@senthazalravi Hey Senth
His office is in #46/4 Novel Tech Park, Kudlu Gate, Hosur Rd, HSR Extension, Bangalore, Karnataka, India 560068< what you attached might be registered address, this is common scenario in IT world.
ஒரு அக்கா சைக்கிள் delivery பன்றத பார்த்துட்டு இந்த பொண்ணு friends எல்லாரும் சேர்ந்து அவங்களுக்கு ஒரு பைக் வாங்கி கொடுத்துட்டாங்க இந்த மாதிரி தேவதைகளும் நம்ம ஊரில் தான் இருக்காங்க ❤❤❤❤❤🙏........ இது ஒரு real feel good video 🙌🤝😊
😳😳😳😳must watch video...
தமிழ்நாடு முழுவதும் இந்த வீடியோவை vairal ஆக்க வேண்டும்...
விஜய் மற்றும் அவரது PR team செய்யும் அயோக்கியத்தனம் மக்களுக்கு தெரிய வேண்டும்.
Don’t miss this podcast by D. Suresh Kumar, The Hindu’s Deputy Resident Editor, Tamil Nadu: “Vijay, TVK and the rise of fake political narratives | Focus Tamil Nadu”: https://t.co/c1T5NMkCWs via @YouTube
தவெக ஜெயித்ததும் காங், விசிக, திமுக, அதிமுக உள்ளிட்ட பல கட்சிகளில் இருந்து பலர் தவெகவில் ஓடோடி வந்து இணைந்தனர்.
இவர்கள் எல்லாம் சந்தர்ப்பவாதிகள் என்பதை தவெக உணரவே பல காலம் ஆகும்.
ஆனால் @arivalayam@mkstalin எல்லாம் தோல்வி அடைந்தும்.. அது வரை நடுநிலையாக இருந்த பலரும் அந்த தோல்வியின் போது கூட ஓடோடி வந்து திமுகவில் இணைந்ததும் , திமுகவுக்காக தளத்திலும் களத்திலும் விவாதம் செய்து வருவதும் எதனால் என யாராவது யோசித்து இருப்பார்களா?
அது கட்சிக்காக மட்டும் அல்ல.. திமுக இத்தனை காலம் உழைத்து உருவாக்கிய தமிழ்நாட்டின் வளர்ச்சி இனி என்ன ஆகுமோ என்கிற பதைபதைப்பும், தமிழ்நாட்டு மக்களுக்காக குரல் கொடுக்க, பொய் செய்திகளை உடைக்க, சமூக நீதியை எடுத்து உரைக்க என பல காரணங்களுக்காக, எந்த பிரதிபலனும் பார்க்காமல் செய்யப்படும் கடமை அது.
இதை எல்லாம் உணரவோ உணர்வுப்பூர்வமாக புரிந்து கொள்ளவோ பலருக்கு முடியாது. குறிப்பாக, எல்லா செயலுக்கும் பலன் இருக்கும் பலன் இருக்கவேண்டும் என்கிற குறுகிய மனப்பான்மை கொண்டவர்களுக்கு எக்காலத்திலும் புரியாது
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!