நடிகரை பார்க்க வந்து உயிரை விட்டவர்களுக்கு அரசு வேலையா? வழக்கறிஞர் தீரன் ஆவேசம்
TVK | Tvkvijay | Karurstampede | newstamil24x7
#NewsTamilRDX#Dheeranadvocate#cmvijay
த.வெ.க.அரசே ...! தமிழ் அழிப்பை கைவிடு
==========================================
தமிழ்க்கலை இலக்கியப் பேரவை கண்டனம்!
===========================================
உலக போதை எதிர்ப்பு நாளான 26 /06 /2026 அன்று தமிழக அரசின் சார்பில் விழிப்புணர்வு ஓட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது .அதற்கான விளம்பரங்களில் , பதாகைகளில், சீருடைகளில்,பரப்புரை பாடல் வரிகளில் ,முத்தாய்ப்பாய் முதல்வர் தன் கைப்பட எழுதிய வாசகங்களில் போதை ஒழிப்பை விடவும் ,தமிழ் ஒழிப்பு முதன்மையாக இ��ுந்தது .
அதன் முதன்மை முழக்கமாக "ஸ்டார்ட் RUN ,ஸ்டாப் DRUGS "என தமிங்கிலத்தில் பரப்பப்பட்டது ."SAY NO TO DRUGS "என்பது அப்படியே ஆங்கிலத்தில் எல்லா இடங்களிலும் இருந்தது .இந்த ஓட்டத்தை ஒருங்கிணைத்த தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் லட்சினை ஆங்கிலத்தில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது .எல்லா துறைக்கும் தமிழில் லட்சினை உள்ளது ,ஆனால் பயன்படுத்த மாட்டார்கள்.தொடங்கு,நிறுத்து,போதை ,ஓடு எ��� நன்கு புழக்கத்தில் உள்ள தமிழ் வார்த்தைகளை ஏன் ஆங்கிலத்தில் திணிக்க வேண்டும் ?
பரப்புரை பாடல் வரிகளில் "தமிழினம் காக்க இயங்குதே ","மாபெரும் போரை தொடங்குதே " என்ற வரிகள் "THAMIZHINAM KAKKA IYANGUTHE " என்றும் "MAPERUM PORAI THODANGUTHE " என்றும் காட்சியில் பெரிய எழுத்துக்களில் காட்டப்படுகிறது .தமிழை அழித்துவிட்டு, தமிழினத்தை எப்படி காப்பீர்கள் ? என்பது தெரியவில்லை .
முதல்வர் விஜய் ,ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்ற மேடையின் பதாகை தொடங்கி ,முதல்வர் அசைத்த கொடி வரை பெரும்பாலும் ஆங்கிலத்திலும் ,சில இடங்களில் தமிங்கிலத்திலும் இருந்தது .கையொப்பமிடும் பதாகையில் முதல்வர் விஜய் "START RUN ,STOP DRUGS " என்பதோடு "Sports -ah edu ,Drugs - ah vidu "என தன் பங்குக்கு தன் கைப்பட தமிழ் அழிப்பை செய்து கையொப்பமிட்டார் .
தவெக ஆட்சி பொறுப்பேற்ற சில தினங்களிலேயே திமுக ,அதிமுக போலவே நாங்களும் இருமொழிக் கொள்கையை தான் பின்பற்றுவோம் என்றார்கள் .அந்த இருமொழிக் கொள்கைக்கு நேர்மையாக இருந்திருந்தால் கூட தமிழில் கட்டாயம் எழுதியிருக்க வேண்டும் .அதென்ன தொண்ணூறு விழுக்காடு ஆங்கிலம் , பத்து விழுக்காடு தமிங்கிலம். இந்த ஒரு நிகழ்வை மட்டும் வைத்து நாம் விமர்சிக்கவில்லை .விஜய் அரசு பொறுப்பேற்றதிலிருந்து ,துறை வாரியாக தமிழக அரசின் செய்தி வெளியீட்டு துறையின்(இதுவும் TN DIPR என்றுதான் அவர்கள் பதிவுகளில் வருகிறது) அறிவிப்புகளை பாருங்கள் .குறிப்பாக சு��்றுலா துறை ,தொழித்துறையின் சிறு தொழில் பயிற்சிகள் படிப்புகள் பற்றிய அறிவிப்புகள் ,விளையாட்டுத் துறையின் பல அறிவிப்புகள் ஆங்கிலத்தில் மட்டும் தான் உள்ளது .தமிழ் நாட்டுக்குள் ,தமிழர்களுக்கு போய் சேர வேண்டிய செய்திகள் ஏன் ஆங்கிலத்தில் உள்ளது ?
இதே தமிழ் அழிப்பு வேலையை தான் திமுகவும் அதிமுகவும் கடந்த காலத்தில் செய்தன. கடந்த ஸ்டாலின் ஆட்சியில் HAPPY STREET என்ற பெயரில் தெரு நிகழ்ச்சி���ளை பெரு நகரங்களில் நடத்தினார்கள் .ஒலி மாசு வேண்டாம் எனும் விழிப்புணர்வு நிகழ்வை ANTI HONGING எனும் பெயரிலும் ,போக்குவரத்து துறை சார்பில் ZERO IS GOOD என சென்னை முழுக்க விளம்பரம் செய்தார்கள்(விபத்தை குறைக்க வேண்டும் என்பதற்கான விழிப்புணர்வு !) .கொளத்தூரில் ANITHA ACHIEVERS ACADEMY ஆரம்பித்தார் .இவை எதற்கும் தமிழ் வார்த்தைகள் போடவே இல்லை .
எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் I LOVE AVADI ,I LOVE TRICHY ,I LOVE KOVAI
என பல லட்சம் செலவில் ���ற்சுட்டி மையங்கள் வைத்தார்கள் .அம்மா மினி கிளினிக் தொடங்கினார்கள் .எதற்கும் தமிழ் வார்த்தைகள் எழுதவில்லை .ஜெயலலிதா பெரும்பாலும் அரசு அறிவிப்புகளை ஆங்கிலத்திலேயே வெளியிட்டார் .அரசுப்பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வியை ஆங்கில வழியாய் மாற்றினார் .தமிழ் வழிக்கு வகுப்பெடுத்த ஆசிரியர்களை ஆங்கில வழிக்கு மாற்றினார் .அதை திமுக எதிர்க்கவுமில்லை, பிறகு தன் ஆட்சியில் மாற்றவுமில்லை .
கலைஞர் ஆட்சியில் பேருந்துகளுக்கு Delux பஸ் ,Ultra delux பஸ் ,super delux பஸ்,point to point என எழுதினார்கள் .தமிழ் தேசிய பேரியக்கம் கோயம்பே���்டில் அந்த ஆங்கில எழுத்துக்களை அழித்து போராட்டம் நடத்திய பிறகு மிதவைப் பேருந்து ,தாழ் தளப் பேருந்து, இடை நில்லாப் பேருந்து என மாற்றினார்கள் .
உங்கள் ஆட்சி மாற்றத்திற்க்கான ஆட்சி என நொடிக்கொருமுறை ஊடகங்களில் பரப்பப்படுகிறது .தீவிர தமிழ் அழிப்பு தான் உங்கள் மாற்றமா ? உடனடியாக இத்தகைய தமிழ் அழிப்பு வேலைகளை கைவிடுங்கள் .எல்லா அறிவிப்புகளும் ,விளம்பரங்களும் பிறமொழிக் கலப்பில்லாமல் நல்ல தமிழில் வருவதை உறுதி செய்யுங்கள் .
தமிழக ஆட்சியாளர்களே ,இந்தியை திணித்தால் மட்டுமல்ல ,ஆங்கிலத்தை திணித்தலும் தமிழ் அழியும் என்பதை உணருங்கள்.தமிழர்களே நீங்கள் எந்த கட்சியை சேர்ந்தவராக வேண்டுமானாலும் இருங்கள் ஒரு போதும் தமிழ் அழிப்பை ஆத��ிக்காதீர் ,நியாயப்படுத்தாதீர் .வேர் அறுந்தால் மரம் விழும் .தமிழினத்தின் வேர் என்பது அதன் மொழிதான் ,மறவாதீர் .
முழுநிலவன்
பொதுச் செயலாளர்
தமிழ்க் கலை இலக்கியப் பேரவை
@CMOTamilnadu
அமோனியா கசிவு நிகழ்ந்த தொழிற்சாலைக்கு ஆய்வுக்குச் செல்லாத தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா, பள்ளிகளில் குழந்தையிடம் கேள்வி எனும் பெயரில் அத்துமீறலாமா?
@CMOTamilnadu@TVKVijayHQ@Keerthana4VNR
அரசுப்ப���்ளியை ஆய்வு செய்வதாகக் கூறிக்கொண்டு, தவெக அரசின் தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா அவர்கள் அரசுப்பள்ளியில் படிக்கும் ஒரு குழந்தையிடம் கேள்விகேட்டு நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியளிக்கிறது. குழந்தைக்குத் தன்னம்பிக்கையும், உத்வேகமும் அளிக்கும் வகையில் பேசாது, அக்குழந்தையைக் கூனிக் குறுக வைத்து, தாழ்வு மனப்பான்மைக்குள் தள்ளும் விதத்தில் நடந்துகொண்டிருப்பது மிகவும் மலினமான வி���ம்பர அரசியலாகும். தங்களது அரசியல் ஆதாயம் தேடலுக்காகவும், விளம்பர மோகத்திற்காகவும் குழந்தைகளைக்கூட பலிகடாவாக்கத் துடிக்கும் தவெக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.
ஆங்கிலம் என்பது ஒரு மொழிதானே ஒழிய, அறிவ��்ல எனும் அடிப்படை உண்மையைக்கூட உணராத அமைச்சர் கீர்த்தனா, தன்னை அதிமேதாவியாகக் காட்டிக்கொள்வதற்காக ஆங்கிலமறியாத அக்குழந்தையைக் குற்றப்படுத்தலாமா? கடைசி இருக்கைக் குழந்தைகள் நன்றாகப் படிக்க மாட்டார்கள் எனும் பொருளில் பள்ளியில் பேசலாமா? அப்படிப் பார்த்தால் சட்டமன்றத்தில் கடைசி வரிசையில் இருப்பவர்கள் எல்லாம் அறிவில்லாதவர்களா என்ன? சட்டமன்றத்தில் முதல் வரிசையில் அமர்ந்து இருப்பவர்களுக்குக்கூட அறிவுப்பேரொளி சுடர்விட்டு எரிவது போல தெரியவில்லையே? ஒரு குழந்தையிடம் என்ன பேச வேண்டும்? எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்? எனும் அடிப்படைப் பண்புகளைக்கூட கற்காத இவர் அக்குழந்தைக்குப் பாடமெடுப்பது கேலிக்கூத்து இல்லையா? வெள்ளை அறிக்கை வெளியிடும்போது அமைச்சர் மரிய வில்சன் தமிழைப் படிக்கவே தடுமாறி நின்றதை நாடே பார்த்ததே, தாய்மொழி தமிழை உச்சரிக்க முடியாத�� ஒரு அமைச்சரே திணறி நின்றது அவமானமில்லையா? இந்த இலட்சணத்தில் அமைச்சர்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் வைத்துக் கொண்டு, ஒரு அரசுப்பள்ளிக் குழந்தையைக் கைகட்டி நிற்கச் செய்து, கேள்வி எனும் பெயரில் அத்துமீறுவது அக்குழந்தையின் மீதான உளவியல் வன்ம��றை!
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே அமோனியா கசிவால் இதுவரை 18 பேர் இறந்துபோயிருக்கிறார்கள். தனக்குத் தொடர்பே இல்லாத துறையில் ஆய்வு எனும் பெயரில் அத்துமீறும் தொழிற்துறை அமைச்சரான கீர்த்தனா, அமோனியா கசிவால் உழைக்கும் மக்கள் இறந்துபோன அந்தத் தொழிற்சாலையைப் பார்வையிட ஏன் செல்லவில்லை? வடசென்னைப் பகுதிகளில் இருக்கும் தொழிற்சாலைகள் பல சூழியல் பாதிப்பை ஏற்படுத்தும் நி���ையில், அத்தொழிற்சாலைகளில் விதிகள் சரியாகக் கடைபிடிக்கப்படுகிறதா என என்றைக்காவது ஆய்வுக்குச் செய்யச் சென்றிருக்கிறாரா? அமோனியா கசிவு நிகழ்ந்த தொழிற்சாலைக்கு ஆய்வுக்குச் செல்லாத தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா, பள்ளிகளில் குழந்தையிடம் கேள்வி எனும் பெயரில் அத்துமீறலாமா? எல்லாம் விளம்பரமோகம் படுத்தும் பாடு! வெட்கக்கேடு!
ஆகவே, தவெக அரசின் அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்���ளும் அரசுப்பள்ளிகளில் அத்துமீறுவதையும், அரசியலைப் புகுத்துவதுமான மோசமானப் போக்கைக் கைவிட்டு, ஆக்கப்பூர்வமான மக்கள் பணிகளில் இனியாவது கவனம் செலுத்த வேண்டுமென அறிவுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
கடந்த ஆட்சியில் 207 அரசு பள்ளிகள் இழுத்து
மூடப்பட்டபோது சீமான் எந்தக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார்? எனக் கேட்கிறார் தவெகவின் நாஞ்சில் சம்பத்.
முந்தைய திமுகவின் ஆட்சியிலும், அண்ணன் சீமான் அவர்கள் அப்போதைய பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடுகளைக் கண்டித்தார்; நிர்வாகச் சீர்கேடுகளை விமர்சித்த��ர்.
அதனைப் பார்க்காது எந்தக் குட்டையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார் ஐயா நாஞ்சில் சம்பத்? இல்லை! அறிவாலயத்தின் ஒட்டுத் திண்ணையில் அமர்ந்து ஒத்து ஊதிக் கொண்டிருந்தாரா?
என்ன நண்பா @LoyolaMani ?
கேட்டக் கேள்விக்குப் பதில் சொல்லாம, என்ன என்னமோ எழுதி வச்சு இருக்க?
விமர்சனத்துக்கும், குற்றச்சாட்டுக்கும் விளக்கமோ, மறுப்போ, தர்க்கமோ வைக்கணும். தொலைக்காட்சி விவாதம் மாதிரியே இங்கயும், வாய்க்கு வந��தத உளறிக் கொட்டக்கூடாது நண்பா!
கோவை மாவட்டம், வால்பாறை பகுதியில் இரண்டு அரசுத் தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக இன்றுகூட செய்தி வந்திருக்கிறது. அதற்கு தவெக அரசைப் பொறுப்ப��ற்கச் சொல்லவில்லை.
முந்தைய திராவிட அரசுகள் போல அல்லாது, பள்ளிக்கல்வித்துறையைச் சீரமைக்கச் சொல்கிறோம்; அரசுப்பள்ளிகள் மீது கவனமெடுக்கச் சொல்கிறோம்; தரம் உயர்த்தச் செயல்பாடுகளை முன்னெடுக்கச் சொல்கிறோம். அமைச்சர் ராஜ்மோகனோ தனியார் பள்ளிகள் மீதுதான் கரிசனம் காட்டுகிறார். அதனைத்தான் அண்ணன் சீமான் அவர்கள் சுட்டிக்காட்டிக் கண்டித்திருக்கிறார்.
தனியார் பள்ளிகளின் ஒப்புதலுக்கு இலஞ்சம் வாங்கவில்லை என்கிறார் அமைச்சர் ராஜ்மோகன். அதேபோல, தனியார் பள்ளிகள் கட்டணக் கொள்ளையில் ஈடுபட தவெக அரசு விடவில்லை என உறுதியளிப்பாரா ராஜ்மோகன்? இன்றளவும் கட்டணக் கொள்ளை நடந்துகொண்டுதானே இருக்கிறது.
இதனைத்தானே அண்ணன் சீமான் அவர்கள் கேட்கிறார்.
//உரிமம் பெறுவதில் நடைபெறும் ஊழல்களைத் தடுத்து தனியார் பள்ளி முதலாளிகளுக்கு உதவிய அமைச்சர் ராஜ்மோகன், தனியார் பள்ளிகளின் கட்டணக்கொள்ளையைத் தடுத்து ஏழை, நடுத்தர வர்க்க பெற்றோர்களுக்கு உதவ எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? //
// தனியார் பள்ளிகளின் உரிமம் பெறுவதில் நடைபெறும் ஊழல்களைக் களைய பல்வேறு நடவடிக்கைகளை வேக வேகமாக எடுத்துவரும் அமைச்சர் ராஜ்மோகன், அதே வேகத்தோடு அரசுப்பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே ஏன்? //
அதற்கு உரிய விளக்கத்தை அளிக்காது, முந்தைய திமுக அரசைக் கைகாட்டித் தப்பிக்க முயற்சிக்கிறீர்கள். நாங்கள் அதனை ஏதோ கண்டிக்காதது போல தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறீர்கள்.
இதோ,முந்தைய திமுக அரசினுடைய பள்ளிக்கல்வித்துறையின் நிர்வாகச்சீர்கேடுகளைக் கண்டித்து அண்ணன் சீமான் விடுத்த அறிக்கைகளிலிருந்து ஒரு சில...
(https://t.co/r9FCyk8a4s)
(https://t.co/tSb3xCLVZH)
(https://t.co/N0QeX5vjOu)
(https://t.co/eRDxOHbHxG)
(https://t.co/mbuES2wcl6)
(https://t.co/skzoTNfTCy)
���ோகட்டும்!
அப்புறம் என்ன..? நாங்க திராவிட ஆதரவாளரா? திராவிடத்தை எதிர்க்கணுமா? அடடா.. விஜய் திராவிடத்தை எதிர்க்கிறார் போல! இருக்க இடத்தை மறந்துட்டு same Side Goal போட்றீயே நண்பா?
திமுக ஆட்சியின் அத்தனை அவலங்களையும் எதிர்த்து நாங்கள் போராடியிருக்கிறோம். பாதிக்கப்பட்ட மக்களோடு நாளும் களநாயகனாகப் போராட்டக்களத்தில் நின்று இருக்கிறார் அண்ணன் சீமான். கடலுக்கு நடுவே கருணாநிதியின் பேனா சி���ை வைக்கும் முடிவு உட்பட பல மக்கள் விரோதத் திட்டங்களைத் தடுத்து நிறுத்தியது அண்ணன் சீமான்தான். திமுக அரசின் கொடுங்கோல் திட்டங்களையும், செயல்பாடுகளையும் எதிர்த்து சமரசமின்றிப் போராடியது நாம் தமிழர் கட்சி மட்டும்தான். அவ்வளவு ஏன்? திமுக முன்வைக்கும் 'திராவிடம்' எனும் கற்பிதத்தையும், 'பெரியார்' எனும் பிம்பத்தையும் உடைத்து எறிந்திருக்கிறோம். அதனால், திராவிடத்தையும், திமுகவையும் எதிர்க்க எங்களுக்குப் பாடமெடுக்கிற அதிகபிரசங்கித்தனம் வேண்டாம்.
வேற என்ன.. உதயநிதியை நேரில் சந்திச்சுட்டா நாங்க திமுகவோட உறவுல இருக்கோமா? என்ன அறிவு நண்பா உனக்கு?
அதுசரி! INDIA கூட்டணிக்குள் தொடர்ந்து நீடிக்கவும், செயல்படவும் வேண்டுமென திமுகவைக் கூப்பிடுறாரே உங்க கூட்டணிக் கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர் திமுகவோட எந்த உறவுல இருக்காரு? அவரை தவெக அரசு கண்டித்ததா? திமுகவை தோழமைச் சக்தி எனச் சொல்கிற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வீரபாண்டி���னும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டாம் கட்ட நிர்வாகிகளும் என்ன உறவுல திமுகவோட இருக்காங்க? அவங்கள எல்லாம் கண்டிச்சுட்டீங்களா?
வேற என்னது.. அமைச்சர் ராஜ்மோகன் மீது வன்மமா? எழுதணும்ங்குறதுக்காக எதையாவது எழுதாத நண்பா..
கடைசியா என்ன சொன்ன நண்பா.. பதிலடியா? தொலைக்காட்சி விவாதம் பக்கம் தலையவே காட்டுறது இல்லையே ஏன் நண்பா? அங்க வாங்க நண்பா.. யாருக்கு யார் பதிலடி கொடுக்குறான்னு பாப்போம்..
கடைசியா ஒரே கேள்வி நண்பா.. இதுக்கு மட்டுமாவது பதில் சொல்லு..
முந்தைய திமுக, அதிமுக ஆட்சிகளில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்கள் தனியார் பள்ளிகளின் ஒப்புதலுக்கு இ��ஞ்சம் வாங்கினார்கள் எனும் நந்தகுமாரின் குற்றச்சாட்டை முழுமையாக நாங்கள் ஏற்கிறோம்.
2017ஆம் ஆண்டு முதல் 2021வரை பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் செங்கோட்டையன். அவர் தனியார் பள்ளிகளின் ஒப்புதலுக்கு இலஞ்சம் வாங்கினாரா? இல்லையா?
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தனியார் பள்ளிகளுக்கு மட்டும்தான் அமைச்சரா? அல்லது அரசுப்பள்ளிகளுக்கும் அமைச்சரா? தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகள் ம���தும் காட்டத்தவறுவது ஏன்?
@CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan
"தனியார் பள்ளிகளுக்கான உரிமங்கள் ஜூலை மாதம் முதல் 100 விழுக்காடு இணையதளம் வாயிலாகப் பெறலாம்; நகைகளை அடமானம் வைத்து மிகுந்த சிரமங்களுக்கு இடையே தனியார் பள்ளிகளை நடத்தி வருகின்றனர். பள்ளிகளை நடத்துவது இலாப கணக்கு அல்ல; புண்ணியக் கணக்கு” என்று தனியார் பள்ளி நிறுவனங்கள் குறித்துப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கண்ணீர் வடித்திர���ப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.
தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தனியார் பள்ளிகளுக்கான அமைச்சர் மட்டும்தானா? அல்லது அரசு நடத்தும் பள்ளிகளுக்கும் அவர்தான் அமைச்சரா? தனியார் பள்ளிகள் உரிமம் பெறுவதை எளிதாக்கி அதனை ஊக்குவிப்பதற்குத்தான் அமைச்சர் ஆனாரா ராஜ்மோகன்? தமிழ்நாடு அரசுப் பள்ளிகள் நடத்துகிறது என்ற நினைவாவது அமைச்சர் ராஜ்மோகனுக்கு இருக்கிறதா? தனியார் பள்ளிகள் எந்த அளவிற்குப் பெற்றோர்களிடம் கட்டண கொள்ளையில் ஈடுபடுகின்றன என்பதாவது அமைச்சருக்கு தெரியுமா? உரிமம் பெறுவதில் நடைபெறும் ஊழல்களைத் தடுத்து தனியார் பள்ளி முதலாளிகளுக்கு உதவிய அமைச்சர் ராஜ்மோகன், தனியார் பள்ளிகளின் கட்டணக்கொள்ளையைத் தடுத்து ஏழை, நடுத்தர வர்க்க பெற்றோர்களுக்கு உதவ எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? தனியார் பள்ளிகள் நடத்துவது புண்��ியக் கணக்கு என்றால் அரசுப்பள்ளிகள் நடத்துவது பாவ கணக்கா? அரசுக்கு அந்தப் புண்ணிய��் சேர அமைச்சர் ராஜ்மோகன் எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? பாவ புண்ணியக் கணக்கு பேசும் அமைச்சர் எத்தனை தனியார் பள்ளிகள் தத்தம் பள்ளிகளில் எத்தனை ஏழை குழந்தைகளுக்கு இலவசமாய் கல்வி தருகின்றன என்று கூற முடியுமா? தனியார் பள்ளிகளின் உரிமம் பெறுவதில் நடைபெறும் ஊழல்களைக் களைய பல்வேறு நடவடிக்கைகளை வேக வேகமாக எடுத்துவரும் அமைச்சர் ராஜ்மோகன், அதே வேகத்தோடு அரசுப்பள்ளிகளின் உட்கட���டமைப்பை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே ஏன்?
தமிழ்நாடு முழுவதும் 25 ஆயிரம் பள்ளிகள் மேற்கூரை இடிந்து விழும் நிலையில் உள்ளன. மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து பயின்று வருகின்றனர். முறையான கழிப்பறை, தூய குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகள்கூட நிறைவேற்றப்படாத பல்லாயிரக்கணக்கான பள்ளிகள் உள்ளன. பல்லாயிரம் பள்ளிகளுக்கு பாதுகாப்புச் சுவர்கள் இல்லை. போதிய ஆய்வகங்களோ, வ��ளையாட்டு திடலோ, உபகரணங்களோ இல்லாத ஆயிரக்கணக்கான பள்ளிகள் உள்ளன. தனியார் பள்ளிகள் குறித்த தினம் தினம் கண்ணீர் விடும் அமைச்சர் ராஜ்மோகன் அந்த அக்கறையில் சிறிதளவாவது அரசுப்பள்ளிகளைச் சீர்படுத்தி அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த காட்டாதது ஏன்?
தமிழ்நாடு முழுவதும் உள்ள 37,554 அரசுப் பள்ளிகளில் 52 இலட்சம் மாணவர்கள் பயில்கின்றனர். ஆனால், வெறும் 11,890 தனியார் பள்ளிகளில் 53 இலட��சம் மாணவர்கள் பயில்கின்றனர். தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தவெக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? ஒப்பந்த அடிப்படையில் குறைந்த ஊதியத்தில் பணியா��்றும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பெருமக்கள் உரிய ஊதியம், பணி நிரந்தரம் வேண்டி பல ஆண்டுகளாகப் போராடி வரும் நிலையில் அவர்களின் துயர் துடைத்து அரசுப்பள்ளிகளின் கல்வித்தரம் உயர எந்த நடவடிக்கையும் எடுக்காத தவெக அரசு, தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 18 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப எந்த நடவடிக்கையும் எடுக்காத தவெக அரசு தனியார் பள்ளிகள் குறித்துக் கவலைப்பட்டுக் கண்ணீர் சிந்துவதற்கு வெட்கமாக இல்லையா? தனியார் பள்ளிகள் குறித்து தவெக அரசு உள்ளம் உருகுவதும், தனியார் பள்ளி நிர்வாகிகள் தவெக அரசை உச்சி முகர்வதும் இந்த அரசு யாருக்கானது, கோடிக்கணக்கான ஏழை மக்களுக்கானதா? அல்லது தனியார் பள்ளி முதலாளிகளுக்கானதா? என்ற ஐயத்தை எழுப்புகிறது.
ஆகவே, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இனியாவது, தான் தமிழ்நாடு அரசின் அமைச்சர் என்பதை நினைவில்கொண்டு, ���னியார் பள்ளிகளை மீதான அக்கறையில் சிறிதளவேனும் அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதிலும் செலுத்த வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
பத்திக்கையாளருக்கு பதில் சொல்ல உங்களுக்கு அண்ணனின் தம்பிகள்போதும்.அண்ணன் பதில் சொல்ல நீங்கள் ஒன்றும் நியாயவாதிகள் அல்ல இடும்பனின் உடும்புபிடி கேள்விக்கு நீங்கள்தான் பதில்சொல்லனும் @idumbaikarthi
ஊழல் அமைச்சர்களை கட்சியில் சேர்த்துக்கொண்டு எப்படி ஊழலற்ற ஆட்சியை கொடுக்க முடியும்.. தவெகவிற்கு சொல்வதற்கு கூட எந்த கொள்கை, கோட்பாடும் இல்லை.. குதிரை பேரத்தை முதல் முறையா தமிழ்நாடு பாக்குது.. - இடும்பாவனம் கார்த்திக் பேட்டி
CMVijay | TVK | NTK | TNgovt
#Newstamil24x7 #IdumbavanamKarthik
வணிகத்திற்காக தமிழர்களின் பெருமைமிகு அடையாளங்களில் கை வைப்பதை தமிழ்ப்பிள்ளைகள் நாங்கள் இன���யும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம்.
ஆகவே, முருகப்பெருமான் வடபுலத்தில் பிறந்தார் என்பது போன்ற கட்டுக்கதைகளை உருவாக்கி அவற்றை கலை என்ற பெயரில் திரித்துத் திணிக்க முயல்வதை, படக்குழு உடனடியாகக் கைவிட வேண்டும். இல்லையென்றால் மிகக் கடுமையான எதிர்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கின்றேன்.
தமிழினத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் மீறி இதே கருத்துருவாக்��த்தோடு இப்படம் உருப்பெற்று வெளிவந்தால் தமிழ்த்திரையரங்க உரிமையாளர்கள் இதனை தமிழ்நாட்டில் வெளியிட மாட்டோம் என்ற ஒருமித்த முடிவினை எடுக்க வேண்டும். இல்லையென்றால், தமிழ்நாட்டில் எந்தவொரு திரையரங்கிலும் இத்திரைப்படத்தைத் திரையிடவிடாது மிகப்பெரிய போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும். அப்படிப்பட்ட நிலைக்கு எங்களைத் தள்ளிவிட மாட்டீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.
தமிழ்ப்பண்பாட்டைத் திரித்து, தமிழர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் நோக்கத்துடன் உருவாகும் இப்படம் வெளிவந்தால் கடும் சட்டம்-ஒழுங்கு சிக்கல் ஏற்படும் என்பதைக் கருத்திற்கொண்டு தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டில் இப்படத்தின் தமிழ்ப் பதிப்பையோ, தெலுங்கு பதிப்பையோ திரையிட அனுமதிக்கூடாது என்றும் வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
(2/2)