ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் கூட ஆகல ஆனாலும் மக்கள் விரும்பிய மாற்றங்கள் நடக்குது மகிழ்ச்சியில் மக்கள்❤️
திமுக, தீந்து போன கட்சி அவதூறு மக்கள்கிட்ட எடுபடல ஏன்னா மக்கள் அரசியல் பாக்குறாங்க அரசியல் படுத்தப்பட்ருக்காங்க.. உண்மைகள் தெரியுது மக்களுக்கு👌🏻
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu@TVKVijayHQ@actorvijay அவர்களுக்கு மற்றும் நீர்வளத்துறை @BussyAnand & பேரிடர் மேலாண்மைத் துறை @KASengottaiyan அமைச்சர் அவர்களுக்கு
#பொருள்: சூப்பர் எல் நினோ 2026 – வறட்சி, வெள்ளப்பெருக்கு மற்றும் பேரிடர் மேலாண்மைக்கான சிறப்புக் குழு அமைத்தல் தொடர்பாக – உடனடி நடவடிக்கை கோரிக்கை
மதிப்பிற்குரிய அவர்களுக்கு,
==> உலக அளவில் சூப்பர் எல் நினோ 2026 நிகழ்வு பெரும் காலநிலை அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகிறது.
==> அக்டோபர் மாதத்தில் உருவாகும் என எதிர்பார்க்கப்படும் இந்த சூப்பர் எல் நினோவின் ஆரம்ப தாக்கங்கள் ஏற்கெனவே உணரப்படத் தொடங்கியுள்ளன.
==> தற்போதுஉலகின் பல பகுதிகளில் வெப்பநிலை கணிசமாக உயர்ந்து வருகிறது.
==> தமிழ்நாட்டில் மேட்டூர் அணை 79 அடிக்கும், முல்லைப் பெரியாறு அணை 111 அடிக்கும் சரிந்துள்ளது. வைகை அணை வறண்டு காணப்படுகிறது.
==> இந்திய அளவில் தென்மேற்கு பருவமழை இயல்புக்கு குறைவாகவும், வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் இயல்புக்கு அதிகமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
==> 2027-ஆம் ஆண்டு மார்ச் முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் இந்தியா, தமிழ்நாட்டில் கடுமையான வெப்ப அலைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
==> அடுத்த 12 முதல் 18 மாதங்களுக்குள் வறட்சி, வெப்ப அலைகள், பருவமழை மாற்றங்கள்,பெருமழை, வெள்ளப்பெருக்கு, விவசாயப் பாதிப்பு மற்றும் பேரிடர் சூழல்களை தமிழ்நாடு சந்திக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.
==> எனவே, இந்த இயற்கைப் பெருநிகழ்வை முன்கூட்டியே எதிர்கொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு உடனடியாக “சூப்பர் எல் நினோ 2026 – வறட்சி & பேரிடர் மேலாண்மை சிறப்புக் குழு” ஒன்றை அமைக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இக்குழு மூலம்:
1.அடிப்படை செயல்திட்டம் விரைவாக தயாரித்தல்
2. நீர் மேலாண்மை, விவசாயப் பாதுகாப்பு, குடிநீர் தட்டுப்பாடு தீர்வு
3. பெருமழை மற்றும் வெள்ளபாதிப்பு முன்னெச்சரிக்கை மற்றும் பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
ஆகியவற்றை ஒருங்கிணைத்து செயல்படுத்த முடியும்.
இந்த முக்கியமான கோரிக்கையை பரிசீலித்து, உடனடி நடவடிக்கை எடுக்குமாறு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களையும், நீர்வளத்துறை & பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்களையும் மிகப் பணிவுடன் வேண்டுகிறேன்.
நன்றி
உண்மையுள்ள,
ஹேமச்சந்தர் இரா
(டெல்டாவெதர்மேன்),
சுயாதீன வானிலை ஆய்வாளர்,
+91 8939412147
[email protected]
தேதி: 05.06.2026
சூப்பர் எல் நினோ தாக்கம் - இன்று கடலில், நாளை நம் வயல்களில்...
தவெக கட்சி இருக்கும் வரை தமிழ்நாட்டில் எந்த பிரச்சினையாய் இருந்தாலும்
நடவடிக்கை எடுக்கப்படும்💥
மக்களுக்கான ஆட்சி தவெக மக்களுக்கான முதல்வர் @TVKVijayHQ ❤️