@CMOTamilnadu@TVKVijayHQ@imrajmohan@RameshOffcl@BussyAnand@AadhavArjuna@CTR_Nirmalkumar தமிழ்நாடு திருச்சிரப்பள்ளி ஸ்ரீரங்கம் விருக்ஷ புக் ஆப் வேர்ல்ட் ரெகார்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ரெங்கநாயகி என்பவர் தான் மலேசியாவில் உள்ள பத்து குகை (முருகன்) கோவிலில் 26 டிசம்பர் 2024ல் 300க்கு மேற்பட்ட இசை மற்றும் பரதநாட்டிய கலைஞர்களை வைத்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து வருவதாக கூறி சென்னையில் எனது மகள் பயிலும் இசை பள்ளியின் உரிமையாளரை ஜூன் 2024ல் அணுகி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுத்தார் இதற்காக ஒரு நபருக்கு ரூபாய் 40000 (விமானம், உணவு, சுற்றுலா மற்றும் தங்குமிடம்)கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றார். இதை நாங்கள் ஒரு வாய்ப்பாக கருதி குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் 33 பேருக்கு 2 தவணையாக ஜூலை மற்றும் ஆகஸ்ட் 2024 மாதத்தில் வங்கி பரிவர்த்தனை மூலமாக ரெங்கநாயகி அவர்களின் வங்கி கணக்கிற்கு செலுத்தினோம்.25 டிசம்பர் 2024 வரை எங்களுக்கு விமான டிக்கெட் மற்றும் தங்கும் இடம் தொடர்பாக எந்த விவரமும் வழங்கவில்லை இதை பற்றி விசாரித்த போது நாங்களும் எங்களை போன்று தமிழக மற்றும் மற்ற மாநிலத்தில் உள்ள இசை மற்றும் பரதநாட்டிய கலைஞர்கள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் ஏமாற்றபட்டோம் என்று உணர்ந்தோம்.எங்கள் இசை பள்ளியின் உரிமையாளர் 27 டிசம்பர் 2024ல் சென்னை திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். நீண்ட நாட்களுக்கு பின்னர் ஏப்ரல் 2025ல் ரெங்கநாயகியை குற்றவாளியாக கருதி எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு அப்போதைய திருமங்கலம் காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தினர்.தேர்தல் அறிவிப்பு மற்றும் நிர்வாக மாறுதலால் இந்த புகாரின் விசாரணை தடைபட்டு இன்று வரை இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டுள்ளது.சின்னஞ்சிறு குழந்தைகள்,பெற்றோர்கள் மற்றும் முதியவர்களை ஏமாற்றி ரெங்கநாயகி தலைமறைவாகி உல்லாசமாக வாழ்ந்து வருகிறார்.தாங்கள் இந்த பதிவின் மேல் தகுந்த நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நம்புகிறேன் மேலும் உங்களில் ஒருவரை சந்திக்க அனுமதி கிடைத்தால் ஆதாரங்கள் அனைத்தும் உங்களிடம் சமர்ப்பிக்கிறேன்