தமிழகத்தில் ரீல்ஸ் மாடல் ஆட்சி நடத்தி வரும் @TVKVijayHQ அரசின் செயல்பாடுகள் குறித்து விமர்சனங்களையும் குறைகளையும் சுட்டிக்காட்டிய யூடியூபர் மாரிதாஸ் மீது காவல்துறையினர் மேற்கொண்ட கைது நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது.
ஜனநாயகத்தில் அரசின் தவறுகளை சுட்டிக்காட்டுவது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமையாகும். ஆனால் அந்த உரிமையை ஒடுக்குவதற்காக கைது நடவடிக்கைகளை ஆயுதமாக பயன்படுத்துவது கருத்து சுதந்திரத்திற்கு எதிரான செயல்.
கடந்த ஆட்சிக் காலத்திலும் அரசின் தவறுகளை வெளிச்சமிட்டுக் காட்டியவர்களை கைது செய்து, சமூக ஊடக விமர்சகர்களை அச்சுறுத்திய திமுக அரசின் பாணியையே தற்போது தவெக அரசும் பின்பற்றுகிறது.
கருத்து சுதந்திரத்தையும் ஜனநாயக உரிமைகளையும் மதிக்காமல் விமர்சன குரல்களை ஒடுக்க முயல்வது எந்த அரசுக்கும் ஏற்றதல்ல. விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியது பதில்களால்.. கைது நடவடிக்கைகளால் அல்ல.
அன்பிற்கு இனிய அக்காவிற்கு என் நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🪷
தங்களின் அர்ப்பணிப்பான சமூகப் பணி, தலைமைத்துவம் மற்றும் மக்கள் நலச் சேவை மேலும் பல உயரங்களைத் தொட இறைவன் அருள் புரியட்டும்🔥
@VanathiBJP@BJP4India@BJP4TamilNadu#HappyBirthdayAkka#Birthday2026
Congratulations to Shri @VMBJP , Shri @RajeevRC_X & Shri BB Gopakumar for this historic achievement in Kerala!
From Nemom to Chathannoor to Kazhakoottam — the lotus has bloomed stronger than ever.
This marks the beginning of a new political surge in Keralam, driven by people’s growing trust and aspiration for change.
இன்று கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி வாக்குச்சாவடி ஆய்வு பணியின் போது கூட்டணி கட்சிகளின் தீவிர உழைப்பும், வாக்காளர்களின் முகத்தில் தெரிந்த நம்பிக்கையும் தமிழகம் இனி தலை நிமிரப் போவதை உணர்த்தியது..
இன்று கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி சாய்பாபா காலனி பகுதியில் என்னை ஆதரித்து தாமரை சின்னத்துக்கு வாக்கு சேகரித்து பிரச்சாரம் செய்த மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு. @PiyushGoyal அவர்களுக்கு மனமார்ந்த நன்றி!
அவரது உற்சாகமான உரை எனது வெற்றிக்கு பெரும் வலு சேர்த்தது.
திமுகவின் ஊழல் ஆட்சியில் தமிழகம் பின்னோக்கிப் போகும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழகத்துக்கு தொடர்ந்து பெரும் திட்டங்களை வழங்கி வருகிறார். சாலைகள், ரயில்வே, எரிசக்தி, விவசாயம் உள்ளிட்ட துறைகளில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
#Vote4Vanathi | #Vanathi4North | #KovaiNorth | #Vanathi4KovaiNorth | #ValarchiWithVanathi | #NDA4TN | #கோவையின்மகள்
கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் கணபதி பகுதியில், பொதுமக்களிடம் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (NDA) வாக்களிப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை விளக்கி, தாமரை சின்னத்தில் வாக்களிக்குமாறு வாக்கு சேகரித்தேன்.
இரவு பொழுதிலும், பொதுமக்கள் ஆர்வத்துடன் காத்திருந்து அளித்த உற்சாகமான வரவேற்பும், ஆரவாரமும், கோவை வடக்கு தொகுதியின் வெற்றியை உறுதிப்படுத்துகிறது.
திமுக ஆட்சியில் கடந்த ஐந்தாண்டுகளாக கோவை வடக்கு உள்ளிட்ட பகுதிகள் புறக்கணிக்கப்பட்டு, அடிப்படை வசதிகள் கூட முறையாகச் செய்யப்படாமல் உள்ளது. மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்காமல், ஊழல், குடும்ப ஆட்சி, மற்றும் அரசியல் சுயநலத்திலேயே திமுக முழு கவனத்தையும் செலுத்தியது. இந்த முறை மக்கள் அந்த தோல்வியடைந்த ஆட்சியினை நிராகரித்து, வளர்ச்சி, நல்லாட்சி மற்றும் மக்கள் நலனை முன்னிறுத்தும் தேசிய ஜனநாயகக் கூட்டணியைத் தேர்ந்தெடுப்பார்கள்.
#Vote4Vanathi | #Vanathi4North | #kovainorth | #Vanathi4KovaiNorth | #ValarchiwithVanathi l #NDA4TN l #கோவையின்மகள்
கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி, வார்டு எண் 25, கணபதி மாநகர் பகுதியில் பொதுமக்களிடம் தாமரை சின்னத்தில் வாக்கு சேகரித்தேன். மேலும், அவர்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் குறைகளையும் கேட்டறிந்தேன்.
செல்லும் இடமெல்லாம் மக்களின் அன்பான வரவேற்பைப் பார்க்கும் போது, நிச்சயம் கோவை வடக்கில் தாமரை மலரும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்!
#Vote4Vanathi | #Vanathi4North | #KovaiNorth | #Vanathi4KovaiNorth | #ValarchiWithVanathi | #NDA4TN | #கோவையின்மகள்
கோவை வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வார்டு எண் 20 மற்றும் 25, கணபதி மநகர், ராகம் பேக்கரி ஆகிய பகுதிகளில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட காணொளி.
பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் என அனைத்து தரப்பு மக்களும் எங்களுக்கு மிகச் சிறப்பான வரவேற்பை அளித்தனர்.
#Vote4Vanathi | #Vanathi4North | #KovaiNorth | #Vanathi4KovaiNorth | #ValarchiWithVanathi | #NDA4TN | #கோவையின்மகள்