திருநெல்வேலி முன்னீர்பள்ளத்தில் 85 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட கொடூரம், தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு எந்த அளவிற்குச் சீரழிந்துள்ளது என்பதற்கான மற்றுமொரு சாட்சி!
பச்சிளம் குழந்தை முதல் வயது முதிர்ந்த மூதாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பில்லாத நிலையில், பெண்கள் பாதுகாப்பிற்காகத் தொடங்கப்பட்டதாகப் பறைசாற்றப்பட்ட ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை எங்கே இருக்கிறது, என்ன செய்கிறது என்றே தெரியவில்லை; முதலமைச்சரின் சினிமா பாடலுக்கு பேண்ட் வாத்தியம் இசைத்ததோடு அதன் பணி முடிந்துவிட்டதா?
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பெண்கள் பாதுகாப்பு குறித்துப் பக்கம் பக்கமாகப் பேசிய டம்மி முதலமைச்சர் விஜய், இன்று பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி வரும் நிலையில், அது குறித்து வாய்திறக்காமல் மௌனம் காப்பது ஏன்? பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்க முடியாத கையாலாகாத தவெக ஆட்சியில், சிங்கப்பெண் அதிரடிப்படையைக் கண்டுபிடிக்கவே தனி அதிரடிப்படை அமைக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது!
விலைவாசி உயர்வை குறைக்க தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.
-அமைச்சர் வெங்கட் ரமணன்.
நீங்க எப்ப ஆய்வ முடிச்சி!
எப்ப விலையை குறைச்சி!
#பொய்க்கால்_குதிரை_அரசு
சோத்துப்பாறை அணையை திறந்துவிட்ட விவகாரத்தில் தொடர்புள்ள அனைத்து தவெக-வினர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த ஆச்சரியக்குறி அரசை வலியுறுத்துகிறேன்.
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் தமிழக காவல்துறை உடனடியாக வழக்கு பதிவு செய்யக் கோரி @AIADMKOfficial சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
கடந்த 6 மாதங்களாக தவெக ஆச்சரியக்குறிகள் செய்யும் கூத்துகளையும் கோமாளித்தனங்களையும் பார்த்து, தமிழக மக்கள் தலையில் அடித்துக் கொண்டே சிரிக்கிறார்கள்.
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
அணையை திறந்துவிடுவது என்பது சாதாரணமாக கடந்து போகும் விஷயம் அல்ல. அணையில் இருந்து அதிகளவு வரும் நீர் கரையோரம் உள்ள மக்களுக்கும் நிலங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்ற குறைந்தபட்ச அறிவு கூட இல்லாமல், ஆட்சிக்கு வந்துவிட்ட மோகத்தில், ரீல்ஸ் வெறியில் குதியாட்டம் போட்டுக்கொண்டு மக்கள் உயிரோடும் ஜீவாதாரத்தோடும் விளையாடிக் கொண்டிருக்கும் தவெக அரசுக்கும் கட்சியினருக்கும் கடும் கண்டனம்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் பாலகிருஷ்ணன் என்பவர் மரணம் அடைந்த விவகாரம்.
பாலகிருஷ்ணனின் உடலை பார்த்து கதறி துடித்த மனைவி மற்றும் குடும்பத்தார்...
காவல்துறையுடன் இதுக்கும் மேல போராட எங்களுக்கு தெம்பில்லை எனக்கூறி உடலை பெற்றுக் கொண்ட சம்பவம் அரங்கேறிய கொடூரம்..
காவல்துறையை கையில் வைத்திருக்கும் ரீல் முதல்வர் @actorVijay வாயில் இருந்து தற்போது வரை
சாரி - யும் வரவில்லை...
நீதியும் கிடைக்கவில்லை..
இதுவா மக்களுக்கான ஆட்சி?
இதுவா தூய ஆட்சி?
துயர ஆட்சி = தவெக ஆட்சி!
@TVKVijayHQ
தேனி மாவட்டம் சோத்துப்பாறை அணையிலிருந்து, நீர்வளத்துறை அதிகாரிகளின் உத்தரவின்றி, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளோ, முன்னறிவிப்புகளோ இன்றி தவெக நிர்வாகிகள் தன்னிச்சையாகத் தண்ணீரைத் திறந்துவிட்டு, அதையும் ரீல்ஸ் எடுத்து வெளியிட்டிருப்பது அவர்களின் தற்குறித்தனத்தையும், டம்மி முதலமைச்சர் விஜய்யின் தலைமையில் நடைபெறும் கேலிக்கூத்தான ஆட்சியின் அவலத்தையும் அம்பலப்படுத்துகிறது!
விவசாயிகளின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கும் வகையில் இத்தகைய தற்குறித்தனமான செயலில் ஈடுபடுமாறு தவெக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்ட அந்த எம்.எல்.ஏ. சார் யார்?
அரசு நிர்வாகத்தைத் தங்களது விளம்பரப் படப்பிடிப்புக் களமாக நினைத்துக்கொண்டிருக்கும் தற்குறிகளின் கூடாரமான தவெகவிடம் இதைவிட வேறு எதை எதிர்பார்க்க முடியும்?
இந்திய சுதந்திரத்திற்காக போராடியவர்களில் முக்கியமான திகழ்ந்தவரும், வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர் என பன்முகத் தன்மை பெற்றவருமான 'கப்பலோட்டிய தமிழன்', 'செக்கிழுத்த செம்மல்' திரு. வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் 90-ஆவது நினைவு நாளையொட்டி
தூத்துக்குடி வடக்கு மாவட்டம், ஒட்டப்பிடாரத்தில் உள்ள திரு. வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களுடைய நினைவு இல்லத்தில் அமைந்துள்ள அவரது திருஉருவச் சிலைக்கு @AIADMKOfficial சார்பில், தலைமைக் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
சமூக செயற்பாட்டாளரைத் தாக்கிய துணை சபாநாயகர் மீது தன்னுடைய கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் மீது காவல்துறை FIR பதிவு செய்யாதது ஏன்?
அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஏன்?
தாக்கப்பட்ட நபரை விசாரணை என்ற பெயரில் அழைத்து,
காலை முதல் மாலை வரை அமர வைத்து விசாரணை செய்யாமல் அலைக்கழித்தது ஏன்?
-கழக துணைப் பொதுச் செயலாளர், முன்னாள் அமைச்சர் திரு.கே. பி.முனுசாமி அவர்கள்.
இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அஞ்சாது போராடிய வீரத்தமிழர், செக்கிழுத்தச் செம்மல், கப்பலோட்டிய தமிழர் ஐயா வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் நினைவு தினத்தில், அவரது தியாகத்தையும் தேசப்பற்றையும் போற்றி வணங்குகிறேன்.
@AIADMKOfficial சார்பிலும், என் சார்பிலும், தூத்துக்குடி வடக்கு மாவட்டம், ஓட்டப்பிடாரத்தில் உள்ள திரு. வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களுடைய நினைவு இல்லத்தில் அமைந்துள்ள அவரது திருஉருவச் சிலைக்கு தலைமைக் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
சுதேசிக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கி, சுதந்திர வேட்கையைத் தமிழர் நெஞ்சங்களில் விதைத்த அவரது வீரமும் தியாகமும் என்றும் நம் நினைவில் நிலைத்திருக்கும்!
#VOChidambaramPillai
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் ஆணையின்படி,
துணை சபாநாயகர் ரவிசங்கர் சமூக செயற்பாட்டாளரை தாக்கிய விவகாரத்தில்,
அதிகார மமதையில் தவறிழைத்தவர் மீது, கடும் நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி,
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தின் சார்பில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
#களத்தில்_அஇஅதிமுக
'ரீல்ஸ் மோகத்தில்' அமைச்சர்கள் காவல் நிலையங்களில் ஆய்வு செய்வது தவறான முன்னுதாரத்தை ஏற்படுத்தும் செயலாகும்.
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
ஆட்சிக்கு வருவதற்கு முன்பும் 'ரீல்ஸ், தேர்தல் பிரச்சாரத்தின்போதும் '
ரீல்ஸ், ஆட்சிக்கு வந்த பிறகும் ரீல்ஸ் என்று தலைவன் எவ்வழியோ, தொண்டன் அவ்வழி
என்பதுபோல்
தவெக தலைவர் விஜயின் வழியில் தவெக நிர்வாகிகள் அனைவருமே 'ரீல்ஸ்' மோகத்தில் ஆழ்ந்து, மக்களின் அடிப்படை பிரச்சனைகளை திசை திருப்பும் ஒரு மோசமான ஆட்சியை தவெக கூட்டணி அரசு வழங்கிக்கொண்டிருக்கிறது.
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
Some legends are bigger than the game. #MSDhoni is one such legend.
He came to Chennai as a cricketer, but became #TamilNadu’s adopted son, Chennai’s pride and an emotion shared by millions.
From the roar of #Chepauk’s #AnbuDen to the sea of #Yellove, he has given this city memories that will last a lifetime.
Ranchi may be where he was born, but #Chennai will forever be his home.
You may bid farewell to the #IPL as a player, Mahi, but you will forever remain in the hearts of Tamil Nadu.
Wishing you the very best in your new role as Team Mentor. May you continue to inspire generations and create many more memories with @ChennaiIPL.💛
#MSDhoni #ChennaiSuperKings #WhistlePodu
@AIADMKOfficial
மாவட்ட ஆட்சியர் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினால், ஒரு மானங்கெட்ட அமைச்சர் ஆணவத்துடன் பதிலளிக்கிறார்.
-கழக மகளிரணிச் செயலாளர், முன்னாள் அமைச்சர் திருமதி. பா. வளர்மதி அவர்கள்.
#களத்தில்_அஇஅதிமுக
ஆட்சிக்கு வருவதற்கு முன்பும் 'ரீல்ஸ்';
தேர்தல் பிரச்சாரத்தின்போதும் 'ரீல்ஸ்';
ஆட்சிக்கு வந்த பிறகும் 'ரீல்ஸ்'; என்று
தலைவன் எவ்வழியோ,
தொண்டன் அவ்வழி
என்பதுபோல், தவெக தலைவர் திரு. @actorvijay-ன் வழியில் தவெக தொண்டர்கள், நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என்று அனைவருமே 'ரீல்ஸ்' மோகத்தில் ஆழ்ந்து, மக்களின் அடிப்படை பிரச்சனைகளை திசை திருப்பும் ஒரு மோசமான ஆட்சியை தவெக கூட்டணி அரசு வழங்கிக்கொண்டிருக்கிறது.
பொதுவாக காவல்நிலையம் என்பது சட்டத்தை பாதுகாக்குமிடம். அமைச்சர்கள் யாரும் காவல் நிலையங்களுக்கு நேரில் செய்து ஆய்வு செய்வதில்லை. ஆனால் தவெக அரசின் கூட்டுறவுத்துறை அமைச்சர் முதலமைச்சர் துறையின்கீழ் வரும் தக்கோலம், அரக்கோணம் காவல் நிலையங்களை நள்ளிரவில் ஆய்வு செய்ததுடன், பணியில் இருந்த பெண் காவலரை அழைத்து அவர்களது மொபைல் போனையும் ஆய்வு செய்ததாக 'ரீல்ஸ்' எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளிட்டுள்ளார்.
தவெக அமைச்சர் நள்ளிரவில் காவல் நிலையத்திற்கு ஆய்வுக்குச் சென்றாரா? அல்லது, யாரேனும் விசாரணை கைதியை சந்திக்கச் சென்றாரா? என்றும், காவல் நிலையத்திலுள்ள பெண் காவலர்களின் கைப்பேசியை எந்த நோக்கத்தில் ஆய்வு செய்தார்? என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 'ரீல்ஸ் மோகத்தில்' அமைச்சர்கள் காவல் நிலையங்களில் ஆய்வு செய்வது தவறான முன்னுதாரத்தை ஏற்படுத்தும் செயலாகும்.
அதேபோல் நேற்று திருச்செந்தூரில். லட்சக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து பயபக்தியுடன் கலந்துகொண்ட முருக பெருமானின் சூர சம்ஹார நிகழ்ச்சியில், முதல்வருக்கு 'அரோகரா', இந்துசமய அறநிலையத்துறை அமைச்சருக்கு 'அரோகரா' என்று தமிழ் கடவுள் முருகப் பெருமானுடன் முதல்வரையும், அமைச்சரையும், ஒப்பிட்டு பாடிய வேல்முருகன் மற்றும் புஷ்பவனம் குப்புசாமி போன்றவர்கள் பக்திமேடையை, அவர்களுக்கு பதவியளித்த கட்சித் தலைவரை துதிபாடும் மேடையாக மாற்றியதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆகம விதிகளுக்கு மாறாக நடந்து கொண்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்.
தவெக-வினர் பக்தி மேடைகளை 'ரீல்ஸ்' மோகத்திற்காகவும், சுய விளம்பரத்திற்காகவும் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது.
@AIADMKOfficial