ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு 15 நிமிஷம் ஒதுக்குங்க! 😊
திங்கட்கிழமை என்ன பண்ணணும்னு அப்பவே Plan பண்ணிடலாம்.
✅ இந்த வாரத்துக்கான 3 முக்கியமான Goals எழுதுங்க.
✅ திங்கட்கிழமை முடிக்க வேண்டிய Top 3 Tasks முடிவு பண்ணுங்க.
✅ Meetings, Pending வேலைகளை ஒருமுறை Check பண்ணுங்க.
✅ காலையில என்ன வேலை முதலில் செய்யணும்னு Decide பண்ணுங்க.
✅ சீக்கிரம் தூங்கப் போங்க.
திங்கட்கிழமை காலை எழுந்ததும் “இன்னைக்கு என்ன பண்ணலாம்?“னு யோசிக்கிறதுக்கு பதிலா, நேரடியா வேலையை ஆரம்பிக்கலாம்.
A productive Monday starts on Sunday night! 💯
@Deltarains Bro, Can we expect the rain in Perambalur district on 6th August & 7th August?
We have the onion harvesting work in our farm which needs dry climate and need to plan accordingly.
@rajeshkmoorthy
Anna, what's going on HDFC? Why everyone is trolling and whining about the new chairman announcement?
Ithunala ethachum insurance affect aaguma customers ku like health, term insurances etc...
#HDFC
@sunnewstamil அது எப்படி உட்கட்சி விவகாரம் ஆகும்...
அவர் கட்சியின் பிரதிநிதி இல்லையே...
அரசின் பிரதிநிதி அல்லவா...
@thirumaofficial கூட்டணி கட்சியினர் தான் இது போன்ற விவகாரங்களில் அழுத்தம் கொடுக்கவேண்டும்... இப்படி சொன்னால் எப்படி...
தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியாக கர்நாடகாவை சார்ந்த திரைப்பட (ஜனநாயகன் ) தயாரிப்பாளர் வெங்கட் நாராயணாவை நியமித்துள்ளார் முதல்வர் விஜய் அவர்கள்
தமிழக பிரதிநிதியாக இருக்க தமிழ்நாட்டை சார்ந்த யாருக்கும் தகுதியில்லையா ? @CMOTamilnadu
தமிழே தெரியாதவரை தமிழகத்தின் பிரதிநிதியாக நியமித்த திரு. ஜோசப் விஜய் அரசு!
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாகச் செயல்பட கர்நாடகாவைச் சேர்ந்த திரு. கே. வெங்கடநாராயணா அவர்களை நியமிக்கவிருப்பதாக திரு. ஜோசப் விஜய் அவர்களின் அரசு அரசாணை வெளியிட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியளிப்பதோடு, பல்வேறு கேள்விகளையும் எழுப்புகிறது.
மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையே ஓர் இணைப்புப் பாலமாகச் செயல்பட வேண்டிய முக்கியப் பொறுப்பில், தமிழகத்திற்கு சம்பந்தமே இல்லாத ஒருவரை எப்படி நியமிக்கலாம்? அன்னைத் தமிழ் மொழியையும், நமது தமிழ் கலாச்சாரத்தையும் முழுமையாக அறியாத ஒருவர் எப்படி தமிழக மக்களின் எண்ணத்தையும், தமிழக அரசின் குரலையும் டெல்லியில் எதிரொலிக்க முடியும்?
சட்டம் அறிந்த, நாடாளுமன்ற நடப்புகள் அறிந்த தமிழகத்தைச் சார்ந்தோரையெல்லாம் விடுத்து, கர்நாடக முதல்வர் திரு. டி.கே.சிவகுமாரின் நெருங்கிய நண்பரைப் பிரதிநிதியாக நியமிக்கக் காரணம் என்ன? முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்கள் நடித்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் என்பதாலா? அல்லது, காங்கிரஸின் நிர்பந்தமா? கூட்டணிக் கட்சியான காங்கிரஸிடம் பேசி மேகதாது அணைப் பிரச்சனையை முடிக்காமல், டெல்லி வரை கடிதம் எழுதியது போதாதென்று, இன்று கூட்டணிக் கட்சியின் நிர்பந்தத்திற்கு பயந்து, கர்நாடக மாநிலத்தவரை டெல்லிக்கு அனுப்பி தமிழர்கள் நலனைக் கைகழுவுவது தான் தூய சக்தியா?
மாற்று சக்தி என்று கூறி, காங்கிரஸின் கைப்பாவையாகச் செயல்பட்டு, தமிழகத்தை இப்படி வஞ்சிப்பதற்கு திரு. ஜோசப் விஜய் அரசு வெட்கப்பட வேண்டும்!
தமிழ்நாட்டுக்கான டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக கர்நாடகத்தைச் சேர்ந்த வெங்கட் நாராயணாவை நியமித்திருக்கும் தவெக அரசின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. தனது திரைப்படத்தைத் தயாரித்தாரெனும் ஒற்றைக்காரணத்திற்காக, முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அரசுப்பொறுப்பில் தமிழர் அல்லாத ஒருவரை முதல்வர் விஜய் பணியமர்த்தியிருப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. இதனை வன்மையாக எதிர்க்கிறேன்.
காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், கர்நாடகாவைச் சேர்ந்தவரே டெல்லிக்கான தமிழ்நாட்டுப் பிரதிநிதி என்பது வெட்கக்கேடு இல்லையா? தமிழே அறியாதவர்களை தமிழ்நாட்டுக்கானப் பிரதிநிதியாக அமர்த்துவது தமிழர்களை இழிவுசெய்யும் அவமரியாதை இல்லையா? இது தவெக அரசு செய்யும் வெளிப்படையான அதிகார முறைகேடாகும்.
ஆகவே, தமிழ்நாட்டுக்கான டெல்லி பிரதிநிதி எனும் பொறுப்பிலிருந்து வெங்கட் நாராயணாவை உடனடியாக விடுவித்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டுமென தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ
@Stalin__SP You can take alternate route ...
For => Chennai to Dindigul
Chennai - Villupuram - Perambalur - Thuraiyur - Kulithalai - Manapparai -Dindigul
To Madurai
From Kulithalai -> Manapparai - Viralimalai - Madurai
For Return follow the same in reverse order..
@Stalin__SP
Pechellam Nallathan iruku... Ivlo scheme thaandi lose pannnirukinganaa retrospect pannunga... Enna than aatchi matram makkal virumbunalum oru sitting CM ah yen lose pannom nu... It is not even less margin... @mksta
சட்டமன்றத்தில் என்னை தேடாதீர்கள்; மக்கள் மனதில் பதிந்திருக்கிறான் இந்த மு.க.ஸ்டாலின்: உங்க அப்பா எங்கப்பா காணோம் என சட்டமன்றத்தில் தமிழ்நாடு முதல்வர் விஜய் கிண்டலடித்து இருந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் உருக்கம்
கலைஞர் உரிமைத் தொகை உள்ளிட்ட மக்கள் நலத்திட்ட கோப்புகளை பாருங்கள், இந்த ஸ்டாலின் இருப்பான்; கோட்டையில் என்னை பார்க்க வேண்டும் என்றால் அங்குள்ள கோப்புகளை பாருங்கள் என மு.க ஸ்டாலின் பேச்சு!
#WATCH | 3 நாட்களாக காத்திருக்கும் பேருந்து ஓட்டுநர்கள், மற்றும் நடத்துனர்கள்... நடவடிக்கை எடுக்குமா தமிழ்நாடு அரசு?
முதலமைச்சர் விஜய் பிறந்தநாளையொட்டி புதிய பேருந்துகள் இயக்க தொடக்க விழாவுக்காக கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 300 பேருந்துகளை விரைவாக பயன்பாட்டுக்கு கொண்டு வர பல்வேறு தரப்பினர் கோரிக்கை
#SunNews | #TVKVijay | #TNGovt | #Chennai
Instead we could have brought only few buses from near by district & inaugrate it for formalities and inaugrate the remaining buses in their respective places/depots...
Please change this approach atleast from next time...
@TVKVijayHQ@CMOTamilnadu@TamilanParthib1
Sad to see still the govt bus inauguration happening in secretariat in the AI era..
While a lot of bridge and scheme inaugration happening through video conferencing why do we still bring all the buses to chennai and inaugrate it?
@TVKVijayHQ@CMOTamilnadu@TamilanParthib1
தொடக்க விழாவுக்காக 300 பேருந்துகளை சென்னைக்கு
வரவழைத்து காத்திருக்க வைப்பதா? மனிதவளம்,
எரிபொருளை வீணடித்தவர்கள் மீது நடவடிக்கை தேவை!
தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் அவர்களின் 52-ஆம் பிறந்தநாளையொட்டி, புதிய பேருந்துகள் இயக்கத் தொடக்கவிழாவுக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சென்னை கொண்டு வரப்பட்ட 300 அரசுப் பேருந்துகள் எந்தப் பயன்பாடும் இல்லாமல் மூன்றாவது நாளாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. இந்தியா கடுமையான எரிபொருள் தட்டுப்பாட்டை சந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில் தேவையின்றி பேருந்துகளை இயக்கி எரிபொருளை வீணாக்குவது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் மொத்தம் 8 போக்குவரத்துக் கழகங்கள் உள்ளன. மாநகரப் போக்குவரத்துக்கழகம், விரைவுப் போக்குவரத்துக் கழகம் ஆகியவற்றின் தலைமை அலுவலகங்கள் சென்னையில் உள்ளன. மீதமுள்ள 6 போக்குவரத்துக் கழகங்கள் 24 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த போக்குவரத்துக் கழகங்களுக்கு புதிதாக வாங்கப்பட்ட 300 பேருந்துகளின் தொடக்கவிழா கடந்த 22-ஆம் தேதி முதலமைச்சரின் பிறந்தநாளையொட்டி சென்னையில் நடைபெறவுள்ளதாகவும், அதற்காக அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களும் புதிய பேருந்துகளை சென்னைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட போக்குவரத்துக் கழகங்களின் உயரதிகாரிகளுக்கு வாய்மொழி ஆணை பிறப்பிக்கப்பட்டது.
அதன்படி, புதிதாக தொடங்கி வைக்கப்படவுள்ள 300 பேருந்துகளில் மாநகர மற்றும் விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் தவிர மீதமுள்ள அனைத்தும் நாகர்கோயில், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 24 நகரங்களில் இருந்து கடந்த 22-ஆம் தேதி சென்னைக்கு கொண்டு வரப்பட்டன. ஆனால், 22-ஆம் தேதியும், 23-ஆம் தேதியும் தொடக்க விழா நடத்தப்படாத நிலையில், 300 புதிய பேருந்துகளும் சென்னை கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலைய வளாகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பேருந்துக்கும் இரு ஓட்டுனர்கள், ஒரு நடத்துனர் வீதம் மொத்தம் 900 ஊழியர்களும் சென்னைக்கு வந்துள்ளனர்.
புதிய பேருந்துகளின் இயக்கம் எப்போது தொடங்கி வைக்கப்படும் என்பது தெரியவில்லை. தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட ஓட்டுனர்களும், நடத்துனர்களும் தங்குவதற்கு இடமும், உணவும் இல்லாமல் கடந்த இரு நாள்களாக தவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்தக் குழப்பமும், தொழிலாளர்களின் அவதியும் இன்னும் எத்தனை நாள்களுக்கு தொடரும் என்று தெரியவில்லை.
ஒரு பேருந்தை ஒரு முறை சென்னைக்கு எடுத்து வந்து மீண்டும் எடுத்துச் செல்வதற்கு குறைந்தது ரூ.15 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை செலவாகும். தொடர்ந்து மூன்றாவது நாளாக இந்தப் பேருந்துகள் எந்தப் பயன்பாடும் இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால், அதனால் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் இழப்பு இன்னும் பல மடங்கு அதிகமாக இருக்கும். ஏற்கனவே போக்குவரத்துக் கழகங்கள் கடும் இழப்பில் இயங்கி வரும் நிலையில், இது போக்குவரத்துக் கழகங்களுக்கு கூடுதல் சுமையையே ஏற்படுத்தும்.
நாடே எரிபொருள் தட்டுப்பாட்டால் திணறிக் கொண்டிருக்கும் நிலையில் 300 பேருந்துகளை வீணாக பல நூறு கி.மீ தொலைவுக்கு இயக்குவது ஏற்றுக்கொள்ளவே முடியாத செயலாகும். கடந்த காலங்களில் புதிய பேருந்துகள் தொடங்கி வைக்கப்படும் போது சில மண்டலங்களில் இருந்து மட்டும் பெயரளவுக்கு வரவழைத்து விழாவை நடத்துவது தான் வழக்கம். இப்போது 300 பேருந்துகளை தேவையின்றி சென்னைக்கு வரவழைத்திருக்கக் கூடாது.
இவை அனைத்தும் முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு தெரிந்து நடக்கிறதா? இல்லை அவருக்கு தெரியாமல் நடக்கிறதா? என்பது தெரியவில்லை. தேவையில்லாமல் சென்னைக்கு அழைத்து வரப்பட்ட பேருந்துகள் அனைத்தையும் உடனடியாக திரும்பிச் செல்ல ஆணையிட வேண்டும். புதிய பேருந்துகளை தேவையில்லாமல் சென்னைக்கு அழைத்து வர அறிவுறுத்திய அதிகாரிகள் யாராக இருந்தால் அவர்கள் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
@CMOTamilnadu