என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள் வெளிவந்துவிட்டன. மக்கள் மனத்தில் நம் தமிழக வெற்றிக் கழகத்திற்கென இருக்கும் முதன���மைச் சக்திக்கான முதலிடமும், நமது மனசாட்சி உள்ள மக்களாட்சி மீதான நம் சொந்தங்களின் ஆழ்மன விருப்பமும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு உள்ளன.
வாக்குகளுக்கு ஒரு பைசா கொடுக்காமல், யாரையும் பட்டியில் அடைத்து அவமானப்படுத்தாமல், திருமங்கலம், ஈரோடு கிழக்கு ஃபார்முலா என்று எந்த ஃபார்முலாவும் இல்லாமல் அன்பு, பாச, உறவு ஃபார்முலா மற்றும் ஜனநாயகம் காக்கும் ஃபார்முலாவை வைத்து வென்ற தேர்தல் இது. தமிழகம், ஊழல் சக்திகளின் கோட்டை இல்லை. மாறாக, மாபெரும் மக்கள் சக்தியின் கோட்டை, மக்கள் மனத்தில் நீங்கா இடம் பெற்ற அன்பு மிக்க தூய சக்தியின் கோட்டை என்பதை நிரூபித்துள்ளது. தமிழக இடைத்தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், பணநாயகச் சூத்திரத்தையே அடித்து நொறுக்கிப் பெற்றுள்ள வெற்றியே இது.
கண்டகண்ட பேரங்கள் நடந்ததாக அவதூறு பேசிய மிருகக் குணப் பேச்சுக்கு எல்லாம் மக்கள் தகுந்த பதிலடியைத் தரமாகத் தந்துள்ளனர். அப்படிப் பேசியவர்களை மக்கள் வெகுதூரத்தில் ஒதுக்கி வைத்து, அவர்கள் மனத்தில் மீண்டும் தோல்வி பாரத்தை ஏற்றி உள்ளனர்.
இரண்டு தொகுதிகளிலும் நாம் இரண்டு நாள்கள் பிரசாரம் மேற்கொண்டதை நக்கலாகவும் நையாண்டியாகவும் பேசியவர்களுக்குத்தான் இப்போது மக்கள் பதிலடி தந்துள்ளனர். இதேபோல கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலிலும், ��மிழகம் முழுக்கப் பிரசாரம் செய்ய அன்றைய தீய சக்தி தி.மு.க., நம்மை அனுமத���த்து இருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை மக்களிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளட்டும்.
நம்மைப் பொறுத்தவரை, என்றைக்கும் நாம் மக்கள் பக்கம்தான் நிற்போம். மக்களோடு மக்களாகத்தான் இரண்டறக் கலந்து இருப்போம். அது நம் கடமை மட்டுமன்று. மக்களுக்கான நமது நன்றிக் கடன் அது. எப்போதும் நம் தமிழக மக்களுக்காக முழுமூச்சுடன் நன்றி விசுவாசத்துடனேயே இருப்போம் என்பது நூறு சதவீதம் உறுதி.
இந்த வேளையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் வாக்களித்து வெற்றி பெறச் செய்துள்ள நம் சொந்தங்கள் அனைவருக்கும் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, உறவாக நன்றி சொல்வதில் மனம் மகிழ்கிறேன். நெஞ்சம் நெகிழ்கிறேன்.
இரண்டு தொகுதிகளிலும் வெற்றிக்காக உழைத்த மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், வி.சி.க., ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் ம��ிப்பிற்குரிய தலைவர்களுக்கும், மாண்புமிகு அமைச்சர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த மாநில, மாவட்ட மற்றும் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றி��ைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும், எப்போதும் போலச் சிறப்பாகக் களப் பணியாற்றிய நம் மாண்புமிகு அமைச்சர்களுக்கும் மாநில, மாவட்ட மற்றும் அனைத்து நிலை த.வெ.க. நிர்வாகிகளான நம் தோழர்களுக்கும் நம் நெஞ்சார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த இடைத்தேர்தலில், வெற்றிச் சின்னமாம் விசில் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள நம் வேட்பாளர்களான சகோதரி திருமதி மரகதம் குமரவேல் (மதுராந்தகம் தொகுதி), சகோதரி திருமதி சத்தியபாமா (தாராபுரம் தொகுதி) ஆகியோருக்கும் நம் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இப்போதும் சொல்கிறேன். இந்த வெற்றி, தனிப்பட்ட இந்த விஜய்யின் வெற்றியோ, தனிப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றியோ அல்ல. இது முழுக்க முழுக்கப் பெண்கள் மீதான அவதூறு பேச்சுக்கு எதிரான வெற்றி. தரம் தாழ்ந்த வகையில் நடத்தப்பட்ட தனிப்��ட்ட தாக்குதலுக்கு எதிரான வெற்றி. அப்பழுக்கற்ற தலைவர்களுக்கும் அவர்களின் தொண்டர்களுக்கும் செய்த துரோகத்திற்கு எதிரான வெற்றி.
மொத்தத்தில், அரசியல் நாகரிகத்திற்குக் கிடைத்த வெற்றி. தனிமனித நாகரிகத்திற்குக் கிடைத்த வெற்றி. எல்லாவற்றுக்கும் மேலாக மக்களுக்குக் கிடைத்த வெற்றி. வாக்காளர்களுக்குக் கிடைத்த வெற்றி. இது இனிமேலும் தொடரும். தொடர்ந்தேதான் தீரும். மீண்டும் மீண்டும் ��னிவரப் போகும் வெற்றிகளுக்கும் சேர்த்து ��ப்போதே நன்றி.
நல்லதே நடக்கும்.
வெற்றி நிச்சயம்.
போலியான செய்தியை பரப்பிய @sunnewstamil எனும் பொய் செய்தி சேனலுக்கு வன்மையான கண்டனம்
மதுரை அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி நீக்கப்பட்டதாக சன் நியூஸ் செய்தி சேனல் வெளியிட்டுள்ள செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானதும், திட்டமிட்டு உருவாக்கப்பட்ட போலியான செய்தியும் ஆகும்.
சன் நியூஸ் வெளியிட்டுள்ள செய்தியில் பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படத்தில், பெயர்ப்பலகையில் இடம்பெற்றிருந்த தமிழ் எழுத்துகளை திட்டமிட்டு ஃபோட்டோஷாப் மூலம் மறைத்து, தமிழ் நீக்கப்பட்டதைப் போன்ற ஒரு போலியான புகைப்படத்தை உருவாக்கி, அதனை உண்மையான புகைப்படம் போல சித்தரித்து செய்தி வெளியிட்டுள்ளனர்.
மதுரை அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலின் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் கடந்த ஆண்டுகளில் எப்படி பெயர் பலகை இருந்ததோ இப்போதும் அதே முறையில் தான் உள்ளது என்பதையும் தெளிவுபடுத்துகிறேன். எனவே, சன் நியூஸ் வெளியிட்டுள்ள இந்த செய்தி வடிகட்டிய பொய் மற்றும் முழுமையாக உண்மைக்கு புற��்பான செய்தி என்பதை பொதுமக்களுக்கு தெளிவுபடுத்துகிறோம்.
செய்தி ஊடகம் என்ற பொறுப்பான தளத்தை பயன்படுத்தி திட்டமிட்டு உண்மையை மாற்றி சித்தரித்து செய்தி வெளியிடுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற செயல்கள் பொதுமக்களிடையே தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துவதுடன், அரசாங்கத்தின் மீதும் இந்து சமய அறநிலையத்துறையின் மீதும் மக்களிடையே அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கத்துடன் மேற்க���ள்ள��்படுவதாகவே கருத வேண்டியுள்ளது.
பொய்யான புகைப்படத்தை உருவாக்கி, அதனை அடிப்படையாகக் கொண்டு போலியான செய்தியை பரப்பிய சன் நியூஸ் செய்தி சேனலின் இந்த செயலுக்கு எனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், இதுபோன்ற பொய்யான மற்றும் தவறான செய்திகளை பரப்பும் ஊடகங்களின் மீது, சட்டத்திற்குட்பட்டு உரிய நடவடிக்கை நிச்சயமாக மேற்கொள்ளப்படும்.
பொதுமக்கள் இதுபோன்ற போலி ச��ய்திகளையும், உண்மையை திரித்து வெளியிடும் செய்தி நிறுவனங்களையும் நம்ப வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
போலியான சன் நியூஸ் செய்தியுடன், தற்போது எடுக்கப்பட்ட உண்மையான புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது.
பின்குறிப்பு: சட்டம் தன் கடமையை நிச்சயமாக செய்யும்.
@CMOTamilnadu | @TVKVijayHQ
மாண்புமிகு மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் அண்ணன் CTR. நிர்மல் குமார் மற்றும் எங்கள் அன்பு அண்ணன் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் M. மருதுபாண்டியன் அவர்களுடன்.
தமிழக வெற்றிக் கழகத்தின் #புதுக்கோட்டை மாவட்ட அமைப்புச் செயலாளராக என்னை நியமனம் ���ெய்த;
தமிழ்ந��ட்டின் தன்னிகரற்ற தனிப்பெரும் சக்தியாய்
மாபெரும் மாற்றத்தையும், மறுமலர்ச்சியையும் உண்டாக்கி,
விவேகமும் தொலைநோக்குப் பார்வையும் கொண்ட புதிய அரசியலை வழிநடத்தும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
@TVKVijayHQ அவர்களுக்கு
என் நெஞ்சம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வெற்றித் தலைவரின் வெற்றிப் பயணத்தில்,
நம் மண்ணின்…மக்களின் குரலாக…
என்றும் களத்தில்
முன்நின்று செயலாற்றுவோம்!
🙏❤️💛❤️
#தமிழகவெற்றிக்கழகம் #TVK #CMJosephVijay
#CVB
நான் தமிழ்நாடு அரசின் அமைச்சராக பொறுப்பேற்றமைக்காக, ஆயிரக்கணக்கானோர் என்னை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அந்தக் கூட்டத்தோடு கூட்டமாக மேலே குறிப்பிட்ட நபர் வருகை தந்து சென்றிருக்கிறார். இந்த நபருடன் எனக்கு முன்பு எந்த அறிமுகமும் இல்லை. கூட்டத்தில் ஒருவராக வருகை தந்த ஒருவரை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்ததாக பொய்யான தகவல் ப��ப்பப்படுகிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறேன்.
வீரத்திற்கும் தியாகத்திற்கும் எடுத்துக்காட்டாய் விளங்கியவர், "தென்னாட்டின் ஜான்சி ராணி", தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர், சமூக சேவகர், தியாகி அஞ்சலை அம்மாள் அவர்களின் நினைவு தினமான இன்று, எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினேன்.
சுதந்திரப் போராட்டக் களத்தில் தமிழகத்தின் வீர முகமாகத் திகழ்ந்தவர்! நீராதாரத்திற்காகப் போராடியவர், போராட்டக் களத்தில் பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்று அன்றே நிரூபித்தவர்.
தன் வாழ்வையே நாட்டுக்காக அர்ப்பணித்த தியாகி அஞ்சலை அம்மாள் அவர்களின் வழியில், தீய சக்திகளிடமிருந்து தமிழ்நாட்டை மீட்டெடுக்க உறுதியேற்ப���ம்!
Dear @actorvijay anna, Setbacks have never stopped you. You’ve crossed bigger storms than this. This too shall pass, real Thiruvizha begins on the day #Jananayagan releases.
வீரத்தின் விளைநிலமான தமிழ் மண்ணிலிருந்து, ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடி வெற்றி கண்ட இந்தியாவின் முதல் அரசி, சமூக, சமய நல்லிணக்கத்தைப் பேணிய எங்கள் கொள்கைத் தலைவர், வீரமங்கை ராணி வேலு நாச்சியார் அவர்களின் நினைவு தினத்தையொட்டி, எமது அலு��லகத்தில் அவரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்தும் மலர்தூவியும் மரியாதை செலுத்தினேன்.
அடக்குமுறைக்கு எதிராக வாளேந்திய தைரியம்,
வரலாற்றை மாற்றிய பெண் சக்தி,
வீரத்தின் உச்ச அடையாளம் —
வீரமங்கை வேலுநாச்சியார்.
ஒரு பெயர் அல்ல… ஒரு போராட்ட வரலாறு.
��னக்கு இந்த வாய்ப்பை அளித்த தளபதி அவர்களுக்கும், பொதுச்செயலாளர் அவர்களுக்கும், என்னை பரிந்துரை செய்து இந்த உயர்ந்த பொறுப்பை வழங்க காரணமான அன்பு அண்ணன் மருதுபாண்டியன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
மூடநம்பிக்கைகளுக்கும் சமூக அநீதிகளுக்கும் எதிராக போராடிய பகுத்தறிவுப் பேரறிஞர் பெரியார் அவர்களின் 52-வது நினைவு தினத்தில், அவரது கொள்கைப் பாதையில் பயணிப்போம்; அவரைப் போற்றி வணங்குவோம்.
சமூக நீதியின் முன்னோடி,
சமூகத்தில் புரையோடிப்போயிருந்த மூட நம்பிக்கைகளையும், ஏற்றத் தாழ்வுகளையும் தகர்த்தெறியப் போராடிய பகுத்தறிவுப் போராளி, எமது கொள்கைத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாளில், அவரின் திருவுருவப் படத்திற்கு எமது அலுவலகத்தில் மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினேன்.
தந்தை பெரியார் அவர்கள் காட்டிய சமத்துவப் பாதையில் பயணித்து, சமூக நீதியை வென்றெடுக்க உறுதியேற்போம்.