திரையுலகமே என் தந்தையின் உலகம் என்றிருந்து, பின் அது எனக்குமான உலகமாக இன்னும் அகலமாக விரிந்து
ஒரு குடும்பமாக நெருங்கி, உயர்வான உறவாக உருவாகிவிட்டது.
விழுது மரமாகுமுன் விழுந்துவிட்ட ஆலமரமாய் என் தந்தையை இழந்த அன்று நான் பற்றிக்கொள்ள படர்ந்த அன்புக் கரங்களாகவும், தடுமாறிய என் கால்களை தாங்கிக் கொண்ட பூமியாகவும், வெடித்து விடுமுன் எனக்காக துடித்த மாற்று இதயமாகவும் இருந்த/ இருக்கின்ற / இருக்கப் போகின்ற திரையுலக ஜாம்பவான்களுக்கும், நண்பர்கள் அனைவருக்கும்
நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தவிர வேறென்ன சொல்லி என்னை நான் சமாதானபடுத்திக் கொள்ள? 🙏🏻
The news of the floods and the lives lost and missing is devastating.
Sending strength and prayers to everyone affected… and to all the families waiting for word on their loved ones.
Nepal… you are in our thoughts 🙏🏻
#NepalFloods
A birthday without my dad feels different.
I wish I could hear his voice, see his smile… call me சிங்கா .. one more time ..
Some birthdays are not about growing older, but about missing the ones who made you who you are today, who built you , who blessed you , who made every birthday special❤️
Miss you daddy - சிங்கா ❤️
#Magadheera தமிழ் டப்பிங் dialogues-ஐ Madhan Karky எழுதியிருப்பார் என்று பலரும் நினைக்கிறார்கள்.
ஆனால், அந்த iconic dialogues-க்கு பின்னால் இருந்தது K. Bhagyaraj-ன் பேனா தான். 🗡️
"Shabash... Shabash..." முதல் ஒவ்வொரு powerful dialogue-மும் இன்றும் goosebumps கொடுக்கிறது.
#KBhagyaraj 's pen was literally on fire! 🔥🖋️
அப்பாவை இழந்த பின் செய்வதறியாது
திகைத்து நிற்கும் நான், முறையாக ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்ல வார்த்தைகள் தேடி எழுதுகிறேனே தவிர, மனதின் அடிதளத்தில் எனக்கு ஆறுதல் சொன்ன அனைத்து உயர்ந்த உள்ளங்களுக்கும் ஆத்மார்த்தமாய் நன்றி சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன். குறிப்பாக தி மு க தலைவர் திரு ஸ்டாலின் ஐயா @mkstalin மீது எங்கள் குடும்ப��்திற்கு உள்ள மரியாதை உள்ளத்தின் உட்பகுதியிலும் உயர்வாய் உள்ளது.
அப்பாவுக்கு (50-வது ) நடந்த தங்க விழா ஆண்டில் தன்னுடைய தங்க மனதோடு வாழ்த்தியவர் முன்னாள் முதல்வரும் என்னாளும் எங்கள் அன்புக்கும் மரியாதைக்கும் பாத்திரமான திருமிகு ஸ்டாலின் ஐயா அவர்கள்.
அப்பாவின் மறைவிற்காக என் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல வந்த சகோதரர் @Udhaystalin அவர்களுக்கும் , அவர்களுடன் உடன் வந்து
ஆறுதல் உரைத்த ம��க்கிய அமைச்சர்கள் மற்றும் அனைவருக்கும எங்கள் உளங்கனிந்த நன்றியினை உரித்தாக்கிக் கொள்கிறேன் 🙏🏻
@arivalayam @DMKITwing
என் தந்தை திரு பாக்யராஜ் அவர்களின் மறைவிற்கு
அரசு மரியாதை….!
மரணத்திலும் மரியாதை ஒரு கலைஞனுக்கான இமாலய பாக்கியம். பெயருக்கு ஏற்ற கம்பீரமான மரியாதையை என் தந்தைக்கு வழங்கிய மாண்புமிகு
தமிழக முதல்வர் அவர்களுக்கும்,
அந்த மரியாதையை அதீக அக்கரையுடன் முன்னின்று நடத்திய மாண்புமிகு கிராம வளர்ச்சி மற்றும் நீர்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு N ஆனந்த் அவர்களுக்கும், மாண்புமிகு பள்ளிக்கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் திரு ராஜ்மோகன் அவர்களுக்கும்,
கிட்டத்தட்ட 15 மணிநேரம் தேவையான பாதுகாப்பு மற்றும் ��யாத ஒத்துழைப்பு தந்த காவல்துறைக்கும் @tnpoliceoffl
என குடும்பத்தின் சார்பில் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
@BussyAnand @imrajmohan
Honourable @CMOTamilnadu
உங்களுக்கான என் நன்றியை 26 அல்லது
247-க்குள் எப்படி அடக்கிவிட முடியும்?
மெய்யாகவே என் உயிர் வரை நீடிக்கும் நன்றியிது.
என் திருமணத்திற்கு தாலி எடுத்து ��ந்து என் மகிழ்ச்சித் திருநாளைத் துவக்கி வைத்தீர்கள். அதற்கே நானின்னும் நன்றி சொல்லித் தீரவில்லை
அதற்குள் என் வாழ்வின் துரதிருஷ்ட துக்க தினமான என் தந்தையின் மறைவிற்கு ஆறுதல் சொல்ல வந்த நீங்கள், பதவி சார்ந்த அந்தஸ்தை ஒதுக்கிவிட்டு, பதவிசாக மண்டியிட்டு அம்மாவிடம் ஆறுதல் சொன்னதில் நான் நெகிழ்ந்து விட்டேன்.
அரசு மரியாதை!
மரணத்திலும் மரியாதை ஒரு கலைஞனுக்கான இமாலய பாக்கியம். ப��யருக்கு ஏற்ற கம்பீரமான மரியாதையை என் தந்தைக்கு நீங்கள் தந்ததை
என் இறுதிக்குள்ளும் நன்றியோடு நினைத்துக் கொள்வேன்.
இப்போதைக்கு வேறென்ன சொல்ல?
இதயம் கூப்பிய நன்றி Anna @actorvijay
@TVKVijayHQ @TVKHQITWingOffl
Wishing our @CMOTamilnadu more light, more wins, more reasons to smile 😊
Happiest birthday @actorvijay Anna
Still remember the words you said on stage “Shanthnu you are always in my prayers” ❤️
Grateful for the bond, for the moments & everything this brotherhood carries❤️
@TVKVijayHQ