Honoured to have had the opportunity to attend the Graduation Day of Park Institutions, Coimbatore, today.
My heartfelt greetings to Chairman Thiru PV Ravi avl on 50 years of academic excellence, to CEO @DrAnusharavi avl, to the dedicated faculty, and to the proud parents of these brilliant graduates.
We are stepping into a profound new era. In 1982, TIME’s "Man of the Year" was a computer; in 2025, it was AI. Urged the youth not to fear AI taking away jobs, but to adapt and harness it to evolve. The future belongs to those who take bold risks to solve the world's biggest problems.
Students should dream big with a global vision, be lifelong learners, stay humble, and never forget their Alma Mater. (1/2)
சென்னையில், மொத்தம் விற்பனையாகும் சுமார் 14.75 லட்சம் லிட்டர் ஆவின் பாலில், கிட்டத்தட்ட 50%, சுமார் 7.5 லட்சம் லிட்டர் பால் விற்பனை, பச்சை நிற கிரீன் மேஜிக் பாக்கெட் பால் ஆகும்.
இந்த நிலையில், கிரீன் மேஜிக் பால் விற்பனை குறைக்கப்பட்டு, குறைந்த அளவே தற்போது விற்பனைக்கு வழங்கப்படுகிறத�� என்ற செய்தி அறிந்து, அது குறித்து விசாரித்ததில், ஏற்கனவே சுமார் 50% விற்பனை குறைக்கப்பட்டிருப்பதாகவும், படிப்படியாக, கிரீன் மேஜிக் வகை பால் விற்பனை நிறுத்தப்படவுள்ளதாகவும், ஆவின் விற்பனை மையங்களிலேயே கூறுகின்றனர்.
ஆனால், தவெக அரசு தற்போது வெளியிட்டிருக்கும் செய்தி வெளியீட்டில், கிரீன் மேஜிக் பால் விற்பனை குறைக்கப்படவில்லை என்று கூறப்பட்டிருக்கிறது. அப்படியானால், ஏன் ஆவின் மையங்களில் முன்பு போல அது கிடைப்பதில்லை? கிரீன் மேஜிக் வகை பால் விற்பனை கணிசமாகக் குறைந்துள்ளதை பொதுமக்களே அறிவார்கள். யாரை ஏமாற்ற இந்த பொய்யான விளக்கத்தை அளிக்கிறது தவெக அரசு?
கடந்த 2023 ஆம் ஆண்டு திமுக ஆட்சியிலும் இதே போல, 4.5% கொழுப்புச் சத்துள்ள பச்சை நிற பாக்கெட் பால் விற்பனையை நிறுத்தி விட்டு, 3.5% கொழுப்பு சத்துள்ள ஊதா நிற பாக்கெட் பால் விற்பனை செய்ய முடிவெடுத்த போது, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பால் அந்த முடிவை திமுக அரசு கைவிட்டது. ஆனால், தற்போதைய தவெக அரசும் அதே முடிவை மக்களிடம் திணிப்பது, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
கிரீன் மேஜிக் வகை பால் விற்பனை குறைப்புக்கு, நிதி இழப்பைக் காரணமாகக் கூறுகிறார்கள். நிதி இழப்பைச் சரி செய்ய, பால் உற்பத்தியையும், பால் மற்றும் பால் பொருள்கள் விற்பனையையும் அதிகரித்து, அதன் மூலம் நிதி இழப்பைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டுமே தவிர, ஏழை எளிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் பால் வகை விற்பனையை நிறுத்தக் கூடாது.
உடனடியாக, மீண்டும் போதுமான அளவு, பச்சை ��ிற கிரீன் மேஜிக் பாக்கெட் பால் விற்பனையைக் கொண்டு வர வேண்டும் என்றும், பால் உற்பத்தி, கொள்முதல் மற்றும் விற்பனை உள்ளிட்டவற்றை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்றும் தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
தமிழக பாஜக தற்போது எடப்பாடி பாஜகவாக மாறி விட்டது. சில பாஜக தலைவர்கள் தங்களின் சுயலாபத்திற்காக கட்சியின் வளர்ச்சியை தடுத்தனர்.
நயினார் நாகேந்திரன் தொண்டர்களின் கருத்தை கேட்டதே இல்லை எடப்பாடி சொல்வதை மட்டுமே செய்தார்.
~ மதுரை பாஜக நிர்வாகிகள்.
குறிப்பிட்ட மூன்று ஊடகங்களின் ஒளிபரப்பும் தடைப்பட்டுள்ளது என்பதை ஒப்புக்கொண்டமைக்கு முதலில் நன்றி. அது எப்படி, தவெக ஆட்சியின் அவலநிலையை வெளிப்படுத்தும் ஊடகங்களுக்கு மட்டும், செட்டாப் பாக்ஸில் தொழில்நுட்பப் பிரச்சினைகள் வரும்?
பொய்களையும், புரட்டுகளையும், மக்கள் மத்தியில் உண்மை என நம்பவைக்க, கடந்த திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட இந்த TN Fact Check வலைத்தளக் கணக்கு, தவெக ஆட்சியிலும் அதே வேலையைத் தொடர்கிறது.
இது மாற்றம் இல்லை. கன்னத்தில் மரு மட்டும் ஒட்டிக் கொண்டு வந்த, அதே டெய்லர் அதே வாடகை ஏமாற்று வேலை.
ஒரே போடு உண்மையை புட்டு புட்டு வச்சுட்டார்👌😂
"தமிழக பாஜக இப்போது எ��ப்பாடி பாஜகவாக மாறி விட்டது".👌🔥
"சில பாஜக தலைவர்கள் தங்களின் சுயலாபத்திற்காக கட்சியின் வளர்ச்சியை தடுத்தனர்"👌💯
#Annamalai |#WeTheLeader
இயக்குநர் இமயம், ஐயா திரு. பாரதிராஜா அவர்கள் உடல்நலக்குறைவால் காலமான செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது.
திரைப்படங்கள் என்பவை யதார்த்தத்தை மீறிய மாய உலகம் என்பதை மாற்றி, மண் சார்ந்த, இயல்பான வாழ்வியலாக மாற்றியவர்களில், ஐயா பாரதிராஜா அவர்கள் ஒரு பல்கலைக்கழகமாகத் திகழ்ந்தவர். வாழையடி வாழையாக அவரது வழி வந்த இயக்குநர்களும், திரைக்கலைஞர்களுமே அதற்குச் சாட்சி.
மண்ணின் மீதும், மக்களின் மீதும் பேரன்பு கொண்டிருந்த ஐயா திரு. பாரதிராஜா அவர்களுக்கு, எனது கண்ணீரஞ்சலியைக் காணிக்கையாக்கிக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி!
தமிழக அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து, @polimernews, @NewsTamilTV24x7 மற்றும் @TamilJanamNews ஆகியவை நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
அரசு கேபிள் நிறுவனம், செட்டாப் பாக்ஸ் நிறுவனத்துக்கு வைத்திருக்கும் நிலுவைத் தொகை காரணமாக, ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகக் காரணம் கூறப்படுகிறத��. கட்டணப் பிரச்சினை காரணம் என்றால், ஏன் மற்ற ஊடகங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை?
குறிப்பாக, இந்த மூன்று ஊடகங்களும், மின்வெட்டாலும், தவெக அரசின் நிர்வாகத் திறனின்மையாலும், பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் குறித்த செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருவதால், தவெக அரசு இந்த ஊடகங்களைப் பழிவாங்கும் விதமாக நடந்து கொள்வதாகவே தெரிகிறது.
ஜனநாயகத்தில், செய்திகளைத் தடை செய��வது தீர்வல்ல. இது மிகவும் தவறான போக்கு. உடனடியாக, இந்தச் செய்தி ஊடகங்களை அரசு கேபிள் நிறுவனத்தில் வெளியிட வேண்டும் என்று, தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
Heartiest congratulations to our Hon. PM Thiru @narendramodi avl on becoming the longest-serving elected Prime Minister in India’s history, completing 4,399 days in office today.
May the almighty bless him with immense strength and good health in continuing his service to our nation.
அன்பு சகோதர, சகோதரிகள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
தமிழகத்தில், ஒரு அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு தொடங்கப்பட்டுள்ள நமது We the Leaders இயக்கம், உங்கள் அனைவரின் பேரன்பையும், ஆதரவையும் துணையாக கொண்டு, தொடங்கப்பட்ட மூன்று நாட்களில், 17 லட்சம் உறுப்பினர்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
இது சிறு தொடக்கம் மட்டுமே. ஒவ்வொருவரும் ஒன்றிணைந்து, தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை நிச்சயம் உருவாக்குவோம். அதற்கான ஆயத்தப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போதைய சூழலில், நான் உட்பட, அனைவருமே இந்தப் பேரியக்கத்தின் ஒரு அங்கம் மட்டுமே தவிர, யாருக்கும் எந்தப் பொறுப்புகளோ, பதவியோ வழங்கப்படவில்லை. தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கான பொறுப்புகள் விரைவில் வழங்கப்படும். நான் முன்பே கூறியிருந்ததைப் போல, நிரந்தரப் பதவி என்பது நமது இயக்கத்தில் இருக்காது. இந்த ஒரு மாத காலம் என்பது உறுப்பினர் சேர்க்கையில் மட்டுமே We the Leaders இயக்கம் ஈடுபடும்.
இந்தச் சூழலில், சில தன்னார்வலர்���ள் இணைந்து, எனது பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்தி, சில இயக்கங்கள் தொடங்க��யிருப்பதாகத் தெரிய வருகிறது. மேலும், மாவட்ட வாரியான பொறுப்புகளும் அந்த இயக்கங்களில் அறிவிக்கப்பட்டுள்ளன என்பது தெரிய வருகிறது. இது முறையான செயல் அல்ல என்றும், அந்த இயக்கங்களுக்கும், நமது We the Leaders இயக்கத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு நல்ல நோக்கத்துக்காக தொடங்கப்பட்டுள்ள நமது முயற்சி, ஒரு சிலரின் இது போன்ற செயல்பாடுகளால், நீர்த்துப் போய்விடும்.
ஏற்கனவே, எனது பெயரைப் பயன்படுத்தி அண்ணாமலை அன்புக் கூட்டம், அண்ணாமலை நற்பணி மன்றம் போன்ற பெயர்களில் தொடங்கப்பட்ட அமைப்புகளுக்கு, இனி எனது பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என சில மாதங்களுக்கு முன்பு கடிதம் எழுதியிருந்தோம். ஆனால், தொடர்ந்து இது போன்ற செயல்பாடுகளில் அந்த அமைப்புகள் ஈடுபடுவது வருத்தத்திற்குரியது.
எனவே, அண்ணாமலை அன்புக் கூட்டம், அண்ணாமலை நற்பணி மன்றம், அ���்ணாமலை மக்கள் இயக்கம் என, எனது பெயரைப் பயன்படுத்தும் பல்வேறு அமைப்புகள், உடனடியாக எனது பெயரையோ, புகைப்படங்களையோ பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நமது இயக்கத்தில் இணைய விரும்பும் சகோதர சகோதரிகள் https://t.co/bpwUirXkR4 என்ற இணையதளம் மூலமாக தங்களை இணைத்துக்கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
Hearty congratulations to our very own @rpraggnachess on winning the Norway Chess 2026 title.
Winning four classical games in a row, taking down world champions, and securing the title with a spectacular final game is nothing short of phenomenal.
Tamil Nadu and the entire nation are immensely proud of his outstanding achievement.
கடந்த 24 மணி நேரத்தில் 13 லட்சம் உறுப்பினர்கள் இணைந்து, https://t.co/bpwUirWN1w இயக்கத்திற்கு நீங்கள் அளித்துள்ள பேராதரவு, பெரும் நெகிழ்ச்ச��யையும், அதைவிட பெரிய பொறுப்பையும் எனக்கு அளித்திருக்கிறது.
இந்த இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து இணைந்துள்ள ஒவ்வொருவருக்கும், எனது மனமார்ந்த நன்றிகள். இது ஒரு தனி மனிதனின் பயணம் அல்ல; நல்ல மாற்றத்தை விரும்பும் நமது மக்களின் கூட்டுப் பயணம். மாற்றம் வேண்டும் என்று நம்பும் ஒவ்வொரு குடிமகனின் குரலும், நீங்கள் வழங்கியிருக்கும் பேராதரவில் எதிரொலிக்கிறது. உங்கள் நம்பிக்கையை மதித்து, நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் இந்தப் பயணத்தை முன்னெடுப்போம்.
தமிழகத்தின் சிறந்த எதிர்காலத்திற்கான இந்தப் பயணத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள்.
கடந்த 10 மணி நேரத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான தலைவர்கள் பதிவு செய்து, நமது அரசியல் இயக்கம் சாதனைப் படைத்துள்ளது. இந்த மகத்தான வரவேற்பு, நாம் ஒன்றாகக் கொண்���ிருக்கும் இலட்சியத்தின் மீதும், ��மூக மாற்றத்திற்கான நமது பயணத்தின் மீதும் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
இந்த இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து இணைந்த ஒவ்வொரு நபருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
https://t.co/bpwUirXkR4
இன்றைய தினம் எனது பிறந்த நாளை முன்னிட்டு, அன்பான வாழ்த்துகளைத் தெ��ிவித்து, இந்த நாளை மேலும் சிறப்புமிக்கதாக்கிய அன்பு உறவுகள், நண்பர்கள் மற்றும் எனது நலன் விரும்பும் பெரியோர்கள் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் அன்பும், பாசமும், நீங்கள் தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவும், தமிழக விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்து தரப்பினரின் நலன், பாதுகாப்பு மற்றும் வளமான எதிர்கால���்திற்காக, இன்னும் அதிக அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டிய ��த்வேகத்தையும் உற்சாகத்தையும் எனக்கு வழங்கியுள்ளன.
உங்கள் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன். அனைவருக்கும், மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.