தீண்டப்படாத மக்களுக்கு காந்தியார் சூட்டிய பெயர் "ஹரிஜன்"; அதாவது கடவுளின் குழந்தைகள் என்றார்.
இந்த அவமதிப்பு சொல்லை அம்பேத்கர், பெரியார் உள்ளிட்ட அனைத்து முற்போக்கு சிந்தனையாளர்களும் கடுமையாக எதிர்த்தார்கள். அந்தச் சொல் இன்றைக்கு வெறுப்புக்குரிய சொல்லாகவே மாற்றப்பட்டுவிட்டது.
இன்று சட்டமன்றத்தில் தூய்மைப் பணியாளர் பிரச்சனை எழுந்தபோது, அதற்கு பதில் அளித்த அமைச்சர் ராஜ்மோகன் தூய்மைப் பணியாளர்களுக்கு "தேவதைகள் "என்று பெயர் சூட்டுகிறார்.
தேவர்கள் பட்டமோ, தேவதைகள் பட்டமோ இந்த மக்களுக்கு வேண்டாம்; முதலில் மனிதர்களாக அவர்களை நடத்துங்கள்.
அவர்களுக்கு வழங்கப்படுகிற ஊதியம் குறைந்தது ஒரு நாளுக்கு 2000 ரூபாயாவது இருக்க வேண்டும்.
அனைத்து ஜாதியினரும் பங்கேற்கும் அரசு வேலையாக அது மாற்றப்பட வேண்டும்.
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு போன்ற அடிப்படை கோரிக்கைகள் பற்றி அமைச்சர் ராஜ்மோகன் வாய் திறக்கவே இல்லை.
முதலமைச்சரை நேரில் சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்பதில் இவர்களுக்கு என்ன தடை இருக்கிறது?
தொழிலதிபர்களும் முதலீட்டாளர்களும் கோட்டு சூட்டு பிரபலங்களும் மட்டும்தான் முதலமைச்சரை சந்திக்க முடியுமா? அதற்கான உரிமை அவர்களுக்கு மட்டும்தான் இருக்கிறதா?
எத்தனை கார்கள் இருந்தாலும் அரசு காரில் செல்வது தான் கெத்து என்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கெத்து காட்டத் துடிக்கும் ஆட்சியாளர்கள் _ அதற்காக பல கோடி ரூபாய் செலவு செய்யத் தயாராக இருக்கும் ஆட்சியாளர்கள் _ இந்தத் தூய்மைப் பணியாளர்களுக்கு நியாயமான ஊதியம் வழங்க முடியாதா?
பார்ப்பனியமும் மனுதர்மமும் தான் சமூகத்தை இப்போதும் இயக்கிக் கொண்டிருக்கிறது.
-விடுதலை ராசேந்திரன்
உதயநிதி ஒரு நடிகையைப் பற்றி ரெட்டை அர்த்தத்தில் பேசியதாக ஒரு பொய் பரவியதற்கே ரட்சகன் நாகார்ஜுனா போல நம் முதல்வருக்கு நரம்புகள் எல்லாம் புடைத்தன. அடுத்த நாளே போலீஸ் அனுப்பினார். தன் பாடிகார்டு சின்னப் பகவதியை விட்டு 'மாஸ் ஆக' லைவ் வீடியோ எல்லாம் எடுக்க விட்டார்.
ஆனால் நயினார் நாகேந்திரன் முதல்வர் அப்பா மட்டுமல்லாமல் அம்மாவைப் பற்றி ரெட்டை அர்த்தமாக அல்ல, ஒரே அர்த்தத்தில் பச்சையாக கொச்சையாகப் பேசியிருக்கிறார். ஆனால் முதல்வரோ மெளன ராகம் கார்த்திக் போல "ஹேய் சந்திரமெளலி... ஹேய் சந்திரமெளலி" ரேஞ்சில் கூலாக இருக்கிறார். இது என்ன மாதிரியான ஒரு டிசைன்? ரோமானிய புராணங்களில் கூட நான் இப்படி ஒரு கேரக்டரைப் படித்ததில்லை. தாய்க்குப் பின் தாரம், தாய் சொல்லைத் தட்டாதே, தாயைக் காத்த தனயன், தாய் உள்ளம், தாயின் மணிக்கொடி, தாய்வீட்டு சீதனம், தாய் வீடு, தாய் கிழவி இப்படி எல்லாம்தான் நாம் தமிழர் பாரம்பரியத்தில் கேள்விப்பட்டுருக்கிறோம். ஆனால் முதல்வரின் இந்த அமைதி புதுசா இருக்கு சார், புதுசா இருக்கு.
"மோடி எங்கள் டாடி" என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒருமுறை சொன்னார். அவர் அப்பாவி. வெளிப்படையாக சொல்லிவிட்டார். இவர்கள் விஷமக்காரர்கள் என்பதால் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவில்லை. அதுதான் நாம் அடைந்திருக்கும் ஒரே மாற்றம். இந்த லட்சணத்தில் திமுக அவன் கூட கூட்டு, திமுக இவன் கூட கூட்டு, டெல்லில இருந்து தகவல் வருது, மும்பைல இருந்து தந்தி வருது என சட்டசபையில் பேசுவதற்கு ஒன்றும் குறைச்சல் இல்லை.
ஒன்னே ஒன்னுதான் சார். தமிழ்நாடு வெறும் மாநில அரசு. பாஜக ஆள்வதோ மிகப்பெரிய ஒன்றிய அரசு. இங்க இருந்து அதை எதிர்க்க அதிகாரம் இருந்தா மட்டும் பத்தாது. முதுகெலும்பு வேணும் முதுகெலும்பு!
முதல்வர் சேர்ல உக்காந்தா எவன் வேணாலும் முதல்வர் ஆயிரலாம். ஆனா ஸ்டாலின் ஆகிர முடியுமா?
-டான் அசோக்
ஆகஸ்ட் 16, 2026
தப்பு தப்பா தமிழ் பேசாதனு சொன்னா "அது என்னோட ஷ்டைல்... கேட்டா கேளு இல்லேன்னா போ"னு சொல்றாரு உருட்டுக்கட்டை அமைச்சர். இன்று ஜோசியத்தின் மூலம் கேன்சர் குணப்படுத்தும் எம்.எல்.ஏ "மன்மத நன்றி" சொல்லி இருக்கிறார். அது அவருடைய ஷ்டைல்.
அதுபோல் கிரிக்கெட் கிரவுண்டில் மூக்கு பொடி நொறுக்கிய அமைச்சர், வால்வோ பஸ் வரலேனா வால்வோகாரன்கிட்ட போயி கேளு என கேட்ட அமைச்சர், "தமிழ்நாட்டு மேலே வாங்கோ... இங்கே இன்வெஸ்ட் பண்ணுங்கோ" என ரியல் எஸ்டேட் ரீல்ஸ் போட்ட அமைச்சர், 100கோடி நிலத்தை எல்லாம் சுருட்டிவிட்டு அப்பாவி கடைக்காரனிடம் முறுக்கு எக்ஸ்பைரிக்கு ஆதாரம் கேட்ட ஸ்டிரிக்ட் ஆஃபிசர் அமைச்சர், "உன் பேரு என்ன ராசா?" என ஒரு கிழவி கேட்டால் கூட, முன்னுரையாக ஒரு பொய்யைச் சொல்லிவிட்டு "உனக்கு டெகிரியம் இருந்தா தில்லூ இருந்தா நீ ஆம்பளன்னா..." என சவால்விடும் விளையாட்டுத்துறை அமைச்சர்... இப்படி பல தனித்தனி ஷ்டைலில் பல அமைச்சர்கள்.
எல்லாவற்றுக்கும் மேல், 'கிடக்குறதெல்லாம் கிடக்கட்டும் கிழவிய தூக்கி மனைல வை' என்ற ரேஞ்சில், மேற்பார்வையிட போகிறேன் என கோட்டு சூட்டுடன் கிளம்பி, ட்ரோன் எங்கே பறக்கிறது என 'மேலே பார்வையிட்டு' அதற்கேற்ப பெல்டை, கண்ணாடியை, பனியனை, சாக்ஸை எல்லாம் அட்ஜஸ்ட் செய்து ஷ்டைல் காட்டும் முதலமைச்சர்.
எனக்குத் தெரிந்து இந்திய வரலாற்றிலேயே, ஏன் இந்த வேர்ல்டுலயே மிகவும் ஷ்டைலான ஒரு மாநில அமைச்சரவை இதுதான். தமிழ் மக்களின் ஆழ்ந்த ஜனநாயகப் புரிதலை நினைத்தாலே புல்லரித்துப் பூரிக்கிறது. க்யூட் சி.எம்னா சும்ம்ம்மாவா........
-டான் அசோக்
ஆகஸ்ட் 11, 2026
🔴அன்பிற்கினிய தோழர் #ஷாநவாஸ் பேட்டி ஒன்றினால் அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளாகின்றார் என்னுடைய கேள்வி ஒன்று தான் அவர் விடுதலை சிறுத்தையின் செயல்பாடு சரியில்லை, அல்லது கட்சியின் தலைவர்கள் விலை போய் விட்டனர் என்று ஏதாவது கட்சிக்கு ஒவ்வாத விமர்சனம் ஏதாவது செய்து விட்டாரா?
அல்லது தலைவர் திருமாவளவன் எடுத்த முடிவு தவறு அவர் இப்படி கூட்டணியை விட்டு கொள்கையை விட்டு வேறொரு கூட்டணிக்கு போயிருக்கக் கூடாது இப்படி ஏதேனும் தோணியில் வேறு ஏதாவது பேசி விட்டாரா சொல்லப்போனால் அவர் தான் சார்ந்த கட்சியையோ மற்ற கூட்டணி கட்சியையோ எதுவும் பேசவில்லை...
அவர் பேசியதெல்லாம் மக்கள் இந்த ஆட்சியில் படும் துயரம், அதை கடந்த ஆட்சியில் எதிர்த்து நின்ற தமிழக அரசை தான் உயர்த்தி பேசியும் கடந்த காலத்தில் தமிழகம் எதிர்த்து நின்ற பாரதிய ஜனதா கட்சி கொண்டு வந்த கொடுபாதக சட்டங்களை தான் எதிர்த்து பேசி இருந்தார் இப்படி பேசிய அவரை விடுதலை சிறுத்தைகள் இவ்வளவு வசை பாட வேண்டிய அவசியம் என்ன?
விடுதலைச் சிறுத்தைகளே ஷாநவாஸ் இன்னும் விடுதலை சிறுத்தையாகத்தான் தொடர்கிறார் நீங்கள் தான் கடந்து வந்த பாதையை மறந்து கொள்கையை மறந்து ஆதவ சிறுத்தைகளாய் மாறி நிற்கின்றீர்கள் ஆக திருந்த வேண்டியது அவர் இல்லை நீங்கள் தான்...
பதிவு: Melwin Packianathan
@vckitwingoffi@ambedkarthidal@thirumaofficial