Top Tweets for #chennaichronicles
Exploring Chennai and soaking in the vibes at the Senthome Church ⛪✨
Captured this moment on my iQOO 15 – love how it brings the city to life!
@IqooInd
@nipunmarya
#ChennaiChronicles
#SenthomeChurch #iQOO15 #Wanderlust

Nothing like starting the day in Chennai with soft, steaming idlis from the iconic Murugan Idli Shop, T. Nagar — a 1990s gem that put Tamil tiffins on the national map.
#ChennaiChronicles #MuruganIdli #SouthIndiaFlavours

#ChennaiChronicles #friends #happiness இந்தமுறை, பெரியார் திடல் நண்பர்களில் ஒருவரான பாலாவையும் சென்னையில் சந்தித்தேன்.
பெரம்பூரிலிருந்த எங்கள் வீட்டுக்குப் பாலாவும் வருவார். வீட்டில் எல்லோருக்கும் “சிரிப்பு பாலா” என்றால் தெரியும். மனம்விட்டு மகிழ்வுடன் உரக்கச் சிரிப்பார்.
எங்கள் மகன் அபிக்கு அப்போது இரண்டு-மூன்று வயது. பாலா போலச் சிரிக்கும் ஒருவரை அவன் அதுவரை பார்த்ததில்லை. முதலில் வியந்தவன், பிறகு அவரது சிரிப்புக்கு விசிறியானான். பாலா வந்தாலே அவர் மடியில் உட்கார்ந்து விளையாடிச் சிரித்து அவர் சிரிப்பை ரசித்துக்கொண்டிருப்பது அவன் மனம் கவர்ந்த விஷயம்.
எனக்கும் பாலாவின் சிரிப்பின் மீது ஈர்ப்பு உண்டு. எப்போது பாலாவைப் பார்த்து நலம் விசாரிக்கத் தொடங்கினாலும், கடைசியில் அவருடன் ஆற அமர உட்கார்ந்து உரையாடத் தலைப்படுவேன். ஏனென்றால் அவர் மகிழ்வுடன் மனம்விட்டுச் சிரிப்பது என்பது விரைவில் நாம் மகிழ்வுடன் மனம்விட்டுச் சிரிப்பது என்று ஆகிவிடும்.
அது இம்முறையும் நடந்தது.
#பயணிதரன்
#வாழ்வெனும்பயணம்
#வாழ் #உருவாக்கு #பகிர்

#ChennaiChronicles #friends #birthday
சென்னைக்கு நாங்கள் போகும்போதே கவனித்த விஷயம்: கவிதாவின் பிறந்தநாள். கவிதா அற்புதமாக சமைப்பார். ஆனாலும் அன்றைக்கு வீட்டில் சமைக்கக்கூடாது என்ற என் முன் நிபந்தனையை எல்லோரும் ஒப்புக்கொண்டார்கள். 😇
அடையாளப்படுத்த முடியாத அன்பும் நட்பும் நிரம்பிய அவர்கள் வீட்டில், கவிதா குணாவின் குட்டி மகள், அவளுடைய பக்கத்துவீட்டுத் தோழியுடன் சேர்ந்து எனக்கு Frozen படத்தில் வரும் Let it go பாடலின் சில வரிகளுக்கு ஆடச் சொல்லித்தந்த தருணத்தில் எனக்கு வியர்த்தது போக, யாருக்கும் சிரமம் இல்லை. 🙂
கேக் வெட்டி, வாழ்த்து சொல்லி, அஜர்பைஜானிலிருந்து கொண்டு சென்ற அன்பளிப்பு தந்து, காபி குடித்துக் கிளம்பினோம்.
கவிதா தேர்ந்தெடுத்த உணவகத்தில் விருந்து தந்தோம். திட்டமிடாமல் வந்த நட்பு எப்படி வளமாகிவிட்டது என்று பரஸ்பரம் பேசிக்கொண்டோம். இதுபோன்ற உறவுகள் மேகத்தின் தற்செயலான பிரம்மாண்டத்துடன் நின்று புன்னகைக்கும் கணங்கள் எனக்குப் பிடிக்கும்.
கடிகாரத்தில் மணி பார்க்காத நிதானமான மகிழ்ச்சியான மாலை. 😍
#பயணிதரன்
#வாழ்வெனும்பயணம்
#வாழ் #உருவாக்கு #பகிர்

#ChennaiChronicles #volunteer #youth #social
2017இல் நான் விடுமுறைக்கு ஸ்ரீபெரும்புதூர் சென்றிருந்தபோது, என் அண்ணன் மகன் வழியே சில இளைஞர்கள் எங்கள் வீட்டுக்கு வந்து சந்தித்தார்கள்.
அவர்கள் ஊரின் தன்னார்வலர் குழுக்களில் இணைந்து வேலைசெய்துகொண்டிருந்தார்கள். பிறகு எங்கள் உறவு தொடர்ந்தது. நிதி உதவியாகத் தொடர்ந்து செய்வது போக, அவர்களின் குழு உறுப்பினர்களைச் சந்திப்பதும் ஊக்கப்படுத்துவதும், முக்கியமாக, அவர்களது களப்பணிகளைப் பற்றித் தெரிந்துகொள்வதும் பரஸ்பரம் நன்மையையும் மகிழ்ச்சியும் அளிக்கும் விஷயங்கள்.
வைதேகியும் நானும் நிதி ஒதுக்கிச் செய்யும் பணிகளில் எங்களின் இப்போதைய கவனம் முக்கியமாக, ஒடுக்கப்பட்ட சமுகத்தின் பெண்கள் கல்வி மேம்பாடு குறித்து இருக்கிறது.
இந்த முறை ஊருக்குப் போனதும் அரண் என்னும் தன்னார்வலர்களுடன் எங்களுக்கு ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. அவர்களது பரவலான ஆழமான மதிப்புமிக்க பணிகள் என்னைத் தொடர்ந்து வியக்கவைக்கும், ஊக்கப்படுத்தும். அவர்கள் என்னைச் சந்திக்க விரும்புவது போக, எனக்கே அது ரீசார்ஜ் மாதிரியான விஷயம்.
இந்த முறை அந்த இளைஞர்களுடன் நான் பகிர்ந்துகொண்ட சில குறிப்புகள், சுருக்கமாக:
1. மகிழ்வோடு இருங்கள். வாழ்வு கசந்துபோக விடாதீர்கள்.
2. நமக்கு முன்னால், இவற்றைவிட மோசமான தீமைகளை இன்றைவிட மிக மோசமான சூழலில், நம்மைவிட மிக வேகத்துடனும் விவேகத்துடனும் கோபத்துடனும் எதிர்கொண்ட சமூக ஆர்வலர்களின் வழித்தோன்றல்கள் நாம் என்கிற தெளிவு இருக்கட்டும். காலத்தாலும் செயல்பாட்டாலும் இதில் நாம் தனியாக இல்லை. சங்கிலியில் இன்றைய கண்ணி நாம்.
3. சமூக மாற்றம் என்பதும் சமூக முன்னேற்றம் என்பதும் செய்து ‘முடிக்கும்’ வேலைகள் இல்லை. சலிப்போ மனஉளைச்சலோ விரக்தியோ உங்களை அண்டவிடாமல் தொடர்ந்து உங்களால் முடிந்ததைச் செய்வதில் கவனம் செலுத்துங்கள்.
4. சமூகப் பணிகளில் வாழ்வின் உண்மைகள் நம் கன்னத்தை அறைந்து சில பாடங்களைச் சொல்லித்தரும். நன்றியுடன் ஏற்றுக்கொண்டு, அதிலிருந்து கற்றுக்கொண்டு தொடர்ந்து செயலாற்றுங்கள்.
5. சுரணையில்லாமல் வாழும் கோடிகளில் நீங்கள் தனி நட்சத்திரங்கள். அந்த ஒளியைக் குறைத்து மதிப்பிடாதீர்கள். பெருமை கொள்ளுங்கள்.
6. ஒரு தன்னார்வக் குழுவுக்குச் சாதாரணமாய்ச் சொல்லாத இரண்டு விஷயங்களைத் தனிநபர் இளைஞர்கள் என்ற அளவில் சொல்கிறேன்:
(1) நல்ல வழியில் நிறையச் செல்வம் சேருங்கள்;
(2) உங்கள் துறையில் அதிகாரமும் முக்கியமும் உள்ள மனிதர்களாய் இருங்கள்.
பேரறிவாளனின் செல்வம் ஊர்க் குளத்தில் நீர் நிறைந்தது போன்றது. அறிவும் சமூக ஆர்வமும் உள்ள மனிதர்கள் உயரும்போது சமூக மாற்றம் விரைவாகும். திறனும் செல்வமும் நல்லவழியில் பயனாகும்.
7. கடைசியாக, அங்கிருக்கும் சில இளைஞர்களுக்குத் தேர்வு, வேலைவாய்ப்பு பற்றிப் பேசும்போது: சமூக மாற்றத்தின் ஒரு பகுதியாக இளைஞர்களின் முன்னேற்றம் குறித்தும் நாம் அக்கறை கொள்ளவேண்டும். இது பொதுவான அறிவுரைகளால் சாத்தியப்படாது. தனித்தனியே இளைஞர்களின் தேவைக்கேற்ப வழிகாட்டுதல்களையும் ஊக்குவிப்பையும் தரவேண்டும். நம் பகுதியிலிருந்து நம் போன்ற சமூக அக்கறை கொண்ட 25 அல்லது 50 இளைஞர்களை அதிகாரமும் முக்கியமும் உள்ள இடங்களை அடைய நாம் உதவவேண்டும். சேர்ந்து உழைப்போம்.
#பயணிதரன்
#வாழ்வெனும்பயணம்
#தன்மேம்பாடு #சமூகமேம்பாடு #அறிவியல்சிந்தனை

#ChennaiChronicles #walking #music
உடற்பயிற்சி என்று இல்லாமல், காலை-மாலை என்று இல்லாமல், ஒரு இடத்துக்குப் போகவேண்டும் என்று இல்லாமல், “எதுக்குப் போனீங்க” என்று யாராவது கேட்டால் என்ன பதில் சொல்வதென்றே தெரியாத சூழல்களில், நான் நடப்பேன். நீண்ட தூரம் நடப்பேன். இந்த முறை விடுமுறையில் போனபோதும் ஒரு நாள் ஒரு பத்து கிலோமீட்டர் (போக வர) நடந்தேன். பிடித்திருந்தது.
ஊரில் எங்கள் தெரு தவிர யாருக்கும் என்னை அவ்வளவாய்த் தெரியாது. ஓரிரு நண்பர்கள் பார்த்தால் நிறுத்தி நலம் விசாரிப்பார்கள்—அவ்வளவு தான். அயலுறவுத் துறையின் அனுகூலங்களில் இதுவும் ஒன்று.
இந்த நீண்ட நடைகள் எனக்கு என்ன செய்கின்றன என்று எனக்குத் தெளிவாகத் தெரியாவிட்டாலும் இது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்பதே போதுமானதாக இருக்கிறது.
#பயணிதரன்
#வாழ்வெனும்பயணம்
#வாழ் #உருவாக்கு #பகிர்

#ChennaiChronicles #Amma #mobilephotography
சென்னையில் இருக்கும்போது அம்மாவை நான் எடுத்த ஒளிப்படங்களில் ஒன்று.
#அம்மா தினமும் தவறாமல் நாளேடு படிப்பார். நாங்கள் வீட்டிலிருந்து கோவை செல்ல விமானநிலையத்துக்குக் கிளம்பச் சில நிமிடங்கள் இருந்தபோது படித்துக்கொண்டிருந்தார். வீட்டின் பின்னணியும் புடவை வண்ணமும் சுருதி சேர்க்கவே, க்ளிக்கினேன்.
வாழ்வு என்பது கணக்கின் விடை. தினமும் செய்யும் / செய்யாத விஷயங்களின் கூட்டல் கழித்தலில் உருவாவது.
#பயணிதரன்
#வாழ்வெனும்பயணம்
#வாழ் #உருவாக்கு #பகிர்

#ChennaiChronicles #schooldays #games #cheerful
நான் என்னுடைய பள்ளிக்குப் போயிருந்தபோது ஆசிரியர்களுடன் எங்களைப் படம் எடுத்தது ஒரு மாணவி (திவ்யா?).
அவரும் அவருடன் இருந்த மாணவியும் கையில் பேட்மின்டன் ராக்கட்டுகளை வைத்திருக்கவே பேச்சுக் கொடுத்தேன். நானும் ஆடுவேன், பல நன்மைகள் தரும் சந்தோஷமான பழக்கம், தொடர்ந்து ஆடுங்கள் என்று உற்சாகப்படுத்தினேன். “நீங்களும் தான் அவங்க கூட ரெண்டு நிமிஷம் ஆடுங்களேன்” என்றார் நண்பரும், பள்ளியின் தலைமையாசிரியருமான தாமரைக்கண்ணன்.
"சரி," என்றேன்.
ஆடத்தொடங்கும்போது, “இந்த மாணவிகள் என் கூட ஆடிட்டு உங்களைக் கேக்கப் போறாங்க, ‘என்ன பெரிய IFSன்னீங்க, நாலு பாலைத் தட்டக்கூடத் தெரியலையே’ன்னு என்னைக் கழுவி ஊத்தப்போறாங்க!” என்றேன். எல்லோரும் சிரித்தார்கள். சும்மா இரண்டு ஷட்டில் தட்டு தட்டிவிட்டுக் கிளம்பியபோது அந்த மாணவிகள் முகம் உட்பட, எல்லோர் முகத்திலும் புன்னகை.
சமயங்களில் எனக்கு இப்படித் தோன்றும்: நான் கூடுதல் மகிழ்ச்சியுடன் இருப்பதற்குக் காரணமே, பெரியவர்களாக இருப்பது எப்படி என்று எல்லோரும் சொல்லிக்கொடுத்தபோது நான் பராக்குப் பார்த்துக்கொண்டிருந்தது தான். 😊
#பயணிதரன்
#வாழ்வெனும்பயணம்
#வாழ் #உருவாக்கு #பகிர்
#ChennaiChronicles #books #friends பெரியார் திடலில் 90களில் குடிமைப்பணித் தேர்வுக்குப் படிக்கப் போனபோது எனக்குக் கிடைத்த நண்பர்களில் அணுக்கமானவர் அண்ணாதுரை என்னும் தேவா*.
பெரியாரியக் கருத்துகளில் அவருக்கு இருந்த தெளிவும், வாசிப்புப் பின்னணியும், அவரது நயமிக்க நாவன்மையும் மரியாதையைக் கூட்டின. விரைவில் பரஸ்பரம் புகழும் குழுவில் இடம்பெற்றோம். நல்லகாலமாக, எங்களது நட்புக்கு அடையாளம் சூட்ட, கம்பர் கைகொடுத்தார்.
*தேர்வுக்கு நாங்கள் படிக்கவேண்டியிருந்த கம்ப ராமாயணத்தில் குகன் ராமனிடம் சொல்லும், “தேவா! நின் கழல் சேவிக்க வந்தனென்...” என்ற வரியைச் சொல்லிச் சிரித்தபடிதான் நாங்கள் இருவரும் வணக்கம் சொல்லிக்கொள்வோம் - இன்று வரைக்கும். கடிதங்களும் தொலைப்பேசி உரையாடல்களும் தேவா என்றே பரஸ்பரம் தொடங்கும். “மவுண்ட் ரோடு போயிட்டு, அப்படியே தேவாவைப் பாத்திட்டு...”என்றால் எங்கள் வீட்டில் புரியும்.
இரண்டு கடைந்தெடுத்த நாத்திகர்களுக்கு இடையே இந்த இராமாயண வழமையின் முரண் மின்னுவதை என்றும் ரசிப்பேன்.
சென்னையில் சந்தித்தபோது அவருடைய நூலை அவருடைய கையெழுத்துடன் கேட்டு வாங்கிக்கொண்டேன். காப்ரியேல் மார்க்கேஸின் ‘Love in the Time of Cholera’ நூலை ‘காலரா காலத்தில் காதல்’ என்று நேரடியாக ஸ்பானிய மொழியிலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்திருக்கிறார். கடந்த சிலமுறைகள் நாங்கள் சந்தித்தபோதும் இந்த நூலின் மொழியாக்க வேலைகள் பற்றி உரையாடினோம்.
இது தான் மேம்பாட்டுக்கான வழி—நம்மால் இயன்ற தடங்களில் நம் சமூகத்தின் மேம்பாட்டுக்கான விஷயங்களைத் தொடர்ந்து செம்மையாகச் செய்வது.
“வாழ்த்துகள், தேவா” என்றேன். “நன்றி, தேவா” என்றார். வீட்டுக்கு வந்ததும் நூலின் முதல் பக்கத்தில் அவர் எழுதியிருந்த வரியைப் படித்தேன்: “ஆசானுமாகிய என் இனிய தேவா! - அன்புடனும் வாழ்த்துகளுடனும்” என்று எழுதியிருந்தார்.
நல்லது.
விரைவில் என்னுடைய ஒரு புது நூல் வெளிவரப் போகிறது. அதன் ஒரு பிரதியை எப்படியும் அவருக்கு அன்பளிப்பேன். அப்போது அதன் முதல் பக்கத்தில் என்ன எழுதுவது என்பதை யோசிக்கவேண்டிய அவசியம் இனி இல்லை. 🥰
#பயணிதரன்
#வாழ்வெனும்பயணம்
#வாழ் #உருவாக்கு #பகிர்

நீண்டகால நட்பு என்பது யானையைப் போல. அதன் இருப்பைத் தெரிவித்துவிடும்.
சென்னையில் ஒரு மாலையில் சில நண்பர்களுடன் ஒரு சந்திப்பு. பலருடனும் முப்பதாண்டுகளுக்கு மேல் பழக்கம். #ChennaiChronicles #friends
அன்பு, அரட்டை, ஆசுவாசம்.
#பயணிதரன்
#வாழ்வெனும்பயணம்
#வாழ் #உருவாக்கு #பகிர்

Enduring friendship is like an elephant; its presence is always felt.
A gathering with friends in Chennai one evening. #ChennaiChronicles #friends
Some friendships span more than thirty years.
Love, chatter, and comfort.
#travellerdharan
#lifejourney
#Live #Create #Share

#ChennaiChronicles #friends #collegedays
நண்பர் சுமதி, அவருடைய வக்கீல் நண்பர்களுடன் அஜர்பைஜான் வந்தபோது எங்கள் வீட்டுக்கு வந்தார்.
அப்போதே, நாங்கள் சென்னைப் பயணத்தின்போது சுமதி வீட்டுக்கு வருகிறோம் என்று உறுதியளித்திருந்தோம். ஒரு மாலையில், வைதேகி அவருடைய நண்பர்களைப் பார்த்துவிட்டு நேராக சுமதி வீட்டுக்கு வர, நானும் என் வேலைகளை முடித்துவிட்டு அங்கு சென்றேன். கடற்கரைச் சாலையில், வாழ்வு என்பது சாத்தியங்கள் பற்றிய விளையாட்டு (Life is a game of possibilities) என்ற வரியை யோசித்துக்கொண்டு சென்றேன்.
கல்லூரிக்காலத்தில் அரக்கோணம் போகும் அகல ரயில்பாதையில் ஒரு ஸ்டேஷனில் இறங்கி வேகா வெய்யிலில் வெறிச்சோடியிருந்த பகுதிகளில் நடந்து இடம் விசாரித்தபடி அவர் வீட்டுக்குப் போன நினைவுகள் வந்தன. அந்தக்காலத்தில் நாங்களெல்லாம் மேடைமேடையாய்ப் பேசுவோம். பாரதியும் கம்பனும் அவ்வையும் பல்லவன் பேருந்தும் எலுமிச்சை சாதமும் டீயும் இயன்றால் இரண்டு பிஸ்கட்டும் என ஒரு வாழ்வு.
நாற்பது ஆண்டுகளாக, வாழ்வு மாறி, நிலைமை மாறி, வாழ்விடம் மாறியும், தொடர்பு அறாத நட்பு.
80களிலிருந்தே குடும்ப நண்பர்கள். கல்லூரிக் காலத்திலேயே வைதேகிக்கும் பழக்கம். வருவதாய்ச் சொல்லியிருந்த நண்பர் சுபா கடைசி நேரப் பணியிடத்துச் சூழல் காரணமாய், வரச் சாத்தியப்படவில்லை என்பது ஒரு ஏமாற்றம்.
எப்போதுமே, பேசினால் ஓயமாட்டோம்.
அன்று மாலையும் பேசிய ஒவ்வொரு விஷயமும் இரண்டுமணி நேரம் தாங்கும். சுமதியின் நூலகம் மட்டுமே குறைந்தது ஒரு நாளாவது வாங்கும் என்று பட்டது. தில்லியில் எங்கள் வீட்டுக்கு விருந்துக்கு வந்தபோது அரட்டையும் பாட்டுமாய் அறிமுகமான சுமதியின் மகள் சிம்ஹாவும் கலந்துகொள்ள, மாலை செம்மையானது.
பக்கவாத்தியங்களாய் அல்வா, மெதுவடை, காபி, டீ...
நானும் வைதேகியும் ஒரு மாலை விருந்துக்குப் போக வேண்டியிருந்ததால், சுமதி வீட்டில் கொஞ்சூண்டு நேரம் இருப்பதுதான் சாத்தியமானது. இப்போது நினைத்தால், இந்தச் சந்திப்பு, நிதானமாக உட்கார்ந்துபேசும் ஓர் எதிர்கால வாரயிறுதி நாளுக்கான ட்ரைலர் போல இருக்கிறது. பாதகமில்லை.
வாழ்வு என்பது சாத்தியங்கள் பற்றிய விளையாட்டு.
#பயணிதரன்
#வாழ்வெனும்பயணம்
#வாழ் #உருவாக்கு #பகிர்

#chennaichronicles #books #friends
நாங்கள் இந்த முறை சென்னைக்கு வரும்போதே வைதேகி சொல்லிக்கொண்டிருந்தார்: கீதா இளங்கோவனைப் பார்க்கவேண்டும்.
நான் ஒரு முறை தோழர்கள் கீதா, இளங்கோவன் வீட்டுக்கு இரவு விருந்துக்குப் போயிருக்கிறேன் (பாஸ்போர்ட்+பை மறந்த சம்பவம்!). இந்தமுறை அவர்களைச் சந்திக்கவேண்டி தனியே திட்டமிடுவதா, அவர்களுக்கு நேரம் இருக்குமா, நாம் ஸ்ரீபெரும்புதூரிலிருந்து சென்னைக்குப் போகும் நாளில் அது அமையுமா என்றெல்லாம் யோசனைகள். “நாம் மனதார நினைத்தால் இந்தப் பேரண்டமே...” என்று கதைவிடாமல், அதற்கான வாய்ப்புகளைத் தேடினோம்.
பிறகு, தோழர் கீதாவின் இரண்டு நூல்கள் பற்றிய உரையாடல் பாரதி புத்தகாலயத்தில் நடக்கும் அறிவிப்பு கண்ணில் பட்டது.
சென்ற முறை சென்னை வந்தபோதும் பாரதி புத்தகாலயத்தில் ஒரு புத்தக விழாவில் நண்பர் ராமநாதனையும் அலமேலுவையும் பீர் முகமதுவையும் சந்தித்துவிட்டு, நண்பர் நாகராஜனையும் அறிமுகம் செய்துகொண்டு நிகழ்ச்சி நடக்கும்முன் கிளம்பிவிட்ட அனுபவம் கைகொடுத்தது. இந்தமுறையும் கீதாவின் புத்தக நிகழ்ச்சிக்கு முன் எட்டிப்பார்த்து ஒரு ஹலோ சொல்லிவிட்டு நாங்கள் செல்லவேண்டிய இரவு விருந்துக்குப் போக முடிவு செய்தோம்.
அந்த நிகழ்ச்சிக்கு முன்பு நான் சந்தித்த கல்லூரி நண்பர்கள் சந்தரும் மோகனும் வைதேகிக்கு ஒரு ஹலோ சொல்ல என்னுடன் வந்தார்கள். வைதேகி சந்தித்த பள்ளி நண்பர் சிவாவும் எனக்கு ஒரு ஹலோ சொல்ல வைதேகியுடன் வந்திருந்தார். எல்லோரையும் எல்லோருக்கும் அறிமுகப்படுத்த, ஒரே ஹலோ மயம்.
தோழர் கீதாவின் தொடர்ந்த செயல்பாடு மிகுந்த ஊக்கமூட்டுவதாகவும் முக்கியமானதாகவும் இருக்கிறது என்று வைதேகியும் நானும் அடிக்கடி பேசிக்கொள்வோம்.
எல்லா இரவுணவு உரையாடல்கள் போதும் நாங்கள் கீதாவின் நூலைப்பற்றி, பதிவுகளைப் பற்றிப் பேசும்படி ஆவது சமூகத்தின் பிரச்சனை! 🙂. கீதாவின் ‘துப்பட்டா போடுங்க தோழி’ நூலின் ஆங்கிலப் பதிப்புக்கு முன்னுரை எழுதும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. சமீபத்தில் நாங்கள் அதிகம் அன்பளிப்பாக அளித்த நூல்கள் கீதாவின் நூல்கள் தான்.
பிரும்மாண்டமாகக் கட்டமைக்கப்பட்ட கேடான சமூகப் பார்வைகளை கீதாவின் எளிய சொற்கள் தெளிவான தைரியத்துடன் தொடும்போது நடப்பதைக் கவனித்தால் அவை வெறும் எழுத்துகளின் கூட்டம் இல்லை என்பது புரியும்.
தோழர்களைச் சந்தித்தது மிகக்குறைவான நேரம் தான். நிகழ்ச்சிக்கு முந்தைய தருணம் என்பதையும் மீறி நேரம் ஒதுக்கிப் பேசினார்கள். மகிழ்ச்சி.
கீதாவையும் இளங்கோவனையும் சந்தித்துவிட்டு பாரதி புத்தகாலயத்தில் கீதாவின் நூல்களை வாங்கினோம் - ‘துப்பட்டா போடுங்க தோழி’ - 5 பிரதிகள். ‘பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணும்’ - 5 பிரதிகள். சென்னையிலிருந்து கிளம்பும்முன்பே நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் கொடுத்தது போக, எங்களுக்கு இரண்டு புத்தகத்திலும் ஒரு பிரதியே மிஞ்சியது. “நல்ல புக் ஒன்னு வந்திருக்கு, உனக்கு அவசியம் அனுப்பறேன், அட்ரஸ் கொடு” என்று நாங்கள் இருவரும் சொல்லிய கணக்குப்படி, குறைந்தபட்சம் இன்னும் 10 பிரதிகளாவது வாங்குவோம்.
அனைத்துலக தோழர் கீதா வாசக விசிறிகள் மன்றத்தின் அஜர்பைஜான் கிளையிலிருந்து, 😍
அன்புடன்,
வைதேகி & தரன்.
***
#பயணிதரன்
#வாழ்வெனும்பயணம்
#தன்மேம்பாடு #சமூகமேம்பாடு #அறிவியல்சிந்தனை

#chennaichronicles #travel #mobilephotography #momories
விமானநிலையத்துக்குப் போகும்போது திருநீர்மலையைக் கடந்த நேரம். சிறு தூறல். மனதில் ஒரு புன்னகை.
90களின் மத்தியில், நாங்கள் எழுதவேண்டிய குடிமைப்பணித் தேர்வு நெருங்கிக்கொண்டிருந்த நேரம்.
மனதில் சந்தேகம், சஞ்சலம், சபதம். ‘எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்னும் கேள்விகளுக்கு நடுவே, ‘மாதிரித் தேர்வுகள்’தான் வெற்றியை நோக்கி நம்மை நகர்த்தும் என்று எங்களில் ஒரு சிலர் உணர்ந்துவிட்ட காலகட்டம். ஆனால், நாங்களே நண்பர்களுக்குள் வைத்துக்கொள்ளும் வாராந்திர மாதிரித் தேர்வுகளுக்கு வருவதாய்ச் சொன்ன நண்பர்கள் சிலர் வரவில்லை.
எங்களுக்கு ஹால் டிக்கட் என்னும் தேர்வு மையம் குறித்த தகவலும் வந்திருந்ததால், யார் எங்கே தேர்வு எழுதப்போகிறோம் என்பதும் பெரிய உரையாடலாய் இருந்தது.
மாதிரித் தேர்வு எழுத வராத நண்பர்கள் மூன்று நான்குபேர், தாமதித்து டீ குடிக்கும் நேரத்தில் வந்தார்கள். அவர்களின் முகத்தில் சங்கடம் இல்லாதது மட்டுமின்றி, ஒரு கள்ளப் புன்னகையும் இருந்தது எனக்கு விநோதமாகப் பட்டது. விசாரித்தேன்.
“திருநீர்மலை” என்றார்கள்.
தபாலில் ஹால் டிக்கெட் வந்ததும் முன்பே அவர்களுக்குள் பேசிவைத்துக்கொண்டபடி யாரும் பிரிக்காமல் திருநீர்மலைக்கு எடுத்துக்கொண்டுபோய் அர்ச்சனைத் தட்டில் வைத்து பூஜை செய்தபிறகு அங்கேயே உட்கார்ந்து பிரித்திருக்கிறார்கள். கடவுள் நம்பிக்கை கொண்ட இன்னும் சில நண்பர்களுக்கும் இதைச் சொல்லவில்லையே என்ற கேள்வி எழுந்தது. “கடவுள் கிட்டே டிமாண்ட் அதிகமாயிடும் பாஸ். அதனாலே எங்களுக்குள்ளே வெச்சிக்கிட்டோம்” என்று சிரித்தார்கள்.
எங்கள் கார், திருநீர்மலையைக் கடக்கும்போது அந்த மூன்று நான்கு பேரும் நினைவில் வந்தார்கள். அவர்களில் ஒருவரும் தேர்வில் வெற்றிபெறவில்லை என்பதும் நினைவு வந்தது.
முயற்சி தான் மெய் வருத்தக் கூலி தரும்.
#பயணிதரன்
#வாழ்வெனும்பயணம்
#தன்மேம்பாடு #சமூகமேம்பாடு #அறிவியல்சிந்தனை

#ThrowbackThursday #ChennaiChronicles
சென்னை சென்றிருந்தபோது நாங்கள் ரசித்துச் சாப்பிட்ட உணவகங்களில் ஒன்று, ‘மஞ்சள்.’ வெறும் மெனுவைப் புரட்டாமல் எல்லா வகைகளையும் தட்டுத்தட்டாகக் கொண்டுவந்து தேர்ந்தெடுக்கச் சொன்னதும், தயக்கமில்லாத காரசாரமான உணவும், “இதுக்கு ஆப்பம் நல்லா இருக்கும், சொல்லட்டுமா?” என்பது போன்ற அக்கறையான விசாரிப்பும் நல்ல அனுபவம் தந்தன.
எங்கள் சென்னைப் பயணத்துக்கு (வழக்கம்போல) பல்வேறு வகைகளில் அன்புடன் உதவிய நண்பர்கள் குணா-கவிதா குடும்பத்தையும் அழைத்திருந்தோம். யார் பில் கொடுப்பது என்கிற எனக்கும் குணாவுக்குமான (வழக்கமான) சண்டைக்கு நடுவே, கை கழுவச் செல்வதாகச் சொல்லிவிட்டுப் போன எங்கள் மகள் கீர்த்தனா, பில் கொடுத்துவிட்டு வந்து, தான் வளர்ந்து சம்பாதிக்கும் நிலையை அடைந்துவிட்டதை நிறுவி நெகிழ்த்தியதாலும் நினைவில் நிற்கும்.
#பயணிதரன்
#வாழ்வெனும்பயணம்
#வாழ் #உருவாக்கு #பகிர் #கதைசொல்

#ChennaiChronicles 🚲 நாங்கள் சென்னை போனபோது, "அண்ணா, ஒரு நாள் காலைல எங்களோட சைக்கிள் குழு கூட சைக்கிள் ஓட்டலாமா?" என்று கேட்டார் குணா 🤔. நாங்கள் தில்லியில் சைக்கிள் பயணம் செய்த காலத்தில் "என்ன சைக்கிள் வாங்கலாம்?" என்று கேட்ட பல நண்பர்களில் 🚴, சைக்கிள் வாங்கி, குழுக்களுடன் இணைந்து பல்லாயிரம் கிலோமீட்டர்கள் பயணித்த ஒரே ஆள், எனக்குத் தெரிந்து, குணா 🌍. இப்போது இரண்டு சைக்கிள்கள், பல குழுக்கள், வெளிநாட்டுச் சைக்கிள் டூர்கள் என்று கலக்கிக்கொண்டிருக்கிறார் 🌏.
குணா கேட்டதும், "ஐயோ, இந்த முறை முடியாது குணா" என்றேன் 😞. பயணத்தின்போது நான் வழக்கமாக எனது சைக்கிள் பயண உடைகளை எடுத்துக்கொள்வேன் 🎽. இந்தமுறை குடும்பத்தோடு மிகச் சில நாட்களுக்கே செல்வதால், நிச்சயம் வாய்ப்பு கிடைக்காது என்று சைக்கிள் உடையை எடுத்துக்கொள்ளவில்லை. ஆனாலும் சென்ற முறை நாங்கள் சென்னையிலிருந்து மகாபலிபுரம் சென்ற இனிய நினைவுகள் அலைக்கழிக்க, கொஞ்ச தூரமாவது ஓட்டுவோமே என்று தோன்றியது 🏖️.
அதிகாலை சைக்கிள் பயணம் என்பதால் மற்ற வேலைகள் பாதிக்கப்படாது ☀️. ஒரே பாதிப்பு, சைக்கிள் உடை—முக்கியமாக padded bike shorts—இல்லை என்பதால் எனது பின்புறத்துக்குத் தான் இருக்கும் 😅. நீண்ட தூரம் இல்லை என்றால் சமாளித்துக்கொள்ளலாம் என்று ஒப்புக்கொண்டேன் 🤝.
குணாவின் காரில் இரண்டு ஹெல்மெட், இரண்டு கையுறைகள், இரண்டு கழுத்துப் பட்டைகள், இரண்டு சைக்கிள்களுடன் வந்தார் 🚗. OMRஇல் ஏதோ ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு சைக்கிள்களை எடுத்தோம் 📍. அப்போதே பல நண்பர்கள் காலை வணக்கம் சொன்னார்கள் 🙏.
ஜனவரி மாத அதிகாலையில் சென்னையில் கடலை ஒட்டிய ஒரு தரமான சாலையில் சைக்கிள் பயணம் போவது நமக்கு நாமே அளித்துக்கொள்ளும் ஒரு பரிசு 🎁. நாங்கள் மெதுவாகவே ஓட்டினோம் 🚴♂️. "இங்கே தான் சென்ற முறை டீ சாப்பிட்டோம்" என்பது போன்ற உரையாடல்கள் ☕. குணாவின் குழு நண்பர்கள் பலரும் கையசைத்து வணக்கம் சொல்லிவிட்டுப் போனார்கள் 👋. "காப்பி சாப்பிடும்போது பாப்போம்" என்ற வரிக்கு அர்த்தம் அப்போது புரியவில்லை 🤷♂️. ஒருவர் ப்ளூ-டூத் ஸ்பீக்கரில் சத்தமாகப் பாட்டுக் கேட்டுக்கொண்டே ஓட்டினார் 🎶. அதிகாலை ஐந்து மணிக்கு "ராசாவே, கட்டெறும்பு என்னைக் கடிக்கிது" என்று கேட்பது சுவாரஸ்யமாக இருந்தது 🐜.
சற்று தூரத்தில் ஒரு பாலம் வந்தது 🌉. பல சைக்கிள் குழுவினர் அங்கே நிறுத்தி தண்ணீர் குடித்து ஆசுவாசப்படுத்திக் கொண்டார்கள் 💧. நாங்களும் நிறுத்தினோம் 🛑. குணா பல நண்பர்களை அறிமுகப்படுத்தினார் 👥. அப்போது தான் கவனித்தேன், பலரும் மிக விலை உயர்ந்த சைக்கிள்களை வைத்திருந்தார்கள் - ஒரு லட்சத்திலிருந்து மேலே போகும் விலை 💸. "என்ன வெல குடுத்து என்ன பிரயோஜனம், நாம மிதிச்சா தான் போவுது" என்றார் ஒரு நண்பர் 😂!
"அண்ணா, திரும்பிடலாமா, இல்ல, இன்னும் கொஞ்சம் ஓட்டறீங்களா?" என்றார் குணா 🚴♀️. "இன்னும் கொஞ்சம் போவோம்" என்றோம் 🛣️. விடை பெறும்போது பலரும் மீண்டும், "காப்பி சாப்பிடும்போது பாப்போம்" என்றார்கள் ☕.
நானும் குணாவும் மட்டும் பேசியபடியே சைக்கிள் ஓட்டினோம் 🗣️. சைக்கிள் முன் சக்கரத்துக்குச் சற்று தொலைவில் கண்படும் இடமெல்லாம் தார்ச்சாலை கறுப்புப்பூவாய் விரிந்துவிரிந்து வரவேற்கும் அந்தத் தாளகதி மயக்குவதாக இருந்தது 🌚. சைக்கிள் பயணம் என்பது இயக்க நிலை தியானம் 🧘♂️.
ஓர் இடத்தில், "திரும்பிடலாம்ணா" என்றார் குணா 🔄. திரும்பி வரும்வழியில் வெளிச்சம் கசிந்திருந்தது 🌅. மீண்டும் பாலத்தின் அருகே நிறுத்தினோம் 🌉. வேடந்தாங்கல் போகாமலேயே குளிர்காலப் பறவைகள் எங்களுக்காக அணிவகுத்திருந்தன 🐦. காணொளி 📹.
மீண்டும் கார் நிறுத்திய இடத்துக்கே வந்தோம் 🚗. ஏறத்தாழ 25 கி.மீ ஓட்டியிருந்தோம். எல்லோரும் காப்பி குடித்துக்கொண்டிருந்தார்கள் ☕. சைக்கிள் குழுவில் தொடர்ந்து பங்கேற்கும் சோழிங்கநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் சைக்கிள் குழுவினர் எல்லோருக்கும் காப்பி, டீ வாங்கித் தருகிறார் - தினமும் 🙌. "இன்னைக்கு ஒரு நாள், நான் தரட்டா?" என்கிற கேள்வியைக்கூட யாரும் காதில் வாங்கிக்கொள்ளவில்லை 😄. இனிமையாக எளிமையாகப் பேசினார் 🗨️. இன்னும் சில நண்பர்களைப் பற்றிக் கூடுதலாக அறிந்துகொள்ள முடிந்தது 🤝. மருத்துவர், பொறியாளர், தொழில்முனைவோர் என்று கலப்படமாக இருந்தார்கள் 👩⚕️👨🔧👩💼. எல்லோரையும் காலை நேரத்துச் சைக்கிள் பயணத்தின் சுகம் இணைத்திருந்தது 🚲.
மகிழ்வும் நிறைவுமாகக் கிளம்பினோம் 🌟. ஓர் எதிர்பாராத காலை நிகழ்வு என்றால் இப்படி இருக்கணும் 🌈. குணாவுக்கு நன்றி 🙏.
#பயணிதரன்
#வாழ்வெனும்பயணம்
#வாழ் #உருவாக்கு #பகிர் #கதைசொல்

#ChennaiChronicles மயிலாப்பூர் சென்றபோது அம்மா கோயிலுக்குள் போக விரும்பினார்கள். நானும் என் மகள் கீர்த்தனாவும் கூடவே போகச் சம்மதித்தோம். மற்றவர்கள் வெளியே நின்றார்கள்.
உள்ளே நுழைந்ததும் சுவரில் பதித்திருந்ததில் ஒரு திருவாசகச் செய்யுளை மகளுக்கு வாய்விட்டுப் படித்துக் காண்பித்தேன். அதன் கெஞ்சும் தொனியைச் சுட்டி, “திருவாசகத்துக்கு உருகாதார், ஒரு வாசகத்துக்கும் உருகார்” என்கிற பின்னணியைச் சொன்னேன்.
அம்மா சாமிகளை விசாரித்துவிட்டு வரும்வரை நானும் கீர்த்தியும் கண்ணில் படும் விஷயங்களையும் மனதில் நிழலாடும் விஷயங்களையும் பேசிக்கொண்டிருந்தோம். தொலைப்பேசியிலேயே ஒன்றரை மணி நேரம் பேசுவோம். பூஜாரிகள் வேண்டாம் என்கிற புள்ளியில் புத்த மதமும் தமிழின் பக்தி இலக்கியமும் சூஃபி சிந்தனையும் ஒன்று சேரும் அழகைச் சிலாகித்துக்கொண்டிருந்தபோது அம்மா வந்தார்கள்.
வெளியே வரும்போது கோயில் வாசலில் புளியோதரை கொடுத்துக்கொண்டு இருந்தார்கள். வரிசையில் காத்திருக்கவேண்டியிருக்கும் என்பதாலும், வெளியே காத்திருந்தவர்கள் எங்களை நெற்றிக்கண்ணால் எச்சரித்ததாலும் புளியோதரையைப் புறக்கணித்துவிட்டு நடந்தோம். அடுத்த முறை இரண்டு தொன்னை வாங்கிச் சாப்பிட்டால் போச்சு. “ஆற்று இன்ப வெள்ளமே! அத்தா! மிக்காய்! அடுத்த முறை புளியோதரை தா!” என்று வேண்டிக்கொண்டு வெளியே வந்தேன்.
நாங்கள் ராசி சில்க் போனபிறகும் எனக்குப் புளியோதரை வாசம் வருவது போலவே இருந்தது. அந்த அந்திநேரத்து அரையிருட்டில் இன்னும் இரண்டு செய்யுள்களையாவது வாய்விட்டுப் படித்திருக்கலாமே என்றும் தோன்றியது.
#பயணிதரன்
#வாழ்வெனும்பயணம்
#வாழ் #உருவாக்கு #பகிர் #கதைசொல்


#ChennaiChronicles #மீண்டசொர்க்கம்
🍀ஏறத்தாழ கடந்த 15 ஆண்டுகளாய் காய்கறி உணவு மட்டும் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். (அதற்கு முன்பு சீனாவிலும் மற்ற நாடுகளிலும் நகர்வன, நடப்பன, ஊர்வன, பறப்பன, தாவுவன, நீந்துவன என்று எல்லாவற்றையும் சுவைத்திருக்கிறேன். ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் “இது என்ன?” என்று கேட்காமலும் பார்த்ததை வாங்கி சாப்பிட்டிருக்கிறேன்.) ஏன் நிறுத்தினேன் என்று எனக்கும் தெளிவாகத் தெரியாது. நிற்க. 🌍🥢
சமீபத்தில் மீண்டும் புரத உணவுகளை அதிகப்படுத்திக்கொள்ள வேண்டி கோழி, மீன், முட்டை என்று துவங்கினேன். அது சமீபத்தில் வந்த ஒரு நல்ல நாளில் நடந்தது வெறும் தற்செயல் என்றே நம்புகிறேன். 😜 நிற்க. 🐔🐟🥚
சென்னைக்குப் போவதற்கு முன் இந்தச் செய்தி குடும்பத்தில் பரவ, எல்லோரும் கோழிப்பண்ணை, மீன் படகு என்று உணவு சேகரித்துவைத்துக் காத்திருந்தார்கள். அம்மா செய்திருந்த கோழிக்கறி, மீன் குழம்பு, மீன் வறுவல் சாப்பிட்டேன். எனக்குப் புரதம் எறியதோ இல்லையோ, அம்மா முகத்தில் ஒளி கூடியிருந்தது. மீண்ட சொர்க்கம். 🌅❤️🌟

#ChennaiChronicles #WednesdayWisdom அஜர்பைஜானிலிருந்து கிளம்பி தில்லி வந்து மூடுபனியும் காலதாமதமும் வதைக்க, ஒரு வழியாக சென்னை வந்து சேர்ந்தபோது பளிச்சென்ற புன்னகையுடன், ரமா. வைதேஹியின் அக்கா. புறப்பாடு, வருகை, பெட்டி, விமானம் என்கிற எங்கள் வாழ்வின் தாளகதியில், சொன்னாலும் கேட்காமல் நேரம் ஒதுக்கி வருபவர் ரமா. 🚌
எல்லாமே ஒரு படபடப்பான ஐந்து நிமிடத்துக்காக. சமயங்களில் ஒரு காபி குடிப்போம். இந்த முறை அதுவும் இல்லை. இதெல்லாம் ஒரு மாபெரும் தோரணையில் அல்ல; “நா இருக்கேன் உங்களுக்கு” என்னும் அன்பான சிறு புன்னகையில். இது, உடனிருப்பதைத் தனிப்பட்ட வசதிக்கு மேலானதாகத் தேர்ந்தெடுப்பது. அவசர கதி வாழ்வில் அன்பின் தருணங்களைக் கண்டறிவது பற்றியது. 🔥❤️
ஓர் உண்மையான பிணைப்பு நிமிடங்களில் அளவிடப்படுவதில்லை; அது ஒவ்வொரு நிமிடத்தையும் அர்த்தமுள்ளதாக ஆக்குகிறது. மூடுபனியோ கொளுத்தும் வெய்யிலோ, நிதானமோ அவசரமோ, நம்முடன் இருக்க மெனக்கெடும் ரமாக்களுக்காக இந்தப் பதிவு. 🌟🔥🤗
PS #1: ரமாவும் என்னுடைய +2 பள்ளி நாட்களிலிருந்து நண்பர்.
PS#2: நாங்கள் அஜர்பைஜானுக்குத் திரும்பும் வரை ஒளிப்படத்தை இணையத்தில் வெளியிட வேண்டாம் என்று சொல்லியிருந்தோம். ஆகவே, இப்போது நான் பதிவிடுகிறேன்.
#பயணிதரன்
#வாழ்வெனும்பயணம்
#வாழ் #உருவாக்கு #பகிர் #கதைசொல்

Last Seen Hashtags on Sotwe
brosis(***********************************************************************) filter:videos
Seen from Canada
anxiouspandaaaa
Seen from United States
ensestsikiş
Seen from Netherlands
كسي_مشتهي
Seen from Japan
tannlege
Seen from United States
Diyarbakircift
Seen from Turkey
crossdresserindonesia
Seen from Indonesia
maharashtra or devabhau
Seen from India
FemaleMuscleGrowth
Seen from United Arab Emirates
rooza
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.5M followers

Barack Obama 
@barackobama
118.7M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.4M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.4M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.7M followers

Neymar Jr 
@neymarjr
66.3M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63M followers

The Ellen Show
@theellenshow
62.1M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.6M followers
















