தீய சக்தி தி.மு.க. கார்ப்பரேட் கம்பெனியின் தலைவர் மிஸ்டர் ஸ்டாலின் சார்… மாண்புமிகு முன்னாள் கொளத்தூர் எம்.எல்.ஏ. ஸ்டாலின் சார், பொறாமையில் புகைச்சலில் அழுது வடிந்திருக்கிறார். கத்திக் கதறி இருக்கிறார்.
எங்கள் தலைவர், தமிழ்நாட்டின் Confident force; Corruption-free force. இப்போது மட்டுமன்று. எப்போதும் எங்கள் தலைவர்தான் தமிழக மக்களின் ஒரே நம்பிக்கையாக இருப்பார். இதை 2026 தேர்தல் முடிவின் வாயிலாகக்கூடத் தெரிந்துகொள்ளாமல் பேசுகிறார்.
பெண்கள் பாதுகாப்பில் முனைப்புடன் இருப்பதால்தான் instant action-இல் இறங்கி நடவடிக்கை எடுக்கிறது, நமது வெற்றித் தலைவரின் அரசு. ஸ்டாலின் சார் போல, அரசியலை மறந்து, இன்ஸ்டா ரீல்சுக்குள் மூழ்கச் சொல்லி, மூச்சு திணறவில்லை.
எந்நாளும் எதற்கும் அடிபணியாத நம் தலைவரின் நிதி ஆயோக் கூட்ட உரையை நாடே பாராட்டுகிறது. விசாரணையை நேரில் எதிர்கொண்டவர், நம் தலைவர். டாஸ்மாக் ரெய்டுக்காக நடுங்கிப்போய் டெல்லி சென்ற ஸ்டாலின் சார், இதைப் பேசவே கூடாது.
வாய்ப்பு கிடைக்கும் துறையில் எல்லாம் Party Fund என மக்கள் பணத்தை ஆட்டையப் போட்ட திருட்டு மாடல் அரசின் புளூ பிரிண்ட்டைத் தமிழக மக்களே சுக்குநூறாகக் கிழித்து எறிந்துவிட்டனர்.
எங்கள் தலைவரின் பேச்சு பாணியைக்கூட copy-paste செய்வது தி.மு.க. கூடாரம்தானே தவிர, எங்கள் தலைவருக்கு அவர்களை copy அடிக்க வேண்டிய அவசியமே இல்லை.
தமிழ்நாட்டையே ஷாப்பிங் செய்து சுருட்டிய தன் குடும்பம் போல, நம்மையும் நினைத்துவிட்டார் போல. ஊழலற்ற நிர்வாகம், லஞ்ச லாவண்யம் அற்ற நிர்வாகம் என்று தில்லாக அறிவித்த நம் தலைவரைப் போல அறிவிக்கத் திராணி இல்லாத மிஸ்டர் ஸ்டாலின் சார், ஏதேதோ பேசி ஒப்பேற்றி இருக்கிறார்.
நம் தலைவரின் ஒரே ஓர் ஊழல் குற்றச்சாட்டுக்குக்கூட வாய் திறக்க முடியாத ஸ்டாலின் சார், இப்போது வாய்க்கு வந்தபடி வன்மத்தில் வடை சுடுகிறார்.
பா.ஜ.க.வின் மறைமுக அடிமையாக இருந்து, நேர்முக அடிமையாக மாறத் துடிப்பவர்கள் எல்லாம், நம்மைப் பார்த்துப் பேசலாமா? மக்களிடமே இந்தக் கேள்வியை விட்டுவிடுகிறோம்.
TVK.. TVK.. TVK... அண்டை மாநிலத்திலும் ஒலித்த TVK கோஷம்..!
கர்நாடகாவில் தன்னை காண திரண்ட மக்களை பார்த்து முதலமைச்சர் விஜய் செய்த செயல்.! வைரலாகும் வீடியோ!
#Mangaluru | #CMVijay | #Kollur | #MookambikaTemple | #PolimerNews
ஒரு கோயில் விசிட்… ஆனால் அதிர்ந்தது மூன்று அரசியல் களங்கள்! 🔥
மூகாம்பிகை கோயிலுக்கு அண்ணன் விஜய் சென்றது பக்திக்காக மட்டுமல்ல, அரசியல் மொழியில் ஒரு மௌன அறிக்கையாகவும் மாறியுள்ளது.
மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டை தொடர்ந்து சீண்டும் கர்நாடக அரசியல்வாதிகளுக்கும், தமிழ்நாட்டை வாக்கு வங்கியாக மட்டும் பார்க்கும் தேசிய கட்சிகளுக்கும் ஒரு எச்சரிக்கை மணி அடித்துவிட்டு வந்திருக்கிறார்.
இன்று சும்மா ஒரு விசிட்டுக்கே மக்கள் வெள்ளத்தைப் பார்த்திருப்பீர்கள். நான் முழுமையாக அரசியலில் இறங்கி, கட்சியை கட்டமைத்து களமிறங்கினால் என் பின்னால் நிற்கும் சக்தி எவ்வளவு என்பதை அப்போது உணர்வீர்கள் என்ற செய்தியை வார்த்தைகளால் அல்ல மக்கள் கூட்டத்தால் சொல்லிவிட்டு வந்திருக்கிறார்.
தமிழ்நாட்டை புறக்கணிக்க நினைத்தால் நான் வருவேன்…
தமிழ்நாட்டின் உரிமையை மதித்தால் நான் என் மக்களோடு (தமிழ்நாட்டோடு) இருப்பேன்…
என்ற செய்தியை வார்த்தைகளால் அல்ல தனது செல்வாக்கால் உணர்த்தியிருக்கிறார்.
அன்று எம்ஜிஆர்…
அன்று ஜெயலலிதா…
இன்று விஜய்…
வரலாற்றில் பேசப்படும் அந்த கோயில் பயணங்களின் பட்டியலில் தனது பெயரையும் பதிவு செய்துவிட்டு வந்திருக்கிறார்.
ஒரு பயணத்திலேயே பாஜகவுக்கும் சிக்னல்…
காங்கிரஸ்க்கும் சிக்னல்…
தமிழ்நாட்டின் பழைய அரசியல் கட்சிகளுக்கும் சிக்னல்…
என்னை இன்னும் லேசாக எடுத்துக்கொள்ளலாம் என்று நினைத்தால் அது உங்கள் தவறு என்ற அரசியல் எச்சரிக்கையை அமைதியாக பதிவு செய்துவிட்டு வந்திருக்கிறார்.
ஒரு வார்த்தை கூட பேசாமல்,
ஒரு அரசியல் கூட்டம் கூட நடத்தாமல்,
ஒரே ஒரு பயணத்தில் பலரையும் யோசிக்க வைத்திருக்கிறார்.
சிலர் அரசியலைப் பேசுவார்கள்…
சிலர் அரசியலை எழுதுவார்கள்…
ஆனால் சிலர் மட்டும் நடந்து காட்டுவார்கள்!
சத்தமில்லாமல் அரசியல் நகர்வுகளை செய்து, எதிரிகளை யோசிக்க வைப்பதில் சிங்கம் எங்கள் ஆள்! 🔥🔥🔥
#TVK @tvkvijayhq@JhonArokiasamy@BussyAnand@AadhavArjuna
நீட் தேர்வை நீக்கும் ரகசியம் தெரியும் எனப் பொய்வாக்குறுதி கொடுத்து ஏமாற்றிய பொய்நிதி, போலிநிதி, மேலும் பல பொய்களை அவிழ்த்துவிட்டிருக்கிறார்.
ஒன்றிய அரசால் மட்டுமே நீட் தேர்வை நீக்க முடியும். மாநில அரசால் நீக்கவே முடியாது என்பதை மறைத்து, நீட்டை நீக்குவோம் என்ற ரகசியநிதியின் பேச்சையும் அவரது தந்தையின் பேச்சையும் நம்பி ஏமாற வேண்டாம். எனவே, நீட் நீக்கப்படும் வரை, அதை மட்டுமே நம்பி மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டாம் என்பதற்காகத்தான் நீட் மட்டுமே உலகம் இல்லை என்று எங்கள் வெற்றித் தலைவர் சொன்னார். இதைத் திரித்துக் கதை கட்டி விட்டிருக்கிறார், இந்தத் திரிபுவாதநிதி.
ஜெயலலிதா அம்மையாரின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிய தீயசக்தி, தன்னைப் போலவே பிறரையும் நினைக்கிறது. அந்தப் பிதற்றலைத்தான் ஸ்டிக்கர்நிதி ஸ்பீக்கர்நிதியாக மாறி, ஸ்பீட் காட்டி ரிபீட் மோடில் கீழே விழுந்து பல்லை உடைத்துக்கொள்கிறார்.
நிதி ஆயோக் கூட்டத்தில் மாநில உரிமைகளுக்காக உரத்துக் குரல் கொடுத்திருக்கிறார் எங்கள் தலைவர், மக்கள் விரும்பும் முதல்வர். நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ளாத முதல்வரில்லை, எங்கள் தலைவர். எனவே, தனக்குத்தான் பேசத் தெரியும் எனத் தன் அப்பாவுக்காகத் தப்புத் தப்பாக டப்பாவை உருட்ட வேண்டாம், தப்புத்தாளநிதி அவர்களே.
மேலும், எங்கள் வெற்றித் தலைவர், மக்களை மனதார முழுமையாக நம்பினார். மக்கள் எங்கள் வெற்றித் தலைவரை மனதார முழுமையாக நம்பினர். அதனால் வந்த வெற்றியைப் பார்த்துப் பொறாமைநிதியாகிப் புலம்பி இருக்கிறார், இந்த புலம்பல்நிதி.
போதும் நிறுத்திக்கொள்ளுங்கள் புளுகுநிதி. இல்லையேல் மக்கள் உங்களை மேலும் புறந்தள்ளி, கூப் சூப் உறிந்து குடிக்கும் வகையில் ஓரமாக அமர வைத்துவிடுவார்கள்.