
• பெரிய corpus தேவை
3. Barista FIRE
• Full-time வேலை விட்டு,
• Part-time / passion வேலை மட்டும் செய்வது
4. Coast FIRE
• இளமையிலேயே பெரிய முதலீடு செய்து,
• பிறகு அது வளர விடுவது
FIRE இலக்கு அடைய முக்கிய Steps:
1. செலவுகளை கண்காணிக்கவும்
2. கடன்களை குறைக்கவும்
3. Emergency Fund உருவாக்கவும்
4. SIP மூலம் தொடர்ந்து முதலீடு செய்யவும்
5. Health Insurance & Term Insurance எடுக்கவும்
6. Passive income உருவாக்கவும்
FIRE-க்கு இந்தியாவில் மக்கள் சந்திக்கும் சவால்கள்:
• பணவீக்கம் (Inflation)
• மருத்துவ செலவுகள்
• குடும்ப பொறுப்புகள்
• குழந்தைகள் கல்வி செலவு
• வருமானம் தடைப்படும் அபாயம்
FIRE விதி யாருக்கு பொருத்தம்?
• IT / Corporate வேலை செய்பவர்கள்
• Freelancers
• High-income professionals
• Early planning செய்யும் இளைஞர்கள்
முக்கியமன உண்மை என்னவென்றால் 👇🏻
FIRE என்பது “வேலை செய்யவே கூடாது” என்பதல்ல.
அது:
“பணம் தேவை என்பதற்காக மட்டும் வேலை செய்ய வேண்டாம்”
என்ற சுதந்திரத்தை உருவாக்குவது.
அதாவது, விருப்பமான வேலை, பயணம், தொழில், குடும்பம், ஆர்வங்கள் ஆகியவற்றில் நேரத்தை செலவிடும் வாழ்க்கை முறை.
——
இந்த பதிவு தகவலுக்காக மட்டுமே, FIRE பற்றி அறிந்து கொள்ள மட்டுமே பகிரப்படுகிறது.
——
Image Content: AI
#KHByte #FIRE
மாநில அரசு பத்து இலட்சம்..
விஜய் இருப்பது இலட்சம்...
காங்கிரஸ் இரண்டு இலட்சம்
மத்திய அரசு இரண்டு இலட்சம்
ஏறத்தாழ உயிரிழந்த ஒருவருக்கு தலா முப்பத்தைந்து இலட்சம்...
உசுரக் கொடுத்து பயிரை விளைவிக்கும் விவசாயி.
பாம்பு கடிச்சு செத்தா
இரண்டு இலட்சம்..
கரண்ட்ல மாட்டி செத்தா
மூணு இலட்சம்...
வனவிலங்க தாக்கி செத்தா
ஐந்து இலட்சம்...
வெளஞ்ச வெள்ளாமை வெள்ளத்தில் போனா ஏக்கருக்கு ஐயாயிரம் ரூபா..
இப்போ சொல்லுங்க நான் விவசாயம் செஞ்சு சாகவா??
இல்லை
கள்ளச்சாராயம் குடித்து சாகவா???
இல்லை
விஜயைப் பார்க்க போய்
சாகவா?
நெற்பயிர்கள் பாதிப்பு! விவசாயி மாரடைப்பால் மரணம்!
==> கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையில் காவிரிப்படுகை மாவட்டங்களான #தஞ்சாவூர் #திருவாரூர் #மயிலாடுதுறை #காரைக்கால் #நாகப்பட்டினம் மாவட்டங்களில் சம்பா, தாளடி பயிர்கள் பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளது.
வடக்கு டெல்டாவில் பல இடங்களில் அறுவடைக்கு தயாராக உள்ள சம்பா பயிர்கள் முற்றிலும் நீரில் மூழ்கி சேதம். தெற்கு டெல்டாவில் பச்சை உள்ள பயிர்களே சாய்ந்து சேதம் என விவசாயிகள் பெரும் துயரடைந்துள்ளனர்.
கடந்த 4-5 வருடங்களாக தொடர் இயற்கை இடையூறை சந்திக்கும் டெல்டா விவசாயிகளுக்கும் மாநில அரசின் நிவாரணம், மத்திய அரசின் காப்பீட்டு தொகை என இரண்டுமே ஏமாற்றமே..
இறுதியில் மன உளைச்சளில், மரணத்தை அடைகின்றனர்....
இதர்க்கு ஒர் தீர்வு எட்டாதா? விவசாயிகள் நலன் காக்கப்படாதா?
எந்த அரசியல் கட்சிகளும், விவசாய சங்கங்களும் உண்மையில் விவசாயிகள் நலன் குறித்து கவலைப்படுவதில்லை என்பதே இங்கு உண்மை...
என்றும் இயற்கையுடன்
டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர்
நம்மில் பலருக்கு இவரைப் பிடிக்காமல் இருக்கலாம்.
ஆனால் இவரது இந்தப் பாடல் மிகவும் பயனுள்ளது. சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.
நாளை நமக்கோ அல்லது அக்கம் பக்கத்தில் உள்ளவர்க்கோ உடல் நோயுற்றால் இந்தப் பாடலில் வரும் நோய்க்குத் தேவையான சிகிச்சையை பயன்படுத்தி நலம் பெறுவோம், பயனடைவோம்...