Historic Moment in Indian Elections 2026! For the first time ever, a large number of NRIs are traveling back to India just to vote. ✈️🇮🇳 Flight bookings from overseas have seen a record surge, showing how strong the excitement is.
All because of just one name - Thalapathy Vijay.
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
கழகத் தோழர்களுக்கு வணக்கம்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வரும் 1ஆம் தேதி (01.03.2026) ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10.00 மணி முதல், 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் கழகச் செயல் வீரர்கள் கூட்டம் முழுநாள் நிகழ்வாக நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில், தேர்தல் பரப்புரைப் பணிகள், வாக்குச் சாவடி முகவர்களின் பணிகள் உள்ளிட்ட கழகத்தின் அடுத்த கட்டச் செயல்பாடுகளை முன்னெடுப்பது குறித்து, கழகத் தலைவர் அவர்கள் ஏற்கெனவே அறிவித்தது போல, கலந்தாலோசிக்கப்பட உள்ளது.
தேர்தல் கண்காணிப்பாளர்கள், இணைக் கண்காணிப்பாளர்களுடன் இணைந்து மாவட்டக் கழக நிர்வாகிகள் பங்கேற்பில், அந்தந்த மாவட்டங்களைச் சார்ந்த தொகுதிகளில் இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது.
மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஏற்பாட்டில் நடைபெற உள்ள இக்கூட்டங்களில் அந்தந்தச் சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த பல்வேறு அணியினர் உள்ளிட்ட கழகத்தின் அனைத்து நிர்வாகிகள் மற்றும் கழகச் செயல்வீரர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
என்.ஆனந்த்,
பொதுச் செயலாளர்,
தலைமை நிலையச் செயலகம்
(Party Headquarters Secretariat),
தமிழக வெற்றிக் கழகம்
என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் வணக்கம்.
தமிழக அரசியல் களத்தின் முதன்மை சக்தியான தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி (25.08.2025) திங்கட்கிழமை அன்று மதுரையில் நடைபெற உள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்கிறேன்.
வாகை சூடும் வரலாறு திரும்பட்டும்.
வெற்றி நிச்சயம்.
நன்றி.