‘சாதி என்னும் தாழ்ந்த 'படி' நமக்கெல்லாம் தள்ளுபடி! நூலைப்படி’, என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் கவ���தையை மேற்கோள் காட்டி, இளம் பேச்சாளர்களிடையே வாசிப்பின் அவசியத்தையும், வரலாற்றின் முக்கியத்துவத்தையும், எடுத்துரைத்து அண்ணன் @Suba_Vee அவர்கள் ஆற்றிய உரையின் காணொலித் தொகுப்பை, இன்று மாலை 6.30 மணிக்கு, நம் @Kalaignarnews தொலைக்காட்சியில் காணலாம்.
#கழக_இளைஞர்_அணி @uyirinummelana
கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் உத்தரவின்பேரில், கழக மாவட்டத்துக்கு உட்பட்ட ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர் ஆகிய அமைப்புகளுக்கு இளைஞர் அணி அமைப்பாளர்- துணை அமைப்பாளர்களை நியமித்து வருகிறோம்.
தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற நேர்காணலில் கலந்துகொண்டோரிடம் இருந்து பெறப்பட்ட தரவுகள், உரிய பரிந்துரைகள், தற்போதைய நிர்வாகிகளின் செயல்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் தலைமைக் கழகத்தின் ஒப்புதலுடன் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதுவரை 35 கழக மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது விருதுநகர் வடக்கு, விருதுநகர் தெற்கு, தென்காசி வடக்கு ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர்களுக்கு இளைஞர் அணி அமைப்பாளர்-துணை அமைப்��ாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் அனைவருக்கும் என் அன்பையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
#கழக_இளைஞர்_அணி @KKSSRR_DMK @TThenarasu @MLARaja_SNKL @GprMadurai @Tenkasi_MP @Mahakrish8 @mukeshtms2946
கழக இளம் பேச்சாளர்களுக்கு எளிதாகப் புரியும் வகையில் உலக வரலாற்றையும் கழக வரலாற்றையும் உணர்ச்சிப் பொங்க எடுத்துரைத்து, அண்ணன் @dindigulleoni அவர்கள் ஆற்றிய உரையின் காணொலித் தொகுப்பு, இன்று மாலை 6.30 மணிக்கு நம் @Kalaignarnews தொலைக்காட்சியில்…
#கழக_இளைஞர்_அணி@uyirinummelana
தமிழ்நாடு அரசின�� சமூக நல்லிணக்கத்திற்கான கோட்டை அமீர் விருது பெற்றவரும் - தொழில் அதிபருமான திரு.ஜமாலுதீன் அவர்களின் இல்லத்திருமண விழா சென்னை கீழ்ப்பாக்கம் அருகே இன்று நடைபெற்ற போது, அதில் கலந்து கொண்டோம்.
மணமக்கள் முகமது அயான் - ப்பரிகா சயினாப் வாழ்வில் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ்கவென வாழ்த்தி மகிழ்ந்தோம்.
@Iyankarthikeyan
நகைச்சுவை எனும் மாபெரும் அரசியல் ஆயுதத்தின் மூலம், பகுத்தறிவு, சமூகநீதி, மதவாத எதிர்ப்புக் கருத்துகளை இளம் பேச்சாளர்களிடம் பரப்பிய 'புதுகை பூபாளம்' கலைக்குழுவினரின் நையாண்டி கலை நிகழ்ச்சியை இன்று மாலை 6.30 மணிக்கு நம் @Kalaignarnews தொலைக்காட்சியில் காணலாம்!
#கழக_இளைஞர்_அணி@uyirinummelana
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையிலான #திராவிட_மாடல் அரசின் சீரிய நடவடிக்கைகளால் நாட்டிலேயே அதிகபட்சமாக 9.69% வளர்ச்சியை தமிழ்நாடு எட்டியுள்ளது.
ஒன்றிய அரசின் புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை, 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ்நாடு அடைந்துள்ள உயரத்தை அடிக்கோடிட்டு காட்டுகிறது.
ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீட்டில் காட்டும் பாரபட்சத்துக்கு நடுவே, நம் முதலமைச்சர் அவர்கள் தீட்டிய திட்டங்களின் வெற்றிக்கு இந்தப்புள்ளிவிவரமே சாட்சி.
தமிழ்நாடு ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என��ம் இலக்கை நோக்கி நடைபோடுவதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.
நம் முதலமைச்சர் அவர்களின் கரங்களை மேலும் வலுப்படுத்தி தமிழ்நாட்டின் வளர்ச்சியை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் செல்வோம்.
கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவ���்களின் உத்தரவின்பேரில், கழக மாவட்டத்துக்கு உட்பட்ட ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர் ஆகிய அமைப்புகளுக்கு இளைஞர் அணி அமைப்பாளர்- துணை அமைப்பாளர்களை நியமித்து வருகிறோம்.
தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற நேர்காணலில் கலந்துகொண்டோரிடம் இருந்து பெறப்பட்ட தரவுகள், உரிய பரிந்துரைகள், தற்போதைய நிர்வாகிகளின் செயல்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் தலைமைக் கழகத்தின் ஒப்புதலுடன் இந்த நிய���னங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதுவரை 33 கழக மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தேனி வடக்கு, தேனி தெற்கு மாவட்டங்களுக்கு உட்பட்ட ஒன்றியம், நகரம், பேரூர்களுக்கு இளைஞர் அணி அமைப்பாளர்-துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் அனைவருக்கும் என் அன்பையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
#கழக_இளைஞர்_அணி @CumNRamaksinan @ThangaTamilselv @GprMadurai @ajipkhan242739 @SelvamSenj50722
ஆண்டாண்டுகாலமாய் நம் கழகத்தின் மீது சுமத்தப்பட்ட அவதூறுகளை முறியடித்து, கழகம் மீண்டு வந்த வரலாற்றை விளக்கி, கழக இளம் பேச்சாளர்களுக���கான இரண்டுநாள் பயிற்சி முகாமில், கழக துணைப் பொதுச்செயலாளர் அண்ணன் @dmk_raja எம்.பி அவர்கள் ஆற்றிய உரையின் காணொலி தொகுப்பை இன்று மாலை 6.30 மணிக்கு நம் @Kalaignarnews தொலைக்காட்சியில் காணலாம்!
#கழக_இளைஞர்_அணி @uyirinummelana
���மூகநீதிக்கு எதிரான நீட் தேர்வை எதிர்த்துத் தொடர்ந்து போராடி வரும் நம் `திராவிட மாடல் அரசு’ கடந்த 08.02.2022 அன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றிய நீட் விலக்கு சட்ட முன்வடிவிற்கான ஒப்புதலை, ஒன்றிய அரசு மறுத்துள்ளது.
ஒன்றிய அரசு நமது கோரிக்கையை நிராகரித்தாலும், நீட் தேர்வை அகற்றுவதற்கான நமது போராட்டம் தொடரும்.
தடைகள் எதுவரினும் கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமை���ில் போராடுவோம். வெல்வோம்! நீட் விலக்கே நம் இலக்கு!
#BanNEET
சென்னை மேற்கு மாவட்டம் - நம்முடைய #ChepaukTriplicane தொகுதி - சேப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மாவட்டக்கழக பிரதிநிதி அண்ணன் என்.தணிகாசலம் - திருமதி.சசிகலா ஆகியோரின் அன்பு மகள் த.நந்தினி மற்றும் திரு.எஸ்.பால்ராஜ் - திருமதி.செண்பகவள்ளி ஆகியோரின் புதல்வன் தம்பி பா.முக்கேஷ் ஆகிய���ரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை அசோக் பில்லர் அருகேயுள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்ற போது அதில் பங்கேற்றோம்.
இல்வாழ்வில் அடியெடுத்து வைக்கும் மணமக்கள் இருவரும் கழகத்தலைவர் அவர்களும் - மாநில உரிமைக்கான உறுதியும் போல பல்லாண்டு வாழ்கவென வாழ்த்தி மகிழ்ந்தோம்.
@Anbil_Mahesh @Dayanidhi_Maran @nchitrarasu @Madhanmohandmk
நம் வீரர்களின் திறமைக்கு களம் அமைத்துக் கொடுப்பதில், விளையாட்டுத்துறை சார்ந்த கட்டமைப்பே அடித்தளமாக திகழ்கிறது.
அந்த வகையில், தேனி மாவட்ட விளையாட்டு வளாகத்தில் சுமார் ரூ.6 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கினை (Multipurpose Indoor Stadium) சென்னை நேரு விளையாட்டு அரங்கிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தோம்.
Volley Ball, Basket Ball, Table Tennis, Shuttle Cock, போன்ற விளையாட்டுகளுக்கான வசதிகளைக் கொண்ட இந்த அரங்கத்தில், ஒரே நேரத்தில் 600 பார்வையாளர்கள் வரை அமர்ந்து போட்டிகளை காண முடியும்.
மேலும், இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ள Mini Stadium-இல் ரூ.50 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய பளு தூக்கும் பயிற்சி மையத்தையும் காணொலி வாயிலாக திறந்து வைத்தோம்.
இந்த புதிய வசதிகள், தேனி மற்றும் இராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு வீரர்களின் பயிற்சிக்கும் சாதனைக்கும் நிச்சயம் துணை நிற்கும். அவர்களுக்கு என் வாழ்த்துகள்.
@SportsTN_@IPeriyasamy_@RRajakannappan@PKSekarbabu@iparanthamen@KSSARAVANAKUM10@Atulyamisraias #JMeghanathaReddyIAS
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் உத்தரவின்படி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில், “தமிழ்நாடு விளையாட்டு அறிவியல் மையம் - Tamil Nadu Centre for Sports Science அமைக்கப்படும்” என��று சட்டப்பேரவையில் கடந்த 2023-2024-ஆம் ஆண்டு அறிவித்தோம்.
அந்த அறிவிப்பின் அடிப்படையில், ரூ.3 கோடி செலவில் சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்க வளாகத்தில் உள்ள ஒலிம்பிக் அகாடமி கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு விளையாட்டு அறிவியல் மையத்தை இன்று திறந்து வைத்தோம்.
பயிற்சிக்காகவும், விளையாட்டின் போது ஏற்படும் காயங்களை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் உதவியோடு ஆற்றுவத���்கும் தேவையான நவீன உபகரணங்கள் இந்த மையத்தில் இடம்பெற்றுள்ளன.
Tamil Nadu Centre for Sports Science-ஐ பயன்படு��்தி உடல் அளவிலும், மனதளவிலும் நம் வீரர்கள் வலிமை பெற வாழ்த்தி மகிழ்கிறோம்!
@SportsTN_ @IPeriyasamy_ @RRajakannappan @PKSekarbabu @iparanthamen @KSSARAVANAKUM10 @Atulyamisraias #JMeghanathaReddyIAS
கழகத் தலைவர் மாண்புமிகு @mkstalin அவர்கள் தலைமையிலான #திராவிடமாடல் ஆட்சியில் கல்வியிலும் விளையாட்டிலும் பல முன்னோடித் திட்டங்களின் மூலம், இந்திய ஒன்றியத்திற்கே வழிகாட்டும் மாநிலமாக திகழ்கிறது நம் தமிழ்நாடு!
கால்பந்து மைதானம்-உடற்பயிற்சிக் கூடம்- அறிவியல் ஆய்வகம் என இள���்தலைமுறையினரின் அறிவையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் வகையில், நம் தொகுதியிலும் அரசுப் பள்ளி மற்றும் சென்னை மாநகராட்சியிலும் பல்வேறு பணிகளை இன்று தொடங்கி வைத்தோம்.
உலகம் முழுவதும் கொண்டாடப்படும் கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்க நம் திராவிட மாடல் அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
அந்த வகையில், சென்னை பட்டின��்பாக்கம் லூப் சாலை அருகே @chennaicorp மூலம் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் @mylaivelu71 அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1.24 கோடி மதிப்பில் புனரமைக்கப்பட்டுள்ள கால்பந்து மைதானத்தை இன்று திறந்து வைத்தோம்.
கால்பந்து விளையாட்டில் ஆர்வமிக்க பட்டினப்பாக்கம் பகுதி இளைஞர்கள், இந்த புதிய மைதானத்தை பயன்படுத்தி தங்கள் திறமையை மென்மேலும் வளர்த்துக்கொள்ள வாழ்த்தி மகிழ்கிறோம��.
@PriyarajanDMK @MMageshkumaar
சென்னை மாநகராட்சி பூங்காக்கள் பொழுதுபோக்கிற்கான பகுதிகளாக மட்டுமின்றி, பொதுமக்களின் உடல்நலனை பேணி காப்பதற்கான இடமாகவும் திகழ்கின்றன.
அந்த வகையில், மயிலாப்பூரில் உள்ள நாகேஸ்வரராவ் பூங்காவில் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் @mylaivelu71 அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.1.08 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள ஆண்கள் & பெண்களுக்கான நவீன உடற்பயிற்சிக் கூடங்களை இன்று திறந்து வைத்தோம்.
இந்த உடற்பயிற்சிக்கூடத்தை பயன்படுத்தி உடல்நலன் மற்றும் மனநலனை வலுப்படுத்திக்கொள்ள மயிலை பகுதி மக்களுக்கு என் அன்பும், வாழ்த்தும்!
@PriyarajanDMK@MMageshkumaar
“உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்; நீங்கள் இழப்பதற்கு எதுவுமில்லை, ஆனால் அடைவதற்கு ஒரு பொன்னுலகம் உண்டு” என்று அறைகூவல் விடுத்த பொதுவுடைமைப் பேராசான் கார்ல் மார்க்ஸ் அவர்களுக்கு சென்னையில் திருவுருவச்சிலை அமைக்கப்படும் என்றும்,
நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினராக மக்கள் பணி ஆற்றி மறைந்த பெரியவர் மூக்கையா தேவர் அவர்களுக்கு உசிலம்பட்டியில் மணி மண்டபம் அமைக்கப்படும் என்றும், வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்புகளை நம் முதலமைச்சர் @mkstalin அவர்கள் சட்டப்பேரவையில் இன்று வெளியிட்டுள்ளார்கள்.
தமிழ்நாடு மட்டுமன்றி உலகெங்கும் மனித சமுதாய உயர்வுக்காக உழைத்த மற்றும் மக்களின் நன்மதிப்பை பெற்ற தலைவர்களுக்கு சிறப்பு சேர்த்து, அடுத்த தலைமுறைக்���ு அவர்களை அறிமுகம் செய்யும் நம் #திராவிட_மாடல் அரசின் முன்னெடுப்புகள் தொடருவதில் மகிழ்ச்சியும் - பெருமையும் அடைகிறோம்.
#KarlMarx
நம்முடைய #ChepaukTriplicane தொகுதி - திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள லேடி விலிங்டன் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ‘நம்ம ஸ்கூல், நம்ம ஊரு பள்ளி’ திட்டத்தின் கீழ் ரூ.3.65 கோடி செலவில், #Virtusafoundation பங்களிப்புடன், ஒருங்கிணைந்த அறிவியல் ஆய்வகம், நவீன சமையற்கூடம் - உணவு அருந்தும் கட்டடம் ஆகியவை��் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
இந்த புதிய வசதிகளை லேடி விலிங்டன் பள்ளியில் இன்று காலை திறந்து வைத்தோம்.
மேலும் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த தட்டச்சர் பணிக்கு தேர்வாகியு��்ள 5 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினோம்.
நம்மிடம் அன்பை பகிர்ந்து கொண்ட மாணவச் செல்வங்களை வாழ்த்தி மகிழ்ந்தோம்.
@Anbil_Mahesh @nchitrarasu @ARPMkamaraj