தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் - வளர்ச்சி திட்டங்களுக்குக் கால அவகாசம் கேட்பது நியாயமாக இருக்கலாம்; ஆனால் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டைக் கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை அவசியம் என்பதை முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களும், அவருக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்களும் எப்போது உணரப்போகிறார்கள்?
சிவகங்கையில் ஆயுதப்படை பெண் காவலர்
சங்கரன்கோவில் அருகே 10 ஆம் வகுப்பு மாணவி
ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே 9 வயது மாணவி
கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது பச்சிளம் குழந்தை
என கடந்த இரு தினங்களில் பாலியல் ரீதியான தொந்தரவுக்கும், வன்கொடுமைக்கும் உள்ளாக்கப்பட்டவர்கள் பட்டியல் தான் இது. இதில் கும்மிடிப்பூண்டியில் பால் மனம் மாறா பச்சிளம் குழந்தை காம வெறியர்களால் சிதைக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் குழந்தையின் சடலம் முட்புதரில் கண்டெடுக்கப்பட்டதாக வரும் செய்தி மனதை உலுக்குகிறது.
பச்சிளம் குழந்தைகளில் தொடங்கி வயதான மூதாட்டிகள் வரை தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இத்தகைய குற்றச் சம்பவங்களையும், பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களையும் இன்னும் எத்தனை நாட்கள் தான் சகித்துக் கொள்ள வேண்டும் ?
பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோர் மீதான நடவடிக்கை மிகக் கடுமையானதாக இருக்கும் என கடுங்கோபத்துடன் சினிமாவில் பேசுவது போல வசனம் பேசும் முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் தமிழகத்தில் அரங்கேறும் தொடர் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் ?
@CMOTamilnadu@TVKVijayHQ@TVKPartyHQ
தமிழகத்தில் உயர்த்தப்படும் மின் கட்டணம் பொதுமக்களை பாதிக்காத வகையில் இருக்கும் என்ற எரிசக்தி துறை அமைச்சர் திரு. நிர்மல் குமார் அவர்களின் பேச்சு பெயரளவில் இல்லாமல் செயல் அளவில் அமைய வேண்டும்.
தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தப்படாது என தெரிவித்துக் கொண்டிருந்த எரிசக்தி துறை அமைச்சரின் தற்போதைய பேச்சு, கடந்த ஆட்சிக்காலத்தில் பின்பற்றப்பட்ட குடியிருப்புகளுக்கான வருடாந்திர கட்டண உயர்வை அரசே ஏற்றுக் கொண்டு, வணிக நிறுவனங்களுக்கான கட்டணத்தை மட்டும் உயர்த்த முடிவு செய்திருப்பதையே வெளிப்படுத்துகிறது.
ஏற்கனவே வணிக நிறுவனங்களுக்குப் பன்மடங்கு உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தால் ஆயிரக்கணக்கான சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு, அதில் பணியாற்றி வந்த பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியிருக்கும் நிலையில், மீண்டும் ஒருமுறை மின்கட்டண உயர்வு ஏற்பட்டால் மீதமுள்ள தொழில் நிறுவனங்களும் முடங்கும் அபாயம் ஏற்படும்.
அதோடு, குடியிருப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்தாமல் வணிக நிறுவனங்களுக்கான கட்டணத்தை மட்டும் உயர்த்தினாலும், அந்நிறுவனங்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு பொருட்களின் விலை உயர்வானது நேரடியாக பொதுமக்களின் மீதே சுமையாக ஏறும் என்பதை அரசு உணர வேண்டும்.
எனவே, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரையை காரணம் காட்டி மின்கட்டணத்தை உயர்த்தும் முடிவை முழுமையாக கைவிடுவதே மின்கட்டண உயர்விலிருந்தும், விலைவாசி உயர்விலிருந்தும் பொதுமக்களை காக்கும் ஒரே வழியாக அமையும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ@TVKPartyHQ
தவெக அரசு வெளியிட்டது வெள்ளை அறிக்கை அல்ல ஏற்கனவே எல்லோராலும் அடித்துத் துவைத்து வெளுத்துப் போன அறிக்கையே!
தமிழக அரசின் நிதிநிலை குறித்து "வெள்ளை அறிக்கை" வெளியிடுகிறோம் என்ற பெயரில், தமிழ்நாடு நிதியமைச்சர் வெளியிட்டிருப்பது புதிய உண்மைகளையோ, புதிய தீர்வுகளையோ கொண்ட ஆவணம் அல்ல. கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநிலக் கடன் இரு மடங்காக உயர்ந்திருப்பது, இதுவரை இல்லாத அளவுக்கு வருவாய்ப் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பது, மாநிலத்தின் சொந்த வரி வருவாய் வளர்ச்சி மந்தமடைந்திருப்பது போன்ற தமிழக மக்கள் ஏற்கனவே நன்கு அறிந்துள்ள உண்மைகளுக்கு புதிய அட்டை போட்டு மீண்டும் வெளியிட்டிருக்கும் அறிக்கையாகவே இது அமைந்துள்ளது.
தமிழகத்தின் நிதிநிலையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை எப்படி சரிசெய்யப் போகிறார்கள், அதற்கான தெளிவான செயல் திட்டங்கள் என்ன, வருவாயைப் பெருக்க அரசு எத்தகைய புதிய முயற்சிகளை மேற்கொள்ள உள்ளது என்பதற்கான பதில்கள் இந்த வெள்ளை அறிக்கையில் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்புக்கு ஏமாற்றமே பரிசாக கிடைத்துள்ளது.
தவெக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும்?
தவெக ஆட்சியில் மாநிலத்தின் நிதிநிலையைச் சீரமைக்க என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன?
வருவாய்ப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கான செயல் திட்டங்கள் என்ன?
மாநிலத்தின் சொந்த வருவாயைப் பெருக்க என்ன புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன?
இப்படி செய்தியாளர்கள் எழுப்பிய அனைத்துக் கேள்விகளுக்கும் நிதியமைச்சர் அளித்த ஒரே பதில் "it will take some time" தான்.
வருவாயைப் பெருக்குவதற்கான புதிய ஆக்கப்பூர்வமான திட்டங்களை அறிவிக்காமல், அரசுத் துறைகளில் உள்ள leakage-களைத் தடுக்க வேண்டும் என்பதையே பிரதான தீர்வாக முன்வைத்திருப்பது, எதிர்காலத்தில் வரிகளையும் கட்டணங்களையும் உயர்த்தும் பாதையை தவெக அரசு தேர்வு செய்துள்ளதோ என்ற அச்சத்தை தமிழக மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
ஒரு வெள்ளை அறிக்கை என்பது பிரச்சினைகளைப் பட்டியலிடுவதோடு நிற்காமல், அவற்றுக்கான தீர்வுகளையும், காலக்கெடுவுடன் கூடிய செயல் திட்டங்களையும் முன்வைக்க வேண்டும். ஆனால், தவெக அரசு வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் தெளிவான தொலைநோக்குப் பார்வையும் இல்லை; நம்பிக்கையூட்டும் செயல்திட்டங்களும் இல்லை; காலவரையறையுடன் கூடிய உறுதிமொழிகளும் இல்லை.
எனவே, தவெக அரசு வெளியிட்டிருப்பது வெள்ளை அறிக்கை அல்ல; ஏற்கனவே எல்லோராலும் அடித்துத் துவைத்து வெளுத்துப் போன உண்மைகளையே புதிய அட்டையில் வெளியிட்டிருக்கும் அறிக்கையாகும் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ@TVKPartyHQ
இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், எளிமை, நேர்மை மற்றும் உண்மையை தன் அடிப்படை குணங்களாக கொண்டிருந்த அப்பழுக்கற்ற அரசியல்வாதியுமான ஐயா கக்கன் அவர்களின் பிறந்த தினம் இன்று
தன்னுடைய அசாத்திய திறமையாலும், அளப்பரிய உழைப்பாலும் கிடைத்த பல்வேறு பதவிகளின் மூலம் அரசியல் உலகின் உச்சத்தை அடைந்தாலும் தன் உயிர் பிரியும் நிலையிலும் எளிமையை மட்டுமே அடையாளமாகக் கொண்டிருந்த ஐயா கக்கன் அவர்கள் நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் ஆற்றிய பணிகளை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்
பாலிமர், நியூஸ் தமிழ் 24*7 மற்றும் தமிழ் ஜனம் ஆகிய மூன்று செய்தி தொலைக்காட்சிகள் தமிழ்நாடு அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களால் ஏற்பட்டிருக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப் பொருட்களின் தாராளப் புழக்கம், அறிவிக்கப்படாத மின்வெட்டு ஆகியவற்றால் மக்கள் படும் துயரங்களைச் செய்திகளாக வெளியிட்டதற்காகவே குறிப்பிட்ட மூன்று செய்தி தொலைக்காட்சிகளும் அரசு கேபிளில் முடக்கப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்திருக்கிறது.
அரசு நிர்வாகத்தின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதிலும், மக்களின் அன்றாட பிரச்சினைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்வதிலும் முக்கிய பங்காற்றும் செய்தித் தொலைக்காட்சிகளை முடக்க நினைப்பதும், அரசு நிர்வாகத்தின் மீதான விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் ஊடகங்களின் குரலை ஒடுக்க நினைப்பதும் தவெக அரசின் பலவீனத்தையே வெளிப்படுத்துகிறது.
ஜனநாயகத்தில் விமர்சனங்களையும், மாற்றுக்கருத்துக்களையும் சகித்துக் கொள்ளும் மனப்பக்குவமே நல்லாட்சிக்கான அடையாளம் என்பதை இனியாவது உணர்ந்து ஊடக சுதந்திரத்தை அச்சுறுத்த முயலும் இதுபோன்ற நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என தவெக அரசையும், அதன் முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன்.
@polimernews@NewsTamilTV24x7@TamilJanamNews@CMOTamilnadu@TVKVijayHQ
#TTVpressmeet
இம்சை அரசன் 23ஆம் புலிகேசி போல், இன்ஸ்ட்டா அரசன் 24 ஆம் புலிகேசி என சொல்லும் நிலைக்கு எங்களை கொண்டு செல்லாதீர்கள் #Vijay .. 😀😀😀
#TTVDhinakaran#AMMK
தலைமைக் கழக அறிவிப்பு: ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம், பவானி சட்டமன்றத் தொகுதி பொதுக்குழு உறுப்பினர், மாவட்ட விவசாயப் பிரிவு செயலாளர், ஒன்றியக் கழக நிர்வாகிகள், பேரூர் கழக நிர்வாகிகள் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சட்டமன்றத் தொகுதி பொதுக்குழு உறுப்பினர், சார்பு அணிகளின் நிர்வாகிகள், சிங்கம்புணரி தெற்கு ஒன்றியக் கழக செயலாளர், இளையான்குடி பேரூர் கழக செயலாளர் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு: அந்தியூர் ஒன்றியம் கழக அமைப்பு ரீதியாக அந்தியூர் வடக்கு ஒன்றியம், அந்தியூர் தெற்கு ஒன்றியம் மற்றும் அந்தியூர் கிழக்கு ஒன்றியம் என மூன்று ஒன்றியக் கழகங்களாக பிரிப்பு.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டத்தைச் சார்ந்த தவெக நிர்வாகிகள் இளம்பெண் ஒருவரைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
ஸ்ரீ வைகுண்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு சரவணன் அவர்களின் ஆதரவாளர்கள் தன்னை தொடர்பு கொண்டு காவல்துறையில் அளித்த புகாரைத் திரும்பப்பெறவேண்டும் என மிரட்டியதாகவும், தன்னைப் போலவே வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்ட மற்றொரு பெண்ணும் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியிருப்பதாகவும் பாதிக்கப்பட்ட பெண் அளித்திருக்கும் பேட்டியைக் கேட்கும் போதே பதைபதைப்பை ஏற்படுத்துகிறது.
மருத்துவமனைகளில் ஆய்வு, அம்மா உணவகத்தில் சோதனை எனும் பெயரில் தவெக நிர்வாகிகள் அரங்கேற்றிய அட்டகாசத்தைக் கட்டுப்படுத்த தவறியதன் விளைவே, இன்று ஒரு இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதோடு, புகார் அளித்தால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டும் அளவிற்கான துணிச்சலை தவெகவினருக்கு கொடுத்திருக்கிறது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அமைச்சருக்கு இணையாக தவெகவின் மாவட்டச் செயலாளருக்கு இருக்கை அமைத்து அமரவைப்பதும், குன்னூரில் நகராட்சி ஆணையரை தவெக நிர்வாகி ஒருவர் பகிரங்கமாக மிரட்டுவதும் தான் தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்தபின்பு ஏற்பட்ட ஒரே மாற்றமாக இருக்கிறது.
தமிழகத்தில் கொத்து கொத்தாக அரங்கேறும் குற்றச் சம்பவங்களைக் கண்டு, துளியளவும் குற்ற உணர்ச்சி இல்லாமல் எதிர்க்கட்சிகள் தன்மீது வேண்டுமென்றே பழியைத் தூக்கிப் போடுவதாகக் கொக்கரித்த முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள், இவ்விவகாரத்தை வெளிப்படையாகக் கண்டிக்கும் தன் தோழமைக் கட்சிகளில் ஒன்றான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் திரு பெ.சண்முகம் அவர்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?
நீண்ட இழுபறிக்குப் பின் முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களால், இன்று தொடங்கி வைக்கப்படும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தமிழகப் பெண்களை, முதலில் தவெகவினரிடம் இருந்து தான் பாதுகாக்க வேண்டும் என்று எழுந்திருக்கும் விமர்சனம் தவெக அரசின் ஒரு மாத கால ஆட்சியின் அவலத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
எனவே, இனியும் தமிழகத்தில் சீரழிந்திருக்கும் சட்டம் ஒழுங்கிற்கு எதிர்க்கட்சிகள் தான் காரணம் என போலிக் குற்றச்சாட்டை முன்வைத்து மக்களை ஏமாற்றாமல், தமிழகத்தில் அரங்கேறும் குற்றச் சம்பவங்களைக் குறைத்து மக்களுக்குப் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்திட வேண்டும் என தவெக அரசையும் அதன் முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ@TVKPartyHQ
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராடி வெற்றி கண்ட தமிழகத்தைச் சேர்ந்த இந்திய ராணுவ வீரர் லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரம் அவர்கள் மத்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான கீர்த்தி சக்ரா விருது பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
கடுமையான காயங்களுக்கு பிறகும் பின்வாங்காமல் தாய் நாட்டையும், மக்களையும் காக்க தன் உயிரையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து முன்னேறிப் போராடிய ராணுவ வீரராக ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் பெருமையைத் தேடித் தந்திருக்கும் லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரம் அவர்களின் தேசப்பணி மேன்மேலும் தொடர வாழ்த்துகிறேன்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதன் தேவை குறித்தான பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று, சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் திரு டிடிவி தினகரன் அவர்களின் சார்பில் கழக துணைப்பொதுச்செயலாளரும், தென் சென்னை மாவட்டக் கழக செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான திரு.G.செந்தமிழன், கழக கொள்கை பரப்புச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளருமான செல்வி.CR.சரஸ்வதி, கழக அமைப்புச் செயலாளரும், கழக பொறியாளர் அணி செயலாளரும், செங்கல்பட்டு வடக்கு மாவட்டக் கழக செயலாளருமான திரு.ம.கரிகாலன் ஆகியோர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாட்டைத் தெரிவித்தனர்.
தலைமைக் கழகம்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்
தமிழ்நாடு நாடார் சங்கத் தலைவர் திரு முத்து ரமேஷ் நாடார் அவர்களின் தந்தை திரு முத்துலிங்க நாடார் அவர்கள் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது.
தந்தையை இழந்துவாடும் திரு முத்து ரமேஷ் நாடார் அவர்களுக்கும், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
யாரு என்னன்னு தெரியாம மேல கை வச்சிட்டானுக😂
ஒரு ராத்திரியில, ஒரே ஒரு MLA வச்சி உன் தலைவன் விஜய்க்கு ஆட்டம் காட்டியவர் டா TTV😎🔥
விளைவுகளை சந்திக்க தயாரா இருங்க😤