ஒரே நாளில் 11 படுகொலைகள்! குறைகளைத் தெரிவிக்க வந்தவரைத் தாக்கிய துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ரவிசங்கர்! சட்டம் ஒழுங்குக்கும், பொது அமைதிக்கும் விடுமுறைவிட்டு விட்டாரா விஜய்?
@CMOTamilnadu@TVKVijayHQ
தீபாவளி பண்டிகைக் கொண்டாடப்பட்ட நேற்றைய தினம் மட்டும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் 11 பேர் கொல்லப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. அவர்களை இழந்து வாடும் க���டும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஒரு பண்டிகை நாளைக்கூட பாதுகாப்பாகக் கொண்டாட முடியாத அளவுக்கு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு மிக மோசமாகச் சீரழிந்திருந்திருப்பது கையாலாகா தவெக ஆட்சியாளர்களின் மோசமான ஆட்சிக்கான சாட்சியாகும். தேனி, சமதர்மபுரத்தில் பொதுச்சாலையை மறித்துப் பட்டாசு வெடித்தவர்களைத் தட்டிக்கேட்டதற்காகக��� காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் கடுமையாகத் தாக்கப்பட்டு உயிரிழந்த���ருக்கிறார். சாலையில் செல்லும் மக்களுக்கு இடையூறு ஏற்படுவதைத் தட்டிக்கேட்ட ஒரு காவல்துறை அதிகாரிக்கே இந்நிலையென்றால், பொதுமக்கள் யாரை நம்பி வீதிக்கு வருவார்கள்? மக்களைக் காக்கும் காவல்துறையினருக்கே பாதுகாப்பில்லை எனுமளவுக்குத் தமிழ்நாட்டுச்சூழல் தள்ளப்பட்டிருப்பது பொதுஅமைதி முற்றிலும் குலைந்ததற்கான அறிகுறியாகும்.
வார இறுதியில் தலைமைச்செயலகத்துக்கு விடுமுறை விடு��துபோல, சட்டம் ஒழுங்குக்கும், பொது அமைதிக்கும் விடுமுறை விட்டுவிட்டாரா முதலமைச்சர் விஜய்? இத்தனைக் கொலைகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? ஒரு பண்டிகை நாளன்றுகூட மக்கள் பயத்தோடும், பதற்றத்தோடும்தான் இருக்க வேண்டுமென்றால், நடப்பதற்குப் பெயர் ஆட்சியா? குற்றங்களை நிகழவிட்டுவிட்டு, குற்றவாளிகளைப் பிடித்துச் சிறைலடைப்பது காவல்துறையின் வேலை இல்லை; குற்றங்களே நிகழாதவணக்கம் அ��ைதியான, பாதுகாப்பான சமூகத்தைப் படைப்பதே காவல்துறையின் முதன்மை நோக்கமாக இருக்க முடியும். சிறைவாசிகள் சர்வசாதாரணமாகச் சிறையிலிருந்து தப்பித்து ஓடுவது ஒருபுறமென்றால், போதைப்பொருட்களின் மிதமிஞ்சியப் புழக்கம் மறுபுறம்! தவெகவின் நிர்வாகிகளே போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஒன்றிய அரசின் படையாலும், கேரள அரசின் காவல்துறையாலும் கைதுசெய்யப்படுகின்றனர். அதனைக் கண்டுகொள்ளாத காவல்துறை, மதுக்கடைக்கு எதிராகப் போராடியவரின் கடையில் போதைப்பொருளை வைத்து, பொய் வழக்குத் தொடுக்க முனைகிறதென்றால், இந்த அவலத்தை என்னவென்று கூறுவது?
தொகுதிசார்ந்த குறையை நேரில்கூறச் சென்ற ஒருவரை துறையூர் சட்டமன்ற உறுப்பினரும், துணை சபாநாயகருமான ரவிசங்கர் தாக்கும் காணொளிக்காட்சிகள் தவெக ஆட்சியின் அதிகாரத் திமிருக்கும், அடாவடித்தனத்துக்குமான சான்றாகும். தேர்தல் வழக்குக்காக என்னுடைய தங்கை கார்த்திகா, தம்பி இசை மதிவாணன் உள்ளிட்டவர்களைத் தேடிப்பிடித்துக் கைதுசெய்து சிறைப்படுத்திய தவெக அரசு, இப்போது என்ன செய்யப் போகிறது? பாதிக்கப்பட்ட நபரை மிரட்டி அச்சுறுத்தி, ஒன்றுமே நடக்கவில்லை எனப் பக்கத்தில் அமர வைத்துப் பேச வைப்பதெல்லாம் கேவலம் இல்லையா?
தவறுக���ுக்குப் பொறுப்பேற்பு, பிழைகளை ஏற்றுக்கொண்டு திருத்திக் கொள்ளுதல், குற்றமிழைத்தவர் எவராயினும் நடவடிக்கை எடுத்தல் என்பதெல்லாம் தலைமைப்பண்புக்கான அடிப்படைக் குணநலன்கள். இதுவெல்லாம் என்னவென்று முதல்வர் விஜய்க்கு ஒருபோதும் தெரியப் போவதில்லை. எல்லாவற்றிற்கும் அவரிடம் இருக்கும் ஒற்றைத்தீர்வு, Road Show எனும் பெயரில் நடக்கும் கேலிக்கூத்து, மக்களைத் திசைதிருப்ப நடக்கும் மலினமான ந���டகங்கள், போலியானக் கட்டுக்கதைகள், பொய்யானக் கருத்துருவாக்கங்கள்! இதுவெல்லாம் பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தை மடைமாற்றுமே ஒழிய, ஒருபோதும் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுத் தராது. இனியாவது உணர்வாரா முதல்வர் விஜய்?
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ரவிசங்கரால் கொலைவெறி த��க்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட கார்த்திக்குமார் என்பவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்து அட்மிஷன் போடப்பட்டும் இதுவரைக்கும் அவருக்கு படுக்கை ஒதுக்கப்படவில்லை.
அமைச்சர் ரமேஷின் அழுத்தம் மற்றும் துணை சபாநாயகர் ரவிசங்கரின் அழுத்தத்தால் அரசு மருத்துவமனையில் அவருக்கு படுக்கை வசதி ஒதுக்கப்படவில்லையா?
உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும் நிலையில் கொலைவெறி தா���்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு காயங்களோடு இருக்கும் நபருக்கு அரசு மருத்துவமனையில் ஏன் பட��க்கை ஒதுக்கப்படவில்லை?
இதுதான் உங்களுடைய தூய சக்தி ஆட்சியா?
@TVKVijayHQ @CMOTamilnadu
மக்கள் பணத்தை தொடவும் மாட்டேன் தொடவிடவும் மாட்டேன் ஆனால் கடைசி நேரத்தில் விழா நடக்கும் இடம் மாற்றி கோடி ரூபாய்யை வீணடிப்பேன்.. - இப்படிக்கு வீணாபோன சக்தி…
"தேசமே எனது உடல், தெய்வீகமே எனது உயிரென" வாழ்ந்து, தீரமிக்க விடுதலைப் போராளிகளைத் தாயக விடுதலைக்குத் தந்த தன்னிகரற்ற தலைவன்..!
தெய்வத்திருமகன் நம்முட���ய தாத்தா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களினுடைய திருப்புகழைப் போற்றுகின்ற இந்நாளில், அவர் காட்டிய வழியைப்பற்றி நடக்கும் தமிழிளம் தலைமுறையினராகிய நாம், அடிமை தமிழ்ச்சமூகத்தின் உரிமை மீட்சிக்கும், அதன் எதிர்காலப் பாதுகாப்பான நல்வாழ்விற்கும் இறுதிவரை உறுதியாகப் போராடுவோம் என்கிற உறுதியை ஏற்போம்!
மதிப்புமிக்க நம்முடைய தாத்தா தெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
#Seeman #தேவர் #பசும்பொன் #TamilNadu
வயதில் எவ்வளவு முதிர்ந்தவராக இருந்��ாலும், எடுத்த எடுப்பிலேயே 'அவன்', 'இவன்' எனப் பேசி எளிய மக்கள் மீது அதிகாரத்திமிரைக் காட்டுகிற காவல்துறை அதிகாரிகள், சேகர் பாபுவிடம் பம்முவது ஏன்?
'யோவ்' என ஒரு சாதாரண மகன் இதேபோல் காவல்துறையை நோக்கி ஒருமையில் பேசினால் சும்மா விட்டுவிடுவார்களா? அடித்தட்டு மக்கள��ன்றால், சட்டையைப் பிடித்து தரதரவென இழுத்துக் கைதுசெய்யும் வீரம் (!) எல்லாம் எங்கே போனது?
எளிய மக்களுக்கு ஒரு நீதி! சேகர் பாபுவுக்கு ஒரு நீதியா?
தங்கை @fathimafarhanaS அவர்கள் மின்வெட்டு குறித்துப் பதிவிட்டதற்காக மாதவரம், கொளத்தூர் நாம் தமிழர் நிர்வாகிகளுக்கு அழைத்து, "பர்ஹனா எங்கு இருக்கிறார்?" என்று விசாரித்திருக்கிறது காவல்துறை.
மின்சாரத்துறை பதில் சொல்ல வேண்டிய விவகாரத்தில் எதற்காக மூக்கை நுழைக்கிறது காவல்துறை? மின்வெட்டுக் குறித்துப் பதிவிடுவோரை அச்சுறுத்துவதுதான் காவல்துறையின் வேலையா?
100 கோடி போதைப்பொருள் வைத்திருந்த தவெக நிர்வாகியைக் கண்டறிந்து கைதுசெய்யத் துப்பற்ற காவல்துறைக்கு எதற்கு இந்த வேலை?
@TANGEDCO_Offcl@tnpoliceoffl
தமிழ்நாட்டில் நாம் தமிழருக்கு 360 டிகிரி எதிராக இருக்கும் கட்சிகள் கூட இந்த சட்டவிரோத கைதை கண்டித்துவிட்டது ஆனால் முற்போக்கு பேசிக்கொண்டு ஒடுக்குமுறைக்கு எதிரானவர்கள் என்று காட்டிக்கொண்டு திரியும் @tncpim மார்க்சிஸ்ட் கட்சி இந்த நொடி வரை நாம் தமிழர் கட்சி மீதான அடக்குமுறையை கண்டிக்கவில்லை.
தமிழ் மண்ணின் மோசமான தமிழர் விரோத கட்சி மார்க்சிஸ்ட் தான் அதை இம்மண்ணில் இருந்து அகற்றவேண்டும் என நான் முன்பு எழுதிய பொழுது நண்பர்கள் சிலர் என்னை கடிந்து கொண்டனர். அவர்களுக்கு நான் சொன்னதின் அர்த்தம் இப்பொழுது புரிந்திருக்கும்.
மக்களைக் காக்கும் காவலர்களின் உயிரையும் உரிமைகளையும் காப்பதே அவர்களது ஈகத்திற்குச் செலுத்தும் உண்மையான வீரவணக்கம்!
மக்களின் உயிரையும் உடைமைகளையும் பாதுகாக்கும் உயரிய கடமையில் ஈடுபட்டு, இன்னுயிரை ஈந்த காவலர்கள் அனைவருக்கும் அக்டோபர் 21 - காவலர் வீரவணக்க நாளில் எனது நெஞ்சார்ந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது அன்பையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
நாம் நிம��மதியாக உறங்குவதற்காகத் தங்கள் உறக்கத்தைத் துறப்பவர்கள் காவலர்கள். நாம் குடும்பத்தோடு விழாக்களைக் கொண்டாடும்போது, தங்கள் குடும்பத்தினரைப் பிரிந்து வீதிகளில் காவல் நிற்பவர்கள் அவர்கள். கொட்டும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும், பேரிடரிலும், பெருந்தொற்றிலும் மக்களுக்காகக் களத்தில் நிற்கும் காவலர்களின் உழைப்பும் அர்ப்பணிப்பும் அளப்பரியவை. ஆனால், மக்களின் பாதுகாப்பை உறுத���செய்யும் காவலர்களின் நலனையும் பாதுகாப்பையும் உறுதிசெய்ய வேண்டிய அரசுகள், அவர்களது அடிப்படைத் தேவைகளில் போதிய அக்கறை காட்டுகின்றனவா என்ற கேள்வியை இந்நாளில் எழுப்ப வேண்டியுள்ளது.
இராணுவத்தில் பணியாற்றுவோர் தொடங்கி அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றுவோர் வரை அனைவருக்கும் ஓய்வும் விடுப்பும் இன்றியமையாத உரிமைகளாக இருக்கும்போது, காவலர்களுக்கு மட்டும் அவற்றை நடைமுறையில் ��ெறுவது ஏன் இவ்வளவு கடினமாக இருக்க வேண்டும்? வார விடுமுறையைக்கூட உறுதியாகத் திட்டமிட முடியாமலும், குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்க முடியாமலும் காவலர்கள் தவிக்கும் நிலை தொடரலாமா? நீதி வழங்கும் நீதிமன்றகளுக்கே திட்டமிடப்பட்ட விடுமுறைகள் இருக்கும் பொழுது அதை கட்டிக்காக்கும் காவலர்களுக்கும் அது தேவை தானே?
காவலர்களும் மனிதர்கள்தானே! அவர்களுக்கும் குடும்பம், உறவுகள், உடல்நலம், மனநலம் இல்லையா? சீருடை அணிந்துவிட்டால் ஓய்வே தேவையில்லை என்று அரசு கருதுகிறதா? காவல்துறை இடையறாது இயங்க வேண்டிய துறை என்பதில�� மாற்றுக்கருத்தில்லை. அதற்காக ஒவ்வொரு காவலரும் ஓய்வின்றி உழைக்க வேண்டும் என்பது எவ்விதத்தில் நியாயம்? போதிய எண்ணிக்கையில் காவலர்களை நியமித்து, முறையான சுழற்சிப் பணியை ஏற்படுத்தி, அனைவருக்கும் வார ஓய்வும் உரிய விடுப்பும் கிடைக்கச் செய்வது அரசின் கடமையாகும்.
எனவே, காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பி, வரையறுக்கப்பட்ட பணிநேரத்தையும் கட்டாய வார ஓய்வையும் உறுதிசெய்ய வேண்டும். தவிர்க்க முடியாத சூழலில் விடுமுறை நாளில் பணியாற்ற நேரிட்டால், மாற்று ஓய்வு வழங்கப்பட வேண்டும். குடும்ப அவசரங்கள் மற்றும் மருத்துவத் தேவைகளுக்கான விடுப்பைத் தாமதமின்றி வழங்குவதோடு, மனநல ஆலோச��ை, மருத்துவப் பரிசோதனை உள்ளிட்ட நலத்திட்டங்களையும் வலுப்படுத்த வேண்டும்.
பணியின்போது உயிரிழக்கும் காவலர்களின் குடும்பங்களுக்கு உரிய நிதியுதவி, குழந்தைகளின் கல்விப் பாதுகாப்பு, தகுதியுள்ள குடும்ப உறுப்பினருக்கான வேலைவாய்ப்பு ஆகியவை காலதாமதமின்றிக் கிடைப்பதையும் அரசு உறுதிசெய்ய வேண்டும்.
மக்களின் உரிமைகளைக் காக்கும் பொறுப்பிலுள்ள காவல்துறை, சட்டத்திற்கும் மனிதநேயத���திற்கும் உட்பட்டு, அரசியல் தலையீடின்றிச் செயல்படுவதற்கான சூழலையும் உருவாக்க வேண்டும். காவலர்களின் நலனும் மக்களின் உரிமைகளும் ஒருசேரப் பாதுகாக்கப்படுவதே நல்லாட்சிக்கு அடையாளமாகும்.
உயிர்நீத்த காவலர்களுக்கு மலர்வளையம் வைப்பதோடு அரசின் கடமை முடிந்துவிடுவதில்லை. உயிரோடு பணியாற்றும் காவலர்களின் கண்ணியமான வாழ்வை உறுதிசெய்வதே அந்தத் ஈகத்திற்குச் செலுத்தும் உண்மையான மரி���ாதையாகும்.
கடமையின் பாதையில் இன்னுயிரை ஈந்த காவல் வீரர்களுக்கு வீரவணக்கம்!
மக்களைக் காக்கும் காவலர்களின் உழைப்புக்கும் ஈகத்திற்கும் தலைவணங்குகிறேன்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
திரைக்கதை
வசனம்
இயக்கம்
- தமிழ்நாடு காவல்துறை.
அடடா எவ்வளவு பெரிய குற்றங்கள்😱 இந்த குற்றங்களால் தாராபுரம் பகுதியில் மிகப் பெரிய சட்ட ஒழுங்கு சீர்கேடு ஏற்பட்டு😮 பல்வேறு சமூகங்களுக்கு இடையே ஜாதிக் கலவரம் எல்லாம் நடந்துவிட்டதாம்.😰
தூ..... காமெடி பீஸ் தவெக அரசு🤦