இன்று, கே.வி. குப்பம் தொகுதியில் காலைப் பரப்புரையின்போது, கலைஞர் கனவு இல்லம் திட்டப் பயனாளி ஒருவரின் வீட்டுக்கு, அவரது அன்பான அழைப்பை ஏற்றுச் சென்றேன்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திலும் அந்தச் சகோதரி மாதம் ஆயிரம் ரூபாய் பெற்று வருகிறார். அவரது குழந்தைகளும் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தில் பயனடைவதாகச் சொல்லி மகிழ்ந்தார்.
“அடுத்து, இல்லத்தரசி 8,000 ரூபாய் கூப்பனில் என்ன வாங்கப் போகிறீர்கள்?” என அவரிடம் கேட்டேன்.
2026 தேர்தல் Voting-க்கு முன்பாகவே,
இல்லத்தரசி 8,000 ரூபாய் கூப்பனில் வீட்டுக்கு என்ன பொருள் வாங்கலாம்? எந்தக் கடையில் வாங்கலாம்? என்ற Voting தொடங்கியாச்சு.
தமிழ்நாடு முழுக்க குடும்பங்களில் இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது.
வீட்டுக்குத் தேவையான எந்தப் பொருளையும் நீங்க வாங்கிக்கலாம். ஆனா, அது முழுக்க முழுக்க என் சகோதரிகளின் 'choice'-ஆகத்தான் இருக்கணும். அவர்கள்தான் 'இல்லத்து அரசிகள்', 'குடும்பத்தலைவிகள்'!
2026 Voting-இல் "தமிழ்நாடு அணியா - டெல்லி அணியா?"என்று நான் கேட்கும்போது தமிழ்நாடு அணி என அனைவரும் சொல்வதைப் போல, இல்லத்தரசி டிஸ்கஷனில் வீட்டில் அனைவரும் 'பெண்கள்தான்' எனச் சொல்லணும், பெண்கள்தான் எப்பவுமே வெல்லணும்!
#VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக
தலைவர் கலைஞர் எனக்கு சொல்லிக் கொடுத்ததெல்லாம் உழைப்பு, உழைப்பு, உழைப்பு! உண்மையாக உழைப்பவனை ஊரே கொண்டாடும். அந்த உழைப்பின் அடையாளமாய், தமிழ்நாட்டின் நலன் காக்க என்றும் களத்தில் நிற்போம்!
மீண்டும் திராவிட மாடல் ஆட்சியை உறுதி செய்வோம்.!
#VoteForDMK
வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், கடையநல்லூர், ஆலங்குளம், தென்காசி, திருச்சுழி, அருப்புக்கோட்டை, விருதுநகர்,மற்றும் சிவகாசி எனத் தொகுதி தோறும் திரண்டு வரும் மக்கள் வெள்ளம்!
மண்ணின் உரிமைகளை மீட்டெடுக்கவும், விளிம்புநிலை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் கழக துணை பொதுச்செயலாளர் திருமதி. @KanimozhiDMK MP அவர்கள் எழுச்சி முழக்கமிட்டார். மகளிர் உரிமைத் தொகையும், விவசாயிகளின் நலனுமே எங்களின் அடையாளம்; வஞ்சகக் கூட்டத்தை விரட்டியடிப்போம், திராவிட மாடல் ஆட்சியைத் தொடரச் செய்வோம்!
#VoteForDMK
லால்குடி, மண்ணச்சநல்லூர், திருவரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, மற்றும் திருவெறும்பூர் எனத் தொகுதிதோறும் வீதிக்கு வீதி விஸ்வரூபமெடுக்கும் மக்கள் ஆதரவு!
தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியிடம் அடகு வைத்த கூட்டத்திற்கு முடிவுரை எழுத, துணை முதலமைச்சர் திரு.
@Udhaystalin அவர்கள் எழுச்சி முழக்கமிட்டார். வஞ்சிக்கும் சக்திகளை வேரறுப்போம்; திராவிட மாடல் கோட்டையைத் தகர்க்க எவராலும் முடியாது!
#VoteForDMK
தஞ்சையும் சொல்லிவிட்டது: உதயசூரியனுக்குத்தான் எங்க ஓட்டு!
🌄 "ஸ்டாலினுக்கு முதலமைச்சராகும் யோகம் இல்லை" என ஜோசியம் சொன்னவர்களுக்கெல்லாம் 2021-இல் என் உழைப்பால் பதில் சொன்னேன்.
🌄 "தி.மு.க.வில் யாரும் தொடர்ந்து இருமுறை ஆண்டதில்லை" என்று அடுத்த கட்டுக்கதையை ஒப்பிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். கடந்த முறை வென்றதைவிட அதிக தொகுதிகளில் வென்று, தமிழ்நாட்டு மக்களின் ஆதரவோடு இதையும் உடைத்துக் காட்டுவேன்.
🌄 நான் கட்டங்களை நம்பியிருப்பவனல்ல; 'முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்' எனக் கடின உழைப்பை நம்பும் கலைஞரின் மாணவன்!
#ThanjavurWithDMK #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக!
திராவிட மாடலின் அடுத்த அத்தியாயத்துக்குப் புதுக்கோட்டையும் ஆயத்தமாகி விட்டது!
5 ஆண்டுகளாக #DravidianModel அரசு அறிமுகப்படுத்தி, செயல்படுத்தி வரும் சாதனைத் திட்டங்களைப் புதுகை மக்கள்முன் பட்டியலிட்டு, பாசிச பா.ஜ.க.வின் கொடுங்கரங்களும் காவி நிழலும் தமிழ்நாட்டை அண்டவிடாமல் தடுக்க ஆதரவு கோரினேன்.
தேர்தல் நேரத்தில் கூட, தமிழ்நாட்டுக்கு எதிரான டெல்லி பா.ஜ.க. தலைவர்களின் ஆணவப் பேச்சுகளைத் தடுக்கவோ, அவர்களின் வாயைக் கட்டிப் போடவோ திறனற்ற பழனிசாமி ஆட்சிக்கு வந்தால் மீண்டும் கைகட்டித்தான் நிற்பார்.
தமிழ்நாடு அதை அனுமதிக்காது!
#PudukottaiWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK
ஜோலார்பேட்டை, அரூர், ஏற்காடு, வீரபாண்டி, சேலம் தெற்கு, சேலம் மேற்கு, ஆகிய தொகுதிகளில் கழக துணை பொதுச் செயலாளர் திருமிகு @KanimozhiDMK எம்.பி அவர்கள் கழக வேட்பாளர்களை ஆதரித்து உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்தார்.
மாநில உரிமைகளை மீட்டெடுக்கவும், தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தொடரவும் மீண்டும் உதயசூரியன் உதிக்கட்டும்!🌄
#VoteForDMK
திருவள்ளூர், ஆவடி, கொளத்தூர், வில்லிவாக்கம், எழும்பூர், மற்றும் துறைமுகம் எனத் தொகுதிதோறும் துணை முதலமைச்சர் திரு.@Udhaystalin அவர்களின் குரல் ஓங்கி ஒலிக்கிறது!
தமிழ்நாட்டை வஞ்சிக்கும் டெல்லி சக்திகளுக்கும், அவர்களுக்குப் பாதபூஜை செய்யும் அடிமைக் கூட்டத்திற்கும் தமிழ் மண்ணில் இடமில்லை என்பதை மக்கள் தீர்ப்பு சொல்லும் காலம் வந்துவிட்டது. மீண்டும் திராவிட மாடல் ஆட்சியை உறுதி செய்து, தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்போம்!
#VoteForDMK
தொகுதி மறுவரையறை ஆபத்து: சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறதா இந்தியா?
தென்றலாக இருக்கும் தெற்கைப் புயலாக மாற்றாதீர்கள்!
🎯 தென்னக மக்களின் நியாயமான கேள்விகளுக்கு மாண்புமிகு பிரதமர் அவர்கள் பதிலளித்தே தீர வேண்டும்!
🎯 தொகுதி மறுவரையறையை எப்படி நடத்தப் போகிறார்கள் என வெளிப்படையாக அறிவிக்காமல், ஒன்றிய பா.ஜ.க. அரசு இதுவரை இரகசியம் காப்பது ஏன்?
🎯 2001-ஆம் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்கள், அடுத்த 25 ஆண்டுகளுக்குத் தொகுதி மறுவரையறையை ஒத்திவைத்ததைப் போல, பிரதமர் மோடி அவர்களும் செய்ய வேண்டுமெனத் தென் மாநிலங்கள் முன்வைத்த நியாயமான கோரிக்கைக்குப் பிரதமர் அவர்களின் பதில் என்ன?
🎯 5 மாநிலத் தேர்தல்களுக்கு இடையே அவசர அவசரமாக நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்டுவதற்கு என்ன அவசியம்?
🎯 "நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரை ஏப்ரல் 29-க்குப் பிறகு கூட்ட வேண்டும்" என்ற எதிர்க்கட்சித் தலைவர்களின் நியாயமான கருத்தை உதாசீனப்படுத்துவதில் மறைந்துள்ள மர்மம் என்ன?
🎯 அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டிக் கலந்தாலோசிக்காமல் மிக முக்கியமான அரசியலமைப்புத் திருத்தங்களை மேற்கொள்ளும் முயற்சி சர்வாதிகாரமன்றி வேறென்ன?
🎯 எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் கேட்கும் கேள்விகளுக்குத்தான் பதில் சொல்வதில்லை. மக்களின் கேள்விகளுக்கேனும் பதில் கிடைக்குமா?
🎯 தென்மாநிலங்களின் உரிமைக்கு உலை வைத்து, வடக்குக்கு வலிமையை வாரி வழங்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் செயல்களைத் தி.மு.க. பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது.
🎯 இது இங்கு வாழும் மக்களின் எதிர்காலம்! எங்கள் அனுமதியின்றி, எங்களோடு பேசாமல் இதுதொடர்பாக எந்த முடிவு எடுத்தாலும் நாங்கள் அதற்கு உயிரே போனாலும் உடன்பட மாட்டோம்!
நாங்கள் கேட்பது #FairDelimitation!
#DelimitationDanger: Is India sliding into dictatorship?
Do not turn a calm South into a storm.
Hon’ble @PMOIndia Thiru. @NarendraModi must answer these fair and pressing questions raised by the people of the South.
❓ Why is the Union BJP Government shrouding the entire delimitation process in secrecy instead of coming clean on how it intends to carry it out?
❓ In 2001, former Prime Minister Vajpayee deferred delimitation for 25 years in the national interest. What is Prime Minister Modi’s answer to the just and reasonable demand of southern states to follow the same path today?
❓ What is the tearing hurry to convene a special session of Parliament right in the middle of five state elections?
❓ Why is the Union Government brushing aside the fair and reasoned demand of Opposition leaders to hold the special session only after April 29? What is it trying to hide?
❓ Forcing through far reaching constitutional amendments without even convening an all party consultation is nothing short of dictatorship.
❓The questions raised by the Opposition and the media are not being answered. Will at least the questions of the people be answered?
🌄 The DMK will not stand by and watch any attempt that places the rights of southern states at stake while handing greater power to the North.
💪🏾 This is the future of the people who live here. Any decision taken without our consent, without even engaging with us, will not be accepted, come what may.
The South demands #FairDelimitation!
பா.ஜ.க.வை ஆதரித்து நேரில் பரப்புரை செய்யக் களத்திற்கு வராத குறையாகத் தேர்தல் களத்தில் முழுமூச்சுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தேர்தல் ஆணையம், இப்போது தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் திரு. முருகானந்தம் ஐ.ஏ.எஸ் அவர்களை மாற்றி, ஒருதலைப்பட்சமான அத்துமீறிய அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நியாயமான - சுதந்திரமான தேர்தலை நடத்த வேண்டிய தேர்தல் ஆணையம், பா.ஜ.க. ஆட்சியில் அக்கட்சியின் கட்டளைகளை நிறைவேற்றி வருவது வெட்கக்கேடானது. அரசியல்சட்டம் தேர்தல் ஆணையத்திற்குத் தந்துள்ள பாதுகாப்பு பா.ஜ.க.விற்குத் தேர்தல் வேலை பார்ப்பதற்கு அல்ல. நாட்டை சர்வாதிகாரப் பாதையில் கொண்டு செல்லத் துடிக்கும் பா.ஜ.க. ஆட்சியில் ஆதிக்க மனப்பான்மையுடன் பணியாற்றும் தேர்தல் ஆணையம் இதனை உணராமல் இருப்பது, ஆணையத்தின் கண்ணியத்தைக் கடைத்தெருவில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.
பா.ஜ.க. ஆளும் அசாம் மாநிலத்தில் தேர்தல் நடக்கிறது. அங்கு டிஜிபி, தலைமைச் செயலாளரை மாற்றவில்லை. பாஜக பிராக்சி ஆட்சி நடத்திய பீகார் மாநிலத்தில் தேர்தல் நடைபெற்றது. அங்கும் டிஜிபி, தலைமைச் செயலாளரை மாற்றவில்லை. தமிழ்நாட்டில் மட்டும் தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோர் தேர்தல் ஆணையத்தின் கண்ணை உறுத்தியிருக்கிறார்கள். அவர்களை பா.ஜ.க.வின் தூண்டுதலில் மாற்றியிருக்கிறது.
தமிழ்நாட்டில் பா.ஜ.க., அ.தி.மு.க.வுடன் கைகோத்து நடத்த இருக்கும் தேர்தல் முறைகேடுகளுக்குத் துணை போகத் துடியாய்த் துடிப்பது தேர்தல் ஆணையத்திற்கு அழகு அல்ல. ஆணையத்தின் அலுவலர்கள் இன்று இருக்கலாம்; நாளை பதவியிலிருந்து போய் விடலாம். ஆனால் நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் நம் அரசியல்சட்ட முன்னோர்களால் உருவாக்கப்பட்ட தேர்தல் ஆணையத்தின் நடுநிலைமை நடுத்தெருவில் கொண்டு வந்து நிறுத்தப்படுவது நம் நாட்டிற்கும் - சுதந்திரமான நியாயமான தேர்தலுக்கும் பேராபத்து.
உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி, தலைமைத் தேர்தல் ஆணையரை நானே தேர்வு செய்வேன் என்று புதிய சட்டத் திருத்தம் கொண்டு வந்த பிரதமர் அவர்களுக்கோ அல்லது அவர் வழிநடத்தும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கோ தேர்தல் ஆணையத்தின் புனிதத்தன்மை புரியப் போவதில்லை என்பதைத் தமிழ்நாடு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டும் “தலைமைச் செயலாளர்” “டிஜிபி” ஆகியோரை மாற்ற பா.ஜ.க. தூண்டி விடும் காட்டு தர்பார் பிரதிபலிக்கிறது. ஜனநாயகத்தின் கடைசி நம்பிக்கையாக இருக்கும் தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது என்பதையே இந்த நடவடிக்கைகள் எல்லாம் காட்டுகின்றன.
எத்தனை அதிகாரிகளை மாற்றினாலும் தமிழ்நாட்டில் பா.ஜ.க. படுதோல்வியில் மண்ணைக் கவ்வப் போவது உறுதி. சீப்பை ஒளித்து வைத்து விட்டால் திருமணத்தை நிறுத்திவிடலாம் என்பது போல் அ.தி.மு.க. - பா.ஜ.க. அடங்கிய “என்.டி.ஏ.” கூட்டணிக்காகத் தேர்தல் ஆணையம் செய்யும் அதிகார அத்துமீறல் ஆணவத்தின் உச்சகட்டம்!
#ECI #ElectionCommission

விடியல் ஆட்சி தொடர, விண்ணதிர ஆதரவு தந்த விழுப்புரம் மக்கள்
நமது அரசியல்ரீதியான விமர்சனங்களுக்கு பதில் கூற முடியாமல், திராவிட மாடல் ஆட்சியில் குறைசொல்லவும் முடியாமல் அடுத்தவர்களின் மரணங்களைப் பற்றிக் கனவு காணத் தொடங்கியிருக்கிறார் பத்து தோல்வி பழனிசாமி!
ஆனால் அவர் வாழ்வாங்கு வாழ்க என்று வாழ்த்துகிறேன். நான் தி.மு.க. தலைவராகி, அவரது துணையால் இதுவரை தோற்றதே இல்லை. பழனிசாமி அ.தி.மு.க.வுக்குப் பொறுப்பேற்ற பின் அக்கட்சி வென்றதே இல்லை.
மிசா கொடுஞ்சிறையானாலும், கொரோனாவானும் மரணத்தைக் கண்டு அஞ்சும் கோழையல்ல ஸ்டாலின்! எதையும் எதிர்கொள்ளும் கலைஞரின் வார்ப்பு நான்!
என் வருத்தமெல்லாம் ஒன்றுதான்...
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராசர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். எனக் கடந்த நூறாண்டுகளில் தமிழ்நாடு கண்ட பெருந்தலைவர்களோடு நேரில் பழகி, அரசியல் பயின்ற நான், இந்த தரங்கெட்ட மரண வியாபாரியோடு அரசியல் செய்யும் காலமாக இது இருக்கிறதே...
#VillupuramWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK
திருவள்ளூர், திருத்தணி, சோளிங்கர், இராணிப்பேட்டை, ஆற்காடு, ஆரணி, போளூர்,கலசப்பாக்கம் ஆகிய தொகுதிகளில் கழக துணை பொதுச் செயலாளர் திருமிகு @KanimozhiDMK எம்.பி அவர்கள் கழக வேட்பாளர்களை ஆதரித்து உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்தார்.
மாநில உரிமைகளை மீட்டெடுக்கவும், தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தொடரவும் மீண்டும் உதயசூரியன் உதிக்கட்டும்!🌄
#VoteForDMK
தமிழ்நாட்டைச் சீரழிக்க நினைக்கும் பாஜக சதிகாரர்களையும், அதற்கு அடிமை சேவகம் செய்யும் அதிமுக உள்ளிட்ட கட்சிகளை வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்துவோம்.
திராவிட மாடல் ஆட்சி தொடர வாக்களிப்பீர் உதயசூரியன்! 🌄
#VoteForDMK
மணப்பாறை, திருவரங்கம், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் ஆகிய தொகுதிகளில் கழக துணை பொதுச் செயலாளர் திருமிகு @KanimozhiDMK எம்.பி அவர்கள் கழக வேட்பாளர்களை ஆதரித்து உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்தார்.
தி.மு.கழகத்தின் நல்லாட்சி தொடரட்டும்; தமிழ்நாடு செழிக்கட்டும்! 🌄
#VoteForDMK
Arsenal is here.
தேர்தல் பரப்புரைக்கான தகவல்கள், creatives என அனைத்தும் ஒரே இடத்தில்!
பயன்படுத்திக்கொள்ள:
https://t.co/MGZfzpj62D
Use it. Amplify it. Own the narrative.
#VoteForDMK
சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தி பல சாதனைகளைப் புரிந்த மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் மக்கள் அமோக வரவேற்பு அளிக்கிறார்கள்.
கழகத் தலைவரின் எழுச்சியுரைகளை கேட்கும்போது எதிரணிகள் இந்த தேர்தல் மட்டுமல்ல இனி எந்த தேர்தலிலும் தி.மு.கழகத்தை வெல்ல முடியாது என்பதை அனைவருக்கும் உணர்த்துகிறது.
நம் தாய் தமிழ்நாட்டை காக்க அனைவரும் ஆதரிப்பீர் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி!
வாக்களிப்பீர் உதயசூரியன்! 🌄
#VoteForDMK
பாளையங்கோட்டை முதல் ஒட்டுமொத்த தமிழ்நாடு வரை எங்கும் எதிரொலிக்கும் ஒரே முழக்கம், ஸ்டாலின் தொடரட்டும்.. தமிழ்நாடு வெல்லட்டும்!
தமிழ்நாட்டின் உரிமைகளை காக்க, திராவிட மாடல் ஆட்சி தொடர, ஏப்ரல் 23-ல் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிப்பீர்!
#VoteForDMK