நடிகர் ஒருவர் 'அரசியலுக்கு வரவா' என அப்ளிகேசன் போட்டு, ' மக்கள் வரச்சொல்லிவிட்டார்கள்' என அவரே அறிக்கையும் கொடுத்துவிட்டார்.
இனி, ஒவ்வொரு சேனலும்,
'தன் கையாலே தன் விரல்களை உயர்த்தினார்'
'பறந்து வந்த துண்டு',
'கொஞ்சி மகிழ்ந்த மகான்'
'இவருக்கு பின்னால் இத்தனை உண்மைகளா'
'யாரும் அறியாத ரகசியம்'
'திடீரென வந்த போன்'
'இவரது சாதனை இத்தனையா'
என ரீல்ஸ் போட்டு அவரை சட்டசபைக்கு அனுப்பிவிடுவதில் குறியாக இருப்பார்கள்.
ஆரம்பத்தில் 'அம்மா செண்டிமெண்ட்'
அப்புறம் 'முருகன் செண்டிமெண்ட்'
அப்புறம் 'எளிமை செண்டிமெண்ட்'
என எம்.ஜி.ஆர் காலத்து ஆயுதங்களை வைத்து தாக்குவார்கள்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மக்களை தாக்கிய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க 'ஜஸ்டிஸ் ராஜேஸ்வரன்' கமிட்டிக்கு ஆதாரங்களையும், சாட்சிகளையும் கொடுத்துவிட்டு நீதிக்காய் 8 ஆண்டுகள் போராடுகிறோம். இது எந்த சேனலும் செய்தியாக்கியதில்லை. அந்த நடிகரும் அதில் பிரபலமானார், ஆனால் ஷமூக-விரோதிகள் எனச் சொல்லி பின்வாங்கிச் சென்றார். நீதிக்கும் வரவில்லை, வீதிக்கும் வரவில்லை.
ஆனால், கட்சிகளின் ஐ.டி -விங் கூலிப்படைகள் 'இத்தனை நாள் எங்கிருந்த' என அவதூறுகளை எங்களை நோக்கி குவிப்பார்கள். இந்த ஐடி கும்பல்கள் இதே கேள்வியை அந்த நடிகரை நோக்கி எழுப்பாது.
எத்தனையோ போராட்டங்களை நடத்தி, கைதாகி, சிறைப்பட்டு, வழக்கு வாங்கி, அலுவலகம் தாக்கப்பட்ட போதும் துணிந்து நின்ற இயக்குனர் இமையம் பாரதிராஜா என்றைக்கும் 'அரசியலுக்கு வரவா, உதவி செய்யவா' எனக்கேட்கவில்லை என்பதை மட்டும் நினைவில் வையுங்கள், 'என் இனிய தமிழ் மக்களே'!
@joe_milton https://t.co/sNZw0c8OrM
அதிகாரம் முக்கியமானது, தேவையானது.
ஆட்சியில் பங்கு
அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்று திருமாவளவன் கூறினார்.
அதை தர முடியாது னு திமுக கூறியது
இது சமூகநீதியா..?
~
எளிமையான தலைவர்கள் மட்டுமே தன் சார்ந்தவர்களை முன்னேற்ற பாதைக்கு வழிநடத்த முடியுமென்பதற்கு சிறந்த உதாரணம் திருமாதான்.
கல்வியின் வழியாகவும், நேர்மையான சமத்துவக் கொள்கையின் வழியாகவும் மக்களை நெறிப்படுத்தும் எந்த போராளியும் எப்போதும் மறைவதேயில்லை.
பிறந்தநாள் வாழ்த்துக்கள்! 💙
தோழர் @Dr_Ezhilan Naganathan .. எத்தனையோ முறை பல சாமானிய மக்களுக்கான, தோழர்களுக்கான, தோழர்களின் குடும்பங்களுக்கான மருத்துவ உதவிகளுக்காக நடு இரவில் கூட உங்களை அழைத்துள்ளேன். அத்தனை சமயங்களிலும் உடனடியாக மருத்துவ உதவிகளை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளீர்கள், காத்துள்ளீர்கள்..... உங்கள் பணி தொடரட்டும்...ஆயிரம் விளக்கு தொகுதியில் பல டாஸ்மாக் கடைகளை முடியது மட்டுமல்லாமல், அனகாபுத்தூர் போன்று இடிபட இருந்த ஏழைகள் குடியிருப்புகளை போராடி காத்தீர்கள்..அண்ணா மேம்பாலத்தின் கீழ் இருக்கும் அறிவிப்பு பலகைகளில் அறிஞர் அண்ணாவின் 'மாநில தன்னாட்சி 'குறித்தான வாசகங்களை தேடி எடுத்து வைத்துள்ளீர்கள்.. அனைத்திற்கும் நன்றி தோழர்.
தமிழ்நாட்டுல விவசாய உற்பத்தி குறைஞ்சிருக்குன்னு காட்ட உங்ககிட்டயோ சீமான்கிட்டயோ ஏதாவது புள்ளி விவரம் இருக்கா? 30 ஆண்டுகளுக்கு முன்னாடி இருந்ததை விட இப்ப விவசாய உற்பத்தி அதிகரிச்சிருக்கு. ஒரு கற்பனையான பிரச்சனையை வெச்சி சீமான் மக்களை ஏமாத்திட்டு இருக்காரு @CheranDirector
இன்று காலை புகழ்பெற்ற நாகூர் தர்காவில்.
ஒவ்வொரு ஆண்டும், பள்ளிக்காலத்தில் அம்மா அழைத்துச் செல்வார், அவரது சிறிய மணிப்பர்சிற்குள்ளாக ஏதேனும் வேண்டுதலை ஒளித்து வைத்திருப்பார் போல...
பழனி முருகனும், சமயபுரம் மாரியம்மனும், வேளாங்கன்னியும், நாகூர் தர்காவும் அவரது பட்டியலில் எப்போதும் இருக்கும். மாதந்தவறாது போடப்படும் மளிகைப் பட்டியலைப் போல, ஆன்மீக சுற்றுலா பட்டியலில் தவறாது இடம்பெறும் ஊர்கள் இவை.
நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிடும் மதிப்பிற்குரிய
பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களுக்கான பரப்புரைக்கு வந்திறங்கிய, இன்று காலையில் அம்மாவின் நினைவுகளோடு நாகூர் தர்காவில்... தமிழர்கள் சமயவேறுபாடு பாராமல் அனைவரையும் அரவணைத்த பண்பாட்டிற்குரியவர்கள்... இதை சிதைக்கப் பார்க்கும் சங்கிகளை அப்புறப்படுத்தும் கடமையை நம் பெற்றோர்கள் நமக்கு கொடுத்துள்ளார்கள் என்பதை நினைவுபடுத்த இப்புகைப்படம் எடுத்துக்கொண்டேன். இரண்டாண்டுகளுக்கு முன் என் மகளை அழைத்து வந்து, இச்செய்தியை அவளுக்கும் சொல்லி, இப்பாரம்பரியம் தொடரவேண்டுமென விருப்பம் தெரிவித்தேன்.
மதம் எதுவாகினும் நாம் என்றென்றும் 'தமிழர்கள்'.
சீமான் மட்டும் என்ன இஸ்ரோல விஞ்ஞானியா இருந்து வந்தாரா?நீங்களெல்லாம் நல்ல இயக்குனர்னு நினச்சா ஆகச்சிறந்த தற்குறியா இருக்கீங்களே!மறைந்த தலைவர்களை கேலியா பேசலியா சீமான்?பொட்டு அம்மான் என் மயிறுக்கு சமம்னு சொல்லல!நேத்து வயசுக்கு வந்த புள்ளைய காட்டுக்குள்ள தூக்கிட்டு போய் கதற கதற…இப்படி ஒரு கேவலமான தற்குறி பேச்சு உள்ள மனநிலை பாதிக்கப்பட்ட சீமானை நீங்கள் ஆதரித்தால் உங்களைவிட ஒரு கடைந்தெடுத்த முட்டாளை பார்க்க முடியாது.அடுத்தவன் எளிமையா வாழனும் சீமான் மட்டும் இசிஆர் சொகுசு பங்களால வாழனும்.அடுத்தவன் பனைமரம் ஏறனும் சீமான் வீட்டு பிள்ளை மட்டும் அமெரிக்கன் கான்வென்ட்ல 🤦♂️🤡@CheranDirector
கவின் ஆணவப்படுகொலை செய்த குற்றவாளிகளை கைது செய் எனும் முழக்கத்துடன் மே17 இயக்கத்தினரின் சாலைமறியலில், தன் மகள் காவலர்களால் இழுத்துச் செல்லப்படுகிறார். எந்த ஒரு தந்தைக்கும் இது வருத்தத்தை, கோபத்தை கொடுத்திருக்கும். தன் மகள் ஏன் போராட்டத்தில் இறங்கி அல்லல் படவேண்டுமென ஆதங்கம் வரும். ஆனால் சிவா திலீபன் அப்படியெல்லாம் கோபம் கொள்ளவில்லை. "மறியல் போராட்டத்திற்கு எத்தனை பேர் வந்திருந்தார்கள்?" என்கிறார். இருநூறுக்கும் சற்று குறைவாக வந்திருந்தார்கள். கால அவகாசம் குறைவு, வேலைநாள் அதனால் திரட்ட இயலாமல் போய்விட்டது என்ற காரணத்தை அவரால் ஏற்க இயலவில்லை. பெருந்திரளாய் தமிழர்கள் திரளாமல் தீர்வு எப்படி கிடைக்கும் என அங்கலாய்த்தார். அந்த சாலை மறியல் சிவா திலீபன் அன்பு மகளான கோகிலாவின் திருமண காலகட்டத்தில் நடந்த போராட்டம். அதில் மகள் காயம்பட்டதெல்லாம் அவருக்கு கவலையளிக்கவில்லை.
சாதியொழிப்பு போராட்ட களத்தில் முன்னனியில் தன்மகள் நிற்பதில் அவருக்கு பெருமை. தன் மகளுக்கு சாதி-மறுப்பு திருமணத்தை சடங்கு மறுப்பு சுயமரியாதை திருமணமாக செய்து, ஓராண்டு கூட முடியவில்லை.
தொடர்ச்சியாக நடந்த தூய்மைப்பணியாளர் போராட்டத்தில் அன்றாடம் மாலை முதல் இரவுவரை சிவா திலீபனின் இணையர் இசைமொழி பங்கெடுத்து நேரம் கழித்தே வீடுதிரும்புவார். மனைவி போராட்ட களம் சென்று வருவது அவருக்கு மனத்தடையை கொடுத்ததில்லை. எத்தனை பேர் ஆதரித்து வருகிறார்கள் என கேட்பார். பால-ஸ்*தீன ஆதரவு பேரணியே அவர் மிக மகிழ்வுடன் பங்கெடுத்த நிகழ்வு. ஆயிரக்கணக்கான தோழர்கள் பங்கெடுத்த பேரணியில் பெருமையுடன் நடந்து வரும் படங்களை காணலாம். மாஞ்சோலை, அனகாபுத்தூர் வீடு இடிப்பு என நடந்த போராட்டங்களில் போதுமான மக்கள் பங்கேற்பு இல்லை என்பது அவருக்கு சோர்வை கொடுத்தது. பாசிஸ்டுகளை எதிர்த்த போராட்டங்களில் பெருந்திரளாய் தோழர்கள் பங்கெடுப்பதில்லை என்பது அவரை துன்புறுத்தியது. இந்தி எதிர்ப்பு போராட்டம், ஆளுனர் எதிர்ப்பு போராட்டம், நீட் எதிர்ப்பு என எவையும் கூர்மையடையவில்லை என்பதை பேசி வந்திருந்தார்.
ரயில்வேயில் தமிழ் தொழிலாளர்களுக்கு வேலைகிடைப்பதில்லை என்பது குறித்து 2015ம் ஆண்டில் ஐ.சி.எப் அப்ரண்டிஷ் போராட்டத்திற்கு மே17 தோழர்களுடன் சிவா பங்கெடுத்துள்ளார். இரு ஆண்டுகளாக நடந்த போராட்டத்தில் கர்நாடகத்தை சேர்ந்த ஒரு தொழிலாளி ரயில்வே மேலாளர் அலுவலகத்தின் முன் தீக்குளித்து இறந்தார். அவரது உடல் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் வைக்கபப்ட்டு நடந்த போராட்டத்தில் மே17 பங்கெடுத்திருந்தது. இவையனைத்தையும் சிவா திலீபன் அறிந்தவர். இதேபோல ஆவடி தொழிற்சாலையில் தமிழர் வேலை பறிபோவது குறித்த போராடங்களில் அவர் பங்கெடுத்துள்ளார்.
பெருதிரளாய் தமிழர்கள் திரளாமல் போராட்டம் வெல்லாது என்பார். தமிழுக்காக தமிழன் திரளமாட்டானா என கவலைகொண்டார். சிவா திலீபன் இறுதி ஊர்வலத்தில் அவரது இணையர் சொன்ன வார்த்தைகள் இதை சுட்டிக்காட்டும், " நம் மொழிக்காககவாவது வர மாட்டீர்களா..." என கேட்டார். சிவா திலீபனின் மகள் கோகிலா, தன் தந்தை பாசிசத்தை வெல்வதற்காக, போலி தமிழ்த்தேசியவாதிகளை அம்பலப்படுத்த தன்னுயிர் ஈகம் செய்திருக்கிறார் என்றார்.
இபப்டியான ஒரு சிந்தனையாளனுக்கு, களப்போராளிக்கு, குடும்ப தலைவனுக்கு, தமிழ் மொழி நேயனுக்கு, மொழிப்போர் கண்ட பெருவீரனுக்கு நினைவேந்தல் நிகழ்வும், படத்திறப்பும் நடக்க இருக்கிறது.
இந்நிகழ்வில் பங்கெடுக்க வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உண்டு. ஒரு தன்னலமற்ற போராளிக்கு தமிழினம் மரியாதை செய்ய வேண்டிய நிகழ்வு. இந்நாளிலும் உங்களுக்கு தனிப்பட்ட பணிகளே முக்கியமென நீங்கள் நினைத்தால், உங்களை போன்றோரின் பங்கேற்பற்ற நிலையை எண்ணி வருந்தியே சிவா திலீபன் உயிர்விட துணிந்தார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒருவேளை பெருந்திரளாய் போராட்டங்களில் பங்கெடுத்திருப்பீர்களென்றால், சிவா திலீபன் நம்மோடு இன்று உரையாடி கொண்டிருப்பார். எத்தனையோ போராட்டங்கள், நிகழ்வுகள் நடத்திய சமயத்தில் அதுகுறித்து பதிவுகளையோ, பகிர்வையோ கூட செய்யாத பலர் சிவா திலீபன் மரணம் தேவையற்றது, இறந்து சாதிக்க இயலாதென என்றெல்லாம் எழுதி பார்க்க முடிந்தது, 'குடும்பம் உள்ளது, ஆகவே உயிர்விடாதீர்கள்' என பதிவு எழுதியவர்கள், இதே போல, போராட்ட நிகழ்வுகளையும் ஆதரித்து பதிவு செய்து, களத்தில் பங்கெடுத்திருந்தால் சிவா திலீபன் தன் குடும்பத்தோடு அன்றாட வாழ்வை தொடர்ந்திருப்பார். இதுவரை போராட்டங்கள், நிகழ்வுகளுக்கு முகம்கொடுக்காமல் அன்றாட வாழ்வில் மூழ்கி இருக்கும் நண்பர்களே, உங்களுக்காகவும் சேர்த்தே தனது வாழ்வை கொடுத்திருக்கிறார் சிவா திலீபன். அத்தகைய உன்னத மனிதனுக்கு மரியாதை செய்ய வாருங்கள்.
நாள் :29-03-2026 ஞாயிறு
மாலை 4:00
இடம்: முத்தமிழ்பேரவை, அடையாறு பாலம் அருகில், அடையாறு-ஆர்.ஏ.புரம்
இச்செய்தியை பகிர வேண்டுகிறோம்.