@tcl_india Hello!
Didn't expect such a poor customer service from you. It's been 10 days waiting for a replacement after inspection by your team. Looking forward to hear back. Case ID IN2604130929569011848
1956-ஆம் ஆண்டே மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்தாலும் இந்த நிலம் Madras State என்ற பெயரிலேயே தொடர்ந்தது.
எத்தனையோ முயற்சிகள், தீர்மானங்கள், போராட்டங்கள் நிகழ்ந்தும் எதுவும் மாறவில்லை.
1967-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது கழகம். முதலமைச்சரானார் நம் அண்ணா. வரலாற்றில் பொன்னாளாக நிலைபெற வந்தது அந்நாள்!
தமிழ்த்தாயின் ஏக்கம் தீரத் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்கள் 'தமிழ்நாடு' என்ற பெயரினை அவையினில் முழங்க, ஒட்டுமொத்த மாநிலத்தின் உணர்வினையும் எதிரொலிக்கும் வகையில் உறுப்பினர்கள் எல்லாம் 'வாழ்க' என வாழ்த்தி மகிழ்ந்த இந்த நாளே #தமிழ்நாடு_நாள்!
ஆட்சியா? காட்சியா?
ஒரு நாட்டின் அரசர் தினமும் ஒரே வசனம் சொல்வாராம்.
"என் ஆட்சியைப் போல சிறந்த ஆட்சி உலகிலேயே இல்லை. என் அமைச்சர்கள் எல்லோரும் அறிவாளிகள்!"
ஒருநாள் தனது ஆலோசகரை அழைத்து,
"என் அமைச்சரவையில் நான்கு முட்டாள்களைக் கண்டுபிடித்து வா!" என்றாராம்.
ஆலோசகர் ஒரு மாதம் முழுவதும் தேடினார். இறுதியில் இரண்டு பேரை மட்டும் அழைத்து வந்தார்.
முதலாமவரைக் காட்டி,
"இவர் செய்யும் செயல்களே மக்கள் மத்தியில் கேலிக்கும் விமர்சனத்திற்கும் காரணமாகி வருகின்றன. ஆகவே இவர் நான்காவது முட்டாள்."
அடுத்தவரைக் காட்டி,
"மாணவர்களின் திறனை மதிப்பிடுகிறேன் என்ற பெயரில், கல்வியின் தரத்தை உயர்த்துவதை விட கேமரா முன் நடக்கும் நிகழ்வுகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். அதனால் இவர் மூன்றாவது முட்டாள்."
அரசர் கேட்டார்:
"மீதமுள்ள இருவர் எங்கே?"
ஆலோசகர் சிரித்தபடி சொன்னார்:
"நாட்டில் விலைவாசி, வேலைவாய்ப்பு, கல்வி, மருத்துவம் என்று மக்கள் எதிர்கொள்ளும் ஏராளமான பிரச்சினைகள் இருக்கும்போது, இப்படி முட்டாள்களைத் தேடி ஒரு மாதம் சுற்றிய நான் இரண்டாவது முட்டாள்."
"அந்த வேலைகளை விட்டுவிட்டு, இந்த வேலையை எனக்குக் கொடுத்த நீங்கள்தான் முதல் முட்டாள்!"
இந்தக் கதை ஒரு பழைய நகைச்சுவை மட்டுமல்ல; ஆட்சியின் முன்னுரிமைகள் மாறும்போது மக்கள் கேட்கும் கேள்வியும் கூட.
மக்கள் எதிர்பார்ப்பது ரீல்ஸ் அல்ல; முடிவுகள்.
கேமரா ஃப்ளாஷ் அல்ல; செயல்திறன்.
விளம்பர அரசியல் அல்ல; மக்கள் அரசியல்.
ஆட்சி என்பது "Camera... Rolling... Action..." என்று காட்சிகளை உருவாக்கும் மேடை அல்ல.
அது "திட்டம்... செயல்பாடு... மக்கள் நலம்..." என்று முடிவுகளை உருவாக்கும் பொறுப்பு.
கேமரா அணைந்த பிறகும் மக்கள் வாழ்க்கையில் ஒளி எரிய வேண்டும்; அதுதான் உண்மையான ஆட்சி.
-வைஷ்ணவி
திராவிட முன்னேற்ற கழகம்!