மாண்புமிகு தமிழக முதல்வர், கழக தலைவர் அண்ணன் தளபதி திரு @mkstalin அவர்கள் ஆணைக்கிணங்க,
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளர் சகோதரர் திரு @udhay_stalin அவர்களின் ஆலோசனைப்படி,
இன்று (10/01/2025), மாலை 6:30 மணி அளவில்,
தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் தினம் 2026
ஜனவரி 11 மற்றும் ஜனவரி 12 ஆகிய தேதிகளில் சிறப்பாக நடைபெற உள்ள நிலையில்,
விழா நடைபெறும் அரங்குகள் மற்றும் ஏற்பாடுகளை ஆய்வு செய்து
அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினோம்.
இந்த கூட்டத்தில்மாண்புமிகு தமிழக முதல்வர், கழக தலைவர் அண்ணன் தளபதி திரு @mkstalin அவர்கள் ஆணைக்கிணங்க,
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளர் சகோதரர் திரு @Udhaystalin அவர்களின் ஆலோசனைப்படி,
இன்று (10/01/2025), மாலை 6:30 மணி அளவில்,
தமிழ்நாடு அரசின் ஜனவரி 11 மற்றும் 12 அயலகத் தமிழர் தினம் 2026
ஜனவரி 11 மற்றும் ஜனவரி 12 ஆகிய தேதிகளில் சிறப்பாக நடைபெற உள்ள நிலையில்,
விழா நடைபெறும் அரங்குகள் மற்றும் ஏற்பாடுகளை ஆய்வு செய்து
அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினோம்.
#DMK #MKStalin #UdhayanidhiStalin #TamilDiaspora #NRTDay2026
மாண்புமிகு தமிழக முதல்வர், கழக தலைவர் அண்ணன் தளபதி திரு @mkstalin அவர்கள் ஆணைக்கிணங்க,
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளர் சகோதரர் திரு @Udhaystalin அவர்கள்,
இன்று (11/01/2026) காலை 10.00 மணி அளவில்,
அயலகத்தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஏற்பாட்டில் நடைபெற்ற
அயலகத் தமிழர் தினம் 2026 நிகழ்ச்சிகளை
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று தொடங்கி வைத்தார்.
மேலும், வெளிநாடுகளில் செயல்பட்டு வரும்
தமிழ்ச்சங்கங்கள் உள்ளிட்டவற்றின் அரங்குகளை திறந்து வைத்தார்.
தொடர்ந்து உலகெங்கும் பரவி வாழும் தமிழர்களின் நலனுக்காக
நம் திராவிட மாடல் அரசு தீட்டியுள்ள திட்டங்களை எடுத்துரைத்து உரை ஆற்றினார்கள்,
உடன் மாண்புமிகு அமைச்சர்கள்
அண்ணன் திரு துரைமுருகன்,
திரு தா.மோ. அன்பரசன்
பங்கேற்றனர்.
#DMK #MKStalin #UdhayanidhiStalin #TamilDiaspora #திராவிட_மாடல்
உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் பங்களிப்பை, சாதனைகளைக் கொண்டாடும் வகையில் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற 'அயலகத் தமிழர் தினம் 2026' விழாவில் கலந்து கொண்டு புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்ந்தோம்.
பல நாடுகளில் பரவி வாழும் தமிழர் அனைவரையும் உணர்வால் பிணைக்கும் தமிழ் மொழியின் சிறப்பையும், தமிழ்ப் பண்பாடு, வரலாற்றையும் இளம் தலைமுறைக்கு எடுத்துச் சொல்லி வளர்ப்பதன் அவசியத்தையும் குறிப்பிட்டு உரையாற்றினோம்.
வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் நலன்களைப் பாதுகாத்து அரவணைக்கும் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையிலான #திராவிட_மாடல் அரசின் முன்னெடுப்புகள் மென்மேலும் தொடரும்!
தமிழால் இணைவோம், தரணியில் உயர்வோம்!
@katpadidmk@thamoanbarasan@Avadi_Nasar
நம்முடைய பிறந்த நாளை முன்னிட்டு #ChepaukTriplicane தொகுதி, இராயப்பேட்டை டி.டி.கே சாலை அருகே உள்ள சென்னை மாநகராட்சியின் நகர்ப்புற வீடற்றோர் காப்பகத்தில் வசிக்கும் மூத்த குடிமக்களுடன் கேக் வெட்டி கொண்டாடினோம். அவர்களுக்கு புத்தாடைகள் மற்றும் உலர் பழங்களை வழங்கி மகிழ்ந்தோம். அவர்களின் அன்பிலும், வாழ்த்திலும் நெகிழ்ந்தோம். @nchitrarasu
கழக இளைஞர் அணிச் செயலாளர்- மாண்புமிகு துணை முதலமைச்சர் @udhaystalin அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் @mp_saminathan அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
#HBDUdhay
தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆ. மணி அவர்களது இல்லத் திருமண விழாவில் பங்கேற்று, மணமக்கள் பிரகதீஸ்வரன் - மது பிரதிக்ஷா இணையரை வாழ்த்தினேன்!
பின்னர், தருமபுரி மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ள #SIPCOT-ஐ டிசம்பர் மாதத்தில் திறக்கும்படி விரைந்து பணிகளை முடித்திட அறிவுறுத்தியதோடு, தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளையும் ஆய்வுசெய்தேன்.
'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தின்போது தமிழ்நாடு முழுவதும் சுதந்திரப் போராட்ட உணர்வைத் தூண்டும் நோக்கில் ராணிப்பேட்டையில் கர்மவீரர் காமராஜர் அவர்கள் மறைந்திருந்து செயலாற்றிய வீட்டை நம் திராவிட மாடல் அரசு சீரமைத்துள்ள நிலையில், வரலாற்று சிறப்புமிக்க அந்த இல்லத்தை திறந்து வைத்தார் மாண்புமிகு துணை முதலமைச்சர் @Udhaystalin அவர்கள்!
#Kamaraj
வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த கழக உடன்பிறப்புகளைச் சந்தித்து உரையாடினோம்.
பாசிசத்தின் சூழ்ச்சிவலைகளை அறுத்தெறிந்து, 2026 தேர்தலில் கழக அணி வெற்றி வாகை சூடுவதே - மாநில உரிமைகளைக் காப்பற்ற நமக்கு முன் உள்ள வழி என்று உரையாற்றினோம்.
பாசிஸ்ட்டுகளின் சதிகளை முறியடிப்போம் - புது சரித்திரம் படைப்போம்.
@katpadidmk@Jagathofficial@APNandakumarMLA@dmkathiranand@AbdulmalikDmk@pssrinivasandmk
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த கழக நிர்வாகிகளுடன் இன்று கலந்துரையாடினோம்.
அரசியல் களத்தில் அளவில்லா சோதனைகள் வந்தபோதும், கழகத்தின் நாடியாய், நரம்பாய் திகழ்ந்த கொள்கை வீரர்களை கொண்ட மாவட்டம் ராணிப்பேட்டை என்பதை நினைவூட்டிப் பேசினோம்.
2026 தேர்தலில் பாசிசத்திடம் இருந்து தமிழ்நாட்டை பாதுகாக்க கழக உடன்பிறப்புகள் ஆயத்தமாகிவிட்டதை அவர்களின் உற்சாகம் நமக்கு உணர்த்தியது.
பாசிசமும் அடிமைக் கூட்டமும் வீழும், உரிமைப் போரில் தமிழ்நாடு என்றும் வெல்லும்!
@R_Gandhi_MLA@Jagathofficial@EaswarappanMLA@AbdulmalikDmk
நம் கழக அரசின் சாதனைகளால் ஈர்க்கப்பட்டுள்ள இளைஞர்களின் எழுச்சியை கழகப் பணிக்கு பயன்படுத்தும் வகையில் கழக இளைஞர் அணிக்கு கழகத்தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களது உத்தரவின் பேரில், ஊராட்சிக் கிளைகள், நகர-பகுதி-பேரூர்களில் உள்ள வார்டுகள், மற்றும் அனைத்து பாகங்கள் வரை நிர்வாகிகளை நியமித்து வருகிறோம்.
அந்தவகையில், கோவை வடக்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கிளை, வார்டு, பாகங்களில் அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
2026 சட்டமன்றத் தேர்தலில் கழகத்தின் செயல் வீரர்களாக விளங்கப்போகும் @dmk_youthwing-ன் புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் என் அன்பையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
#கழக_இளைஞர்_அணி @arivalayam@Ravi_dmk69@keprakashdmk@DMKYWHAKKEEM
கடந்த சில நாட்களுக்கு முன்பு மழைப் பொழிவின் போது வெள்ளத் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னையின் பலப் பகுதிகளில் நாம் ஆய்வுகளை மேற்கொண்டு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கினோம்.
அதனையொட்டி நிறைவேற்றப்பட்டுள்ள பணிகளின் தற்போதைய நிலவரம் குறித்து இன்று நேரில் ஆய்வு செய்து வருகிறோம்.
காரப்பாக்கம் சென்னை மெட்ரோ ரயில் பாலப் பகுதியில் உள்ள ஒக்கியம் மடுவில் மழைநீர் தடையின்றி சீராக வெளியேறும் வகையில் செய்யப்பட்டுள்ள பணிகளைப் பார்வையிட்டு, அதிகாரிகளிடம் விவரங்களைக் கேட்டறிந்தோம்.
சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
ராஜீவ் காந்தி நெடுஞ்சாலை அருகே ஒக்கியம் மடுவின் வலது கரை சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்தோம்.
பருவமழை காலம் முழுவதும் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது.
கடந்த மழைப் பொழிவின் போது, நீர் நிலைகள், தாழ்வான பகுதிகள், வடிகால்கள் என பல்வேறு இடங்களில் முன்னெச்சரிக்கைப் பணிகளை ஆய்வு செய்தோம்.
அந்தப் பணிகளை follow up செய்யும் வகையில், ராஜீவ் காந்தி நெடுஞ்சாலையின் மேல் பகுதியில் ஒக்கியம் கரையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளையும், நீர் வழித்தடத்தின் கொள்ளளவு அதிகரிக்கப்பட்டுள்ளதையும் இன்று பார்வையிட்டோம்.
அடுத்தடுத்த மழைப் பொழிவுகளை எதிர்கொண்டு சமாளிக்கும் வகையில் பணிகளைத் திட்டமிட்டு - பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து ஆற்றி வருகிறோம்.
தென் சென்னை பகுதியில் வெள்ளம் ஏற்படாமல் இருப்பதற்காக நம்முடைய #திராவிட_மாடல் அரசு மேற்கொண்ட பல்வேறு பணிகளை இன்று ஆய்வு செய்தோம்.
கடந்த மாதம் 20-ஆம் தேதி பெய்த மழையின் போது, நாம் ஆய்வு செய்த ஒவ்வொரு பகுதிக்கும் சென்று, அங்கு நடைபெறும் பணிகளின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தோம்.
அதன் ஒரு பகுதியாக, ராஜீவ் காந்தி சாலையிலிருந்து பிரியும் ஒக்கியம் மடுவின் முகத்துவார பகுதியில் தூர்வாரி மேம்படுத்தப்பட்டுள்ள பணியையும், அங்குள்ள மேம்பாலத்தின் கீழ் நடைபெற்றுள்ள Vent Clearance பணிகளையும் ஆய்வு செய்தோம்.