கழகம் ஓர் குடும்பம்!
நாம் அனைவரும் ஒரு தாய் வயிற்றில் பிறக்க வாய்ப்பு இல்லை என்பதால் தான் தனித்தனி தாய் வயிற்றில் பிறந்துள்ளோம்.
**அறிஞர் அண்ணா**
@ThamizhmaranA@DMKRavichandra2
#JUSTIN | வாள் கொண்டு கேக் வெட்டிய சம்பவங்களில் ரவுடிகள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அதே போல கேக் வெட்டிய ராயபுரம் தவெக எம்.எல்.ஏ. விஜய் தாமு மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்
#SunNews | #TVK | #Chennai
திமுக ஆட்சியில் விஜய் மற்றும் அவரது ரசிக சிகாமணிகள் மற்றும் எடப்பாடி ஆகியோர்.. அதிகம் உச்சரித்த மந்திரம்:
தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை.
#அன்பின்_நன்றிகள்!
தொகுதியின் 25 ஆண்டுகால அரசியல் போக்கை 25 நாட்களில் மாற்றி இருக்கிறோம்!
....... ...... ...........
சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில்; திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில்; மனிதநேய ஜனநாயக கட்சியின் வேட்பாளராக #உதய_சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட எனக்கு வெற்றியை தந்த வாக்காளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
கடந்த 25 ஆண்டு காலமாக திராவிட முன்னேற்ற கழகமும், அதன் கூட்டணியும் இத்தொகுதியை வெல்ல வேண்டும் என தொடர்ந்து முனைப்பு காட்டி வந்திருந்த நிலையில், இந்த வெற்றியை சாத்தியப்படுத்தியுள்ளோம் என்பது பெரும் மன நிறைவைத் தருகிறது.
மாண்புமிகு தளபதி அண்ணன் மு.க.ஸ்டாலின் @mkstalin அவர்களின் வாழ்த்துக்களுடன், மாண்புமிகு அமைச்சர் அண்ணன் M.R.K.பன்னீர்செல்வம் @MRKPanneer அவர்கள் மற்றும் கூட்டணி கட்சியினரின் சிறப்பான ஒத்துழைப்போடு களமிறங்கினோம்.
மனிதநேய ஜனநாயக கட்சியின் தொகுதி தேர்தல் பணி குழு நுட்பமான வியூகங்களை வகுத்தது.
பிரத்யோகமாக எமது மஜகவின் தகவல் தொழில்நுட்ப அணியும் களம் இறங்கியது.
எல்லோரின்; எல்லாம் சேர்ந்த கூட்டு உழைப்பினால் ; தொகுதி மக்களிடம் அன்பை முதலில் வென்றெடுத்தோம்.
உரையாடல்கள், நேர்காணல்கள், திண்ணை பரப்புரைகள், தனிநபர் சந்திப்புகள், குழு உரையாடல்கள், இலக்கிய ஒன்று கூடல்கள் என நடைபெற்ற சந்திப்புகள் தொகுதி மக்களின் கவனத்தை ஈர்த்தது.
ஒரு கோயில் நகரத்தில் போட்டியிடுவதா? என்றார்கள்.
தீட்சிதர்கள் உங்களை ஏற்க மாட்டார்கள் என்றார்கள்.
வெளியூர்க்காரர் என்றார்கள்.
இவற்றையெல்லாம் கண்டு அறமும், அரசியல் செயல் திட்டங்களும், நேர்மையான வியூகங்களும் வைத்திருப்பவர்கள் பதற்றப்பட மாட்டார்கள்.
எங்களின் அழகிய செயல்பாடுகளால் அவற்றுக்கு பதில் அளித்தோம்.
அரசியலையும் கடந்து மக்களிடம் எமது நிலைபாடுகளை ஒளிவு, மறைவின்றி விளக்கினோம்.
இத்தொகுதியில் மாணவர்களையும், இளைஞர்களையும, சிறார், சிறுமிகளையும் எங்களின் நம்பிக்கை வளையத்திற்குள் கொண்டு வந்தோம்.
நகரத்தில் தீட்சிதர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் நெருங்கி வந்தார்கள்.
கிராமப்புறங்களில் கட்சி சாராத பொதுமக்களும் எங்களுக்கு ஆதரவாக கருத்து பரிமாற்றங்களை செய்தார்கள்.
அலை சூழ்ந்த அரசியல் களத்தில் இத்தொகுதியில் நாங்கள் மாபெரும் வெற்றியை பெற்றதற்கு இதுவெல்லாம் முக்கிய காரணங்கள் என பலரும் கூறுகிறார்கள்.
25 ஆண்டு காலம் ஒரு கூட்டணியின் கட்டுப்பாட்டில் இருந்த தொகுதியை, 25 நாட்களில் மாற்றி இருக்கிறீர்கள் என பாராட்டுகிறார்கள்.
இறைவனின் அருளால்; மக்களின் ஆதரவால் இதுவெல்லாம் நிகழ்ந்திருப்பதாக உறுதியாக நம்புகிறோம்.
இந்நிலையில் நாங்கள் ஆளும் கட்சி கூட்டணியாக இருக்கும் வாய்ப்பை இழந்திருக்கிறோம்.
அதே நேரத்தில் ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்பட இருக்கிறோம்.
தொகுதி மக்களுக்காக மட்டும் இன்றி, முழு தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்காகவும் சமரசம் இன்றி செயல்படுவது என்று முடிவெடுத்துள்ளோம்.
தொகுதி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேற்ற வேண்டும் என்ற குறிக்கோளிலும் உள்ளோம்.
முதல் கட்டமாக குடிநீர் பிரச்சினைகளுக்கும், சாலைகளை அமைத்துக் கொடுப்பதற்கும், பட்டாக்களை பெற்று கொடுப்பதற்கும்,முன்னுரிமை கொடுப்பது என்று தீர்மானித்து உள்ளோம்.
இத்தருணத்தில் எங்களது வெற்றிக்காக உழைத்த மாண்புமிகு அமைச்சர் திரு.M.R.K.பன்னீர்செல்வம் அவர்களின் தலைமையில்; திமுகவின் மாவட்ட பொருளாளர் திரு.சேர்மன் கதிரவன் அவர்களின் வழிகாட்டலில்; சிறப்பாக உழைத்த திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும், நுட்பமான களப்பணிகளை கையாண்ட மனிதநேய ஜனநாயக கட்சியினருக்கும் எங்களை நம்பி வாக்களித்த அனைவருக்கும், எமது பணிகளில் பங்கேற்ற அனைத்து நல் உள்ளங்களுக்கும் மீண்டும், மீண்டும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
கடுமையான மும்முனைப் போட்டியில்; பதிவான 1 லட்சத்து 96ஆயிரத்து 586 வாக்குகளில்; 69 ஆயிரத்து 739 வாக்குகளை பெற்று; 5747 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று இருக்கிறோம்.
இத்தருணத்தில் இது தொகுதியில் மாபெரும் சாதனையாக வர்ணிக்கப்படுகிறது.
தொகுதிக்கு வெளியே எமது அபிமானிகள், ஆதரவாளர்கள், நல் உள்ளங்கள், திராவிட - தமிழ் இன உணர்வாளர்கள், படைப்பாளிகள், பத்திரிகையாளர்கள், பல்துறை அறிவாளிகள் என பலரும் எங்களைத் தொடர்பு கொண்டு உங்களின் வெற்றி செய்திக்காக இரவுவரை காத்திருந்தோம் என்றும், உங்களின் வெற்றியை எங்களின் தனிப்பட்ட வெற்றியாக கருதினோம் என்றும் கூறி மகிழ்கிறார்கள்.
https://t.co/YdEZ2eBGn6
இந்திய அளவில் டிரெண்டாகும் #TVKFails!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களை த.வெ.க கைப்பற்றியது முதலே, கொண்டாட்டம் என்கிற பெயரில் பொதுமக்களுக்கு இடையூறு தரும் வகையில் அத்துமீறல்கள் அதிகரித்து வருவதையும், 10 வயது சிறுமியிடம் த.வெ.க நிர்வாகி பாலியல் வன்முறையில் ஈடுபட்டதையும் சுட்டிக்காட்டி, இந்திய அளவில் #TVKFails என்ற ஹேஷ்டாக் டிரெண்டாகி வருகிறது.
#TVKFails #TVK #TamilNadu #LawAndOrder #KalaignarSeithigal
அதிகாரம் கிடைத்தவுடன் தவெக நிர்வாகி கஞ்சா போதையில் +12 படிக்கும் இளம்பெண்ணை என் கூட வானு மிரட்டி அவர் தாயாரையும் அடிச்சு அக்கிரமம் பண்ணிருக்கானுங்க
குரங்கு கையில் பூமாலை போல் 5 வருடம் கொடூரமாக இருக்கும்
இது மாற்றம் இல்லை 2014 மோடி சொன்ன ஏமாற்றம்னு மக்களுக்கு தெரியவரும்
கொளத்தூர் தொகுதியின் தவெக சட்டமன்ற உறுப்பினர் இவர் தான். 😞
I have never posted such filthy cheap videos in my page. 🙁
See, the fate of Tamizhnadu 😟. Do we deserve this??
தமிழகத்தில் தொங்கு சட்டசபை முஸ்லிம் லீக்கின் நிலைப்பாடு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உடன் நேற்றும் இருந்தோம்! இன்றும் இருக்கிறோம்!! நாளையும் இருப்போம்!!! - பேராசிரியர். கே.எம்.காதர் மொகிதீன். #iumltamilnadustate#iumltamilnadu#IUML
செம சூப்பர்ல 🔥🔥
ஆட்சி அமைக்கல இன்னும் அதிகாரம் கிடைக்கல அதுக்குள்ளயே ஆட்டத்த ஆரம்பிச்சுட்டானுங்க ஓட்டு போட்ட மக்கள் இன்னும் அஞ்சு வருஷம் அனுபவிங்க வேற ஒன்னும் சொல்றதுக்கு இல்ல
TVK நிர்வாகி ஒருவன் கஞ்சா போதையில் +2 படிக்கும் இளம்பெண்ணை மிரட்டி, அவள் தாயாரையும் தாக்கி அக்கிரமம் செய்திருக்கிறான்.
இதுதான் மாற்றமா?😡
Our leader has shown us what to do by doing what he did in Kolathur yesterday...
Move on : ) People are masters.
They have decided and we respect that.
We are Kalaignar's students.
We were,are and will be with our people forever ♥️🙏🏾
Even though it hurts deeply to have delivered so much more than anyone could've imagined for our Constituencies.
I have personally done more than what has been done in 50 years and so has Mahesh. I have seen him fight for his Constituency as opposition and deliver during #DM1.
Myself and people like @Anbil_Mahesh will always continue to work for our people. Come what may🙏🏾
அண்மையில் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கான பொதுத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட எனக்கு வாய்ப்பளித்து, எனது வெற்றிக்காக தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்ட திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான தளபதி திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதேபோன்று, எனது வெற்றிக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணித் தலைவரும், மாண்புமிகு தமிழ்நாடு துணை
முதலமைச்சருமான இளைய தளபதி திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும்; தேர்தல் பணியாற்றிய தேனி மாவட்டக் கழகப் பொறுப்பாளரும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான திரு. தங்கத் தமிழ்ச்செல்வன் அவர்களுக்கும்; மாவட்டக் கழக நிர்வாகிகளுக்கும், ஒன்றியக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கும்; நகரக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கும்; பேரூர் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கும்; ஊராட்சிக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கும்; கிளைக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கும்; சார்பு அணி நிர்வாகிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மெய் வருத்தம் பாராமல், பசி நோக்காமல், கண் துஞ்சாமல், 'கருமமே கண்ணாயினார்' என்பதற்கேற்ப, ஓயாமல் அல்லும் பகலும் அயராது உழைத்த திராவிட முன்னேற்றக் கழக உடன் பிறப்புகளுக்கும்; மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சி தலைவர்களுக்கும்; நிர்வாகிகளுக்கும்; தொண்டர்களுக்கும்; என்னை வெற்றி பெறச் செய்த போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கும் எனது கோடானு கோடி நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு அரசியலில் முதல் முறையாக வட இந்திய ஆங்கில ஊடகத்திடம் இந்தியில் பேட்டி அளிக்கும் தவெக MLA
இதுதான் தொடக்கம்.
மோடியே இங்கு வந்தால் கூட ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் என்ற நிலையை உருவாக்கினோம் ஆனால் இன்று..