ஒரு அழகான ஜப்பானிய தத்துவம்:
பேருந்து தவறினால் ஒருவேளை விபத்து தவிர்க்கப்பட்டிருக்கலாம்;
நிராகரிக்கப்பட்டால் தவறான இடத்திலிருந்து தப்பிக்கச் செய்திருக்கலாம்.
ஆரம்பத்தில் துரதிர்ஷ்டம் போல் தெரிவது கூட நம் பாதுகாப்பிற்காகவே நிகழ்கிறது.
வாழ்க்கையின் மாற்றங்களை நம்புங்கள்!
முருகா உன் பெயரை உச்சரிக்கும் ஒவ்வொரு நொடியும் மனம் புனிதமாகிறது.
கண்களில் கண்ணீர் மலர்வது துயரத்தால் அல்ல, உன் அருளை உணரும் பேரின்பத்தால்.
வாழ்க்கை எத்தனை சோதனைகள் தந்தாலும், உன் வேல் எங்களை காக்கிறது என்ற நம்பிக்கை போதும்.
தமிழின் உயிரும், தமிழரின் பெருமையும், எங்கள் நித்திய தெய்வமும் நீதான் முருகா! 🙏🔱
#Murugan #TamilKadaul #VetriVel
#சுத்தாத்வைத_சைவசித்தாந்தம்
ஸ்ரீ முருகப் பெருமானுக்குரிய முக்யமான 16 வடிவங்கள்.
1.ஞானசக்திதரன்
2. ஸ்கந்தன்
3. தேவசேனாதிபதி
4. சுப்ரமண்யன்
5. கஜாரூடன்
6. சரவணபவன்
7. கார்த்திகேயன்
8. குமார ஸ்வாமி
9. ஷண்முகசுவாமி
10. தாரகாரி.
11. பிரம்மசாஸ்தா
12. வல்லீ கல்யாணமூர்த்தி 13. பாலமுருகன்
14. கிரௌஞ்சகிரி பேதனர் 15. மயூரவாஹனன்
16. சேநாநீ (சேனாபதி) என்பனவாகும்.
இப்பெயர்களின் பொருள் முறையே,
பார்வதியால் அளிக்கப்பட்ட வேலைத்தரித்தவன்.
காமம், குரோதம் முதலான சத்துருக்களை வேரறுப்பவன்.
தேவர்கள் மகிழ்ந்து அளித்த தேவசேனா என்பவளின் கணவன்.
சுப்ரமண்யன் ஆனந்த ஸ்வரூபமுடையவன் (அழகன், முருகன்) 'ஸு': நன்றாக, 'ப்ரம்ஹ': பெரிய உலகு 'ண்யம்' அகண்ட மானது. அதாவது எங்கும் வியாபித்து உள்ள சச்சிதானந்தப் பரம் பொருள் என்பது இதற்குப் பொருளாகும்.
கஜாரூடன் யானையை வாகனமாக உடையவன்.
சரவணபவன் பஞ்சபூதத் தொடர்புடைய சரவணப் பொய்கை யில் மனித வடிவமும் ஆறு திருமுகமும் கொண்டு தோன்றியவன்.
கார்த்திகேயன். கிருத்திகை என்னும் ஆறு நட்சத்திரப் பெண்களிடம் பாலுண்டு வளர்ந்தவன். (ஆறுவித ஐஸ்வர்யங்களே கிருத்திகை நட்சத்திரமாகும். 1. செல்வம் 2. தர்மம் 3. கீர்த்தி 4. அழகு 5. அறிவு 6. வைராக்யம் எனும் ஆறு நற்குணங்களே அவையாகும்.)
குமாரஸ்வாமி
கு - அசுத்தம் அவை. ஆணவம், கன்மம், மாயை.
மாரன் - அழிப்பவன். அதாவது உயிர்களுக்கு உண்டான மும் மலங்களையும் போக்குபவன் என்பது பொருள்.
கௌ : உலகில் மாம் : மோட்சத்தை (மாம் : லட்சுமியை)
ராதி : அளிப்பவன் 'குமாரன்' என்பதாம்.
அதாவது காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சர்யம் முதலான குற்றங்களைப் போக்கி உயிர்கட்கு ஜீவன் முக்தியளிப்பவன் என்பது குமாரன் என்பதற்குப் பொருளாகும்.
ஷண்முகன் : சிவசக்தி ரூபமானவன்.
மேல், கீழ், கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய திசைகள் யாவிலும் வியாபித்து இருப்பவன். ஆறு சாதாக்யமானவன். ஆறு லட்சணங்களோடு கூடியவன். ஆறு வேதாங்கப் பொருளானவன். பஞ்சேந்திரியங்களினாலும் மனதாலும் உணரப்படுகின்ற ஞான வடிவானவன் என்பன போன்ற பலதத்துவ நிரூபணன் என்பதாகும்.
தாரகாரி தாரகன் என்னும் அசுரனுக்கு எதிரி.
பிரம்மசாஸ்தா. பிரம்மனுக்கு பிரணவப் பொருளை உணர்த்தியவன்.
வல்லீகலியாண மூர்த்தி : வள்ளி என்னும் வேடுவர் குலப் பெண்ணை மணந்தவன். (ஜீவாத்மாக்களைப் பரமாத்மாவான தன்னுடன் இணைத்துக் கொள்பவன்)
பாலமுருகன் : முருகன் என்றும் இளமை யுடையவன். எப்போதும் புதிதாய் விளங்குபவன்.
கிரௌஞ்சகிரிபேதனன். 'கிரௌஞ்சம்' என்னும் மலையைப் பிளந்தவன். (கடினமான அஞ்ஞானமென்னும் இருளைத் தன் ஞான சக்தியாகிய வேலினால் பிளந்தவன் என்பது பொருள்)
மயூரவாஹனன். மயிலை வாகனமாக உடையவன். (மயில் என்பது மாயாஸ்வரூபம் அதையடக்கியாள்பவன் என்பது இதன் பொருளாகும்)
சேநாநீ : தேவர்களின் சேனைக்குத்தலைவன். (நற்குணங்களுக்கெல்லாம் தலைமை ஏற்கும் நாயகன் என்பது இதன் பொருள்)
இவை தவிர சக்திதரன், சேவற்கொடியோன், ஹரசூனு, குஹன், குருமூர்த்தி போன்ற பெயர்களும் முருகனுக்கு உண்டென்று அறிக. சக்திதரன், ஞானசக்தியாகிய வேலைத்தரித்தவன். சேவற் கொடியோன். சேவல் சின்னம் பொறித்த கொடியையுடையவன். ஹரன் - சிவன் (சிவனின்) மகன் ஹரசூனு.
குஹன் : ஹிருதயமாகிய குகையில் வசிப்பவன் (யோகிகளின் ஹிருதயத்தாமரையில் வசிப்பவன்) என்பது பொருள்.
குருமூர்த்தி பிரமனுக்கும், சிவபிரானுக்கும் குருவாக விளங்கிப் பிரணவப்பொருளை உணர்த்தியவன் என்பது பொருள். இதையே 'சுவாமிநாதன்' என்றும் கூறுவர்.
சிவஸ்ரீ பாலீஸ்வரக் குருக்கள் தொகுத்த சிவாகம செய்தி விளக்கம் என்னும் நூலில் இருந்து.
Devotional genre songல யார் பெரிய ஆள்னு கேட்டு அனிருத் & சாய மென்ஷன் பண்ணிட்டு இருக்காங்க..
டேய்,நாத்திகன கூட ஒரு சாமி பாட்டுக்கு vibe பண்ண வச்சவன் டா யுவன் சங்கர் ராஜா❤️🔥🥵..
சீக்கிரம் முடிக்க முடியாது என்று தெரிந்ததிருந்தும்
சீக்கிரம் முடியுங்கள் என்பார்
அதிகாரி.
சீக்கிரம் முடிக்க முடியாது என்று தெரிந்திருந்தும்
சீக்கிரம் முடிக்கிறேன் சார் என்பேன் நான்.
தொழிற்சாலை வாழ்வென்பது
இதற்கு மேல் ஒன்றும் இல்லை.
~ மழைக்குருவி ~