முதல்வர் விஜய்யை விமர்சித்து கடந்த ஆண்டு ஆகஸ்டில் இட்டப் பதிவுக்காக நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் திண்டுக்கல் ஹுசைன் கைது
#DinakaranNews | #TVKVijay | #NTK
கடம்பூர் பஸ்நிலையத்தையொட்டி செயல்படும் டாஸ்மாக் கடை குறித்து நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர் செல்பி வீடியோ எடுத்து, மது பிரியர்கள் சார்பில் முதல்வருக்கும் சட்டமன்ற உறுப்பினருக்கும் பாராட்டு விழா நடத்த உள்ளதாக பகிர்வு
#Tasmac | #Erode | #CMVijay
இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கு #புலிக்கொடியுடன் இறுதி மரியாதை!
#ஈழத்தமிழர்களை இனப்படுகொலையில் இருந்து காப்பாற்றக்கோரி இயக்குநர் #பாரதிராஜா மத்திய அரசால் தனக்கு வழங்கப்பட்ட #பத்மசிறி விருதினை தூக்கி எறிந்தமை குறிப்பிடத்தக்கது.
வீரவணக்கம்.! வீரவணக்கம்.!!
குருவுக்கு முத்தம்..!
தன் குருநாதரான இயக்குநர் பாரதிராஜா கன்னத்தில் முத்தம் கொடுத்து அஞ்சலி செலுத்திய நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
#bharathiraja#ripbharathiraja#seeman
ஒப்பற்ற தன் திரையோவியங்களால் திரையரங்குகளின் வெள்ளை திரைகளில் விழிகளில் என்றும் உலவக்கூடிய காவியங்களை, காலதேச வரையறைகளை எல்லாம் தாண்டி எக்காலமும் வாழக்கூடிய ஆவணங்களாக படைத்தளித்த தமிழ் மண்ணின் மகத்தான கலைஞன்! பதினாறு வயதினிலே, மண் வாசனை, கிழக்கே போகும் ரயில், கருத்தம்மா, அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை, வேதம் புதிது, கிழக்குச் சீமையிலே உள்ளிட்ட எண்ணற்ற மண் மணம் மாறாத கலைப்படைப்புகளால் தமிழர் வாழ்வை, தமிழர் நிலத்தை, தமிழர் பண்பாட்டு விழுமியங்களை கவிதையாகப் படம்பிடித்த தமிழினத்தின் ஈடு இணையற்ற பெருமை, என்னுயிர் அப்பா இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
திரைக்கலையின் ஒவ்வொரு நுணுக்கங்களையும் எனக்கு கற்பித்த பேராசான்; பெற்ற மகனைப்போல என் மீது பெரும் பாசம் காட்டிய அப்பா பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக திரைக்கலை பயின்ற நாட்கள் ஒவ்வொன்றும் என் வாழ்வின் பொன்னாட்களாகும். பெரும்புகழ் பெற்ற ஏராளமான திரைக்கலைஞர்களை தமிழ்த்திரைக்கு தந்து வாழ்வளித்த மகாகலைஞனின் மறைவு கலைத்துறைக்கு ஏற்பட்ட ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
திரைத்துறை மட்டுமின்றி என்னுடைய அரசியல் பயணம் வெற்றியடையவும் நாம் தமிழர் கட்சியின் மேடையேறி வாழ்த்திய பெருந்தகையின் மறைவு தனிப்பட்ட முறையில் என்னுள்ளத்தை மிகவும் பாதித்துள்ளது. இப்பெருந்துயரிலிருந்து மீள முடியாமல், என்னை நானே தேற்றிக்கொள்ள முடியாமல் தவிக்கின்றேன்!
அப்பா பாரதிராஜாவை இழந்து பெருந்துயருற்றுள்ள குடும்பத்தினருக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும், உலகெங்கும் பரவிவாழும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரினைப் பகிர்ந்துகொள்கிறேன்.
‘இயக்குநர் இமயம்’ அப்பா பாரதிராஜா அவர்களுக்கு என்னுடைய புகழ் வணக்கம்!
தம்பி மாரிதாஸ் மீதான தவெக அரசின் கைது நடவடிக்கை அப்பட்டமான அரசியல் பழிவாங்கல்! அரசுக்கு எதிராகக் கருத்துக் கூறுவோரை அச்சுறுத்தும் பாசிசப்போக்கு!
@CMOTamilnadu@TVKVijayHQ
ஊடகவியலாளரும், அரசியல் விமர்சகருமான தம்பி மாரிதாஸ் அவர்களை தமிழ்நாடு காவல்துறை கைது செய்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. தவெக அரசின் நிர்வாகச் சீர்கேடுகளைத் தொடர்ச்சியாகத் தோலுரித்து வரும் மாரிதாசைக் கைதுசெய்திருப்பது அதிகாரத் திமிரின் உச்சமாகும்.
தம்பி மாரிதாசின் கருத்துகள் அவதூறானவை எனக் கருதினால் சட்டப்படியாக வழக்குத் தொடுக்கலாம்; மாறாக, எவ்வித விசாரணையும் இன்றி உடனடி கைது நடவடிக்கை என்பது சனநாயக விரோதமாகும். பட்டப்பகலில் படுகொலை செய்வோர், பாலியல் வன்கொடுமை செய்வோர், போதைப்பொருட்கள் விற்பனை செய்கின்ற கொடுங்குற்றவாளிகள் மீதெல்லாம் பாயாத அதிரடி கைது நடவடிக்கைகள், அரசை விமர்சிப்பவர்கள் மீது மட்டும் பாய்கிறது என்றால் இந்த அரசும் அதிகாரமும் யாருக்கானது? இதுதான் மக்கள் வேண்டிய மாற்றமா? ஆளும் தவெகவைச் சேர்ந்தவர்கள் மாற்றுக்கட்சியினரையும், அரசை விமர்சிப்போரையும் தனிநபர் தாக்குதல் தொடுத்து, இணையவெளியில் அவதூறுகளையும், ஆபாசத்தையும் தொடர்ச்சியாகக் கட்டவிழ்த்துவிடும் நிலையில், அவர்கள் மீதெல்லாம் பாயாத சட்டம் தம்பி மாரிதாஸ் மீது பாய்கிறதென்றால், இது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் போக்காகும். தவெகவை மற்றவர்கள் விமர்சிப்பதை கவனிக்கும் காவல்துறை, தவெகவினர் மற்றவர்களை விமர்சிப்பதை கண்டுகொள்ளாதது ஏன்?
திருச்சியில் பேசிய முதல்வர் விஜய், ‘என்னை விமர்சிப்பவர்கள் நிறுத்திவிட வேண்டாம், தொடர்ந்து விமர்சியுங்கள்’ என்று மேடையில் வீரவசனம் பேசிவிட்டு, இப்போது அற்ப விமர்சனத்திற்கு அதிரடி கைது நடவடிக்கை எடுப்பதற்கு பெயரென்ன? முந்தைய திமுக அரசு செய்த கருத்துரிமையின் கழுத்தை நெரிக்கும் அதே கொடுஞ்செயலை தவெக அரசும் தொடர்வதற்கு பெயர்தான் தூய சக்தியா? வெட்கக்கேடு! ஆளும் அரசுக்கு எதிராகக் கருத்துக் கூறுவோரை அச்சுறுத்த முனையும் இத்தகைய மிரட்டல்கள் அப்பட்டமான பாசிசப்போக்காகும். பந்து எப்போதுமே ஒருவரிடம் மட்டுமே இருந்துவிடுவதில்லை. இன்று உங்கள் கைகளில் இருக்கும் பந்து நாளை மற்றவர்கள் கைகளுக்கும் இடம்மாறும்; பார்த்து விளையாடுங்கள்.
ஆகவே, தவெக அரசு பழிவாங்கும் போக்கோடு நடந்துகொள்ளாமல் சனநாயகத் தன்மையோடு இயங்க வேண்டுமெனவும், தம்பி மாரிதாசை உடனடியாக விடுவிக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
#ReleaseMaridhas
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
அன்பிற்கினிய முதல்வர் அவர்களுக்கு...எம் மண்ணின் மைந்தனாக தாங்கள் முதல்வராக பதவியேற்றிருப்பதில் மிக்க மகிழ்ச்சி.
தமிழ் சினிமாவை தனது கைக்குள் மட்டுமே வைத்துக்கொள்ளும் நிகழ்வுகள் நடந்தேறியது. செண்பகமூர்த்தி
போன்ற நபரால் பாதிக்கப்பட்டோர் பலர். அதில் பொருளாதார ரீதியாக பாதிப்புக்குள்ளாகியவர்களில் நானும் ஒருவன்.
மோனோபாலியை உருவாக்கியவர். அம்பதாயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை சிதைத்தவர். சினிமாவில் தாங்கள் மட்டுமே என போலி பிம்பத்தை உருவாக்கி வாழ்ந்துகொண்டிருப்பவர். மாண்புமிகு முதல்வர் விஜய் அவர்கள் வந்த பிறகாவது காலங்கள் மாறும்.. காட்சிகள் மாறும் என நினைத்தால்... இப்படியொரு புகைப்படம். பாதிப்படைந்தோரின் நிலையும் மனநிலையும் கொஞ்ச நஞ்சமல்ல. வார்த்தைகளால் விவரிக்க இயலாது.
திரைத்துறை இவரைப் போன்றவர்களால் மட்டுமே இயங்குவதாய் பிம்பம் அமைத்து மற்றவர்களை இழப்பிற்குள்ளாக்குவார்கள். எத்தனையோ தயாரிப்பாளர்கள் அவதியுற்றிருக்கிறார்கள். அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவரது கட்சிக்காரரான நடிகர் இயக்குனர் திரு போஸ் வெங்கட் தனது பேட்டியில் வெளிப்படையாக செண்பகமூர்த்தியின் மோனோபாலி பற்றி பேசியிருப்பார். மனதுவந்து கேட்டுக்கொள்கிறேன் இவர்களைப் போன்றவர்களை சரியாக பராமரிக்காமல் போனால் தமிழ் சினிமாவில் பலர் காணாமல் போய்விடுவார்கள். அது தவிர்க்க #செண்பகமூர்த்தி போன்றவர்களை இந்த அரசு தவிர்ப்பது நல்லது. பாதிக்கப்பட்ட ஒருவனாகப் பதிகிறேன். தமிழ் சினிமாவிற்கு ஒரு சுதந்திரக்காற்றை உயிர்மூச்சை தருவீர்கள் என நம்புகிறேன். பாதிக்கப்பட்டவன் என்ற முறையில் என் ஆதங்கத்தைப் பதிவு செய்கிறேன். இது தொடர்கதையாகக் கூடாது என்பதையும் தங்கள் கவனத்திற்கு கொணர்கிறேன். தாங்கள் தலைமையேற்றிருக்கும் அரசும்.. அமைச்சரவையும் இத்தகைய சிண்டிகேட் தொழில்முறைகளைத் தடுக்கும் என நம்புகிறேன். மாற்றங்கள் என்பதே நம்பிக்கைதான். நிகழட்டும். திரையுலகம் மீளட்டும்.@CMOTamilnadu@TVKVijayHQ@imrajmohan
Seeman anna : 1 hr ppt presentation on how he will handle the waste management.
Trichy TVK MLA : 7 லட்சம் மெட்ரிக் டன் குப்பைய தூக்கி குழில கொட்டிட்ட problem solved.
Dear Tamil Nadu journalists, there is no rule in this world that says we should not criticize the newly elected government for the first six months. I keep seeing journalists repeating this nonsense everywhere, again and again.
It doesn’t matter if the government is new or old, just do your job. Don’t waste your time worrying about imaginary rules. Every time we see injustice and poor governance, it is our duty to talk about it, and staying silent is wrong. Becasue its people who are getting affected in the end.
And finally, if you still wish to protect the government for some reason, I would advise you to find a better excuse.
எதை விதைத்ததோ அதையே அறுவடை செய்கிறது இன்றைய அரசு.
திமுக ஆட்சியிலும் இதே போன்ற பல்வேறு சம்பவங்கள் நடந்த போது ஒரு ஊடகமாக அதை தொடர்ந்து எடுத்து பலரும் பேசினார்கள். அப்போது அதை வரவேற்றது தவெக. இப்போது அதையே ஒரு ஊடகமாக தவெக ஆட்சியில் நடப்பதையும் பேசுகிறார்கள். எதிர்க்கட்சியின் குரலாகத்தான் ஒரு ஊடகம் ஒலிக்க முடியும் என்பது யதார்த்தமான உண்மை. அதை தவெக தொண்டர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறோம். எனவே, இதில் திட்டமிட்ட வன்மமோ பொய் உரைகளோ கிடையாது.
எல்லாவற்றுக்கும் மூலக் காரணமாக இருக்கும் டாஸ்மாக் கடைகளை பற்றி அமைச்சரிடம் கேட்கும் போது டாஸ்மாக் கடைகளை உடனே மூடிவிட்டால் கள்ளச்சாராயம் பெருகும் மற்ற போதை பொருட்களின் கலாச்சாரம் பெருகும் என்று அதே பழைய பாட்டை பாடி கொண்டு இருக்கிறார். இதற்கு தான் அமைச்சராக மாறினாரா ? படிப்படியாக மதுக்கடைகளை மூடுவோம்; மற்ற போதை கலாச்சாரத்தையும் ஒழிப்போம் என்றுதானே அவர் பேசியிருக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளை மூடினால் கள்ளச்சாராயமும் கஞ்சா போதையும் பெருகும் என்றால், நிர்வாக திறனும் அவற்றை தடுக்கும் நேர்த்தியும் இல்லாத அரசுதான் முதல்வர் விஜய் தலைமையிலான இந்த அரசு என்று சொல்ல வருகிறாரா?