நிலைத்திணை 🌱🌿
(மரமும் மரம் சார்ந்த வாழ்வும்)
ஆதித்தமிழன் தாவரங்களுடன் கொண்ட ஆழுறவை, நுண்ணறிவை, மேதைமையை மீட்டெடுக்கும் சிறு முயற்சியாக இந்நூலினை எழுதியிருக்கிறேன்.
வரும் புதன்கிழமை தொடங்கவிருக்கும் 'சென்னை புத்தகத் திருவிழா - 2022' முதல் இந்நூல் கிடைக்கும். 🥰
ஐயாவின் இந்த 97 ஆவது பிறந்தநாளில்... ஐயா சார்பாக, என் முதல் நாவலின் முகப்பு படத்தை பகிர்வதில் பெரிதும் மகிழ்கிறேன்... 🤎🥳
#murambu#novel#Tamil#vadivarasu
Two years of ஐயா (எ) 95 வயது குழந்தை! 🥰💚
எனது முதல் நூலான 'ஐயா (எ) 95 வயது குழந்தை!' வெளியாகி இன்றோடு ஈராண்டாகிறது.
அதைக் கொண்டாடும் விதமாகவும், மூன்றாம் ஆண்டில் ஐயா நூல் அடியெடுத்து வைப்பதற்கு வாழ்த்து சொல்லும் விதத்திலும்...
https://t.co/KYgkc1Wdwz
ஐயன்Sol_தனயன்Click - 098 💚
'நாம நம்பற ஒண்ணுக்காக கூடுமானவர ஒழக்கணும். அதே நேரத்துல அது சம்மந்தமா யார் என்ன சொன்னாலும் காதுல வாங்கினு, அதல நமக்கு எது வேணுமோ அத மட்டும் எடுத்துக்குனு போயினே இருந்தம்னா போதும், நெனச்சதுலாம் தானா நடக்க ஆரம்பிச்சிடும்.'
ஐயன்Sol_தனயன்Click - 096 💚
'எது ஒண்ணுக்கும் ஒரு நேரங்காலம் வரணும். அப்பதான் அது அதுவா தெரியும். இல்லனா கண்ணுமுன்ன இருக்க நல்லது பொல்லது கூட தெரியாமதான் இருக்கும், பாத்துக்க.'
ஐயன்Sol_தனயன்Click - 093 💚
'கோயில் இல்லாத ஊர்ல குடியிருக்கக் கூடாதுன்னு சொல்வாங்க. என்னக் கேட்டா, கோயில் இல்லாத ஊர்ல கூட குடியிருக்கலாம், ஆலனும் அரசனும் இல்லாத ஊர்ல குடியிருக்கக் கூடாதுன்னு சொல்வன், பாத்துக்க.'