இராணிப்பேட்டையில் விசிகவினரால் கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டு வாலாஜா அரசு மருத்துவனையில் இருக்கும் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி, அன��புத்தம்பி குபேந்திரன் சிகிச்சைப்பெற்று வரும் சூழலில், சரித்திரப் பதிவேடு குற்றவாளி உட்பட தாக்குதல் நடத்திய முக்கிய குற்றவாளிகளைக் கைது செய்ய துணிவற்ற தவெக அரசின் காவல்துறை, தம்பி குபேந்திரனை கைது செய்ய முனைவது வன்மையான கண்டனத்திற்குரியது.
ஆட்சியாளர்களின் அதிகார அழுத்தம் காரணமாக, சிறிதும் மனச்சான்றின்றி காவல்துறை மேற்கொள்ளும் இத்தகைய கொடும் அடக்குமுறையை உடனடியாக கைவிடாவிட்டால், விரைவில் பெரும் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும்!
@CMOTamilnadu @TVKVijayHQ
இந்தப் பதிவு என்னுடன் இரவில் swiggy டெலிவரியில் வேலை செய்யும் ஒரு நண்பனுக்காக.. அவனுக்கு நேற்று நடந்த சம்பவம் இது..
வயது 28. மாற்றுத்திறனாளி. மூன்று சக்கர ஸ்கூட்டர் தான் ஓட்டுவான்.. அவன் பேசுவதும் புரியாது.. எனக்கு வாழ்க்கையில் நம்பிக்கை வருவதற்கு அவனும் முக்கியக் காரணம்.. இரவில் எங்கள் உடன் சரியாக மதுரை வில்லாபுரம் பகுதியில் பேச்சியம்மன் டீ கடைக்கு 10.30PM மணிக்கு வருவான். SHIFT TIME ஆரம்பிக்கும் நேரம் 11 மணி அதுவரை எங்களுடன் இருப்பான்.. அவன் பேசுவது எங்களுக்கு மட்டுமே புரியும்.
அவன் மாற்றுத் திறனாளி என்பதால் அவனுக்கு மட்டும் RATE CARD வேற மாதிரி இருக்கும். அதாவது 5 KM சிட்டிக்���ு உள்ளே மட்டும் ஆர்டர் வரும்.. நேற்று சரியாக KFC கடையில் 2 மணிக்கு ஆர்டர் ஒன்று வந்துள்ளது.. மதுரை ரயில்வே JUNCTION டெலிவரி.
பொதுவாக பகலில் ரயில்வே JUNCTION டெலிவரியில் அங்கே SWIGGY மற்றும் ZOMATO நேரடி ஆட்கள் இருப்பார்கள்.. நாங்கள் அவர்களிடம் ஆர்டர்களை ஒப்படைத்து கொடுத்து விட்டு வந்து விடுவோம்.. அவர்கள் CUSTUMER களிடம் கொடுத்து விடுவார்கள்.. இரவில் ஆட்கள் இருக்க மாட்டார்கள்.
அவனுக்கு 2 AM வந்த ஆர்டரை வாங்���ியவன் சரியாக 10 நிமிடத்தில் வந்து CUTUMER க்கு மெசேஜ் அனுப்பி இருக்கிறான்.. CALL செய்தால் இவனால் பேச முடியாது.. ஒரு இரண்டு நிமிடம் கழித்து இவனுக்கு பதில் வந்திருக்கு. அண்ணா நான் ரயிலில் வந்துட்டு இருக்கேன்.. ஒரு 5 நிமிடம் வெயிட் பண்ணுங்கன்னு.. இவனும் அங்கேயே நின்று கொண்டே இருந்திருக்கிறான்.. 15 நிமிடம் ஆகி இருக்கிறது ஆள் வரவில்லை.. இவன் திருப்பி ஒரு மெசேஜ் அனுப்பி இருக்கிறான்.பதில் இல்ல.. அந்த நேரம் ஆட்டோ DRIVER ஒருவரிடம் போனை கொ��ுத்து CALL பண்ணி பேசச் சொல்லி இருக்கிறான்.. அதற்கு இன்னும் வரவில்லை வெயிட் பண்ண சொல்லுங்க வந்துடுவேன் என்று பதில் 30 நிமிடம் ஆச்சு பிறகு 40 நிமிடம் ஆச்சு.. ஆள் வரவில்லை.. சரி இதற்கு மேல் நிற்பது முடியாது என்று CUSTUMER CARE க்கு மெசேஜ் அனுப்பி பேசி இருக்கான்.. ஆனால் நடந்தது வேறு அவர்கள் அவனை இன்னும் 20 நிமிடம் காத்திருக்க சொல்லி இருக்கிறார்கள்.. இவனும் வேறு வழியில்லாமல் நின்று 20 நிமிடம் கழித்து ஆ���்டர் CANCEL செய்து கொண்டு வந்து விட்டான். RETURN ஆர்டர் வராது காரணம் இரவு நேரம்..
இரவு 11 மணிக்கு வந்து அதிகாலை 5 மணிவரை ஓட்டினால் எங்களுக்கு 700 ரூபாய் வரை கிடைக்கும்.. இதில் பெட்ரோல் இன்சென்டிவ�� 190 போக எங்களுக்கு 510 தான் சம்பளம்.. ஆனால் அவனுக்கு 11 மணிக்கு வந்து காலை 2 மணி வரை மட்டுமே SHIFT TIME எப்போதும் 500 ரூபாய் ஓட்டுவான்.. ஆனால் நேற்று மொத்தமே 350 ரூபாய் தான் ஓட்டி இருக்கான்.. வீட்டிற்கு செல்லாமல் பெரியார் பேருந்து நிலையத்தில் உட்கார்ந்து அழுதிட்டு இருந்திருக்கான்.. அப்போ அந்த வழியா வந்த மற்றொரு நண்பர் அவனை பார்த்து பேசும் போது அந்த மெசேஜ் எல்லாத்தையும் காட்டி நடந்ததை சொல்லி அழுது இருக்கான்.. அந்த நண்பர் எங்கள் அனைவருக்கும் இந்த விடயத்தை இன்று காலையில் தான் சொன்னார்..
மனம் ஒரு மாதிரி கனத்துவிட்டது.. நான் உடனே எங்கள் நண்பர்கள் ஒரு 5 பேருக்கு அழைத்து பேசினேன்..
இன்று இரவும் அவன் வருவான்.. நாங்கள் ஆளுக்கு 100 ரூபாய் போட்டு 500 ரூபாய் பணத்தை அவனிடம் கொடுக்க முடிவு செய்துள்ளோம்..
இந்த பதிவு அவனுக்கு அல்ல.. பொது மக்களாகிய உங்களுக்கு..
SWIGGY ZOMATO ஓட்டும் நாங்களும் மனிதர்���ள் தான்.. எங்களைப் போன்ற ஒவ்வொரு டெலிவரி டிரைவரும் அவ்வளவு ரணங்களை மனதில் தாங்கி கொண்டு இந்த வேலையில் இருக்கிறோம்.. குறைந்த பட்சம் எங்களை மதிக்க வேண்டாம்..
மிதிக்காமல் இருங்கள். 🙏🙏
எங்களையும் மனிதர்களாக பாருங்கள் 🙏🙏