#Karuppu
இந்திரன்ஸ் மலையாள சினிமாவின் தரமான இயக்குனர்களில் ஒருவர். அது மலையாள படம் பார்க்கும் ரசிகர்கள் எல்லோருக்குமே தெரியும்.
அதுவும் Udal னு ஒரு படம் தரமான செய்கையா இருக்கும்.
இவரை எப்போய்யா தமிழ் சினிமாவுக்கு கொண்டு வருவீங்கன்னு யோசனை வந்தது உண்டு.
அத RJ பாலாஜி சாத்தியம் ஆக்கிருக்கார். அதுவும் ஒரு வலுவான பாத்திரம்..முதல் பாதியில் இவரோட நடிப்பு தான் கதைக்கான உயிரோட்டம்.
தொடர்ந்து இவரை தமிழ்ல நல்ல படங்கள்ல யூஸ் பண்ணுங்கப்பா.
நம்ம ஒரு M.S. பாஸ்கர் மாதிரி மிரள வைப்பார் நடிப்புல.
ஏற்கனவே சுராஜ், இப்போ இவர்னு தரமான சேட்டன்ஸ் தமிழ் பக்கம் களம் இறங்க, அவங்களை சரியா பயன்படுத்திக்கிட்டா நமக்கும் நல்ல படங்கள் கிடைக்கும் 🙌