நீ விட்டுச் சென்ற அன்றிலிருந்து
இன்று வரை
யாரையும் நெருக்கமாகி கொள்ள
முடியவில்லை என்னால்.
பறிக்கப்பட்ட ரோஜாவின் வெறுமையை
செடிகள் முட்களை கொண்டு எப்படி
தான் பிரதியிட முடியும் ♥️
இறுகப் பற்றும் எதுவும் கரங்களை சிவக்க வைத்து ரணப்படுத்துவதை தவிர வேறொன்றும் பெரிதாக செய்துவிடாது அதனால அவங்கள போக விட்ருங்க அவங்க கரமாவது மென்மையாகவே இருக்கட்டும் அதுதான் அன்பு!!!
சில நேரங்களில்
அறையின் சுவர்களை விடவும்
அதன் அமைதி பெரியதாகி விடுகிறது.
மேசையின் மீது
பாதி குடிக்கப்பட்ட தேநீர்,
திறந்து வைக்கப்பட்ட புத்தகம்,
பதிலளிக்கப்படாத ஒரு செய்தி
எல்லாமே
யாரோ ஒருவரின் ��ல்லாமையை
மெல்ல ��ெல்ல
உச்சரித்துக் கொண்டிருக்கின்றன.
யாரெல்லாம் வாழ்த்தினார்கள் என பார்ப்பது, யாரெல்லாம் வாழ்த்தவில்லை என்பதில் கொண்டு போய் விடுகிறது.
நகுலன் சொன்னது போல் இந்த மனதை வைத்துக் கொண்டு எதுவும் செய்ய முடியாது.
-கலா��்ப்ரியா