போலியான செய்தியை பரப்பிய @sunnewstamil எனும் பொய் செய்தி சேனலுக்கு வன்மையான கண்டனம்
மதுரை அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி நீக்கப்பட்டதாக சன் நியூஸ் செய்தி சேனல் வெளியிட்டுள்ள செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானதும், திட்டமிட்டு உருவாக்கப்பட்ட போலியான செய்தியும் ஆகும்.
சன் நியூஸ் வெளியிட்டுள்ள செய்தியில் பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படத்தில், பெயர்ப்பலகையில் இடம்பெற்றிருந்த தமிழ் எழுத்துகளை திட்டமிட்டு ஃபோட்டோஷாப் மூலம் மறைத்து, தமிழ் நீக்கப்பட்டதைப் போன்ற ஒரு போலியான புகைப்படத்தை உருவாக்கி, அதனை உண்மையான புகைப்படம் போல சித்தரித்து செய்தி வெளியிட்டுள்ளனர்.
மதுரை அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலின் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் கடந்த ஆண்டுகளில் எப்படி பெயர் பலகை இருந்ததோ இப்போதும் அதே முறையில் தான் உள்ளது என்பதையும் தெளிவுபடுத்துகிறேன். எனவே, சன் நியூஸ் வெளியிட்டுள்ள இந்த செய்தி வடிகட்டிய பொய் மற்றும் முழுமையாக உண்மைக்கு புறம்பான செய்தி என்பதை பொதுமக்களுக்கு தெளிவுபடுத்துகிறோம்.
செய்தி ஊடகம் என்ற பொறுப்பான தளத்தை பயன்படுத்தி திட்டமிட்டு உண்மையை மாற்றி சித்தரித்து செய்தி வெளியிடுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற செயல்கள் பொதுமக்களிடையே தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துவதுடன், அரசாங்கத்தின் மீதும் இந்து சமய அறநிலையத்துறையின் மீதும் மக்களிடையே அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுவதாகவே கருத வேண்டியுள்ளது.
பொய்யான புகைப்படத்தை உருவாக்கி, அதனை அடிப்படையாகக் கொண்டு போலியான செய்தியை பரப்பிய சன் நியூஸ் செய்தி சேனலின் இந்த செயலுக்கு எனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், இதுபோன்ற பொய்யான மற்றும் தவறான செய்திகளை பரப்பும் ஊடகங்களின் மீது, சட்டத்திற்குட்பட்டு உரிய நடவடிக்கை நிச்சயமாக மேற்கொள்ளப்படும்.
பொதுமக்கள் இதுபோன்ற போலி செய்திகளையும், உண்மையை திரித்து வெளியிடும் செய்தி நிறுவனங்களையும் நம்ப வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
போலியான சன் நியூஸ் செய்தியுடன், தற்போது எடுக்கப்பட்ட உண்மையான புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது.
பின்குறிப்பு: சட்டம் தன் கடமையை நிச்சயமாக செய்யும்.
@CMOTamilnadu | @TVKVijayHQ
ஊழல் இருளில் உழல்வோர், ஒளியைப் பழிப்பதா?
தாராபுரம் இடைத்தேர்தல் களத்தில், தோல்வி பயத்தால் தத்தளிக்கும் திமுக நிர்வாகி திரு. @V_Senthilbalaji, தமிழக வெற்றிக் கழகத்தின் மீது வீசியுள்ள அபாண்டமான அவதூறுகளை வன்மையாக கண்டிக்கிறோம். நிராகரிக்கிறோம். சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. புனையப்பட்டது.
இடைத்தேர்தல் வரலாற்றிலேயே ஜனநாயகத்தைப் பணச்சலங்கையிட்டு ஆடவிட்ட பெருமை திமுகவையே சாரும். வாக்காளர்களை ஆட்டு மந்தைகளாக மண்டபப் 'பட்டிக்குள் அடைத்து' வாக்கு வேட்டையாடிய பிதாமகர்கள், இன்று எங்களைப் பார்த்துத் 'தூய அரசியல்' என கூறியதை விமர்சித்து பேசுவது விந்தையிலும் விந்தை!
சேலை, விளக்கு, பிரியாணி எனத் தாங்கள் காலங்காலமாகச் செய்யும் தகிடுதத்தங்களை எங்கள் மீது திணிப்பது, இருள் ஒளியைப் பார்த்துப் பழிப்பதற்குச் சமம். அதிகார பலத்தாலும் பண மமதையாலும் வாக்குகளை விலைக்கு வாங்கிப் பழகியவர்களுக்கு, எங்கள் மீது மக்கள் காட்டும் தன்னெழுச்சியான அன்பு கண்களை உறுத்துகிறது.
அவர்கள் காட்டும் புகைப்படம், வஞ்சகத்தால் புனையப்பட்ட அப்பட்டமான பொய்! காசை வீசி வாக்குகளைப் பறிக்கும் கறைபடிந்த அரசியல் எங்கள் மரபல்ல; அறமே வடிவான எங்கள் தலைவரின் அகராதியிலேயே அதற்கு இடமில்லை. எளிய மக்களின் தூய அன்பை மட்டுமே நம்பி நிற்கும் எங்களுக்கு, ஊழல் குறுக்கு வழிகளில் பயணிக்கும் இயல்பே எக்காலத்திலும் கிடையாது!
அவதூறு சேற்றை வாரி இறைத்துவிட்டு தப்பிவிடலாம் என நினைக்கும் திரு. செந்தில் பாலாஜி மற்றும் திமுகவினர் மீது, த.வெ.க உறுதியான சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
பணத்தால் ஜனநாயகத்தை ஏலம் கேட்கும் எத்தர்களுக்கு, தாராபுரம் மக்கள் தங்கள் விரல் மையால் தகுந்த தீர்ப்பெழுதுவார்கள்!
@TVKVijayHQ | @TVKPartyHQ | @TVKHQITWingOffl | @BussyAnand
#தமிழகவெற்றிக்கழகம் #TVK
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில், யாருக்கும் வழங்கிடாத பேரன்பையும், பெருவாரியான வாக்குகளையும் நமக்கு வாரி வழங்கி, வாகை சூடும் வரலாற்றைத் திரும்ப வைத்து, உங்களின் முதல் சேவகனாக என்னை அமர்த்திய உங்களுக்கு என் நன்றிக் கடனைத் திருப்பி அளிக்கும் நேரமிது. உண்மையான மனசாட்சியுள்ள மக்களாட்சியை அமர்த்திய தமிழக மக்கள் அனைவருக்கும் எவ்வளவு நன்றி சொன்னாலும் அது மிகையாகாது. தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது, தமிழக மக்களாகிய உங்கள் தலைமையிலான ஆட்சி! இந்த ஆட்சி தொடர்ந்திட, மென்மேலும் வலுப்பெற உங்கள் ஆதரவு எப்போதும் தேவை.
கடந்த 25ஆம் தேதி (25.09.2026) மதுராந்தகம் தொகுதியிலும், 30ஆம் தேதி (30.09.2026) தாராபுரம் தொகுதியிலும் இடைத்தேர்தலுக்காக நாம் பரப்புரை மேற்கொண்டோம்.
இதனைத் தொடர்ந்து கடந்த 2ஆம் தேதி (02.10.2026) மதுராந்தகம் தொகுதியிலும், இன்று (04.10.2026) தாராபுரம் தொகுதியில் வாகனப் பிரசாரம் மேற்கொண்டோம்.
இந்த இடைத்தேர்தல் பரப்புரைக்காக நாம் வந்த போது, செங்கல்பட்டு மாவட்ட மக்களும், கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட மக்களும் நமக்களித்த வரவேற்பும், நம்மிடம் காட்டிய அன்பும் பாசமும் எதற்கும் நிகரில்லாதது. எக்காலத்திற்கும் என் நெஞ்சில் நிலைத்திருக்கக் கூடியது. இதற்காக எவ்வளவு நன்றி சொன்னாலும் அது மிகையாகாது. இதற்காக உங்களுக்கு வாழ்நாள் கடமைப்பட்டுள்ளோம்.
நடைபெற உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், இவ்வளவு காலமாக நம்மை ஏமாற்றி வந்த, தீய சக்தியையும், தீர்ந்துபோன சக்தியையும் புறந்தள்ளுவீர்கள்; மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களை ஆதரிப்பீர்கள்; மதுராந்தகம் தொகுதி திருமதி மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரம் தொகுதி திருமதி சத்தியபாமா ஆகியோருக்கு வெற்றிச் சின்னமாம் நமது விசில் சின்னத்தில் உங்களின் பொன்னான வாக்குகளை அளிப்பீர்கள் என்பதை இந்த நாடறியும். அதற்காக நான் முன்கூட்டியே உங்களுக்கு என் நன்றியை உரித்தாக்குகின்றேன்.
மேலும், இந்தத் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், தேர்தல் கண்காணிப்பாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், முழு ஒத்துழைப்பு நல்கிய தன்னார்வலர்கள் குழு, காவல் துறையினர், மருத்துவக் குழுவினர், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி.
தமிழ்நாட்டு மக்களுக்கான முதன்மைச் சக்தியான நாம், மக்கள் நலன்களைக் காப்பதற்காக, எதிலும், எப்போதும் சமரசம் செய்துகொள்ளவே மாட்டோம். லஞ்சம், ஊழலற்ற நேர்மையான நிர்வாகத்துடன் மனசாட்சி உள்ள மக்களாட்சியை இப்போது போலவே எப்போதும் தொடர்வோம்!
மீண்டும் நினைவூட்டுகிறோம்.
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதி மக்களே, நீங்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டிய ஒரே சின்னம் உங்கள் வெற்றிச் சின்னமான விசில் சின்னம் என்பதை மறந்துவிடாதீர்கள்.
நல்லதே நடக்கும்.
வெற்றி நிச்சயம்.
🇮🇳 INDIA FINISH 4TH IN THE MEDAL TALLY AT THE ASIAN GAMES 2026!
21 GOLD 🥇27 SILVER 🥈 37 BRONZE 🥉
TOTAL - 85 MEDALS
A campaign filled with Olympic quotas, historic moments, heartbreaks and disappointments.
But surely, one that we’ll remember for a long time.
After a disappointing start, finishing 4th in the medal tally is some achievement!
Thank You, Team India 🇮🇳🙌
இன்று தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பொதுக் கூட்ட மேடையில், தவெக வேட்பாளர் அவர்களைப் பற்றி உருவ கேலி செய்யும் விதமாக பேசியது கடும் கண்டனத்திற்குரியது.
பிரச்சார மேடைகளிலும் பொதுக்கூட்ட மேடைகளிலும் பெண்களை தரக்குறைவாகவும் இழிவாகவும் தொடர்ந்து பேசி வரும் தந்தையும் மகனும் தங்கள் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள் என்பதை மறந்து பெண்களை அநாகரீகமாக பேசி வருவது தொடர் கதையாகி வருகிறது. இது போன்ற பேச்சுக்களை திமுகவினர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
மாற்றுக் கட்சி வேட்பாளர்களை எதிர்க்கத் திராணியின்றி அநாகரீக வார்த்தைகளை பேசி ஓட்டு கேட்பதுதான் @arivalayam - வின் 70 வருட பிரச்சார முறையா?
தரம் தாழ்ந்து பேசிப் பேசியே அழிவை நோக்கிச் செல்லும் திமுக எத்தனை பட்டாலும் திருந்திய பாடில்லை.
இத்தனை நாட்களாக திமுகவைச் சேர்ந்த சில நிர்வாகிகள் பெண்களை இழிவாகவும், ஆபாசமாகவும் பேசிய சம்பவங்கள் தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாகி வந்தன. அதற்கெல்லாம் தமிழக மக்கள் 2026 சட்டமன்றத் தேர்தலில் தக்க பதிலடி கொடுத்துவிட்டார்கள். ஆனால், தேர்தல் தோல்விக்குப் பிறகும் பெண்களை இழிவுபடுத்தும் அரசியல் கலாசாரம் தொடர்ந்து திமுகவை சேர்ந்த நபர்களால் அரங்கேறி வருகிறது. திமுக நிர்வாகிகளை தாண்டி, நானும் சளைச்சவன் இல்லை என்று எதிர்கட்சி தலைவர் அவர்கள் பெண்களை ஆபாசமாக பேச தொடங்கினார். தற்போது திமுக தலைவர்.
ஒரு பெண் வேட்பாளரை அவரது உருவத்தை வைத்து கேலி செய்வது என்ன மாதிரியான அரசியல் நாகரிகம்? அதுவும் முன்னாள் முதலமைச்சர் ஒருவர் இத்தகைய கருத்தை வெளியிடுவது அரசியல் நாகரிகத்தின் மீதான மிகப்பெரிய கேள்வியை எழுப்புகிறது. அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால், ஒரு பெண்ணின் தோற்றத்தை கேலி செய்வது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
மக்கள் அனைத்தையும் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள் மதிப்பிற்குரிய முன்னாள் எம்எல்ஏ அவர்களே!!
"யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு."
தேர்தல் பிரச்சாரமா?பெண்களை கேலி செய்யும் கேவலப் பிரச்சாரமா?
பெண்களை கேலி பேசும் டிஎன்ஏ
அது திமுகவின் கேடுகெட்ட டிஎன்ஏ!
நிலை மாறினால்
குணம் மாறுவான்
பொய் நீதியும் நேர்மையும் பேசுவான்
தினம் ஜாதியும் பேதமும்கூறுவான் !
பெண்களை இழிவாகப் பேசுவதையே வழக்கமாகக் கொண்ட
திமுக தலைவரே
மன்னிப்பு கேள்!
மன்னிப்பு கேள்!!
#ஸ்டாலினே_மன்னிப்பு_கேள்
தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் இன்று பரப்புரையில் ஈடுபட்ட திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான ஸ்டாலின்... நமது தமிழக வெற்றி கழக வேட்பாளர் அன்புச் சகோதரி திருமதி சத்தியபாமா அவர்களைப் பற்றி தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தியதோடு, உருவ கேலியும் செய்திருக்கிறார். இதை வன்மையாக கண்டிக்கிறோம்.
முன்னாள் முதலமைச்சர் எவ்வளவு தோல்விப் பதற்றத்தில் இருக்கிறார் என்பதையே இது காட்டுகிறது.
ஏற்கனவே இவரது மகன் உதயநிதி ஆபாச நிதியாக தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும் நிலையில்... அவர் ஏன் அப்படி பேசுகிறார் என்பதற்கான காரணத்தை இன்று ஸ்டாலின் உறுதிப்படுத்தி விட்டார்.
அப்பாவும் மகனும் பெண் சமுதாயத்தை எப்படி மதிக்கிறார்கள் என்பதற்கு இதுவே உதாரணம்.
This is DMK's DNA
தாராபுரம் மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்!
@TVKVijayHQ | @TVKPartyHQ | @TVKHQITWingOffl | @BussyAnand
#தமிழகவெற்றிக்கழகம் #TVK
உங்கள் வரவு நல்வரவாகட்டும் சஞ்சய்..!
Can't believe little Sanjay is a director now! 😊 Big day tomorrow. All the very best to @official_jsj.
Hearty wishes to @sundeepkishan, @LycaProductions and the cast & crew of #Sigma.
A true hero, a proud moment for India! 🇮🇳
Salute to Captain Smit Machchhar, a son of Gujarat, whose extraordinary courage and presence of mind, even while seriously injured, helped save 174 precious lives. Your bravery, selflessness and determination are truly inspiring. The entire nation is proud of you. Wishing you a speedy recovery. Jai Hind! 🇮🇳🙏
ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், தடகளம் பெண்கள் 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று, தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.
அவரது மகத்தான சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.75 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் அவர்கள் பெறும் மூன்றாவது பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது. தனது திறமை, கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் இந்த வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.
தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் அவர்களின் வெற்றி, தமிழ்நாட்டின் இளம் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குப் புதிய உத்வேகத்தை அளிக்கும். எதிர்காலத்திலும் அவர் மேலும் பல வெற்றிகளைப் பெற்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
#CMJosephVijay
#AsianGames2026
Watch this acceleration by Vithya Ramraj to overtake the Chinese athlete in the final leg!
- Helped India win its first Athletics Gold Medal at Asian Games 2026! 🥇
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்
22.06.2026 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தினை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் நாளை தொடங்கி வைக்கிறார்.
#CMJosephVijay
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
கடந்த வருடம்.
இதே நாள்.
அதாவது 2025 செப்டம்பர் 27.
என் வாழ்நாளில், நம் கரூர் சொந்தங்களின் வாழ்வில், நம் தமிழ்நாட்டு உறவுகளின் மனத்தில் ஆறாத ரணமாக, தீராத வலியாக, வேதனையான நிகழ்வு நடந்த நாள்.
சொல்ல முடியாத சோகத்தைச் சுமந்து நிற்கிறோம், நாமும் நம் கரூர் சொந்தங்களும், தமிழக வெற்றிக் கழகத்தின் சொந்தங்களும்.
நம் இதயத்தில் சுமந்த உறவுகளை இழந்து தவிக்கும் நமக்கு, ஆறுதலாகவும் ஆதரவாகவும் அரணாகவும் நாமே இருப்போம்.
நினைவில் வாழும் அனைத்து உறவுகளுக்கும் நம் இதய அஞ்சலி.
3RD GOLD MEDAL FOR INDIA AT ASIAN GAMES 2026. 🏅
Gold medal winners in Women's Kabbadi at the Asian Games.🥇
2010 - India. 🇮🇳
2014 - India. 🇮🇳
2018 - Iran. 🇮🇷
2022 - India. 🇮🇳
2026 - India. 🇮🇳
ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஸ்குவாஷ் (Squash) விளையாட்டின் கலப்பு இரட்டையர் (Mixed Doubles) பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ள ஸ்குவாஷ் வீரர்கள் ஜோஷ்னா சின்னப்பா மற்றும் வேலவன் செந்தில்குமார் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.
இவ்வீரர்களின் மகத்தான சாதனையைப் பாராட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக தலா ரூ. 30 இலட்சம் வழங்கப்படும். இவர்களது வெற்றி, தமிழ்நாட்டின் இளம் தலைமுறை விளையாட்டு வீரர்களுக்குப் புதிய உத்வேகத்தையும், நம்பிக்கையையும் அளிக்கும்.
இவர்களைப் போன்ற திறமைமிக்க அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் தமிழ்நாடு அரசு என்றும் உறுதுணையாக நிற்கும். இவர்கள் மேலும் பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துகள்!
#CMJosephVijay
#AsianGames2026