மாண்புமிகு ஒன்றிய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு.அமித் ஷா அவர்கள் தலைமையில் இன்று (20.8.2026) மகாபலிபுரத்தில் நடைபெற்ற 31-வது தென் மண்டலக் குழுக் கூட்டத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் கலந்துகொண்டு வரவேற்புரையாற்றினார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (17.8.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், விதி 110-ன் கீழ், விவசாயப் பெருமக்களின் நலனிற்காக கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பயிர்க்கடன்களுக்குக் கூடுதல் தள்ளுபடியை அறிவித்தார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (17.08.2026) சென்னையில் நடைபெற்ற “இந்தியா டுடே - வட்டமேசை தமிழ்நாடு” (INDIA TODAY – ROUNDTABLE TAMIL NADU) மாநாட்டில், இந்தியா டுடே தமிழ் சேனலைத் தொடங்கி வைத்த நிகழ்வில், இந்தியா டுடே குழுமத்தின் துணைத் தலைவரும், செயல் தலைமை ஆசிரியருமான திருமதி கல்லி பூரி மற்றும் நிர்வாகிகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுடன் குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
#CMJosephVijay
மாண்புமிகு முதலமைச்சர் அன்பு அண்ணன் திரு. ஜோசப் விஜய் அவர்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
அவரது நல்லாட்சி தொடர வாழ்த்துக்கள். @CMOTamilnadu@TVKVijayHQ@actorvijay
#ஆபாசநிதி
பொது வாழ்வில் உள்ளவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. எனவே, அவர்கள் மிகுந்த பொறுப்புணர்வுடனும் நாகரிகத்துடனும் கருத்துகளை வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.
பெண்கள் கல்வி, அறிவியல், நிர்வாகம், தொழில், விளையாட்டு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சாதனை படைத்து நாட்டிற்கே பெருமை சேர்த்து வருகின்றனர். அவர்களின் கண்ணியத்தைக் குலைக்கும் இந்த பேச்சு ஏற்க முடியாதது.
ஆபாசநிதிக்கு வன்மையான கண்டனங்கள்!