5. இந்து நாளேட்டின் கொள்கை வழிப் பாதையை நிர்ணயிப்பதில��� திரு. என்.ராம் அவர்களின் பங்களிப்பு மகத்தானது, ஈடு இணையற்றது. உலகத்தின் எந்த சக்தியாலும் 'தி இந்து' நாளேட்டையும் திரு. என்.ராம் அவர்களையும் பிரிக்க முடியாது.
4. மோடி ஆட்சியில் ஏறத்தாழ 55 பத்திரிக்கையாளர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு அவர்கள்மீது கடுமையான தாக்குதல், அச்சுறுத்தல்கள், அடக்குமுறைகள் ஏவப்பட்டுள்ளன.
3. பிரதமர் மோடியை மாலினி பார்த்தசாரதி சந்தித்ததில் எந்த தவறும் இல்லை. அந்த சந்திப்பின் மூலம் 142ஆண்டு காலமாக கட்டிக்காக்கப்பட்டு இந்தியாவின் கருத்தியலுக்காகவும், ஊழல், சமூக அநீதிகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிற இந்து குழுமத்தின் அடிப்படை கொள்கைகளை அடகு வைத்துவிடக் கூடாது
2. சமீபத்தில், பிரதமர் மோடியை தி இந்து குழுமத் தலைவர் மாலினி பார்த்தசாரதி சந்தித்தது குறித்து கருத்து கூறிய இந்து குழும இயக்குநர் என். ராம், '' தி இந்து ஏடு கடுமையாகப் போராடிப் ப���ற்ற மரபு பறிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருக்கிறார்.
1. இந்து நாளேட்டுக்கு இருக்கிற வரலாற்றுப் பின்னணியும் செய்திகள் மீது வாசகர்களுக்கு இருக்கிற நம்பகத்தன்மையைப் போல எந்த நாளேட்டுக்கும் இருந்ததில்லை. அத்தகைய நம்பகத்தன்மைமிக்க 'இந்து' நாளேட்டிற்கு சோதனை ஏற்பட்டுள்ளது.