ஜனநாயகன் படம் 2026 ஜூன் 19 வெளியாகும் எனத் தெரிந்தால் விசாரித்து பார்ப்பேன்.. உண்மை என்றால் கண்டிப்பாக என் படமான 'நூறுசாமி' திரைப்படத்தை தள்ளி வைத்து விடுவேன் ! 🫡
~ நடிகர்/இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி
கடுமையான கோடை வெப்பத்தை சமாளிக்க பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில், இன்று மதுரவாயல் தொகுதியில் மேலும் 2 இடங்களில் தண்ணீர் பந்தல் மற்றும் நீர்மோர் பந்தல்கள் திறந்து வைக்கப்பட்டன.
மக்கள் நலன் சார்ந்த இந்த முயற்சி தொடர்ந்து விரிவுபடுத்தப்படும்.
-------------
To help the public cope with the intense summer heat, Thanneer Pandhals and Neer Mor Pandhals were inaugurated at two additional locations in the Maduravoyal constituency today as part of our ongoing summer relief initiative.
This public welfare effort will continue to be expanded to reach and benefit more people across the constituency.
@CMOTamilnadu@TVKVijayHQ@BussyAnand
மங்கோலியா நாட்டின் தலைநகரான உலான்படோரில் நடைபெற்ற 21-வது ஆசிய தனிநபர் மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி 2026-ல் தங்கப் பதக்கம் வென்றதோடு, 2027 FIDE மகளிர் உலகக் கோப்பை போட்டிக்கும் தகுதி பெற்றுள்ள சென்னையைச் சேர்ந்த செஸ் வீராங்கனை சவிதா ஸ்ரீ பாஸ்கர் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ள சவிதா ஸ்ரீ பாஸ்கர் அவர்களுக்கு வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்வதோடு, தமிழ்நாட்டு விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் அனைத்து முயற்சிகளுக்கும் இந்த அரசு எப்போதும் உறுதுணையாக நிற்கும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.
#CMJosephVijay
உயர் சிறப்பு ( Super speciality) மருத்துவ இடங்களை பொறுத்த மட்டில், தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 422 இடங்களில், 219 இடங்கள் நம் மாநில மருத்துவர்களுக்கும்( state quota) மீதமுள்ள இடங்கள் All India Quota விற்கும் ஒதுக்கப்பட்டதாகும்.
கடந்த ஆண்டுகளில் கலந்தாய்வு முடிந்தபின் state quota வில் நம் அரசு மருத்துவர்கள் கொண்டு நிரம்ப முடியாத இடங்கள் அனைத்தும் All India Quota விற்கு சரண்டர் செய்யப்பட்டது என்பதை மாண்புமிகு எதிர்கட்சித் தலைவர் @Udhaystalin அறிவாரா? நாம் சரண்டர் செய்த பிறகு, குறைந்தபட்ச சதவீதத்தை ( cut off) குறைக்கப்பட்டு, அதன் அடிப்படையில் நமக்கு கிடைக்க வேண்டிய இடங்கள் "All India merit list" மூலம் நிரப்பப்பட்டதனால் தமிழ்நாட்டு அரசு மருத்துவர்கள் பெரிதும் பாதிப்படைந்தனர் என்பதையும் அவர் அறிவாரா? 2024-ல், 119 இடங்களும், 2025-ல் 145 இடங்களும் All India Quota விற்கு சரண்டர் செய்யப்பட்டன என்பது வரலாறு. தங்கள் கடிதத்தில் சென்ற 2025 ஆண்டில் நிரப்பப்படாமல் இருந்த 152 இடங்கள் அகில இந்திய தொகுப்பிற்கு செல்வது தடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது உண்மைக்கு புறம்பான செய்தி.
ஆனால் இந்த ஆண்டு, state quota வில் 151 இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தபோதும், மாண்புமிகு முதலமைச்சர் திரு C.ஜோசப் விஜய் @CMOTamilnadu அவர்களின் தலைமையிலான தமிழக அரசு அவற்றை சரண்டர் செய்ய மறுத்து, இது தொடர்பான உச்சநீதிமன்ற வழக்கில் உரிய முறையில் வாதங்களை முன் வைத்தது. ஒன்றிய அரசின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் குறைந்தபட்ச சதவீதத்தைக் குறைப்பது பற்றிய முடிவு பின்னர் எடுக்கப்படும் என்ற வாதத்தை வைத்தார். அதனைத் தொடர்ந்து, மாண்பமை உச்சநீதிமன்றம் தனது 29.05.2026 நாளிட்ட தீர்ப்பில் 151 இடங்களை சரண்டர் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.
நம் மாநில தொகுப்பிற்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் அனைத்தும் தமிழ்நாட்டு மருத்துவர்கள் மூலம் நிரப்பப்பட வேண்டும் என்பதே மாண்புமிகு முதலமைச்சர் திரு C.ஜோசப் விஜய் @CMOTamilnadu அவர்களின் தலைமையிலான தமிழக அரசின் உறுதியான நிலைப்பாடு. எனவே உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, நம் மருத்துவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வண்ணம், மறுசீராய்வு மனுவினை உடனடியாக 04.06.2026 அன்று தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.
கிராமப்புற மக்களுக்கும் உயரிய மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதிலும், நம் மாநில உரிமை சார்ந்த இட ஒதுக்கிடு நிலைப்பாட்டிலும் தமிழக வெற்றிக் கழகம் எப்பொழுதும் உறுதியுடனும், துரிதமாகவும் செயல்படும் என்பதை ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கிறேன்.
நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற்ற நார்வே செஸ் 2026 (Norway Chess 2026) தொடரில் அறிவார்ந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்திட்ட கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
ஒரே தொடரில் நடப்புச் சாம்பியன் மாக்னஸ் கார்ல்செனை இரண்டு முறையும், நான்கு போட்டிகளில் தொடர்ந்து வெற்றியும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா அவர்கள் புதிய சாதனைகளைப் படைத்திட எனது வாழ்த்துகள்.
#CMJosephVijay
#NorwayChess2026
@rpraggnachess
தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டுக்கு அப்பாவிப் பொதுமக்கள் பலியாகினரே. அப்போது அந்தத் துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டவர் யார்? காவல் துறை யார் கையில் இருந்தது? யாருக்கும் தெரியாமல் யாருடைய உத்தரவும் இல்லாமலே அவ்வளவு பெரிய துப்பாக்கிச் சூடு நடந்ததா? அப்போது முகத்தை மூடித் தூங்கியவர், முதல்வராக இருந்தாரா?
தமிழகமே அதிர்ந்து அலறிய அவ்வளவு பெரிய சம்பவத்தை டிவி பார்த்துத் தெரிந்துகொண்டதாக அப்போது சொன்னவர் யார்? தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்று முதல்வர் பதவியைத் தட்டிச் சென்றவர்தான் அவர் என்பது தமிழகம் அறியாததா?
எம்.ஜி.ஆரின் மக்கள் சக்தியை, ஜெயலலிதா அம்மையாரின் கட்டுப்பாடான தொண்டர்கள் கொண்ட சக்தியை யாரிடமோ அடகு வைத்து, மற்றும் பலர் கட்சியாக்கியவர், தீய சக்தி தி.மு.க.வுடன் சேர்ந்து தீர்ந்துபோன சக்தியாக்கியவர், உள்நோக்கத்துடன் விஷம் கக்குவதைத் தமிழக மக்கள் அறியாதவர்களா என்ன?
மக்கள் பாதிப்பைத் தன் பாதிப்பாக உணரும், மக்கள் விரும்பும் முதல்வரைத் தமிழகம் பெற்றுள்ளது. மக்கள் மீது அக்கறை கொண்டதால்தான் உடனடி நடவடிக்கையில் காவல் துறையை ஈடுபடச் செய்கிறார். சட்டம் ஒழுங்கைக் கட்டிக் காக்க, தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுபற்றி எதையும் அறிந்துகொள்ளாத மிஸ்டர் தீர்ந்துபோன சக்தி, அறியாமையில் அறிக்கை விட்டுக் கூவினால் எப்படி?
கட்சியைக் கலகலக்க வைத்து, அடகு வைத்துக் கரைத்து, அகில உலக அரசியல் கோர்ஸான கட்சியைக் காணாமல் போகச் செய்யும் கோர்ஸ் படித்தவர், அரசியல் பாடம் எடுத்தால் எப்படி?
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை டிவியில் பார்த்துத் தெரிந்துகொண்ட, தீர்ந்துபோன இந்தச் சக்தி, இப்போது டிவிகூட பார்க்காமல், தூர்ந்துபோன சக்தியுடன் ஆட்சி அமைக்கத் திருட்டுத்தனமாகக் கூட்டணி போட்டது போல, அவர்கள் எழுதிக் கொடுத்த அறிக்கையையும் தவழ்ந்துபோய்ப் பெற்று வந்து தன் பெயரில் வெளியிடுகிறாரா?
பெண்கள் பாதுகாப்பிலும், போதைப் பொருள் தடுப்பிலும், சட்டம் ஒழுங்கைக் காப்பதிலும் மனசாட்சி உள்ள மக்களாட்சியான எங்கள் வெற்றித் தலைவரின் ஆட்சி, தவறு செய்வோர் மீது கடுமையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுக்கும். மக்களுக்காகவே உழைக்கும்.
அன்பு மகள் மதிவதனி அவர்களுக்கு இன்று பிறந்த நாள்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் தங்கமே 🙏.
என் வாழ்க்கையில் கிடைத்த மிகப் பெரிய பொக்கிஷம். வாழ்க வளமுடன். எனக்கு தகப்பன் என்ற அங்கீகாரத்தை வழங்கியமைக்கு மிக்க நன்றி செல்லமே 🫶💙😭.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (3.6.2026) தலைமைச் செயலகத்தில்,
காவல்துறை தலைமை இயக்குநராகப் பொறுப்பேற்றுக் கொண்ட திரு. மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப. அவர்கள்
சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
#CMJosephVijay
கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு.டி.கே. சிவகுமார் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
I convey my heartfelt congratulations to Thiru. D.K. Shivakumar on assuming office as the new Chief Minister of Karnataka.
#CMJosephVijay
@DKShivakumar