உன்
கொஞ்சலின்றி
துவங்காத நாட்கள்
உன்
சிரிப்பின்றி
நகராத உரையாடல்கள்
உன்
பார்வையின்றி
இருளாகும் பகல்கள்
உன்
அணைப்பின்றி
தூங்காத நாட்கள்
உன்
முத்தங்கள் இன்றி
விடியாத இரவுகள்
உன்
அழுகையின்றி
ஆராத வலிகள்
இப்படியாக
எனக்கான நிகழ்வுகள்
அனைத்தும்
உன்’னில் மட்டுமே..!
-மீள்.
அப்பொழுதுதான்
குளித்து முடித்து
ரோமம் காற்றில் பறக்க
வால் குழைத்து
ஓடிவந்த அழகு நாய்க்குட்டி
வாகனத்தில் அடிபட்டு
இல்லாமல் போனது
இத்தனையும்
பார்த்தபின்னும்
இன்னும் ஏன்
என் செருக்கு
குறையவே இல்லை?!!!
என்னோடு
நடைபயிற்சி
செய்தவர்
நடை தளர்ந்து
சில நாட்களாய் ஏனோ
தடி ஊணி நடக்கின்றார்
அலுவலகத்தில்
அருகே அமர்ந்து
வேலை செய்தவர்
அசைவின்றி
அமர்ந்தவாறே
மரித்துபோனார்
ஊட்டி கொடைக்கானல் மக்கள் சென்னை வந்து மழைச்சாரலையும் குளிரையும் அனுபவித்து , ஒரு கோப்பை காபியுடன் இளையராஜா பாடலொன்றையும் கேட்டு மகிழ்ந்து செல்லுங்கள்😍
🎧
ஆத்தாடி அம்மாடி தேன் மொட்டுத்தான் கூத்தாட தூறல்கள் நீர் விட்டுத்தான்
கொடியிலே அரும்புதான் குளிரும் மழையில் நனையும் பொழுது