https://t.co/JPnRwnwD0R
VBSA மசோதா தமிழ்நாட்டில் எந்த அளவிற்கு பேசுபொருளாக மாறியுள்ளது என தெரியவில்லை. ஆனால், மிக முக்கியமாக எதிர்க்கப்பட வேண்டிய ஒன்று என்பதில் மற்றும் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. அந்த மசோதா குறித்தும், அது மாநில உரிமைக்கு எப்படி எதிரானது என்பது குறித்தும் விரிவாக பேசி உள்ளார் தோழர் பிரின்ஸ் கஜேந்திரபாபு. அரசாங்கம் இவர்களை போன்ற அறிவுஜீவிகளை பயன்படுத்திக் கொள்வது நல்லது.
@TVKVijayHQ@imrajmohan@TVKPartyHQ
திமுகவைத் தீயசக்தி என்கிறார் தவெகவின் தலைவர் விஜய்.
விசிகவின் தலைவர் திருமாவோ திமுகவை நட்புச்சக்தி என்கிறார். இத்தோடு, திமுகவும், தவெகவும் ஒரே அணிக்குள் இருக்க வேண்டும் என்கிறார்.
திமுக மீது இவ்வளவு பாசமும், பரிவும் காட்டும் திருமா மீது Virtual Warrior's விமர்சனம் வைக்க வேண்டியதுதானே? திமுகவிடம் காசு வாங்கிவிட்டாயா? எனப் பொங்க வேண்டியதுதானே?
விவசாயிகள் அரும்பாடுபட்டு உழைத்து அறுவடை செய்த நெல்மணிகளைத் தீயில் கருகி நாசமாக விடுவதா? உணவுத் தானியங்களை வெட்டவெளியில் கிடத்துவதா?
@CMOTamilnadu@TVKVijayHQ
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள ஐந்தாங்கட்டளையில், தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்குச் சொந்தமான திறந்தவெளி அரசு நெல் சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 27,000க்கும் அதிகமான நெல் மூட்டைகள் எரிந்து சேதமடைந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
அல்லும் பகலும் அயராது உழைத்து, நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த, உடல்முழுவதும் உப்பு பூக்க, இரத்தத்தை வியர்வையாக்கி, விவசாயிகள் அரும்பாடுபட்டு விளைய வைத்துக் கொண்டு வந்த நெல்மணிகளைக் கொள்முதல் செய்யாமல் மழையில் நனையச் செய்து வீணாக்கியப் பேரவலம் முந்தைய திமுக ஆட்சியில் நடந்தேறியது.
ஒருவேளை, கொள்முதல் செய்யப்பட்டாலும் அதனை முறையாகப் பாதுகாத்து, நெல் அரவை ஆலைகளுக்கு அனுப்பி, தரமான அரிசியாக மாற்றி பொதுமக்களுக்கு வழங்கியதில்லை.
ஒரே வயலில் விளைந்த நெல்மணிகளில் தனியார் கடைகளுக்கு வரும் அரிசி தரமாகவும், அரசின் நியாய விலைக் கடைகளுக்கு வரும் அரிசி தரமற்றும் இருப்பதும் ஏன்? இடையில் என்ன நடக்கிறது?
தமிழ்நாடு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும், நுகர்பொருள் வாணிபக் கழகக் கிட்டங்கிகளும் போதுமானக் கட்டிட வசதி இல்லாமல் திறந்தவெளியில் இயங்கி வருவதே அரிசி தரமற்றுப் போவதற்குரிய முதன்மைக்காரணமாகும்.
ஒரு தகரத்தாலான கூரைகளைக்கூட அரசால் ஏற்படுத்த முடியாதா? நெல் மூட்டைகளை வெட்டவெளியில் கிடத்துவதா? எனக் கேட்டு விவசாயிகள் போராடியும்கூட முந்தைய அரசுகள் அதனைக் கவனத்தில் கொள்ளவில்லை.
கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை அரவை ஆலைகளுக்கு அனுப்புவதற்கு முன்புப் பாதுகாத்து வைக்க வேண்டிய தமிழ்நாடு அரசின் நுகர்பொருள் வாணிபக்கழகத்திற்கு, போதுமான அளவு கட்டிடங்கள்கூட இல்லாமல் சுடுகாட்டில் நெல் மூட்டைகளை அடுக்கி வைத்திருந்தது எல்லாம் அரச நிர்வாகத்தின் மோசமான இழிநிலையாகும். முந்தைய ஆட்சிக்காலத்தைப் போலவே, தற்போதைய அரசும் அலட்சியத்தோடு செயல்படுவது பெரும் ஏமாற்றமளிக்கிறது.
மழைக்காலங்களில் நெல் மூட்டைகள் நீரில் நனைந்து, முளைத்து வீணாகி வந்த நிலையில், கோடைக்காலத்தில் தீயில் எரிந்து சாம்பலாவதெல்லாம் அயராத உழைப்பைச் செலுத்தி, நெல்மணிகளை அறுவடை செய்த விவசாயிகளின் உழைப்பை மலினப்படுத்தும் கொடுஞ்செயலாகும்.
உணவுத்தானியங்களைக்கூட பாதுகாத்து ஒரு அரசால் தரமாக வழங்க முடியாதென்றால், அது அரசா? இல்லை! தரிசா? எனும் கேள்விதான் எழுகிறது.
ஆகவே, விவசாயிகள் விளைவிக்கும் உணவுத்தானியங்களைப் பாதுகாத்து வைக்க, போதுமான அளவு நிரந்தரக் கட்டிடங்களை உருவாக்கி, ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் அரிசியை தரமாக நியாய விலைக்கடைகள் மூலம் வழங்க வேண்டுமென தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
வடக்கில் விநாயகருக்கு இரண்டு மனைவிகள்!
தெற்கில் முருகனுக்கு இரண்டு மனைவிகள்!
தெற்கில் விநாயகர் திருமணமாகாத பிரம்மச்சாரி!
வடக்கில் முருகன் திருமணமாகாத பிரம்மச்சாரி!
வடக்கில் முருகன் அண்ணன்; தெற்கில் முருகன் தம்பி!
வடக்கில் விநாயகர் தம்பி; தெற்கில் விநாயகர் அண்ணன்!
ஒரு கதையைச் சொல்லிவிட்டு, "இது எங்கள் நம்பிக்கை" என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், ஊருக்கு ஒரு கதையைச் சொல்லிவிட்டு, "இதுதான் எங்கள் நம்பிக்கை; இதை நம்பித்தான் ஆக வேண்டும்" என்றால்?
தமிழர்கள் இந்தப் புராணங்களைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்தால், கடைசியில் அனைத்தையும் இழந்து அழிந்துதான் போவோம்!
கதைகளை இவர்கள் ஒழுங்காகச் சொல்லியிருந்தால், நாம் ஏன் கேள்வி கேட்கப் போகிறோம்?
கடவுளை நம்பு கதைகளை நம்பாதே!
முருகன் தமிழ் கடவுள்! .
நாம ஒன்னு கேட்டால் நாம அசந்து போற பதில் சொல்வாரு அமைச்சர் ராஜ்மோகன் !
அண்ணன் சீமான் அவர்கள் எழுப்பிய கேள்வி !
தனியார் பள்ளிகள் நகையை அடமானம் வைத்து பள்ளிக்கூடம் நடத்துறாங்க ,கல்வியை சேவையை போல செய்றாங்க அது புண்ணியகணக்கு என தனியார் பள்ளிக்கு மார்க்கெட்டிங் செய்வது கல்வித்துறை அமைச்சரின் வேலையா ?என்பதுதான் .
அவர் கேட்டதற்கும் ராஜ்மோகன் சொன்னதற்கும் ஏதாவது தொடர்பு இருக்கா ?
Mr. Mani உங்க கட்சி காரங்களுக்கும் ரசிக அணில்களுக்கும் தான் Feb2 2024 க்கு முன்னாடி வரைக்கும் “அரசியல்”என்ற வார்த்தைக்கு கூட பொருள் தெரியாது!!! உங்களுக்குமா??
பொய் பரப்புரைக்கு தான் உங்க கட்சில காசுக்கு வேலை பாக்குறாங்களே நீங்களும் அந்த payroll ல இருக்கீங்களா??
@LoyolaMani
அமோனியா கசிவு நிகழ்ந்த தொழிற்சாலைக்கு ஆய்வுக்குச் செல்லாத தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா, பள்ளிகளில் குழந்தையிடம் கேள்வி எனும் பெயரில் அத்துமீறலாமா?
@CMOTamilnadu@TVKVijayHQ@Keerthana4VNR
அரசுப்பள்ளியை ஆய்வு செய்வதாகக் கூறிக்கொண்டு, தவெக அரசின் தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா அவர்கள் அரசுப்பள்ளியில் படிக்கும் ஒரு குழந்தையிடம் கேள்விகேட்டு நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியளிக்கிறது. குழந்தைக்குத் தன்னம்பிக்கையும், உத்வேகமும் அளிக்கும் வகையில் பேசாது, அக்குழந்தையைக் கூனிக் குறுக வைத்து, தாழ்வு மனப்பான்மைக்குள் தள்ளும் விதத்தில் நடந்துகொண்டிருப்பது மிகவும் மலினமான விளம்பர அரசியலாகும். தங்களது அரசியல் ஆதாயம் தேடலுக்காகவும், விளம்பர மோகத்திற்காகவும் குழந்தைகளைக்கூட பலிகடாவாக்கத் துடிக்கும் தவெக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.
ஆங்கிலம் என்பது ஒரு மொழிதானே ஒழிய, அறிவல்ல எனும் அடிப்படை உண்மையைக்கூட உணராத அமைச்சர் கீர்த்தனா, தன்னை அதிமேதாவியாகக் காட்டிக்கொள்வதற்காக ஆங்கிலமறியாத அக்குழந்தையைக் குற்றப்படுத்தலாமா? கடைசி இருக்கைக் குழந்தைகள் நன்றாகப் படிக்க மாட்டார்கள் எனும் பொருளில் பள்ளியில் பேசலாமா? அப்படிப் பார்த்தால் சட்டமன்றத்தில் கடைசி வரிசையில் இருப்பவர்கள் எல்லாம் அறிவில்லாதவர்களா என்ன? சட்டமன்றத்தில் முதல் வரிசையில் அமர்ந்து இருப்பவர்களுக்குக்கூட அறிவுப்பேரொளி சுடர்விட்டு எரிவது போல தெரியவில்லையே? ஒரு குழந்தையிடம் என்ன பேச வேண்டும்? எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்? எனும் அடிப்படைப் பண்புகளைக்கூட கற்காத இவர் அக்குழந்தைக்குப் பாடமெடுப்பது கேலிக்கூத்து இல்லையா? வெள்ளை அறிக்கை வெளியிடும்போது அமைச்சர் மரிய வில்சன் தமிழைப் படிக்கவே தடுமாறி நின்றதை நாடே பார்த்ததே, தாய்மொழி தமிழை உச்சரிக்க முடியாது ஒரு அமைச்சரே திணறி நின்றது அவமானமில்லையா? இந்த இலட்சணத்தில் அமைச்சர்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் வைத்துக் கொண்டு, ஒரு அரசுப்பள்ளிக் குழந்தையைக் கைகட்டி நிற்கச் செய்து, கேள்வி எனும் பெயரில் அத்துமீறுவது அக்குழந்தையின் மீதான உளவியல் வன்முறை!
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே அமோனியா கசிவால் இதுவரை 18 பேர் இறந்துபோயிருக்கிறார்கள். தனக்குத் தொடர்பே இல்லாத துறையில் ஆய்வு எனும் பெயரில் அத்துமீறும் தொழிற்துறை அமைச்சரான கீர்த்தனா, அமோனியா கசிவால் உழைக்கும் மக்கள் இறந்துபோன அந்தத் தொழிற்சாலையைப் பார்வையிட ஏன் செல்லவில்லை? வடசென்னைப் பகுதிகளில் இருக்கும் தொழிற்சாலைகள் பல சூழியல் பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில், அத்தொழிற்சாலைகளில் விதிகள் சரியாகக் கடைபிடிக்கப்படுகிறதா என என்றைக்காவது ஆய்வுக்குச் செய்யச் சென்றிருக்கிறாரா? அமோனியா கசிவு நிகழ்ந்த தொழிற்சாலைக்கு ஆய்வுக்குச் செல்லாத தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா, பள்ளிகளில் குழந்தையிடம் கேள்வி எனும் பெயரில் அத்துமீறலாமா? எல்லாம் விளம்பரமோகம் படுத்தும் பாடு! வெட்கக்கேடு!
ஆகவே, தவெக அரசின் அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் அரசுப்பள்ளிகளில் அத்துமீறுவதையும், அரசியலைப் புகுத்துவதுமான மோசமானப் போக்கைக் கைவிட்டு, ஆக்கப்பூர்வமான மக்கள் பணிகளில் இனியாவது கவனம் செலுத்த வேண்டுமென அறிவுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
தமிழ்நாடு மின்சார வாரியத்திட்டம் 2025-26 ஆம் ஆண்டு தக்கால் திட்டத்தில் ரூ.1,250 கோடியை வழங்கிவிட்டு மின் இணைப்புக்கு 6 மாதங்களாகக் காத்திருக்கும் 47,554 உழவர் பெருமக்கள், தாங்கள் வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்தவும் முடியாமல் தவிக்கின்றனர். 2023 ஆம் ஆண்டையும் சேர்த்து கணக்கிட்டால் காத்திருப்போர் எண்ணிக்கை 60,120 ஆக உயர்ந்துள்ளது.
இது, விவசாயிகளுக்கான மின் இணைப்பை விரைந்து பெறுவதற்காக கொண்டு வரப்பட்ட தக்கால்
திட்டத்தின் நோக்கத்தையே சிதைக்கும் வகையில் உள்ளது.
@CTR_Nirmalkumar
தனித்தமிழ்நாடு கோரிக்கையைப் பிரிவினைவாதம் எனவும், தேச விரோதம் எனவும் கூறுவதை ஏற்க முடியாதெனினும், இந்தியப் பார்வையில் இருந்து வெளிப்படும் எதிர்ப்புணர்வு என அதனைப் புரிந்துகொள்ளலாம்.
மாறாக, தனித்தமிழ்நாடு கேட்பதை மனநலச்சிக்கல் என்பது தேசிய இனத்தின் பிரிந்துபோகும் தன்னுரிமைப் பற்றிய புரிதல் இல்லாது, அவற்றிற்காகப் போராடிய போராளிகளையும், செயல்பாட்டாளர்களையும் மலினப்படுத்தும் செயல்.
ஒரு நாட்டுக்குள் வாழும் ஒரு தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது தாயகத்தை தனி நாடாக அறிவிக்கக் கோருவதே மனநலச் சிக்கல் என்றால், வெவ்வேறு நாடுகளாக இருக்கும் நிலப்பகுதிகளை ஒரே நாடாக்கி, 'அகண்டப் பாரதம்' என அமைக்கக் கோருவதற்குப் பெயர் என்ன நீதிமான்களே?