கூட்டணியில் இல்லாத கழகத்தை நோக்கிக் கூவும் காங்கிரஸ் தலைவர் வாயை அடக்க வேண்டும்! இல்லையென்றால் அடக்கப்படும்!
சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்கு முன்பே, தனது திமிர்ப்பேச்சுகளால், தமிழ்நாட்டில் வலுவாக இருந்த பா.ஜ.க. எதிர்ப்புக் கூட்டணியைச் சீர்குலைத்த த.வெ.க. அடிமை மாணிக்கம் தாகூர் மீண்டும் தனது வாய்த்துடுக்கை வெளிப்படுத்தியுள்ளார்.
கழகத்தின் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில், கழகச் செயல்வீரர்கள் களத்தில் ஆற்றிய பணியை அங்கீகரிக்கும் விதத்திலும், அவர்களை ஊக்குவிப்பதற்காகவும் பேசிய பேச்சை எடுத்து வைத்துக்கொண்டு, தேர்தல் ஆணையத்தின் பாரபட்சமான நேர்மையற்ற SIR நடவடிக்கைக்கு வக்காலத்து வாங்குகிறார். இதனைக் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைமை ஏற்கிறதா? SIR-இல் இதுதான் அவர்களது நிலைப்பாடா?
தமிழ்நாட்டில் SIR-ஆல் மக்களின் வாக்குரிமை பறிபோகாமல் இருக்கத் தங்களால் இயன்றவரை தி.மு.க.வினர் பாடுபட்டனர். படிவங்களை நிரப்பிச் சமர்ப்பிக்க மக்களுக்கு உதவினர். எனினும், வரைவு வாக்காளர் பட்டியலிலும் பின்னர் இறுதி வாக்காளர் பட்டியலிலும் பலரது பெயர்கள் இடம்பெறாமல் போனது அனைவரும் அறிந்த உண்மை. இப்படி ஊரறிந்த உண்மையைத்தான் இந்தத் த.வெ.க. கால் அமுக்கி மாணிக்கம் மறைக்கிறார்.
உண்மையில், தி.மு.க.வின் தோல்விக்கு S.I.R.-உடன் சேர்த்து மற்றொரு காரணமும் இருக்கிறதுதான். அதனை மறுப்பதற்கில்லை. தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகித்துக் கொண்டே, தினமும் தி.மு.க. குறித்து மாணிக்கம் தாகூர், கிரிஷ் சோடங்கர், பிரவீன் சக்ரவர்த்தி போன்ற காங்கிரஸ் கட்சியில் இருக்கும் சில புல்லுருவிகள் தெரிவித்த கருத்துகளும் ஒரு காரணமாக அமைந்தன. இதனால், கூட்டணியின் நற்பெயரும் ஒற்றுமையும் பொதுவெளியில் கேள்விக்குள்ளானது. தி.மு.க. கூட்டணியிலும், காங்கிரஸ் கட்சியிலும் அங்கம் வகித்துக் கொண்டே, வேறு கட்சியின் ஸ்லீப்பர் செல்களாக இவர்கள் செயல்பட்டார்கள்.
இதனால், காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே கூட்டணியின் வெற்றிக்காக உண்மையாக உழைத்தவர்களின் உழைப்பும் சேர்ந்து வீணானது. காங்கிரஸ் கட்சியில் இருந்த இத்தகைய அழுகிய பிணங்களின் சுமையைச் சேர்த்துச் சுமந்ததும் கழகத்தின் வாக்குகள் சரிய ஒரு காரணமாக அமைந்துவிட்டது. அந்தச் சுமையைத் தூக்கி எறிந்தபின்னர் மக்களிடம் கழகத்துக்கான ஆதரவு தற்போது பன்மடங்கு பெருகியிருக்கிறது. கழக உடன்பிறப்புகள் புத்துணர்ச்சி பெற்றிருக்கிறார்கள். நடந்து முடிந்த இடைத்தேர்தல் முடிவுகளும் அதைத்தான் சொல்கின்றன.
“தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி நடைபெறும் போராட்டத்தில் திமுக எம்.பி.க்கள் பங்கேற்கவில்லை.” என்று கூற மாணிக்கம் தாகூருக்கு முதலில் என்ன தகுதி இருக்கிறது? தமிழ்நாட்டில் SIR-க்கு எதிராகப் போராடிய இளைஞர்கள் தவெக அரசால் கைது செய்யப்பட்டபோது, தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களை விடுவிக்கக் கோரிப் போராட்டம் நடத்தினர். அப்போது காங்கிரஸ் என்ன செய்துகொண்டிருந்தது? முதலமைச்சர் விஜய் அவர்களோடு காபி குடித்துக்கொண்டிருந்தவர்கள் கழகம் குறித்துப் பேசலாமா?
இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் தேர்தல் ஆணையத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்த கட்டுரை வெளியானதும், ஞானேஷ் குமார் அவர்களைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாட்டில் இருந்து முதல் ஆளாக அறிக்கை விட்டவர் எங்கள் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள். தொடர்ந்து இடைத்தேர்தல் பரப்புரைகளிலும் இதுகுறித்து வெளிப்படையாகப் பேசினார். அதுமட்டுமின்றி, கடந்த ஏப்ரல் மாதமே, ஞானேஷ் குமாரைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகளின் சார்பில் அளிக்கப்பட்ட நோட்டீசிலும் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.
பதவிப் பிச்சைக்காக கூட்டணி தர்மத்திற்கு எதிராக காங்கிரஸ் புல்லுருவிகள் தி.மு.க.வுக்குச் செய்த துரோகத்தையடுத்து இந்தியா கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறிவிட்டோம். இந்தியா கூட்டணியில் இல்லாத தி.மு.க. இனி அவர்கள் முன்னெடுக்கும் போராட்டங்களில் இணைய வேண்டிய அவசியம் இல்லை. இணைய வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் உரிமையும் அவர்களுக்கு இல்லை. இனி எங்கள் வழி, தனி வழி!
மாணிக்கம் தாகூர் சூடு, சொரணையுள்ள மனிதராக இருந்தால் காங்கிரசுடன் கூட்டணியில் இருக்கும் த.வெ.க.வின் தலைவர் விஜய் ஏன் போராட்டத்தில் இணையவில்லை என்று கேட்க வேண்டும். ஞானேஷ் குமார் குறித்தோ, பா.ஜ.க. குறித்தோ, பிரதமர் மோடி குறித்தோ ஒரு வார்த்தை கூட உதிர்க்காத தொடைநடுங்கிதான் விஜய். அப்படிபட்ட தொடைநடுங்கியின் காலைக் கழுவிக் குடிக்கும் மாணிக்கம் தாகூர் போன்றவர்களுக்குz தி.மு.க.வின் பா.ஜ.க. எதிர்ப்பு குறித்துப் பேசத் துளியும் அருகதை இல்லை.
கடந்த இரு நாட்களாக டெல்லியில் இந்தியாவின் இளைஞர் பட்டாளம் ஒன்றுதிரண்டு ஞானேஷ் குமார் அவர்களின் பதவிநீக்கத்தை வலியுறுத்திப் போராடி வருகிறார்கள். அவர்கள் மீது கடும் அடக்குமுறைகளும் வன்முறையும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. பல முன்னாள் முதலமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட இந்த அடக்குமுறையில் இருந்து தப்பவில்லை. இவற்றை எதிர்த்து தொடர்ந்து கடும் கண்டனங்களைக் கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தெரிவித்து வருகிறார்.
திரிணாமூல் காங்கிரஸ், SFI அமைப்பினர், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரே கூட இதற்காக மனப்பூர்வமாக நன்றி தெரிவித்து, கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் கண்டன அறிக்கையைப் பகிர்ந்து வருகின்றனர். இப்படிப்பட்ட எங்களைப் பார்த்துதான், “எஸ்.ஐ.ஆருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றால் பாஜகவை பகைத்துக்கொள்ள நேரிடும் என்று தி.மு.க. அஞ்சுகிறது” என்று மாணிக்கம் தாகூர் வார்த்தை வாந்தி எடுத்திருக்கிறார். எவரையும் கண்டு அஞ்சும் இயக்கம் அல்ல தி.மு.க.! தேர்தல் பரப்புரைக்கு இடையிலும், கருப்புடை தரித்து தொகுதி மறுவரையறை மசோதாவைக் கொளுத்தி பா.ஜ.க.வின் முயற்சியை வீழ்த்திய வீரர் எங்கள் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள்.
பாசிசம், பாயாசம் என பஞ்ச் பேசிய பக்கா பொடிமாஸ் முதலமைச்சர் விஜய் ஏன் இதுவரை SIR மற்றும் ஞானேஷ் குமார் குறித்துப் பேசவில்லை? அவர் காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கிறாரா இல்லையா? அவரைக் கேள்வி கேட்க மாணிக்கம் தாகூருக்கு ஏன் வக்கு வகையில்லை? காங்கிரஸ் கட்சியிலேயே சில சுயமரியாதை உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சர் விஜய்யின் கள்ள மவுனம் குறித்தும், தமிழ்நாட்டில் அவரது அரசு போராட்டங்களை அடக்குவது குறித்தும் கேள்வி எழுப்பி உள்ளனர். ஆனால், கட்சியின் தலைவராக இருக்கும் மாணிக்கம் தாகூரோ பனையூர் பண்ணையாரின் காலடியில் மண்டியிட்டு, திமுகவை நோக்கிக் கூவுகிறார்.
இவர்களெல்லாம் பா.ஜ.க. எதிர்ப்பு குறித்து கழகத்துக்குப் பாடம் எடுக்க வேண்டிய நிலையில் நாங்கள் இல்லை. அதிலும், பா.ஜ.க. எதிர்ப்பில் இந்தியாவிலேயே மிக வலிமை வாய்ந்த கூட்டணியைக் கட்டமைத்து, தொடர்ந்து இரு நாடாளுமன்றத் தேர்தல்களில் முழு வெற்றியைக் குவித்த தி.மு.க. குறித்து, அடுத்தவர் உழைப்பை உறிஞ்சி வாழ்க்கையை ஓட்டும் மாணிக்கம் தாகூர் போன்ற அட்டைப்பூச்சிகள் பேசக் கூடாது. த.வெ.க. போடும் பிஸ்கட்டுக்காக தி.மு.க. குறித்து இனிப் பேச வேண்டாம் என எச்சரிக்கிறோம். அவதூறு தொடர்ந்தால் அதற்குரிய விளைவை எதிர் கொண்டே ஆக வேண்டும்.
Humpty Dumpty had a Great Fall!
This is how our leader #MKStalin defended the alliance partners.
Will Mr. Vijay open his mouth about SIR, Rahul Gandhi, Gyanesh Kumar?
Humpty Dumpty sat on a wall,
Humpty Dumpty had a great fall;
All the king's horses and all the king's men
Couldn't put Humpty together again.
திமுக ஆட்சி: 2–3 மணி நேரமா Power Cut. Minnagam-க்கு 3 முறை புகார். Local EB number-ம் இப்போ Switch Off.
தவெக ஆட்சி: மின்வெட்டெல்லாம் தங்களை பாதிக்காது என்று மக்கள் நினைக்கின்றனர்
கித்னா வாய்டா @Ahmedshabbir20
படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டேன் எனச் சொல்லிவிட்டு, மக்கள் முன் நடித்துக்கொண்டே இருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் திரு. விஜய் அவர்களே,
இன்று மதுராந்தகம் Shooting-இல் உங்களின் Dialogue Delivery-யைப் பார்த்தேன். உங்களுக்குச் சில கேள்விகள்.
அ.தி.மு.க.வில் இருந்து விலைக்கு வாங்கி, உங்கள் கட்சியின் வேட்பாளராக நிறுத்தி இருக்கும் மரகதம் குமரவேலை அருகில் வைத்துக்கொண்டே, 'த.வெ.க. தூய சக்தி, தி.மு.க. தீய சக்தி' என்று உங்களால் எப்படி கூச்சமே இல்லாமல் பேச முடிகிறது?
வாக்களித்த மை, விரல் நகத்தில் இருந்து அழியும் முன்பே NDA கூட்டணி MLA-க்களைத் தூக்குவதுதான் தூயசக்தியா? போகும் இடங்களில் எல்லாம் உங்கள் வேட்பாளர்கள் பெறும் வரவேற்பைப் பார்த்தீர்களா? “த.வெ.க.விடம் எவ்வளவு வாங்குனீங்க?” எனக் கேட்டு மக்களே விரட்டி அடிப்பது கூட தெரியாத நபரா நீங்கள்?
அடுத்து, தி.மு.க.வும் பா.ஜ.க.வும் வேறு வேறு இல்லை என்றும் பேசியிருக்கிறீர்கள். சட்டமன்றத்தில் ’பா.ஜ.க.’ என்று சொன்னாலே, அது உங்கள் கூட்டணிக் கட்சி அமைச்சராகவே இருந்தாலும், அலறியடித்துக்கொண்டு அவைக்குறிப்பில் இருந்து நீக்குவது யாரென Live-இல் பார்க்கும் மக்களுக்குத் தெரியாதா?
கட்சி தொடங்கியதில் இருந்து இப்போது வரை எத்தனை முறை நீங்கள் பா.ஜ.க.வை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? எத்தனை போராட்டம் நடத்தி இருக்கிறீர்கள்? பா.ஜ.க.வை எதிர்த்து நீங்கள் செய்ததெல்லாம் அமைதிப் புரட்சி மட்டும்தானே? அதாவது சரணாகதிதானே?
“தி.மு.க. மாதிரி படிப்படியா, தகுதி வாய்ந்தவங்களுக்கு எனச் சொல்ல மாட்டேன். நடைமுறைக்குச் சாத்தியமானதை மட்டும்தான் வாக்குறுதியில் கொடுத்திருக்கேன்”- என அந்நியன் மாதிரி பேசிவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் ‘கஜானா காலி’ என அம்பி Mode-இல் பம்மி, கையை விரிக்கிறீர்களே? இதுதான் நீங்கள் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும் இலட்சணமா?
உங்கள் ஆட்சியின் திட்டங்கள் என்று பார்த்தால், நாங்கள் கொண்டு வந்த திட்டங்களின் நீட்சி மட்டுமே!
நீங்களாகக் கொண்டு வந்த புதுமையான திட்டமெல்லாம்: வெற்றி மின்வெட்டுத் திட்டம்,
வெற்றி அரிவாள் வெட்டு திட்டம்,
வெற்றி விலைவாசி உயர்வு திட்டம்,
வெற்றி டெங்கு காய்ச்சல் திட்டம்,
வெற்றி பால் தட்டுப்பாடு திட்டம்
இவ்வளவுதான்!
பெண்களைத் தி.மு.க.வினர் அவதூறாகப் பேசுகிறார்கள் எனப் பொய் பேசும் நீங்கள், உங்கள் Virtual Abuser-களின் Track Record-ஐ எடுத்துப் பாருங்கள்.
“ஜெம் வீரமணி வழக்கைப் பத்தி வாய திறங்க ஸ்டாலின் சார்”- என high pitch-இல் கத்தினீர்களே? உங்கள் Script Paper-ஐ Update செய்யாமல் வந்துவிட்டீர்களா என்ன? நான் விளக்கமாகப் பேசிவிட்டேன். நீங்கள்தான் டிவி, பேப்பர் எதையும் பார்க்கவில்லை போல. எதிர்க்கட்சியைப் பார்த்து சட்டமன்றத்தில் நீங்கள் சொன்னதையே சொல்கிறேன்... பேப்பர் படிச்சிருந்தா தெரிஞ்சிருக்கும்!
இந்த வழக்கை அரசியல் ஆக்க கூடாது என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியதைக் கூடவா உங்கள் காதுகளில் அதிகாரிகள் ஓதவில்லை?
கரூரில் 41 மனித உயிர்கள் பலியானதைக் கூட கண்டுகொள்ளாமல் ஓடி ஒளிந்துகொண்ட உங்களைப் பற்றி, “எந்தத் தலைவரும் தன் தொண்டர்கள் சாவதை விரும்ப மாட்டார்”- என்றுதான் நான் சொன்னேன். உங்களின் கோழைத்தனமான ஓட்டத்தை வைத்து அற்ப அரசியல் ஆதாயம் தேட நானோ தி.மு.க.வோ முயலவில்லை.
ஆனால் நீங்கள் எந்த அளவு தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறீர்கள் என்பதைச் சும்மா இருக்கும் பெரும்பாலான நேரத்தில் யோசித்துப் பாருங்கள்.
அதனால், “முதலமைச்சர் பொறுப்புக்குரிய கண்ணியத்தோடுதான் நாம் பேசுகிறோமா?” என்பதை நீங்களே சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள் CM Sir.
மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரையில் மரகதம் குமரவேலைப் பக்கத்திலேயே வைத்துக் கொண்டு, 'சாலை வசதி இல்லை, தண்ணீர் வசதி இல்லை' எனப் பரப்புரை செய்கிறார் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா.
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியை உள்ளடக்கிய காஞ்சிபுரம் பாராளுமன்றத் தொகுதியின் உறுப்பினராக 2014 முதல் 2019ஆம் ஆண்டு வரையிலும் இருந்தவர் இதே மரகதம் குமரவேல்.
மதுராந்தகம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக 2021 முதல் 2026ஆம் ஆண்டு வரையிலும் இருந்தவரும் இதே மரகதம் குமரவேல்தான்.
சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினராக இருக்கையில், தொகுதியின் அடிப்படைச் சிக்கல்களான சாலை வசதி, தண்ணீர் வசதி போன்றவற்றைக்கூட செய்து தராது என்ன செய்து கொண்டிருந்தார் மரகதம் குமரவேல்?
I use two of @IDFCFIRSTBank’s premium credit cards - Mayura and FIRST Wealth - for almost all my spending.
But the nonstop marketing/spam calls from IDFC are getting really irritating. Multiple calls again and again, despite already being a premium customer.
Seriously considering getting rid of my IDFC cards because of this. 😤
Please fix this, @IDFCFIRSTBank.
Creta Electric வச்சிருக்கேன். 51KW மாடல். முழுக்க சார்ஜ் பண்ணினா 475 கிமீ ஓடும்.
எல்லா ஊருக்கும் இந்த வண்டியதான் எடுத்துக்கிட்டு போறேன். 120KW fast charger ல சார்ஜ் பண்ணினா, சாப்பிடுற நேரம் தான் ஆகுது. சென்னையிலேர்ந்து கன்னியாகுமரி வரை போனதுக்கு, ரெண்டு இடந்துல தான் சார்ஜ் போட்டோம். அதுவும், அதே நேரத்துல lunch and tiffin break முடிச்சாச்சு.
சென்னை டு பெங்களூரூ - வீட்டுல full சார்ஜ் போட்டுட்டு, அதுக்கப்புறம் பெங்களூரூ போய் தான் சார்ஜ் போடுவோம். எல்லா விதமான சாலைகளுக்கும் regen level driving இருக்குறதால மைலேஜ் ம் நல்லா கிடைக்கிது.
சென்னை டு ஹைதராபாத் போகும்போதும் அதே தான். ரெண்டு இடத்துல சார்ஜ் போட்டுடலாம். அவ்ளோதான். போதும். நிம்மதியா ஊருக்கு போய் சேர்ந்துடலாம்.
தொடக்கத்துல எனக்கும் ரொம்ப பயமா இருந்துச்சு. ஆனா வாங்கின பிறகு அந்த பயம் முழுக்க பொய்டிச்சி. வீட்டுல 11KW சார்ஜர் போட்டுருக்கேன். 5 மணி நேரத்துல முழுக்க சார்ஜ் ஏறிடுது. City டிரைவிங் முழுக்க இந்த கார் தான். இப்போவெல்லாம் ரொம்ப rare ஆ தான் பெட்ரோல் வண்டிய எடுக்குறோம்.
என்ன, கரண்ட் பில் கொஞ்சம் அதிகமா இருக்கும். சோலார் போட்டுட்டா, அதுவும் சரியாயிடும்.
Once எலெக்ட்ரிக் கார் வாங்கி ஓட்டிட்டீங்கன்னா, அதுக்கப்புறம் பெட்ரோல்/டீசல் கார் ஓட்டவே கொஞ்சம் கடுப்பா இருக்கும் (எனக்கு இப்போ அப்படித்தான் இருக்கு). எலெக்ட்ரிக் வண்டியோட பிக்கப், smoothness எப்போவும் பெட்ரோல்/டீசல் வண்டியில கிடைக்கவே கிடைக்காது.
புதிய விஷயங்கள் வரும்போது எப்போவும் கொஞ்சம் பயமா தான் இருக்கும். அதை அரவணைக்க கத்துக்கிட்டோம்னா, அது நமக்கு ரொம்ப உபயோகமா இருக்கும்.