C. ஜோசப் விஜய் எனும் நான்...
உளமாற உறுதி கூறுகிறேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள்
சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டார்.
#CMJosephVijay
Congratulations to #TeamIndia on winning the most spectacular maiden ICC Women's Cricket World Cup.
A true historic day for the whole nation.
#WomensWorldCup2025#TeamIndia
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
கற்பனைக்கும் எட்டாத வகையில், கரூரில் நேற்று நிகழ்ந்ததை நினைத்து, இதயமும் மனதும் மிகமிகக் கனத்துப் போயிருக்கும் சூழல். நம் உறவுகளை இழந்து தவிக்கும் பெருந்துயர்மிகு மனநிலையில், என் மனம் படுகிற வேதனையை எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை. கண்களும் மனசும் கலங்கித் தவிக்கிறேன்.
நான் சந்தித்த உங்கள் எல்லோருடைய முகங்களும் என் மனதில் வந்து போகின்றன. பாசமும் நேசமும் காட்டும் என் உறவுகளை நினைக்க நினைக்க, அது என் இதயத்தை மேலும் மேலும் அதன் இடத்திலிருந்தே நழுவச் செய்கிறது.
என் சொந்தங்களே… நம் உயிரனைய உறவுகளை இழந்து தவிக்கும் உங்களுக்கு, சொல்லொணா வேதனையுடன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிற அதே வேளையில், இப்பெரும் சோகத்தை உங்கள் மனதுக்கு நெருக்கமாக நின்று பகிர்ந்துகொள்கிறேன்.
நமக்கு ஈடு செய்யவே இயலாத இழப்புதான். யார் ஆறுதல் சொன்னாலும் நம் உறவுகளின் இழப்பைத் தாங்கவே இயலாதுதான். இருந்தும், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, உறவினை இழந்து தவிக்கும் நம் சொந்தங்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா 20 லட்ச ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்குத் தலா 2 லட்ச ரூபாயும் அளிக்க எண்ணுகிறேன். இழப்பிற்கு முன்னால் இது ஒரு பெரும் தொகையன்றுதான். இருந்தும், இந்த நேரத்தில், என்னுடைய உறவுகளான உங்களுடன் மனம்பற்றி நிற்க வேண்டியது உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவனாக என் கடமை.
அதேபோல, காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அனைத்து உறவுகளும் மிக விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். சிகிச்சையில் இருக்கும் நம் உறவுகள் அனைவருக்கும் அனைத்து உதவிகளையும் நம் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாகச் செய்யும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இறைவன் அருளால், அனைத்தில் இருந்தும் நாம் மீண்டு வர முயற்சிப்போம்.
“வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்” எனும் நமது மக்கள் சந்திப்புப் பயணம், தித்திப்புடன் திருச்சியில் நேற்று தொடங்கியது. தொடர்ந்து நம் மக்கள் சந்திப்பானது அரியலூர், குன்னம் வரை நீண்டது. அனைத்து இடங்களிலும் மக்களின் தன்னெழுச்சியான பேரன்பும் பேராதரவும் மனம் நெகிழச் செய்தது. உங்கள் அனைவருக்கும் கோடானு கோடி நன்றி.
இத்துணை உணர்வு மிக்க மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் சார்ந்த பல்வேறு பணிகளை மேற்கொண்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான மாவட்டப் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினை உரித்தாக்குகின்றேன்.
வழிநெடுக மிக நீண்ட தூரம் கூடியிருந்த மக்கள் திரளைக் கடந்து செல்லவே இயலாத நிலையால், நேற்று நள்ளிரவு கடந்தும் பெரம்பலூரில் நம்மைச் சந்திக்கக் கூடி இருந்த பல்லாயிரக்கணக்கான நம் உறவுகளைக் காண இயலாத ஒரு சூழல் ஏற்பட்டது. எனவே அனைவரது நலன் கருதி, மிகுந்த மன வருத்தத்துடன், மீண்டும் இன்னொரு நாள் பெரம்பலூர் வருவதென முடிவெடுக்க வேண்டிய நிலை உண்டானது. பேரன்பு கொண்டு காத்திருந்த பெரம்பலூர் மக்களிடம் என்னுடைய வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். நிச்சயமாக உங்களைச் சந்திக்க, மீண்டும் வருவேன்.
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
அனைவருக்கும் வணக்கம்.
மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்காகத் தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டப் பொறுப்பாளர்களை உள்ளடக்கிய இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் குழுக்கள், வெற்றித் தலைவர் அவர்களின் சுற்றுப் பயணம் மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நடைபெறுவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளும்.
நாளை திருச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் நடைபெற உள்ள மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாட்டாளர்கள் குழு, நிகழ்ச்சி நேரம் மற்றும் இடம் ஆகியவை பின்வருமாறு:
1. திருச்சி
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குழு:
1. T.கரிகாலன்
2. M.சந்திரா
3. M.விக்னேஷ்
4. P.ஜெகன் மோகன்
5. M.ரவிசங்கர்
6. K.அருள்ராஜ்
7. M.செந்தில்
நிகழ்ச்சி நேரம் : காலை 10.35 மணி
இடம்: மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகில்,
2. அரியலூர் மாவட்டம்:
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குழு:
1. M.சிவகுமார்
2. K.ரவிக்குமார்
3. V. திருத்தணி முருகன்
4. P. சித்திரக் கண்ணன்
5. V. பிரவீன் குமார்
நிகழ்ச்சி நேரம் : பிற்பகல் 1.00 மணி முதல் 3.00 மணி வரை
இடம்: பழைய பேருந்து நிலையம் அருகில்
3. பெரம்பலூர் மாவட்டம்
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குழு:
1. K.சிவக்குமார்
2. T.ஆரோக்கியசாமி
3. T.தர்மேந்திரன்
4. A.சின்னதுரை
5. S.P.வினோத்
6. N.வில்லு விஜய்
7. R.P.மகேந்திரன்
8. S.மோகன்ராஜ்
நிகழ்ச்சி நேரம்: மாலை 4.00 மணி
இடம்: குன்னம் பேருந்து நிலையம் அருகில்
நிகழ்ச்சி நேரம்: மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை
இடம்: வானொலித் திடல், பெரம்பலூர்
வெற்றித் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுக்களுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
வாகை சூடும் வரலாறு திரும்ப, வெற்றித் தலைவர் அவர்களின் பின்னால் ஒன்றுசேர்வோம்!
வென்று காட்டுவோம்!
இப்படிக்கு,
என்.ஆனந்த்,
பொதுச்செயலாளர்,
தலைமை நிலையச் செயலகம்
(Party Headquarters Secretariat),
தமிழக வெற்றிக் கழகம்.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில அளவிலான மாபெரும் கொள்கை விளக்க முதல் பொதுக்கூட்டம், சேலம், போஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் தலைமைக் கழக நிர்வாகிகள் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினர்.
மாற்றத்தை விரும்பும் தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில்,
மக்கள் விரும்பும் முதலமைச்சர் வேட்பாளர், வெற்றித் தலைவர் திரு. விஜய் அவர்கள் தலைமையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம், மிகப் பெரிய வெற்றியைப் பெற்று, புதிய வரலாறு படைக்கும்!
(1/2)