We should have listened when one child cried.
Instead, we waited until far too many of our children died.
A system where coaching replaces learning, anxiety replaces curiosity, and criminality replaces merit is rotten.
A nation has failed when its children are met with barricades and batons instead of answers.
@Wangchuk66, the nation will need your conscience for the journey ahead. Please end your fast.
To the children of India: You are the best of us. You have done your duty. It is now time for the country to do its duty by you. May your dreams forever be bigger than our failures.
@cockroachisback #CJPProtest
பாடல் என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும். அந்த அன்பை எங்கு தேடுவேன் அம்மா?
இறக்கி வைக்கமுடியாத சோகம் பலர்க்கும் இருக்கும். அவர்க்கெல்லாம் ஆழ்ந்த இரங்கல்கள்.
கே. பாக்யராஜ் என்கிற (எனக்கு 50 வருடங்களுக்கு முன் அறிமுகமான) ராஜன் இன்று இல்லை. ஒரே மாதத்திற்குள் இரண்டு ராஜாக்களை இழந்து விட்டது தமிழ் கூறும் நம் சினிமா.
தமிழ்த் திரையிசையின் முடிசூடா மன்னர்களாகத் திகழ்ந்த கவியரசுக்கும் மெல்லிசை மன்னருக்கும் இன்று பிறந்த நாள். ஒரு பாடலின் உயிரும் உடலுமாக இரு துருவங்கள் இணைந்து பயணிக்க முடியும் என்பதன் வரலாற்று சாட்சியாக ஒலித்தவர்கள் கண்ணதாசனும் எம்.எஸ். விஸ்வநாதனும். மாமேதைகளை இந்நாளில் மனம் கொள்கிறேன்.
திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் கிராமத்தில் செயல்பட்டு வந்த தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவினால் தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதும், பலர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருவதும் அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். பாதிக்கப்பட்டோர் விரைவில் குணமடைய விழைகிறேன்.
உயிராபத்து விளைவிக்கும் ரசாயனங்களைக் கையாளும் தொழிற்சாலைகளில் அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளும் சமரசமின்றிக் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். அலட்சியம் கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய வேண்டும்.
காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பையும், 2018-ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் மதிக்காமல் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட தன்னிச்சையாக முனையும் கர்நாடக அரசுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அவர்கள் தனித்தீர்மானத்தைக் கொண்டு வந்து அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றி இருப்பது பாராட்டுக்குரியது.
தமிழ்நாட்டின் நீர் உரிமையையும், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் மேகதாது விவகாரத்தில் அரசியல் மனமாச்சரியங்களை ஒதுக்கிவிட்டு அனைவரும் ஓரணியாக நின்று ஒருமித்த குரலாக ஒலித்த தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் மனதாரப் பாராட்டுகிறேன்.
@CMOTamilnadu
உங்க இசை உங்க வயசைப் போல பல நூறு மடங்கு வாழும். நீங்களும் எங்கள் பேராசைகளையெல்லாம் கடந்த ஆயுளைப் பெற்று வாழவேண்டும், இசையோடு.
உங்கள்
கமல்
@ilaiyaraaja#HBDIlaiyaraaja
சூலூர் அருகே 10 வயது நிரம்பிய சிறுமி பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் மனம் கொதிக்கச் செய்கிறது. குற்றவாளிகளுக்கு விரைவு நீதிமன்றம் மூலம் அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும். தங்கள் செல்லமகளுக்கு நிகழ்ந்த கொடுமையை எண்ணி உருக்குலைந்து போயிருக்கும் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு அளிக்கப்பட வேண்டும்.
குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்.
வெறும் புள்ளிவிவரங்களுக்கான வளர்ச்சியைக் காட்டாமல், தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தையும், மாநிலத்தின் இயற்கை வளங்களையும் பாதுகாத்து, நீடித்த மற்றும் சமநிலையான வளர்ச்சியையே (Sustainable and Inclusive Growth) @TRBRajaa முன்னெடுத்தார்.
#DravidianModel focused on sustainability and environmental engineering
•• பொருளாதாரம் ••
⚡ நேர்மையான துரித நிர்வாகம்
🏡 மின்னணு இல்லங்கள்
🌾 நவீன தற்சார்பு கிராமங்கள்
👩 பெண்சக்தி
🌿 பசுமைப் புரட்சி பிளஸ்
🏥 சூழலியல் சுகாதாரம்
📈 செழுமைக் கோடு
(1/4)
•• விளையாட்டு மேம்பாடு ••
🏃 ஆரோக்கியமான தமிழ்நாடு
🏟️ உலகத்தர விளையாட்டு வளாகங்கள்
⚽ கிராமம்தோறும் விளையாட்டு வசதிகள்
🥋 பாரம்பரிய விளையாட்டுகள் ஊக்கம்
♿ மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள்
🏅 வீரர்கள் & பயிற்சியாளர்களுக்கு பயிற்சி மையங்கள்
📋 போட்டி ஒழுங்கமைப்பு
(1/2)