ஒரே வாரத்தில் 20 தமிழக மீனவர்கள் கைது!
மன்னார் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 9 ராமேஸ்வரம் மீனவர்களை படகுகளுடன் இலங்கை கடற்படை மீண்டும் கைது செய்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 20 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள கொடூரம் நடந்துள்ளது.
ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து வேடிக்கை பார்ப்பது ஏன்?
தூதரக ரீதியில் எந்த ஒரு வலுவான நடவடிக்கையையும் எடுக்காமல் அலட்சியமாக இருப்பதோடு, தமிழக மீனவர்களின் உரிமை பறிக்கப்படும் போதும் அவர்களின் வாழ்வாதாரம் நசுக்கப்படும் போதும் ஒன்றிய அரசு மௌனம் காப்பது ஏன்?
இலங்கை அரசின் இந்த அத்துமீறலுக்கு ஒன்றிய @narendramodi அரசு எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்போகிறது?
கைது செய்யப்பட்ட நமது மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் மீட்க உடனடியாக உயர்நிலை தூதரக பேச்சுவார்த்தையைத் தொடங்குங்கள்! @MEAIndia@DrSJaishankar
#WATCH | Delhi: Congress MP Manickam Tagore said, “It is a weekly meeting that we have every Wednesday. It is the third meeting of the INDIA alliance of Tamil Nadu MPs. Congress, CPM, CPI, Indian Union Muslim League, MDMK, and VCK are the parties that are invited. We decided that we need to discuss the way Parliament has been bulldozed throughout the session. Many Bills have been bulldozed, particularly the Mines and Minerals Bill, which is going to cause a huge loss to Tamil Nadu…"
இன்று (12.08.2026) புது தில்லி பழைய நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அறை எண் 62-ல் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்தியா கூட்டணிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் 3-வது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நானும் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. கே. சுப்பராயன், முனைவர் @WriterRavikumar, திரு. @duraivaikooffl, திரு. @KartiPC , திரு. @iamvijayvasanth , திரு. கே. கோபிநாத், திரு. @pravchak , திரு. @AdvBruce , திரு. வி. செல்வராஜ், திரு. @sachi4dgl , வழக்குரைஞர் @AdvtSudha மற்றும் திரு. @christilak ஆகியோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், தமிழ்நாட்டின் 8 முக்கிய மாநகரங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூன்று பேராகச் சென்று, நடப்பு நாடாளுமன்றத் தொடரில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து மக்களிடம் விளக்கும் நகரமன்றக் கூட்டங்களை (Town Hall) நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது.மேலும், ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (வளர்ச்சி மற்றும் முறைப்படுத்துதல்) திருத்த மசோதா 2026 மாநிலங்களின் வரி உரிமையைப் பறிப்பதோடு கடுமையான நிதிச் சுமையை ஏற்படுத்தும் என்பதால் அதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சுரங்கத்துறை மூலம் 2025-26 நிதி ஆண்டில் தமிழ்நாடு அரசு ₹4,400 கோடி வருவாய் ஈட்டியுள்ள நிலையில், 2026-27 நிதி ஆண்டில் ₹11,000 கோடி வரை வருவாயை உயர்த்த இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், இப்புதிய மசோதா மாநிலத்தின் வரி மற்றும் கட்டணம் விதிக்கும் அதிகாரத்தைக் கட்டுப்படுத்திப் பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்தும் என விவாதிக்கப்பட்டது. மேலும், தமிழ்நாடு அரசின் தீர்மானம் மற்றும் நாடாளுமன்றத்தில் கொடுக்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாகவே #FCRA மசோதா நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் (JPC) பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
"பஞ்சாயத்து ராஜ் திட்டத்தையும், 33% மகளிர் இடஒதுக்கீட்டையும் வழங்கியது காங்கிரஸ் ஆட்சிதான்! "
- சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவரும், மாண்புமிகு தமிழக சுற்றுலாத்துறை அமைச்சருமான திரு. செ. ராஜேஷ்குமார்
The FCRA Bill is clearly aimed at targeting NGOs and minority institutions that are doing good work.
On one side, the RSS is receiving donations from foreign countries, while on the other, the government is trying to target minorities and NGOs.
We demand that the government should withdraw this Bill.
: Congress General Secreatry (Org.) Shri @kcvenugopalmp in Lok Sabha
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தலைவர் பாரத ரத்னா திரு. ராஜீவ்காந்தி அவர்களின் 82 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடத்துவதென முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் தகவல் தொழில்நுட்பப் புரட்சியை உருவாக்கி, லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறுகிற சூழலை ஏற்படுத்தி இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்றவர் திரு. ராஜீவ்காந்தி. அவர் பிரதமராக இருந்த காலத்தில் இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் நோக்கத்தில், தேர்தலில் வாக்களிக்கும் வயதை 21 இல் இருந்து 18 ஆக குறைத்தார். கட்சித் தாவல் தடைச் சட்டத்தை நிறைவேற்றி தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நிலையாக நடப்பதற்கான வாய்ப்பை உருவாக்கியவர். தேசிய கல்விக் கொள்கையை வகுத்தவர். நாடு முழுவதும் கிராமப்புறங்களில் நவோதயா பள்ளிகளை தொடங்கியவர். அசாம், பஞ்சாப் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு கண்டவர்.
நாடாளுமன்ற, சட்டமன்றங்களுக்கு அடுத்த நிலையில், மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றுகிற பஞ்சாயத்துராஜ், நகர்பாலிகா அமைப்புகளை அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் உருவாக்கி, மக்களுக்கே அதிகாரம் என்ற கோட்பாட்டை உருவாக்கியவர். இதன் மூலம் அதிகாரத்தை பரவலாக்கி மக்கள் பங்கேற்கிற ஜனநாயகத்தை உருவாக்கிய பெருமை திரு. ராஜீவ்காந்தி அவர்களுக்கு உண்டு. தமிழக மக்களை அதிகமாக நேசித்த அமரர் ராஜீவ்காந்தி அவர்களின் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடுகிற நோக்கத்தில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நடத்த திட்டமிட்டுள்ள இக்கூட்டத்தில், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், வட்டார, நகர, பேரூர் காங்கிரஸ் தலைவர்கள் ஆகியோர் அவசியம் தவறாமல் பங்கேற்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் அமைப்பு பொதுச்செயலாளர் திரு. கே.சி. வேணுகோபால், அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் திரு. குலாம் அகமது மிர், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் திரு. நிவேதித் ஆல்வா, அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர் டாக்டர் ஏ. செல்லக்குமார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் திரு. கே.வீ. தங்கபாலு, திரு. சு. திருநாவுக்கரசர், திரு. கே.எஸ். அழகிரி, திரு. எம். கிருஷ்ணசாமி, திரு. கு. செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான திரு. எஸ். ராஜேஷ்குமார், உயர்கல்வித்துறை அமைச்சர் திரு. பெ. விஸ்வநாதன், முன்னாள் மத்திய அமைச்சர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், இந்நாள் - முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் பெருந்திரளாக பங்கேற்க உள்ளனர்.
தமிழ்நாடு அரசியலில் திரு. ராஜீவ்காந்தி அவர்கள் கண்ட கனவை நினைவாக்கும் வகையில் எதிர்கால செயல் திட்டங்களை வகுத்து காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்துகிற வகையில் பல்வேறு கருத்துகளை விவாதிப்பதற்காக இக்கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெறுகிற வகையில் அனைவரும் தவறாமல் பங்கேற்று ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
We don’t want Amit Shah’s lecture. We want answers.
• Who shot our students?
• Who ordered it?
• Who blinded one student?
• Who ordered lathis with nails to be used?
That order came from the Home Ministry. Did Mr. Amit Shah give the order to shoot our children or not? Either way, he must resign.
The truth is that Amit Shah’s image has already burst like a balloon; he simply doesn’t have the courage to come to Parliament.
: LoP Shri @RahulGandhi
மக்களவை உறுப்பினர்களின் தற்போதுள்ள எண்ணிக்கையான 543 என்ற அளவிலேயே நிரந்தரமாக வைக்க வேண்டும். இந்த தொகுதிகளின் அடிப்படையிலேயே பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை 2029ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கொண்டு வந்துள்ள, அரசின் தனித் தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி சார்பில் வரவேற்கிறேன், ஆதரிக்கிறேன்.
கடந்த ஏப்ரலில் நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் தோற்கடிக்கப்பட்ட ‘தொகுதி மறுவரையறை மசோதா”வை, நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் மீண்டும் கொண்டுவர ஒன்றிய பாஜக அரசு திட்டமிட்டு வருகிறது.
இந்த மசோதா சட்டமானால், மாநிலங்களுக்கு இடையிலான மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை வித்தியாசம் பல மடங்கு அதிகரிக்கும். இந்த போக்கை தடுத்து நிறுத்தத் தான் 1971 மக்கள் தொகை அடிப்படையில் தற்போதுள்ள 543 தொகுதிகளே நீடிக்க வேண்டுமென்ற வகையில் அன்று பிரதமராக இருந்த இந்திரா காந்தி, 1976 இல் அரசமைப்புச் சட்டத் திருத்தம் கொண்டு வந்து 2001 ஆம் ஆண்டு வரை நீட்டிக்க வேண்டுமென்று முடிவெடுத்தார். அதற்கு பிறகு 2001 ஆம் ஆண்டில் பிரதமராக இருந்த ஏ.பி.வாஜ்பாய் அவர்கள் இதே நிலையை இன்னும் 25 ஆண்டுகளுக்கு 2026 வரை நீட்டிப்பு செய்தார். ஆனால், தற்போதுள்ள நரேந்திர மோடி அரசு, மக்கள் தொகை பெருக்கத்திற்கு இணையாக மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டுமென்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. இதை நடைமுறைப்படுத்தினால் மாநிலங்களிடையே வேறுபாடு வளர்ந்து, சமநிலைத்தன்மை சீர்குலைந்து விடும்.
இந்த மசோதா சட்டமானால், ஒன்றிய அரசின் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி, மக்கள் தொகையைக் குறைத்த தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்களுக்குத் தண்டனை கொடுத்தது போலவும், மக்கள் தொகையைக் குறைக்காத வட மாநிலங்களுக்குப் பரிசு கொடுத்தது போலவும் ஆகிவிடும்.
உத்தரப் பிரதேசம் - தமிழ்நாடு இடையிலான தொகுதிகளின் எண்ணிக்கை வித்தியாசம், 41இல் இருந்து 62 ஆக அதிகரிக்கும். மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால், மாநிலங்களவை அதிகாரமற்றதாக மாறிவிடும்.
மக்களவையில் 815 எம்.பி.க்கள் இருந்தால், பெரும்பாலானோருக்குப் பேச வாய்ப்புக் கிடைக்காது. தனிப்பட்ட எம்.பி.யின் முக்கியத்துவம் குறைந்து, ‘ஒரு எம்.பி., ஒரு வாக்கு” என்பது அர்த்தமற்றதாகிவிடும்.
ஒட்டுமொத்தத்தில், தொகுதி மறுவரையறை சட்ட மசோதா, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் அரசியல் அதிகாரத்தைப் பறித்துவிடும். மாநில சுயாட்சி, ஜனநாயகம், சமூக நீதி, சமத்துவம், மதச்சார்பின்மை ஆகிய நம் இந்திய அரசியலமைப்பின் உயரிய நோக்கங்களைக் குழிதோண்டிப் புதைத்துவிடும்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த எந்தக் கட்சியாவது தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற நேரடியாகவோ, மறைமுகமாகவோ உதவினால், அது தமிழ்நாட்டிற்கு இழைக்கும் அநீதி, துரோகம். எனவே, அப்படிப்பட்ட கட்சிகளைத் தமிழ்நாட்டு மக்கள் ஒருநாளும் மன்னிக்க மாட்டார்கள்.
தமிழ்நாட்டின் உரிமைகளையும், இந்திய அரசியலமைப்பையும் அடகுவைத்து ஒன்றிய பாஜக அரசுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ உதவும் எவரும் வரலாற்றுப் பிழையிலிருந்து தப்பிக்கவே முடியாது.
தமிழ்நாட்டின் குரலாய், மக்களாட்சியின் காவலனாய் நாம் இறுதிவரை களத்தில் நிற்போம்.
தலைவர் திரு ப. மாணிக்கம் தாகூர், எம்.பி
#FreezeDelimitation
தமிழ்நாடு அரசின் தொகுதி மறுவரையறை எதிர்ப்புத் தீர்மானத்திற்கு காங்கிரஸ் ஆதரவு!
தொகுதி மறுவரையறை எதிர்ப்புத் தீர்மானத்திற்கு சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவரும், மாண்புமிகு தமிழக சுற்றுலாத்துறை அமைச்சருமான திரு. செ. ராஜேஷ்குமார் அவர்களின் உரை.
#FreezeDelimitation
Have you heard LoP Shri Rahul Gandhi’s podcast on Spotify yet?
If Govt in Parliament switches off one mic, there’s always another one! 🎙️
On Spotify, Rahul Gandhi ji brings his voice and views directly to people.
From his reflections on the corals and environment of the Andaman & Nicobar Islands, to his views on the Congress party’s role in India’s politics and its relevance today, and his take on the students’ protest - Rahul Gandhi ji is sharing his thoughts directly with people through his Spotify channel.
Tune in to listen his Resistance Podcast: [https://t.co/Gd4p8hFycU]
Link to Channel : [https://t.co/jnxRNeKDSk]
உணவு விநியோக தளங்களை விட வேகமாக டெலிவரி செய்யும் புதிய சாம்பியன் - மோடி-ஷா 'Bulldozer Raj'!
மக்களவையில் எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்க, எவ்வித விவாதமும் இன்றி 9 முக்கிய மசோதாக்களை வெறும் 52 நிமிடங்களில் "Fast Delivery" செய்துள்ளனர்.
மசோதாக்களும் அனுப்பப்பட்ட நேரமும்:
1. பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்த) மசோதா - 1 நிமிடம்
2. MSME வளர்ச்சி (திருத்த) மசோதா - 2 நிமிடங்கள்
3. வரி விதிப்பு மற்றும் பிற சட்டங்கள் (திருத்த) மசோதா - 2 நிமிடங்கள்
4. வங்கியாளர்களின் புத்தகச் சான்று மசோதா - 4 நிமிடங்கள்
5. தீர்ப்பாயங்கள் சீர்திருத்த மசோதா - 5 நிமிடங்கள்
6. உச்ச நீதிமன்ற (நீதிபதிகளின் எண்ணிக்கை) திருத்த மசோதா - 6 நிமிடங்கள்
7. கேரளா (பெயர் மாற்றம்) மசோதா - 9 நிமிடங்கள்
8. தேசிய கூட்டுறவு வளர்ச்சி கழக (திருத்த) மசோதா - 9 நிமிடங்கள்
9. தேசிய கவுரவத்தை அவமதிப்பதைத் தடுக்கும் (திருத்த) மசோதா - 14 நிமிடங்கள் (வந்தே மாதரம்)
தன் துறை சார்ந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும்போதும் 23 நாட்களாக பாராளுமன்றம் வராமல் @AmitShah , கேள்விகளுக்கு பதிலளிக்க பயந்து பிரதமர் @narendramodi ஒளிந்து கொண்டு, எந்த விவாதமுமின்றி மசோதாக்களை நிறைவேற்றும் இந்த மோடி-ஷா அரசின் சர்வாதிகார ஆணவப்போக்கு உடனடியாக முறியடிக்கப்பட வேண்டும்; மக்கள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள், உங்களால் வெகுநாளைக்கு தப்ப முடியாது, இதற்கெல்லாம் மக்களும் நிச்சயம் கேள்வி கேட்பார்கள்!
#BulldozerRaj #DemocracyUnderAttack
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திரு. திருநாவுக்கரசர் அவர்கள் இன்று புதுதில்லியில் சந்தித்தார்.
@ThiruArasarINC
Delhi: Congress MP Manickam Tagore says, "The Tamil Nadu Congress Committee supports the resolution passed by the Tamil Nadu Government and the Assembly. It was a unanimous decision by the Assembly, and we all support it. We request the Union Government to also be very sensible. There is strong opposition to the FCRA Bill. When they tried to introduce it during the Budget Session itself, it was opposed..."