Special guest @actorvijay joined us trackside to wave the green flag and kickstart two action-packed hours of racing! 🤩🙌
The Indian actor and Chief Minister of Tamil Nadu joins us here at Silverstone to support the grid’s Indian drivers and experience all the excitement that #LMC has to offer! 🇮🇳
Watch all the action LIVE and FREE on FIAWEC+
🔗https://t.co/RORUipqBa1
#LMC #Michelin #SilverstoneRound
A special guest will be waving the green flag at Silverstone this weekend! 👉 C. Joseph VIJAY
The Indian actor and Chief Minister of Tamil Nadu @actorvijay, will be joining us to support our Indian drivers in the UK and officially start the #SilverstoneRound in front of the 44-car grid. 🏁
We can’t wait to go racing this Saturday! 👊
#LMC #Michelin
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், பல கோடி இதயங்களின் அன்பைப் பெற்றிருக்கும் அன்புத் தம்பி விஜய் @TVKVijayHQ அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.
@CMOTamilnadu
It was a pleasure meeting Hon’ble Chief Minister @TVKVijayHQ anna today.
Wishing him strength, success and God’s blessings as he serves the people of Tamil Nadu 🙏🏻🤍
@CMOTamilnadu
Started the season with belief. Ended with back to back titles. 🏆
This team lived every emotion together. The highs, the pressure, the hurdles, and the unwavering support. It feels extra special because… this place is HOME! ❤️ @RCBTweets
A history is made..
From a thought… to a vision… to this moment.
Happy to have met our honourable CM @TVKVijayHQ na today and present the very first manifestation of #GOAT. ❤️❤️❤️
This is only the beginning.
TN07CM2026
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அவர்களை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.
தமிழ்நாட்டை மேம்படுத்தும் பல கனவுகளை உற்சாகத்துடன் பகிர்ந்துகொண்டார். சந்திப்பின்போது அவர் காட்டிய பண்பும் அன்பும் நெகிழ்ச்சியளித்தது.
பல்வேறு இடையூறுகளைச் சந்தித்து வரும் தமிழ்த் திரைப்படத் துறைக்கு தமிழ்நாடு அரசின் ஆதரவும் அரவணைப்பும் வேண்டும் என்பதை வலியுறுத்தி 6 முக்கியமான கோரிக்கைகளை அவரிடம் கொடுத்திருக்கிறேன். நன்மை மலரட்டும்.
@CMOTamilnadu
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு. விஜய் அவர்கள் அரசியல் நாகரிகத்துடன் என்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அவருக்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்.
@TVKVijayHQ@Udhaystalin
தமிழ்நாடு என்றும் தனித்துவ வரலாற்றுக்குச் சிறப்புப் பெற்றது. 'தமிழும் அறமுமே' தமிழ் நிலத்தின் வரலாற்றை இயக்கி வந்திருக்கின்றன. இனி தமிழ்நாட்டின் வருங்காலத்தையும் வழிநடத்தப்போகின்றன.
அத்தகைய மகத்தான காலத்தின் பொறுப்பைத் தமிழக வெற்றிக் கழகத்திற்கும், கழகத் தலைவர் அவர்கள் தலைமையிலான நமது ஆட்சிக்கும் அளித்துள்ள தமிழ்நாடு மக்களைப் போற்றுகிறேன்.
'நம் வீட்டுப் பிள்ளைகளுக்கு நாம் ஆட்சிப் பொறுப்பைக் கொடுத்துள்ளோம். அவர்கள் நமக்கான ஆட்சியைக் கொடுப்பார்கள்' என்று தமிழ்நாடு மக்கள் வாழ்த்தி எங்களுக்கு இந்த வாய்ப்பை கொடுத்திருக்கிறீர்கள். உங்கள் நம்பிக்கை ஒருபோதும் பொய்க்காது என்று தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்கள் வீட்டுப் பிள்ளைகள் உங்களுக்காகப் பணி செய்து, உங்களைப் பெருமையடைய செய்வார்கள். அனைத்தையும் நாம் பார்க்கத்தானே போகிறோம்.
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் பொறுப்பேற்றவுடன், வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (500 யூனிட்டுக்குள்) இரு மாதங்களுக்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம், சிங்கப்பெண் அதிரடிப்படை, போதைப் பொருள் தடுப்புப் படை என எளிய மக்களுக்கான நலன், பெண்கள் பாதுகாப்பு மற்றும் இளைஞர்களுக்கான நல்வாழ்வு ஆகிய குறிக்கோள்களை அடிப்படையாகக் கொண்ட திட்டங்களை அமல்படுத்தியுள்ளார். இனி இதுபோல் தொடர்ந்து அனைத்து தரப்பு மக்களுக்கான நலத்திட்டங்களையும் உரிமைகளையும் நம் முதல்வர் அவர்கள் நிறைவேற்றுவார்.
பதவியேற்ற பிறகு, சட்டமன்றத்திற்குச் சென்று மக்கள் அளித்த ஜனநாயக அரசாட்சி உத்தரவை ஏற்றார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். பிறகு, அரசின் செயல்திட்டம் குறித்து ஆய்வு செய்தார்.
அடுத்து, நம் கொள்கைத் தலைவர் தந்தை பெரியார் நினைவிடத்திற்கு முதல்வர், அமைச்சர்கள், கழக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தோழர்கள் ஆகியோர் சென்று மரியாதை மற்றும் வீரவணக்கம் செலுத்தினோம்.
பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் திரு. கி. வீரமணி அவர்களை முதல்வருடன் சென்று சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றோம். நம் கழக அரசு தந்தை பெரியார் காட்டிய கொள்கைப் பாதையில், எந்தவித சமரசத்திற்கும் இடமின்றி பயணிக்கும் என்று தெரிவித்து மகிழ்ந்தோம்.
'ஆதவ் அர்ஜுனா எனும் நான்' என்று தமிழ்நாடு அரசின் அமைச்சராக நேற்று நான் பதவியேற்றபோது, தமிழ்நாட்டு வரலாற்றின் மேன்மையையும், தமிழக மக்களான உங்களின் அன்பையுமே எனது குரலாக வெளிப்படுத்தினேன். இது, என் தனியொருவனின் குரல் அல்ல. நம் அனைவரின் கூட்டு முழக்கம்.
கழகத் தலைவர் - தமிழ்நாடு முதல்வர் அண்ணன் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான ஆட்சி நம் அனைவருக்குமானதாக இருக்கும். அறம் ஓங்கும்!
வாழ்க தமிழ்!
வளர்க தமிழ்நாடு!
1/2