அனைவரின் இல்லங்களும் உள்ளங்களும் மகிழ்ச்சியால் நிறையும் கிருஷ்ண ஜெயந்தி திருநாளில் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அநீதிக்கு எதிரான அறம் வெல்லும், எத்தகைய சூழலிலும் கடமை தவறாது செயல்பட வேண்டும், தர்மத்தின் வழியில் மன உறுதியுடனும் நம்பிக்கையுடனும் வாழ்க்கைப் பயணத்தை முன்னெடுக்க வேண்டும் என்னும் ஸ்ரீகிருஷ்ணரின் உபதேசங்களைப் பின்பற்றி உயரிய வாழ்வியல் நெறிகளுடன் அன்பும் அறமும் தழைத்தோங்கும் நல்லுலகைப் படைத்திடுவோம்.
#CMJosephVijay
திமுக மாடல் அரசாங்கம் முற்றிலும் நிர்வாக சீர்கேட்டினால் நிலை குலைந்து போயிருக்கிறது என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு உதாரணம்... 9000 டிஎன்பிஎஸ்சி தேர்வர்களின் கனவு இங்கே நசுக்கப்பட்டு கொண்டிருக்கிறது... இளைஞர்களின் வாழ்க்கை நசுக்கி விட்டு இளைஞர் அணி மாநாடு நடத்துவது தான் திமுகவின் அரசியல் நாடகம்.. பல இடங்களில் சென்டர் ஒதுக்கப்படாமல் போராடிக் கொண்டிருக்கின்ற நேரத்தில் சில இடங்களில் தேர்வு எழுத ஆரம்பித்து விட்டார்கள்.. இந்த குளறுபடி இந்த ஆட்சியின் குழப்பத்தின் உச்சக்கட்டம்.. வாழ்க்கைப் போராட்டமாக இருக்கும் இந்த இந்த இளைஞர்கள்.. விடிவு காலம் வேண்டும் என்று கடுமையாக தயாரித்து... தேர்வுக்கு வந்தால்.. தேர்வு எழுதுவதே போராட்டமாக போராட்டமாக வெடித்திருப்பது வேதனையிலும் வேதனை அரசு உடனே இதற்கு நடவடிக்கை தேவை... ஆயிரக்கணக்கானோர் தங்கள் நேரத்தையும் பொருளையும் செலவிட்டு.. ஆர்வமுடன் வந்தவர்கள் அலை கழிக்கப்பட்டிருக்கிறார்கள்... நியாயமாக சரியான திட்டமிடலுடன் தேர்வுகள் நடைபெற வேண்டும் என்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.. மறுபடியும் தேர்வு அறிவிக்கப்படும் பொழுது எந்த குளறுபடியும் இல்லாமல் பார்த்துக் கொள்வது அரசாங்கத்தின் கடமை...
#DMKFailsTN #TNPSCGroup2
@BJP4TamilNadu@BJP4India@ANI@PTI_News
இன்று நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி குரூப்2, குரூப் 2 ஏ தேர்வுகள், தேர்வு மையங்களை அமைப்பதில் திமுக அரசு செய்த குளறுபடியால் ரத்து செய்யப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அரசுத் தேர்வுகளுக்கான அடிப்படை ஏற்பாடுகளைக் கூடச் செய்ய முடியாத கையாலாகாத நிலையில், திமுக அரசு செயல்பட்டு வருகிறது.
அரசுப் பணிகளுக்காக, பல ஆண்டு காலம் கடுமையாக தங்கள் உழைப்பைக் கொடுத்து, தேர்வு மையங்களுக்குச் சென்ற இளைஞர்களின் கனவு பறிக்கப்பட்டுள்ளது. இத்தனை ஆண்டு காலம் இல்லாத இந்தக் குளறுபடி, லஞ்சம் வாங்கிக் கொண்டு அரசுப் பணி வழங்கும் வரலாறு கொண்ட திமுக அமைச்சர்களால் நடத்தப்பட்டதா என்ற சந்தேகம் வலுவாக எழுகிறது.
லஞ்சம் ஊழல் நிறைந்த, நிர்வாகத் திறனற்ற கையாலாகாத அரசை நடத்திக் கொண்டிருக்கும் முதலமைச்சர் @mkstalin, தமிழக இளைஞர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.
அடிப்படை ஏற்பாடுகளைக் கூட செய்யாததால் டி.என்.பி.எஸ்.சி தொகுதி 2 தேர்வுகள் ரத்து: போட்டித் தேர்வை நடத்தக் கூட திமுக அரசுக்கு துப்பு இல்லை!
தமிழ்நாடு அரசில் சார்-பதிவாளர், துணை வணிகவரி அதிகாரி, தொழிலாளர் நல ஆய்வாளர் உள்ளிட்ட தொகுதி 2 பணிகள், உதவியாளர் கணக்காளர், தொகுதி உதவியாளர் உள்ளிட்ட தொகுதி 2 ஏ பணிகளுக்கு 828 பணிகளுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் இன்று காலையும், மாலையும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவிருந்த முதன்மைத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதற்கான டி.என்.பி.எஸ்.சி நிர்வாகத்தில் அலட்சிய செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை.
தொகுதி 2 மற்றும் 2 ஏ தேர்வுகள் தொழில்நுட்பக் காரணங்களால் தான் ரத்து செய்யப்பட்டதாக டி.என்.பி.எஸ்.சி நிர்வாகத்தின் சார்பில் கூறப்பட்டாலும், தேர்வுக்கான அடிப்படையான ஏற்பாடுகளைக் கூட செய்யாமல் டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் கோட்டை விட்டது தான் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு காரணம் ஆகும்.
தமிழ்நாடு முழுவதும் காலையில் 9,223 தேர்வர்களும் மாலையில் 9244 தேர்வர்களும் எழுத இருந்த இந்தத் தேர்வுகளுக்காக சென்னையில் 7 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றில் 3221 பேர் தேர்வுகளை எழுத இருந்தனர். அவர்களில் 600 தேர்வர்களுக்கு சென்னை நந்தனம் அரசு கல்லூரியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்த நிலையில், அந்த மாணவர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டில் சென்னை அரும்பாக்கம் டி ஜி வைஷ்ணவா கல்லூரி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தேர்வு மையங்கள் திறக்கப்பட்டு, தேர்வு தொடங்குவதற்கு சில நிமிடங்கள் முன்பாகத் தான் இந்தக் குளறுபடி தெரியவந்தது.
இதைக் கண்டித்து தேர்வர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், அவர்களை நந்தனம் கல்லூரிக்கு அழைத்துச் செல்ல மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் தான் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. சென்னையில் தேர்வு தொடங்காத நிலையில் கோவை உள்ளிட்ட பல மையங்களில் தேர்வு தொடங்கி ஒரு மணி நேரத்திற்கு பிறகு தான் ரத்து செய்யப்பட்ட செய்தி தெரிவிக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கும், தேவையற்ற அலைச்சலுக்கும் ஆளானார்கள்.
தேர்வு மையங்கள் மற்றும் அவற்றில் தேர்வு எழுதும் தேர்வர்களை ஒதுக்கீடு செய்வதை டி.என்.பி.எஸ்.சியில் இளநிலை உதவியாளர் நிலையில் உள்ள பணியாளரே தெளிவாக செய்ய முடியும். ஆனால், டி.என்.பி.எஸ்.சி தலைவர், செயலாளர், தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி என 3 இ.ஆ.ப. அதிகாரிகளும், 6 உறுப்பினர்களும் மேற்பார்வையிட்டும் கூட இவ்வளவு குளறுபடிகள் நிகழ்ந்திருக்கின்றன என்றால், டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் எந்த அளவுக்கு சீரழிந்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
மிகச்சாதாரணமான ஒரு போட்டித் தேர்வைக் கூட குளறுபடிகள் இல்லாமல் நடத்துவதற்கு முடியாத நிலையில் தான் திமுக அரசு செயல்பட்டு வருகிறது. இதற்காக ஆட்சியாளர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும். இந்த குளறுபடிகளுக்கு இளநிலை அதிகாரிகளை பலிகடா ஆக்குவதை விடுத்து, இது குறித்து விசாரணை நடத்தி டி.என்.பி.எஸ்.சி நிர்வாகத்தின் உயர்பொறுப்பில் உள்ளவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@CMOTamilnadu
தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெறவிருந்த #TNPSC குரூப் 2, 2A முதன்மைத் தேர்வானது, ஹால் டிக்கெட் மற்றும் தேர்வு மைய குளறுபடிகளால் ஒத்திவைக்கப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியில் "நிர்வாகம்" என்பது எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதை ,
இந்த ஒரு நிகழ்வே வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது.
#TNPSCGroup2 போன்ற அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்வு, தேர்வு நாளன்று ஒத்திவைக்கப்படுவது தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே இதுவே முதல் முறை.
அதுவும், பல இடங்களில் தேர்வர்கள் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதே தெரியாமல் தேர்வு எழுதியுள்ளனர் என்ற பேரதிர்ச்சியான செய்திகளும் வருகின்றன,
“Technical Fault” என ஒற்றை வரியில் தப்பிக்க முயலுகின்ற திமுக ஆட்சியாளர்கள் ,
குரூப்- 2 என்பது எவ்வளவு முக்கியமான தேர்வு?
அந்த Fault- ற்கு பின்னால் தேர்வெழுதிய இளைஞர்களின் பல ஆண்டுகால உழைப்பும் நம்பிக்கையும் சிதைந்துள்ளது என்பதை மறந்துவிடாதீர்கள்
தமிழ்நாட்டை "சூப்பர்ஸ்டார்" மாநிலமாக மாற்றிவிட்டதாக வாய்கிழிய மேடையில் பேசும் பொம்மை முதல்வர் @mkstalin அவர்களே - ஒரு தேர்வைக் கூட உருப்படியாக நடத்த வக்கில்லாத கையாலாகாத அரசு தான் உங்கள் திமுக அரசு.
ஏற்கனவே 5.5 லட்சம் வேலைகளைத் தரப்போகிறோம் என 2021-ல் கொடுத்த தேர்தல் வாக்குறுதி எல்லாம் காற்றில் பறந்துக்கொண்டு இருக்க, இருக்கின்ற தேர்வுகளைக் கூட ஒழுங்காக நடத்த வக்கற்ற திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
டி.என்.பி.எஸ்.சி குரூப்-2, 2A தேர்வு குளறுபடிகளை அதிகாரிகள் மீது மட்டும் சுமத்தி , அவர்கள் மீது மட்டும் கண்துடைப்பு நடவடிக்கை எடுக்காமல் , இந்த தவறுகள் எதிர்காலத்தில் வராமல் இருக்க முறையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்க ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
தேர்வர்கள் அனைவரும் நம்பிக்கையோடு முயற்சிகளை தொடருங்கள்,
2026-ல் அமையவுள்ள @AIADMKOfficial அரசானது, இளைஞர்களின் கனவுகளை ஈடேற்றும் அரசாக இருக்கும் .
சார் தமிழில் இருந்து ஆங்கில மொழி பாடத்திற்கு பலர் மாறியுள்ளனர் இம்முறை ஆங்கில பாடத்தை தமிழ் போல் கடினமாக்கி விடாதீர்கள். இரண்டும் சரி சமமாக இருக்க வேண்டுமென என் தாழ்மையான வேண்டுகோள். (SSLC தரத்தில்)
சார் தமிழில் இருந்து ஆங்கில மொழி பாடத்திற்கு பலர் மாறியுள்ளனர் இம்முறை ஆங்கில பாடத்தை தமிழ் போல் கடினமாக்கி விடாதீர்கள். இரண்டும் சரி சமமாக இருக்க வேண்டுமென என் தாழ்மையான வேண்டுகோள். (SSLC தரத்தில்)
டிஎன்பிஎஸ்சி குருப்2 தேர்வு முடிவுகளில் அதன் ஆங்கிலம் மற்றும் தமிழ் வினாத்தாள் சமநிலை குறித்தும், ஆங்கில மொழி வழி தேர்வு எழுதியவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருப்பது பற்றியும் ஏராளமானோர் எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளீர்கள். நன்றி 🙏🏽
#TNPSC#Group2 #TNPSCGroup2
டிஎன்பிஎஸ்சி குருப்2 தேர்வு முடிவுகளில் அதன் ஆங்கிலம் மற்றும் தமிழ் வினாத்தாள் சமநிலை குறித்தும், ஆங்கில மொழி வழி தேர்வு எழுதியவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருப்பது பற்றியும் ஏராளமானோர் எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளீர்கள். நன்றி 🙏🏽
#TNPSC#Group2 #TNPSCGroup2
ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்கிறேன். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட அவர், கருணைமிக்க தலைவராகவும், திறமைமிக்க நிர்வாகியாகவும் நன்கு அறியப்பட்டவர். பல சந்தர்ப்பங்களில் அவருடன் உரையாடும் வாய்ப்பை நான் பெற்றிருந்தது எனது கௌரவமாகும். அவர் எப்போதும் அன்பாகவும் மக்கள் நலன் சார்ந்த முன்முயற்சிகளுக்கு ஆதரவாகவும் இருந்தவர்.
தமிழகக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு @SPK_TNCC, கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்தது, மறைந்த திருமதி இந்திரா காந்தி அவர்களின் ராஜதந்திரம் என்று கூறுகிறார்.
எங்களுக்கு சில கேள்விகள்.
கடந்த 30 ஆண்டுகளில், இலங்கை அரசால், பல்லாயிரக்கணக்கான இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தான் அந்த ராஜதந்திரமா?
பலநூறு இந்திய மீனவர்கள் நடுக்கடலில் சுட்டுக் கொல்லப்பட்டனரே. அதுவும் உங்கள் ராஜதந்திரம் தானா?
மீன்பிடி படகுகள் கைப்பற்றப்பட்டதால் வாழ்வாதாரத்தை இழந்தார்கள் நம் தமிழக மீனவ சொந்தங்கள். இதுவும் ராஜதந்திரத்தில் தான் அடங்குமா?
கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்தபோது, அன்று தமிழகத்தில் ஆட்சியிலிருந்த திமுக, கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுக்க முழு சம்மதம் தெரிவித்துத் தமிழக மீனவ மக்களுக்குத் துரோகம் செய்ததோடு, கடந்த ஐம்பது ஆண்டுகளாக, ஒவ்வொரு தேர்தலின் போதும், தமிழக மீனவர்கள் பாதுகாப்பு, தமிழர்கள் உரிமை, என்றெல்லாம் நாடகமாடிக் கொண்டிருக்கிறது.
அப்போதெல்லாம் இந்த ராஜதந்திரத்தைப் பற்றித் திமுக காங்கிரஸ் கூட்டணி பேசியதில்லையே ஏன்?
தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு @SPK_TNCC சொல்வது போலக் கச்சத்தீவைத் தாரைவார்த்தது ராஜதந்திரம் என்று ஒப்புக்கொள்வாரா தமிழக முதல்வர் திரு. @mkstalin?