அமராவதியில் ஆரம்பித்து ஆசைநாயகனாய் வளம் வந்து அமர்களத்தில் தடம் பதித்து அட்டகாசமான நடிப்பில் மங்காத்தா விளையாடி விசுவாசமான ரசிகர்கள் பலத்தோடு என்றும் வலிமையாக இருப்பவன் .
இனிய பிறந்தநாள் காணும் எங்கள் தல😎💘
#HBD தல # வலிமை🎉💥😎💪🙏 #HBDDearestThaIaAJlTH
விவசாயிகள் அரும்பாடுபட்டு உழைத்து அறுவடை செய்த நெல்மணிகளைத் தீயில் கருகி நாசமாக விடுவதா? உணவுத் தானியங்களை வெட்டவெளியில் கிடத்துவதா?
@CMOTamilnadu@TVKVijayHQ
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள ஐந்தாங்கட்டளையில், தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்குச் சொந்தமான திறந்தவெளி அரசு நெல் சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 27,000க்கும் அதிகமான நெல் மூட்டைகள் எரிந்து சேதமடைந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
அல்லும் பகலும் அயராது உழைத்து, நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த, உடல்முழுவதும் உப்பு பூக்க, இரத்தத்தை வியர்வையாக்கி, விவசாயிகள் அரும்பாடுபட்டு விளைய வைத்துக் கொண்டு வந்த நெல்மணிகளைக் கொள்முதல் செய்யாமல் மழையில் நனையச் செய்து வீணாக்கியப் பேரவலம் முந்தைய திமுக ஆட்சியில் நடந்தேறியது.
ஒருவேளை, கொள்முதல் செய்யப்பட்டாலும் அதனை முறையாகப் பாதுகாத்து, நெல் அரவை ஆலைகளுக்கு அனுப்பி, தரமான அரிசியாக மாற்றி பொதுமக்களுக்கு வழங்கியதில்லை.
ஒரே வயலில் விளைந்த நெல்மணிகளில் தனியார் கடைகளுக்கு வரும் அரிசி தரமாகவும், அரசின் நியாய விலைக் கடைகளுக்கு வரும் அரிசி தரமற்றும் இருப்பதும் ஏன்? இடையில் என்ன நடக்கிறது?
தமிழ்நாடு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும், நுகர்பொருள் வாணிபக் கழகக் கிட்டங்கிகளும் போதுமானக் கட்டிட வசதி இல்லாமல் திறந்தவெளியில் இயங்கி வருவதே அரிசி தரமற்றுப் போவதற்குரிய முதன்மைக்காரணமாகும்.
ஒரு தகரத்தாலான கூரைகளைக்கூட அரசால் ஏற்படுத்த முடியாதா? நெல் மூட்டைகளை வெட்டவெளியில் கிடத்துவதா? எனக் கேட்டு விவசாயிகள் போராடியும்கூட முந்தைய அரசுகள் அதனைக் கவனத்தில் கொள்ளவில்லை.
கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை அரவை ஆலைகளுக்கு அனுப்புவதற்கு முன்புப் பாதுகாத்து வைக்க வேண்டிய தமிழ்நாடு அரசின் நுகர்பொருள் வாணிபக்கழகத்திற்கு, போதுமான அளவு கட்டிடங்கள்கூட இல்லாமல் சுடுகாட்டில் நெல் மூட்டைகளை அடுக்கி வைத்திருந்தது எல்லாம் அரச நிர்வாகத்தின் மோசமான இழிநிலையாகும். முந்தைய ஆட்சிக்காலத்தைப் போலவே, தற்போதைய அரசும் அலட்சியத்தோடு செயல்படுவது பெரும் ஏமாற்றமளிக்கிறது.
மழைக்காலங்களில் நெல் மூட்டைகள் நீரில் நனைந்து, முளைத்து வீணாகி வந்த நிலையில், கோடைக்காலத்தில் தீயில் எரிந்து சாம்பலாவதெல்லாம் அயராத உழைப்பைச் செலுத்தி, நெல்மணிகளை அறுவடை செய்த விவசாயிகளின் உழைப்பை மலினப்படுத்தும் கொடுஞ்செயலாகும்.
உணவுத்தானியங்களைக்கூட பாதுகாத்து ஒரு அரசால் தரமாக வழங்க முடியாதென்றால், அது அரசா? இல்லை! தரிசா? எனும் கேள்விதான் எழுகிறது.
ஆகவே, விவசாயிகள் விளைவிக்கும் உணவுத்தானியங்களைப் பாதுகாத்து வைக்க, போதுமான அளவு நிரந்தரக் கட்டிடங்களை உருவாக்கி, ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் அரிசியை தரமாக நியாய விலைக்கடைகள் மூலம் வழங்க வேண்டுமென தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
Delhi Police is not allowing us to bring in tarpaulins.
It rained all night, and we need them to protect the students who have been on a hunger strike for the past 12 days from the rain.
For the last three days, we have been struggling to get the tarpaulins inside the protest site.
நாம ஒன்னு கேட்டால் நாம அசந்து போற பதில் சொல்வாரு அமைச்சர் ராஜ்மோகன்!
அண்ணன் சீமான் அவர்கள் எழுப்பிய கேள்வி !
தனியார் பள்ளிகள் நகையை அடமானம் வைத்து பள்ளிக்கூடம் நடத்துறாங்க, கல்வியை சேவையை போல செய்றாங்க அது புண்ணிய கணக்கு என தனியார் பள்ளிக்கு மார்க்கெட்டிங் செய்வது கல்வித்துறை அமைச்சரின் வேலையா ?என்பதுதான் .
அவர் கேட்டதற்கும் ராஜ்மோகன் சொன்னதற்கும் ஏதாவது தொடர்பு இருக்கா?
சாட்டை துரைமுருகன்
மாநில கொள்கைப்பரப்பு செயலாளர் நாம் தமிழர் கட்சி
தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக மாறுவதால் மாநில அரசுக்கு ஏற்படும் இட ஒதுக்கீட்டு இழப்பை சரிசெய்ய மத்திய அரசும், தமிழகத்தை ஆளும் த.வெ.க. அரசும் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#BREAKING | அரசு வழக்கறிஞர் நியமனத்திற்கு லஞ்சம் பெற்றதாக தேனி தெற்கு மாவட்டச் தவெக செயலாளர் லெஃப்ட் பாண்டி மீது புகார்
#SunNews | #Theni | #PoliceComplaint
Hearing that Guidance Tamil Nadu, the nodal agency instrumental in bringing investments into the state is witnessing a series of high profile exits. According to sources, nearly 10 employees have resigned so far. This comes at a time when Andhra Pradesh is poaching key investments from here.
#WATCH | ஆலங்குளம் அருகே திறந்தவெளி நெல் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில், 27,000 மூட்டைகள் எரிந்து சேதம். 2வது நாளாக தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
15 ஏக்கர் பரப்பளவில் சுமார் 6 லட்சம் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. தீயில் எரிந்து சாம்பலானது போக எஞ்சிய நெல் மூட்டைகளை தொழிலாளிகள் அப்புறப்படுத்தி வருகின்றனர்.
#SunNews | #Tenkasi | #FireAccident