இன்றைய தினம் 14.12.2025, ஞாயிற்றுக்கிழமை - தமிழர் வரலாற்றுக்கும், பண்பாட்டிற்கும் பெரும் பங்களிப்பை வழங்கிய பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர���களின் புகழை போற்றும் விதமாக இந்திய தலைநகர் டெல்லியில் சிறப்பு அஞ்சல் தலை வெளியீட்டு விழா துணை குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தேன்!
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் வளமான ஆட்சியை தந்ததோடு, தமிழர் பண்பாடு, கலை மற்றும் நிர்வாகத் திறனுக்கு ஆகச்சிறந்த பங்களிப்பை அளித்தவர். அவரது பெ���ுமைகளையும் தியாகங்களையும் போற்றும் விதமாகவும்,முத்தரையர் சமுதாயத்தின் வீரத்தையும் இந்திய தேசத்தில் அவர்களின் தொன்மையும் கௌரவிக்கும் விதமாகவும், இந்த அஞ்சல் தலை மத்திய அரசு சார்பில், மாண்புமிகு துணை குடியரசு தலைவர் @CPR_VP அவர்களது கரங்களால் வெளியிடப்பட்டுள்ளது.
முத்தரைய சமூகத்தின் வரலாற்றை இந்திய தேசம் முழுவதும் கொண்டு சேர்த்த மத்திய அரசுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை உ��ித்தாக்குகிறேன்!
��ுத்தரையர் சமூகத்திற்கும் தமிழினத்திற்கும், மகுடம் சூட்டிய இந்த வரலாற்று நிகழ்வை போற்றுவோம்!
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 50-க்கும��� மேற்பட்ட கிராமங்களில், முத்தரையர்களின் அரசியல் அதிகார மீட்பு மாநாட்டிற்கான அழைப்பிதழ்களை வழங்கினேன்!
சென்ற கிராமங்களில் எல்லாம் தாய்மார்கள் ஆரத்தி எடுத்ததும், இளைஞர்கள் கரகோசம் எழுப்பியதும், பெரியவர்கள் கண்ணீரோடு வாழ்த்தியதும், என் நெஞ்சில் ஆழமாகப் பதிந்தது. இந்த உணர்ச்சிகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது!
ஒவ்வொரு கிராமத்திலும்,நான் பெற்ற மரியாதை, நம் இனத்தின் அரசி���ல் விடுதலைக்கான ஒரு தூதுவனுக்கு நீங்கள் அளித்த அங்கீகாரம்!
நம் இனத்தின் அரசியல் விடுதலைக்காக உயிர் கொடுத்தேனும் உழைப்பேன் என்று இந்த சிவகங்கை மண்ணில் உறுதி ஏற்கிறேன்!
சிவகங்கை சொந்தங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!
#முத்தரையர்_மாநாடு_2026
இன்றைய தினம் 18.11.2025, செவ்வாய்க்கிழமை - இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் நீங்கா இடம் பிடித்த, தமிழர்களின் வீரத்தை உலகறியச் செய்த மாபெரும் தியாகி, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் நினைவு தினம் இன்று.
வணிகத்தைத் தங்கள் கையில் வைத்திருந்த ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை, முழுக்க முழுக்க இந்தியர்களால், இந்தியப் பண���்தில், இந்திய உழைப்பால் உருவான சுதேசி கப்பல் கம்பெனி மூலம் ஆங்கிலேயரின் வணிக ஆதிக்கத்திற்கு எதிராக களமாடிய முதல் தமிழர்.
'வந்தே மாதரம்' என்ற முழக்கத்திற்காக இரட்டை ஆயுள் த��்டனை பெற்று, காலில் இரும்புச் சங்கிலி பூட்டி, செக்கிழுத்து சித்திரவதைக்கு ஆளான தியாகச் செம்மல்.
வழக்கறிஞர் என்ற முறையில் தொழிலாளர் நலனுக்காகப் பாடுபட்டு, தொழிலாளர் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கிய முன்னோடி.
அவருடைய தியாகத்தையும், துணிவையும், நாட்டுப்பற்றையும் இன்றைய தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்லி, அவருடைய லட்சியப் பாதையில் பயணிப்போம் என இந்நாளில் உறுதியேற்போம்.
ச��தந்திர வேள்விக்குத் தம் வாழ்வையே அர்ப்பணித்த மாபெரும் தியாகிக்கு வீர வணக்கம்!
இன்றைய தினம் 08.11.2025, சனிக்கிழமை - வருகின்ற சனவரி 25, 2026 அன்று திருச்சியில் பிரமாண்டமாக நடைபெறவுள்ள முத்தரையர்களின் அரசியல் அதிகார மீட்பு மாநாட்டிற்கான அழைப்பிதழை, நாகப்பட்டினம் மாவட்டத்தில் 30க்கும் மேற்பட்ட கிராம மக்களை நேரில் சந்தித்து வழங்கினேன்!
கிராமங்கள் தோறும் சிறப்பான வரவேற்பு அளித்த உறவுகளுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி! #முத்தரையர்_மாநாடு_2026
இந்திய திருநாட்டின் 15 வது துணை குடியரசு தலைவராக பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு @CPRGuv அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை பெருமகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன்!
தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை குடியரசு தலைவர் வேட்பாளராக பரிந்துரைத்து, தமிழ் மீது கொண்ட பேரன்பின் வெளிப்பாடாக தமிழர் ஒருவருக்கு வாய்ப்பளித்து, அவரை மகத்தான வெற்றி பெறச்செய்த மாண்புமிகு பாரத பிரதமர் @narendramodi அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும்,தமிழக பாஜக தலைவராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், ஆளுநராகவும் பல்வேறு நிலைகளில் திறம்பட மக்கள் பணி செய்து அர்ப்பணிப்பு உணர்வோடு தன்னை பொதுவாழ்வில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டதன் விளைவாக துணை குடியரசு தலைவர் என்ற உயரத்தை அடைந்திருக்கிறார்.
குடியரசு தலைவர் பொறுப்பில் மாண்புமிகு ச��.பி.ராதாகிருஷ்ணன் அவர்களின் பணி சிறக்க, வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் மற்றும் தமிழர் தேசம் கட்சியின் சார்பில் மீண்டும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்!!
இன்றைய தினம் 03.09.2025, புதன்கிழமை - திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டம், குட்டுப்பட்டி மற்றும் சேத்தூர் ஊராட்சிகளுக்கு உட்பட்ட, பெரிய மலையூர், சின்ன மலையூர், வலசை, பள்ளத்துக்காடு உள்ளிட்ட மலை கிராம மக்களின் நீண்டகால கோரிக்கையான சாலை வசதி செய்து தரக்கோரி தமிழர் தேசம் கட்சி சார்பில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், நத்தம் ரவுண்டானாவில் நடந்து முடிந்தத��.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்று பேருரையாற்றினேன்!
மேலும், விரைந்து, மேற்குறிப்பிட்ட மலை கிராம மக்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தி தராத பட்சத்தில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வீடு முற்றுகை போராட்டம் நடத்தப்படும் எனவும், தொடர்ச்சியாக மக்களுக்கான போராட்ட களத்தில் தமிழர் தேசம் கட்சி நிற்கும் எனவும் உறுதியளித்தேன்!
இன்றைய தினம் 31.08.2025, ஞாயிற்றுக்கிழமை, கட்சியின் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட செயற்குழு கூட்டம், மண்ணச்சநல்லூர் ஆர்.ஜே.திருமண மண்டபத்தில் ( ஆண்டவர் திருமண மண்டபம்) சிறப்பாக நடந்து முடிந்தது.
இந்த கூட்டத்திற்கு தலைமையேற்று, திருச்சி மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட குழு நிர்வாகிகள், அனைத்து ஒன்றிய செயலாளர்கள் மற்றும் ஒன்றிய குழு நிர்வாகிகள், ஆகியோரிடம் நிர்வாக ரீதியாக விவாதம் நடத்தினேன்.
அடு��்த கட்ட கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும், தேர்தல் கால பணிகள் குறித்தும் ஆலோசனைகளை வழங்கினேன்!
27.08.2025, புதன்கிழமை - வளமுடன் வாழ்வை வளம் செய்யும் தோழன், தடைகள் அனைத்தும் தகர்க்கும் விக்னேஸ்வரன், அன்பும் அமைதியும் அருளும் பொழியும் விநாயகர்.
அனைவரு��்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்!
இன்றைய தினம் 20.08.2025, புதன்கிழமை, தமிழர் தேசம் கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டம், கரூர் ராயல் கிராண்ட் விடுதியில் சிறப்பாக நடந்து முடிந்தது.
இக்கூட்டத்தில் கட்சியின் மாநில, மாவட்��� செயலாளர்களுடன், நிர்வாக ரீதியாக விரிவான விவாதம் நடத்தினேன்!
மேலும் முத்தரையர் சமுதாய மக்களை தமிழகம் முழுவதும் அடையாளப்படுத்த பல்வேறு பெயர்களில் மாநாடுகள், பொதுக்கூட்டங்களை நாம் நடத்தியிருக்கிறோம். அதன் விளைவாக இந்த மக்களின் உரிமைகளையும் பெற்றுத்தந்துள்ளோம்.
ம��த்தரையர் சமுதாய மக்கள் அடுத்தகட்ட அரசியல் அதிகாரத்தை பெறவும், எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு முத்தரையர்களின் அதிகார குரல் தமிழக சட்டமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில், பிப்ரவரி 01,2026 அன்று திருச்சியில் நடைபெறும், முத்தரையர்களின் அரசியல் அதிகார மீட்பு மாநாட்டிற்கான அறிவிப்பையும் வெளியிட்டு உரையாற்றினேன்!
தமிழக பாரதிய ஜனதா கட்சியினுடைய தலைவராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், ஜார்கண்ட், தெலுங்கானா, புதுச்சேரி மற்றும் மகாராஷ்டிரா மாநில ஆளுநராகவும், அர்ப்பணிப்பு உணர்வோடு, பொது சேவை மனப்பான்மையுடன், ��க்கள் பணி செய்து வந்தவர் @CPRGuv அவர்கள்.
அவருடைய மக்கள் பணிக்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் துணை குடியரசு தலைவர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள செய்தி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் மட்டுமே ஒரு சாமானியன், குறிப்பாக ஒரு தமிழன் நாட்டின் உயர்ந்த பதவியினை அடையலாம் என்பதற்கு இது ஒரு வரலாற்று சான்றாகும்.
வீரமுத்தரையர் முன���னேற்ற சங்கம் மற்றும் தமிழர் தேசம் கட்சியின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை பெருமகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறேன்!
திருநெல்வேலியில் மென்பொறியாளர் கவின் சாதி ஆணவப்படுகொலை. தமிழர் தேசம் வண்மையாக கண்டிக்கிறது.
திருநெல்வேலி மாவட்டம்,பாளையங்கோட்டையில் மென்பொறியாளர் கவின் சாதிவெறி மிருகங்களினால் படுகொலை செய்யப்பட்டிருப்பது சாதி ஆணவத்தின் உச்சம்.இதனை தமிழர் தேசம் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த சந்திரசேகர்-தமிழ்ச்செல்வி தம்பதியினரின் மகன் கவின் செல்வ கணேஷ் மற்றும் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த சரவணன்-கிருஷ்ணகுமாரி தம்பதியினரின் மகள் இருவரும் கல்லூரி காலத்திலிருந்தே காதலித்து வந்துள்ளனர்.பெண்ணின் குடும்பத்தை வ���ட கவின் குடும்பத்தார் பொருளாதர ரீதியில் வலிமையாகவும் சென்னையில் தனியார் நிறுவனத்தில் மென்பொறியாளராகவும் இருந்த போதிலும் அவர் பட்டியல் பிரிவை சேர்ந்தவர் என்பதால் சாதி வெறி பிடித்த பெண்ணின் குடும���பத்தினர் இவர்கள் காதலை எதிர்த்து வந்துள்ளனர்.
இந்நிலையில் விடுமுறைக்காக தூத்துக்குடி வந்திருந்த கவின் செல்வ கணேஷ் உடல்நிலை சரியில்லாத தனது தாத்தாவின் மருத்துவ சிகிச்சைகாக பாளையங்கோட்டைக்கு சென்றிருந்த போது பெண்ணின் தம்பியான சுர்ஜித் என்பவர் தனது குடும்பத்தோடு ஏற்கனவே திட்டமிட்டபடி கவின் செல்வ கணேஷை லாவகமாக பேசி கடத்திச் சென்று தாங்கள் திட்டப்படி பாளையங்கோட்டை கே.டி.சி நகர் பகுதியில் வைத்து அவரது தாயின் கண் முன்னே கொலை செய்துள்ளனர்.
படித்து பட்டம் பெற்று காவல் துறையில் சார்பு ஆய்வாளர் அந்தஸ்த்தில் பணிபுரிந்து வருபவர்களே சாதிய மனநோயாளிகளாக,சாதி வெறிபிடித்த மிருகங்களைப் போல நடந்து கொண்டு ஒரு இளைஞரின் உயிரைப் பறித்திருப்பது பெரும் வேதனையளிக்கிறது.
அரை நூற்றாண்டு கால திராவிட ஆட்சியின் சாதி ஒழிப்பு போலி நாடகத்தினால் வெகுஜன மக்களின் ம���நிலையில் எவ்வித மாற்றமும் நிகழவில்லை என்பதற்கு இந்த கொடூரமே சாட்சி.
மேலும் இந்த வழக்கில்,கொலை செய்யப்பட்ட 15 நிமிடங்களில் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளரிடம் கொலையாளி சரண்டர் செய்யப்பட்டுள்ளார் எனவே இந்த கொலையானது திட்டமிட்ட சதி.
பெண்ணின் பெற்றோரான காவல்துறையைச் சேர்ந்தவர்கள் காவல்துறையில் தங்களின் செல்வாக்கை பயன்படுத்தி இந்த ஆணவ கொலை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர் என்பத��� தெள்ளத் தெளிவாகிறது எனவே சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளரையும் விசாரணை வளையத்தில் கொண்டு வந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாதிய வன்கொடுமை மற்றும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு இதுவரை கைது செய்யப்படாமல் இருக்கும் பெண்ணின் பெற்றோரான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டும்.
சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு சம்பந்தப்பட்ட அனைத���து குற்றவாளிகளுக்கும் உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும்.
நாடு போற்றும் ஆட்சி நான்காண்டே சாட்சி ,எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி என்றும் அமைதி பூங்காவாக தமிழகம் திகழ்கிறது என்றும் பட்டியல் இனத்தின் பாதுகாவலர் நாங்கள் தான் என்றும் வெற்று வாய்ச்சவடால்களை விடுத்து, சினிமா பட வசனத்தில் வருவதைப் போல் "சீப்பை எடுத்து ஒழித்து வைத்துக் கொண்டால் கல்யாணம் நின்று விடுமா?" எ��்பதைப் போல பள்ளிகளில்,விடுதிகளில், சாலைகளில் சாதி பெயரை அழித்து விட்டால் சாதியை ஒழித்து விடலாம் என்ற விளம்பரம் மனநிலையில் இருந்து வெளிவந்து சமூகத்தில் சாதிய ஆதிக்கத்தை ஒழிக்க அடிப்படை மாற்றத்தை உருவாக்க ஆட்சியாளர்கள் முன் வர வேண்டும்.
@CMOTamilnadu
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி, தமிழர் தேசம் கட்சியின் வாக்குச்சாவடி நிர்வாகிகள், முகவர்கள், உறுப்பினர்கள் பங்குபெற்ற வாக்குச்சாவடி நிலை குழு கூட்டம் அறந்தாங்கி நூர் திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு தலைமையேற்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கினேன்!
தமிழகம் முழுவதும் உள்ள 12000 க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளி பகுதிநேர ஆசிரியர்களுக்கு
பணிநிரந்தரம் வழங்கிடுக!
தமிழகம் முழுவதும் உள்ள 7000 அரசுப் பள்ளிகளில் 12000 க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்களை அரசு நியமித்துள்ளது. இவர்கள் நீண்ட காலமாக பணி நிரந்தரம் வழங்க வேண்டுமென அரசிடம் கோரிக்கை வைத்துவருகின்றனர். உழைப்புக்கேற்ற ஊதியம�� இல்லாமலும், அரசின் ஆசிரியர்களுக்கான எந்த சலுகைகளும் இல்லாமலும், பணிபாதுகாப்பற்ற சூழலில் பணிசெய்து வருகின்றனர்.
தற்பொழுது தமிழகத்தை ஆளும் திராவிட மாடல் அரசு, தங்கள் தேர்தல் வாக்குறுதி 181 ல், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தர பணியில் அமர்த்துவோம் என்று உறுதிகொடுத்துவிட்டு, இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 10 நாட்களாக அறவழியில் போராடி வந்த பகுதி நேர ஆசிரியர்களை வலுக்கட்டாயமாக காவல்துறை கைது செய்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்!
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல், அறவழி போராட்டகளத்தில் உள்ள ஆசிரியர்களிடம் அரசு பேச்சு வார்த்தை நடத்தாமல் காவல்துறையை வைத்து, ஏதோ சமூக விரோதிகளை போல ஆசிரியர்களை நடத்துவது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இதேபோல, கடந்த ஜூலை 8 ம் தேதி நடந்த அறவழி போராட்டத்தில் பங்கெடுத்துவிட்டு வீடு திரும்பும்போது, திருவண்ணாமலை மாவட்டம், தென்னம்பட்டு அரசு உயர் நிலைப் பள்ளியில் பகுதி நேர ஆசிரியராக பணிபுரி���்துவந்த பார்த்தசாரதி என்பவர் விபத்தில் மரணமடைந்தார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இவருக்கு ரூபாய் 10 லட்சம் இழப்பீடும், அவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டுமென தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், தேர்தல் வாக்குறுதிப்படி பணி நிரந்தரம் செய்திருந்தால், போராட்டமும் நடந்திர��க்காது, இவருடைய உயிரும் காப்பாற்றபட்டிருக்கும். இனியும் காலம் தாழ்த்தாமல், மனிதாபிமானத்தோடு பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் செய்யவேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu
முருக பக்தர்களை ஒன்றிணைக்கும் நோக்கத்துடனும், முருக பக்தியை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் நோக்கத்துடனும்,எதிர்வரும் 22.06.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மதுரையில் நடைபெறவுள்ள, முருக பக்தர்கள் மாநாட்டிற்கான அழைப்பிதழை, இந்து முன்னணியின் மாநில தலைவர் உயர்திரு.காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அவர்கள் வழங்க பெற்றுக்கொண்டேன்.
இந்த மாநாடு தமிழ் கடவுள் முருகப்பெருமான் அருளால் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற வாழ்த்துகிறேன்!
@hindumunnani_tn
#முருகபக்தர்கள்மாநாடு
அரசு விழாவாக கொண்டாடப்படும் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதயவிழாவிற்கு தமிழக செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் ஏன் நாளிதழ்களில் விளம்பரம் கொடுப்பதில்லை???
@CMOTamilnadu@mkstalin
மே 23 பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மன்னரின் 1350-வதுசதயவிழா(பிறந்தநாள் விழா)
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதயவிழாவிற்கு மட்டும் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் விளம்பரம் எதுவும் நாளிதழில் வரு���தில்லை?
@mp_saminathan
@CMOTamilnadu
@TNDIPRNEWS @Udhaystalin