நேத்து நடந்த ஒரு சுவாரசியமான அனுபவம்…
சென்னை வர Erode ரயில்வே ஸ்டேஷன்ல சதாப்தி ட்ரெயினுக்கு ரிசர்வ் பண்ணி இருந்தேன். நடைமேடை படிக்கட்டில் மேலே ஏறின உடனே கருப்பு சிவப்பு வேஷ்டி அணிந்த ஒரு அண்ணன்.
அவரைப் பார்த்த உடனே பேசணும் போல தோன்றியது.
அரசு ஊழியர்களின் வாக்கு வங்கி என்பது தமிழ்நாடு தேர்தல் அரசியலில் எப்போதும் ஒரு தீர்மானிக்கும் சக்தியாகவே இருந்து வந்துள்ளது. குறிப்பாக, திமுகவிற்கு அது நீண்டகாலமாக ஒரு அசைக்க முடியாத பக்கபலமாகவே இருந்து வருகிறது.
வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், ராஜீவ் காந்தி மறைவுக்குப் பின் திமுக மிக மோசமான தோல்வியைச் சந்தித்த 1991 தேர்தலிலும், அக்கட்சி மிகக் குறைந்த வாக்கு சதவீதத்தையே பெற்றது. ஆனால், அன்று வானொலியில் வெளியான செய்தியில், "தபால் வாக்குகளில் அனைத்துத் தொகுதிகளிலும் திமுக முன்னணி" என்று குறிப்பிடப்பட்டது. அதாவது, அந்தப் பேரலையிலும் அரசு ஊழியர்களிடமிருந்து கிடைத்த வாக்கு சதவீதம் 80-க்கும் மேல் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், அதற்கடுத்த மோசமான தோல்வியான 2011 தேர்தலிலும், 80 சதவீதத்திற்கும் அதிகமான அரசு ஊழியர்கள் திமுகவிற்கே ஆதரவாக வாக்களித்தனர். ஆனால், கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இந்த ஆதரவு வெறும் 45 சதவீதமாகக் குறைந்திருந்தது திமுகவிற்கு விடப்பட்ட ஒரு மிகப்பெரிய எச்சரிக்கை மணியாகும். அரசு ஊழியர்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்பதை அந்தத் தரவு மிகத்தெளிவாக உணர்த்தியது.
அந்த Indicatorஐ வைத்து அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளைப் பரிசீலிப்பதற்குப் பதிலாக, அவர்கள் சமூக வலைதளங்களில் கேலி செய்யப்பட்டதும், "கலாய்க்கப்பட்டதும்" இந்த விரிசலை மேலும் அதிகப்படுத்தியது.
ஆட்சியின் இறுதிக்கட்டத்தில் சில முக்கிய கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்ட போதிலும், தற்போதைய தேர்தல் முடிவுகள் அவர்களின் மனமாற்றத்தைத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகின்றன.
அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் எப்போதும் திமுகவின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முன்கள வீரர்கள் (Frontline warriors). அதை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சரியாகப் புரிந்து வைத்திருந்ததால்தான், எப்போதும் அரசு ஊழியர்களுக்கு ஆதரவாகவே இருந்தார். அவர்களை ஒருபோதும் கைவிட்டதே இல்லை. கலைஞருக்கும் அரசு ஊழியருக்குமான அந்தப் பந்தம் மிக வலிமையானது.
கட்சியை எப்போதும் தாங்கிப் பிடிக்கும் அந்தத் தூண்களையே இன்று பகைத்துக் கொண்டிருக்கிறோம்!
ஒரு பாடலாசிரியருக்கு தன் வரிகளை ஒருவன் இன்ச் பை இன்ச் ரசித்து அதை தன்னிடமே விளக்கும் போது கிடைக்கிற சந்தோஷமே தனி...
அதுவும் இந்த பையன் விளக்கி சொல்ற விதமே நம்மை அந்த பாட்டை திரும்ப கேட்க வச்சுடும் ❤️❤️❤️
இன்று வீட்டில் நடந்த ஒரு சம்பவம்....
வீட்டில் அம்மாவை முழு நேரமும் பார்த்துக்கொள்வதற்காக Agency மூலம் care taker வைத்துள்ளோம். வழக்கமாக இருப்பவர் ஊருக்கு சென்றிருப்பதால் மாற்றாக ஒரு அம்மா வந்திருந்தார். மதிய சாப்பாட்டில் அவர் என்னிடம் வந்து "எனக்கு எந்த தட்டு என்று கேட்டார். நானோ நம் வீட்டில் பாகுபாடு கிடையாது. ஏதோ ஒரு தட்டில் சாப்பிட்டு விட்டு கழுவி வைத்து விடுங்கள்" என்று சொன்னேன்.
பிறகு மாலையில் டிவி பார்த்துக் கொண்டு இருக்கும் போது, நான் செய்தி சேனல் வைத்திருந்தேன். அந்த அம்மா திடீரென "சார் உங்க வீட்ல எல்லாரும் திமுக வா?" என கேட்டார்.நான் பார்த்துக் கொண்டிருந்ததோ News 18. நான் எதற்காக கேட்கிறீர்கள் என்று கேட்டேன்...
"இல்ல சார்... நிறைய வீட்ல தனி தட்டு வச்சிருப்பாங்க... நீங்க அப்படி வைக்கலையே... அந்த கட்சிக்காரங்க தான் இப்படி இருப்பாங்க.. அதான் கேட்டேன்" என்றார்...
மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன்....
எங்க அம்மா அவங்களுக்கு பதில் சொன்னாங்க... " நாங்க எப்பவுமே கலைஞர் கட்சி தான்"...
ஒருவித பெருமையோடு நகர்ந்தேன்🖤♥️🖤♥️
அகர முதல தொட்டு...
தாடிக்கிழவன் ப்ளட்டு...
அகர முதல தொட்டு...
அறிஞர் அண்ணா ப்ளட்டு...
அகர முதல தொட்டு...
தலைவர் கலைஞர் ப்ளட்டு...
@mkstalin@Udhaystalin@KanimozhiDMK
டிசம்பர் ஜனவரியில்... ஆனால் அது அதிர்ஷ்டத்தை பொறுத்தது
சில ஆண்டுகளுக்கு முன்பு சிம்லா சென்று இருந்தேன். 10 வருடங்களில் இல்லாத அளவுக்கு பனிப்பொழிவு. மூன்று நாட்கள் மலைகளுக்கு நடுவில் உள்ள ஒரு அறையில் தங்கி இருந்தேன்
சூடாக பன்னீர் பராட்டாவும் , கேரட் ஊறுகாயும் தேநீரும் காலை உணவாக கொடுப்பார்கள்.
மதியம் சோறும், பருப்பு குழம்பும் சிக்கன் அல்லது மட்டன் வருவல். இரவும் அருமையான உணவு கொடுப்பார்கள். இடையில் விருப்பப்பட்ட சூப்பும் வாங்கிக்கொள்ளலாம்.
இதமான சூட்டில் கால் வைக்க வெந்நீர் பக்கெட் கொடுப்பார்கள்.
ஜன்னல் வழியாக வெறும் வெள்ளை வெள்ளேர் என்று பனிப்பொழிவு மட்டுமே இருக்கும். பாரம் தாங்காமல் அவ்வப்போது மரங்கள் பனியை உதிர்க்கும். பெண்ணின் பின்கழுத்து ரோமம் போல அந்தப் பச்சை நிறம் மனதை கிளரச்செய்யும்.
சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து அந்த உலகில் சஞ்சரிப்பது சொல்ல முடியாத உணர்வு.
சில கிலோமீட்டர்களுக்கு முழங்கால் அளவுக்கு வெண்பனி படர்ந்து கிடக்கும் ஆள் நடமாட்டம் யாரும் இல்லாத அந்த பனிக்காட்டில் அப்படியே நடந்து செல்வேன். கொஞ்ச நேரத்தில் அந்த குளிர் காற்று காதலியின் மெல்லிய பற்கள் பதிந்தால் வலிப்பது போல காது மடல்கள் சிவக்க செய்து மெல் உணர்வை கொடுக்கும். அந்த நொடியில் மீண்டும் அறைக்கு திரும்பிவிடுவேன்.
காலணிகளை கழற்றிவிட்டு மீண்டும் வெண்ணீரில் கால் வைக்கும் போது உடலில் மின்சாரம் உருவாகி உச்சந்தலையில் புகையாய் வெளியேறும்.
எவ்வளவு போர்த்திக்கொண்டு தூங்கினாலும்
நடுநிசியில் போர்வைக்குள் வந்து பெயர் தெரியாத குளிர்ச்சி, அனுமதியை இல்லாமல் அந்தரங்கமாய் தொடும்.
எதிர்ப்பு எதுவும் சொல்லாமல் அதற்கு முழுமையாய் ஒப்புக்கொடுத்துவிட்டு தூங்கினால் விடிவது தெரியாது.
அடுத்ததடுத்த சில முறை போயிருக்கிறேன். அந்த உணர்வு மீண்டும் சிம்லாவில் கிடைக்கவில்லை. அதெல்லாம் ஒரு முறை மட்டுமே வாய்க்கும் அதிர்ஷ்டம்!
😊❄🌬🌨
மாடல் பள்ளின்னு ஒன்னு கட்டி விட்டால் அதுக்கேத்த மாதிரி ஆளுங்களை போடுங்கய்யா!! இருக்கிற வேலையில் ஏகப்பட்ட வேலையை தர்றாங்க!! பாதி ஆசிரியர்கள் அரசு மீது கடுங்கோபத்தில் உள்ளனர்!
ஆட்களை நியமிச்சா ஒழிய நீங்க எவ்ளோ சம்பளம் கொடுத்தாலும் அவனுகளுக்கு நம்ம அரசு மீது அதிருப்தி தான் வரும்!!
மிஷ்கின் படங்களில் வரும் செய்த ஒரு குற்றம், அதற்கான மனம் வருந்தும் இடம், செய்த தவறுக்கான மன்னிப்பு என பல படங்களில் அருமையாக இருக்கும். முக்கியமாக சவரக்கத்தி படத்தில் தனது மகள் திருமணம் செய்யும் மாற்றுத்திறனாளியை பெண்ணின் தாயார் சாபமிடுவது பின் நடக்கும் காட்சி....
@Anbil_Mahesh
அன்பில் மகேஷ் - ரங்கராஜ் இடையேயான வாட்ஸப் சகவாசம் பலருக்கும் ஒவ்வாமையைத் தந்திருக்கலாம் என்றாலும்
மாணவர்களின் 100/100 தேர்ச்சி பற்றி ஊடகத்தினருக்கு அவர் அறிவுறுத்திப் பாடம் எடுத்துப் பேசியது அந்த ஒவ்வாமையை மறக்கடித்தது என்பது உண்மை.
ஆனால் அவருடைய உண்மையான முகத்தை நீங்கள் அறிய வேண்டும்.
இது கற்பனை அல்ல.
இந்து நாளிதழில் இன்று வந்துள்ள ஓர் உண்மைக் கதை.
தஞ்சாவூர் மாவட்டத்தின் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஓர் ஊர் நடுவிக்காடு.
அங்கு PRIME என்கிற ஒரு CBSE பள்ளி.
இந்தக் கல்வி ஆண்டில் அங்கு பத்தாம் வகுப்பில்
19 மாணவர்கள் படித்தனர்.
வழக்கமாக அவர்களுக்கு மார்ச் தொடக்கத்திலேயே Public Exams தொடங்கிவிடும்.
ஆனால் பிப்ரவரி 2025 வரையிலும் கூட ஹால்டிக்கெட், எங்கு தேர்வு மையம் என்கிற எந்த விவரங்களையும் அந்தப் பள்ளி தரவில்லை.
மற்ற சி பி எஸ் இ பள்ளிகளுக்கெல்லாம்
இவைகள் வந்தபின்னும் ஏன் இந்தப் பள்ளிக்கு மட்டும் தாமதமாகிறது என விசாரித்தால் பேரதிர்ச்சி 😱
அந்தப் பள்ளி அந்த நொடி வரை CBSE உரிமம் பெறவில்லை.
இனி அந்த ஆண்டுக்கான தேர்வை
இந்தப் பிள்ளைகள் எழுத முடியாது.
பெற்றோர்கள் உடனடியாக கடந்த பிப்ரவரி 14, 2025 அன்று தஞ்சாவூர் ஆட்சியர் பிரியங்கா அவர்களைச் சந்தித்து இதுபற்றி முறையிட்டுள்ளனர்.
CBSE ன்னு வாயைத் தொன்னாந்துக்கிட்டு போறீங்கல்ல ? உங்களுக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும், இங்கிட்டு ஏன் வர்றீங்க ? அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் ?
கரூர்ல ஆடு மாடு மேச்சிக்கிட்டு ஒருத்தன் இருப்பான், அவன்கிட்ட போங்க என்று யாரும் அங்கு கேலி பேசவில்லை.
மாறாக ஆட்சியர்
உடனடியாக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களை போனில் தொடர்பு கொண்டு,
19 மாணவர்களின் கையறு நிலையைச் சொன்னார்.
பொதுத் தேர்வுகள் நடக்க ஆரம்பித்திருந்த அந்த பிசியானச் சூழலிலும்
கல்வி அதிகாரிகளிடம் கலந்து பேசி என்ன செய்யலாம் என்ன செய்யவேண்டும் என்று
சார்ந்தோருக்கு அவசர ஆணை பிறப்பித்து இருக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஷ்.
அதன்படி அந்த 19 மாணவர்களுக்கும்
(16 ஆண்கள் + 3 பெண்கள்)
பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 19/02/2025 அன்று அட்மிஷன் கொடுக்கப்பட்டது !
ஆட்சியரைச் சந்தித்தது 14/02/2025.
சரி. இப்ப தேர்வுத் தேதி 28/03/2025.
இருக்கும் நாட்கள் இங்கிட்டு 9 + அங்கிட்டு 27. ஆகமொத்தம் 36 நாட்கள்.
அதனால் என்ன ?
இவ்ளோவ் நாளிருக்குல்ல என்கிறீர்களா ?
குழந்தைகள் படித்தது CBSE.
தேர்வு எழுத இருப்பது ஸ்டேட் போர்டு வழியில்.
இங்கதான் நாம NEET பற்றிச் சிந்திக்கணும்.
இன்று நீட் எழுதுபவர்களுக்கு நீட் கோச்சிங் கிட்டிவிடுவதால்
ஸ்டேட் போர்ட் மாணவர்களும் சி பி எஸ் இ பாடங்களிலிருந்து கேட்கப்படும் கேள்விகளை சீரணித்துக் கொள்ள முடிகின்றது.
ஆனால் 2017 ல், வலிந்து அதை நம்மிடையே நுழைத்து, மாநில வழிக்கல்வி படித்து இருந்த மாணவர்களுக்கு CBSE பாடத்திட்டக் கேள்விகள் புரியாமல் ...
நீ எக்கேடாவது கெட்டுப் போ என்று அதைப்பற்றி சிறிதும் மதிக்காமல் அராஜகம் புரிந்து அனிதாவைக் கொன்றனர்.
ஆனால் நம் அரசு அப்படியானது அல்லவே ?
இருக்கும் 36 நாட்களுக்குள் அந்த 19 மாணவர்களுக்காக தொடர் சிறப்பு வகுப்புகளை எடுக்கப் பணித்து இருக்கின்றனர் !
முதலில் கொஞ்சம் திணறிய அந்த 19 மாணவர்களும் விரைவில் சுதாரித்து தேர்வுகளை திறம்பட எழுதியுள்ளனர்.
All Pass.
ஆமாம், அந்த 19 மாணவர்களும் SSLC தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்கின்றார்கள்.
அதில் ஒரு மாணவர் 422 மதிப்பெண்களும், இன்னொருவர் 405 மதிப்பெண்களும் எடுத்து இருக்கிறார்கள் !
நம்மிடையே அரசுப்பள்ளி, அரசுப்பள்ளி மாணவர்களைப் பற்றி தினமலர், தினத்தந்தி ஊடகங்களில் வருவதெல்லாம் வெகு புனைவுகள்.
நமக்கு எப்படி இவன்கள் போர்ச் செய்தி பற்றி ஒன்றுக்குப் பத்தாக உருட்டினான்களோ
அதேபோல மிகைப்படுத்தி உருட்டப்படுபவைகள்தான். ஆனால் கள நிலவரம் அப்படியே தலைகீழ்.
அதிலும் கல்வித்துறையில் பாரபட்சமின்றி ஸ்டாலின் அரசு காட்டும் அக்கறை மெய்சிலிர்க்க வைக்கிறது.
நாராயணன் திரிபாதி வைத்த அவதூறைக் கூட பொய் என்று இன்று அரசு நிருபித்துள்ளது !
இந்த 19 மாணவர்களின் ஒரு வருடப் படிப்பு வீணாகிப் போய்விடக்கூடாது என மெனக்கிட்ட ஆட்சியர் பிரியங்காவிற்கும்,
அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களுக்கும் நம் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவிப்போம்.
இவர்களுடன் சேர்ந்து துரிதமாக ஒத்துழைத்த கல்வித்துறை அதிகாரிகளுக்கும், பட்டுக்கோட்டை அரசு மாதிரி பள்ளி ஆசிரியர்களுக்கும் நன்றியும், வாழ்த்தும், அன்பும் உரித்தாகட்டும் !
இவர்கள் அனைவரையும் அரசு பாராட்டி கவுரவிக்கட்டும் !
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர்கள் அத்தனை பேரும் தமிழ் மொழியில் தான் தங்களது கையொப்பம் போடுவார்கள்
தமிழ்நாட்டில் இருந்து தனக்கு கடிதம் எழுதுபவர்கள் ஆங்கிலத்தில் கையொப்பம் போடுகிறார்கள் என பிரதமர் மோடி விமர்சித்து இருந்தார்
கீழே இருப்பது அண்ணாமலை அவர்களின் கையொப்பம் ஆங்கிலத்தில்
💥 #Holi பண்டிகையில் கலர் பொடி தூவினால் சகித்து கொள்ளுங்கள்
💥 வெள்ளிக்கிழமை பள்ளிவாசலுக்கு போகாதே
💥 மசூதிகளை திரை போட்டு மறை என சொல்பவர்கள்
💥ரம்ஜான் கொண்டத்தில் அசைவம் சாப்பிடாத ஒருவருக்கு அசைவை உணவை திணித்தால் சகித்து கொள்வார்களா?
@aloor_ShaNavas MLA தரமான கேள்வி 🔥🔥