கையாலாகாத மோடி அரசின் பாதுகாப்பு அலட்சியமின்மை காரணமாக காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலுக்குள்ளாகி பலியான 28 ஆன்மாக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் சென்னையில் நடைபெற்ற அமைதி பேரணியில் தமிழ்நாடு காங்கிரஸின் SC துறை தலைவர் ரஞ்சன் குமார் கலந்து தீப்பந்தம்
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜாதிய பகைமையுடன் சக மாணவர்களால் தாக்கப்பட்ட திருநெல்வேலியை சேர்ந்த சின்னதுரை உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,
தமிழ்நாடு காங்கிரஸ்
SCதுறையின் தலைவர் திரு.M.P.ரஞ்சன்குமார் அவர்கள் நேரில் சென்று ஆறுதல் கூறி உதவி தொகை 50000 வழங்கிய கையோடு,
மாண்புமிகு
சுகாதாரதுறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்களை தொடர்பு கொண்டு உயர்தர சிகிச்சைக்கு உதவியதோடு உலகதரம் வாய்த்த நரம்பியல் மருத்துவர்களை திருநெல்வேலி மருத்துவமனைக்கே அழைத்து,
சின்னதுரைக்கு தமிழ்நாடு அரசின் உதவியோடு சிகிச்சை அளிக்கப்பட்டது..
தற்போது மீண்டும் சின்னதுரை தாக்குதலுக்குட்பட்ட செய்தி அறிந்து நேரில் சென்று விசாரித்த போது தற்போது நடைபெற்றது ஜாதிய ரீதியான தாக்குதல் இல்லை என்றும் இன்ஸ்டாகிராம் செயலி மூலம் பணம்பறிக்கும் கும்பல் திருமண பத்திரிகை வைக்க அழைத்தது போல் அழைத்து அவரை தாக்கி உள்ளனர் என்று தெரியவந்தது.. ,
தாக்குதலுக்குட்பட்ட சின்னதுரைக்கு நிதி உதவி ரூபாய் 250000 வழங்கி திருநெல்வேவி மாவட்ட கமிஷ்னரை நேரில் சந்தித்து சின்னதுரையை தாக்கியவர்களை சட்ட ரீதியாக தண்டிக்கவும் சின்னதுரைக்கு பாதுகாப்பு வழங்கிடவும் தமிழ்நாடு காங்கிரஸ் SC துறையின் தலைவர்
திரு.M.P. ரஞ்சன்குமார் அவர்கள் வலியுறுத்தினார்.. ,
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜாதிய பகைமையுடன் சக மாணவர்களால் தாக்கப்பட்ட திருநெல்வேலியை சேர்ந்த சின்னதுரை உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் SC துறை தலைவர் ரஞ்சன் குமார் நேரில் சென்று ஆறுதல் கூறி உதவி தொகை 50000 வழங்கிய கையோடு சுகாதார துறை அமைச்சர் மாண்புமிகு மா.சுப்பிரமணியன் அவர்களை தொடர்பு உயர்தர சிகிச்சைக்கு உதவியதோடு உலகதரம் வாய்த்த நரம்பியல் மருத்துவர்களை திருநெல்வேலி மருத்துவமனைக்கே அழைத்து சின்னதுரைக்கு தமிழ்நாடு அரசின் உதவியோடு சிகிச்சை அளிக்கப்பட்டது..
தற்போது மீண்டும் சின்னதுரை தாக்குதலுக்குட்பட்ட செய்தி அறிந்து நேரில் சென்று விசாரித்த போது தற்போது நடைபெற்றது ஜாதிய ரீதியான தாக்குதல் இல்லை என்றும் இன்ஸ்டாகிராம் செயலி மூலம் பணம்பறிக்கும் கும்பல் திருமண பத்திரிகை வைக்க அழைத்தது போல் அழைத்து அவரை தாக்கி உள்ளனர் என்று தெரியவந்தது..
தாக்குதலுக்குட்பட்ட சின்னதுரைக்கு நிதி உதவி ரூபாய் 250000 வழங்கி திருநெல்வேவி மாவட்ட கமிஷ்னரை நேரில் சந்தித்து சின்னதுரையை தாக்கியவர்களை சட்ட ரீதியாக தண்டிக்கவும் சின்னதுரைக்கு பாதுகாப்பு வழங்கிடவும் தமிழ்நாடு காங்கிரஸ் SC துறை தலைவர் ரஞ்சன் குமார் வலியுறுத்தினார்.. உடன் தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் தலைவர் சின்னதம்பி, திருநெல்வேலி மாவட்ட SC துறை தலைவர் சரவணன் இராமநாதபுரம் மாவட்ட SC துறை தலைவர் லாந்தை ராஜா, கன்னியாகுமரி மாவட்ட SC துறை தலைவர் கிறிஸ்டோபர், நாகர்கோயில் மாவட்ட SC துறை தலைவர் மணிகண்டன், வட சென்னை மாவட்ட SC துறை தலைவர் சரத் மற்றும் பலர் உடன் இருந்தனர்..
தலீத் மாணவன் சின்னதுரை மீண்டும் தாக்கப்பட்ட செய்தி அறிந்து நேரில் சென்று ஆறுதல் கூற திருநெல்வேலி செல்லும் போது திருச்சி மாவட்ட SC துறை தலைவர் சிவசாமி அவர்கள் SC துறை நிர்வாகிகளுடன் மறியாதை நிமிர்த்தமாக என்னை சந்தித்த போது..
அரசமைப்புச் சட்டத்தை வழங்கிய அண்ணல் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களை நாடாளுமன்றத்தில் இழிவுபடுத்தி பேசியதோடு, தமிழ்நாட்டின் நலன்களுக்கு விரோதமாக செயல்படுகிற சர்வாதிகார, பாசிச போக்கு கொண்ட ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களின் சென்னை வருகையையொட்டி, அவருக்கு எதிராக சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ., அவர்கள் தலைமையில், சென்னை மைலாப்பூர், டாக்டர் அம்பேத்கர் பாலம் அருகில் கருப்புக்கொடி ஏந்தி, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் இயக்க சீரமைப்பு மேலாண்மைக்குழு தலைவர் திரு. சா. பீட்டர் அல்போன்ஸ், தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி கொறடா திரு. அசான் மௌலானா MLA , பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் திரு துரை. சந்திரசேகர் தமிழ்நாடு காங்கிரஸ் துணை தலைவர்கள் திரு ஆ கோபண்ணா திரு சொர்ண சேதுராமன், Dr விஜயன் திருமதி இமயா கக்கன் திரு கீழானூர் ராஜேந்திரன், அமைப்பு செயலாளர் திரு ராம் மோகன் பொது செயலாளர்கள் திரு D செல்வம் திரு N.அருள் பெத்தையா திரு தளபதி பாஸ்கர், சிறுபான்மை துறை தலைவர் திரு முகமது ஆரிப், மீனவர் துறை தலைவர் திரு. J ஜோர்தான் ஜோசப், இலக்கிய பிரிவு தலைவர் திரு. பி எஸ் புத்தன், திரு. ரவீந்திரதாஸ் AICC உறுப்பினர் மாமன்ற உறுப்பினர்கள் முன்னணி அமைப்புகள் துறைகள் மற்றும் பிரிவுகள் தலைவர்கள் மற்றும் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்றனர்.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ., அவர்கள் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் அனைவரையும் காவல்துறை கைது செய்தனர்.
#GoBackAmitShah
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்றதிலிருந்தே தமிழ்நாட்டையும், தமிழர்களையும் ஜனநாயக விரோத திட்டங்கள் மூலம் வஞ்சித்து வருகிறது.
இந்தி திணிப்பு,
மும்மொழிக் கொள்கை,
புயல், வெள்ளம் பாதித்த தமிழ்நாட்டின் மாவட்டங்களுக்கு பேரிடர் நிதி ஒதுக்காதது,
தமிழ்நாட்டிற்கு பள்ளிக்கல்விக்காக ஒதுக்கிய நிதியை வழங்காமல் இருப்பது,
உயிர்கொல்லி நீட் தேர்வால் அன்றாடம் தற்கொலைகள் அதிகரித்து கொண்டுள்ளது, இந்த கொடிய தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்காதது,
மாநில திட்டங்களுக்கு ஒன்றிய நிதி ஒதுக்கீட்டில் பாராபட்சம் காட்டுவது,
தமிழ்நாட்டிலிருந்து அதிகமான ஜி.எஸ்.டி வரி வருவாய் கிடைத்த போதும் நியாயமாக கிடைக்க வேண்டிய நிதியை வழங்காமல் இருப்பது,
பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு நெருக்கடியை கொடுப்பது,
சென்னை மெட்ரோ 2ம் கட்டத்திற்கான நிதியை தாமதப்படுத்துவது,
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை, மகாத்மா காந்தி அவர்களது பெயரில் இருப்பதால் என்னவோ இத்திட்டதை முடக்க நினைக்கின்றது. அவ்வகையில் தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய ரூ.4,034 கோடியை தராமல் கிராமப்புற மக்களின் வாழ்வில் விளையாடுகிறது ஒன்றிய அரசு.
இதுபோன்ற காரணங்களால் தமிழ்நாட்டிற்கு ஏப்ரல் 6ஆம் தேதி வருகை தரும், பாரத பிரதமர் மோடியை கண்டித்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாவட்ட தலைவர்கள் மற்றும் எனது தலைமையில் சென்னையில் கருப்புகொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
@INCTamilNadu@INCIndia@RahulGandhi@kharge@girishgoaINC@SurajMNHegde
நாள்: 30.03.2025
ரம்ஜான் வாழ்த்துச் செய்தி
இஸ்லாமிய பெருமக்கள் கொண்டாடி வரும் ஈகைத் திருநாள் எனும் ரம்ஜான் பண்டிகையின் போது, மாதம் முழுவதும் உண்ணா நோன்பிருந்து இல்லாத ஏழைகளுக்கு கொடுத்து உதவி செய்து அவர்களின் வாழ்வில் ஏற்றம் பெறவும் இத்திருநாளை கொண்டாடி வருகிறார்கள்.
பன்முக கலாச்சாரத்தின் அடிப்படையில் இந்தியாவிற்கென்று ஒரு கருத்தியலை மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, டாக்டர் அம்பேத்கர் போன்றவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். இதற்கு சட்ட பாதுகாப்பு கொடுக்கிற வகையில் அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் அரசமைப்புச் சட்டத்தின்படி தான் ஆட்சி செய்ய வேண்டும். இதன்மூலம் சிறுபான்மை மக்களுக்கு மதசுதந்திரம் வழங்கப்பட்டிருக்கிறது.
சர்வதேச மதச் சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்தின் வருடாந்திர அறிக்கையில் இந்தியா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் மதச் சுதந்திரம் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. மதரீதியில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் மற்றும் பாகுபாடு தொடர்கிறது.
சர்வதேச மதச் சுதந்திர சட்டத்தின் கீழ், மத சுதந்திர மீறல்களுக்காக இந்தியாவை கவலைக்குரிய நாடாக அறிவிப்பதுடன், இத்தகைய மீறல்களில் ஈடுபடும் தனிநபர் மற்றும் அமைப்புகளுக்கு தடைவிதிக்கும் நடவடிக்கையை அமெரிக்க அரசு மேற்கொள்ள வேண்டுமென்று அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மத சிறுபான்மையினர் மீது பொது சிவில் சட்டம், வக்பு வாரிய சட்டம் ஆகியவற்றை திணித்து மிகப்பெரிய அச்சுறுத்தலை பா.ஜ.க. அரசு கடந்த 10 வருடங்களாக மேற்கொண்டு வருகிறது.
சிறுபான்மையினர் எதிர்கொள்கிற ஆபத்திலிருந்து அவர்களை பாதுகாக்க தலைவர் ராகுல்காந்தி அவர்கள் தலைமையில் நாடு முழுவதிலுமுள்ள மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகள் ஓரணியில் திரண்டு சிறுபான்மை மக்களின் உரிமைகளை காப்பார்கள். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை, அனைத்து மக்களையும் ஜாதி, மத, பேதமில்லாமல் சமமாக கருதுவது தான் மதச்சார்பின்மை என்பதை ரமலான் செய்தியாக தமிழக காங்கிரஸ் கட்சி கூற விரும்புகிறது.
எனவே, இந்த ரம்ஜான் பெருநாளில் அனைவருக்கும் கொடை வழங்கி, அவர்களுடன் உணவருந்தி மகிழும் இஸ்லாமிய பெருமக்கள், தங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும், ஏற்றமும் பெற வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் இனிய ரம்ஜான் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
பாஜக அரசு தனது கோடீஸ்வர நண்பர்களுக்கு ₹16 லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. குடும்பச் சொத்துரிமை, நிர்வாக ஒழுங்குமுறைத் தவறுகளுடன் இணைந்து இந்தியாவின் வங்கித் துறை நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளது. இந்தச் சுமை, இறுதியில் மன அழுத்தம் மற்றும் ஓய்வில்லா வேலை சூழ்நிலைகளைத் தாங்கும் இளைய ஊழியர்களால் சுமக்கப்படுகிறது.
ICICI வங்கியின் 782 முன்னாள் ஊழியர்கள் சார்பாக, ஒரு குழு நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் என்னைச் சந்தித்தது. பணியிட துன்புறுத்தல், கட்டாய இடமாற்றங்கள், NPA மீறுபவர்களுக்கு நெறிமுறையற்ற கடன்களை அம்பலப்படுத்தியதற்காக பழிவாங்கல் மற்றும் உரிய நடைமுறை இல்லாமல் பணிநீக்கம் போன்ற ஒரு தொந்தரவான போக்கை அவர்களின் கதைகள் வெளிப்படுத்துகின்றன. இரண்டு துயரமான நிகழ்வுகளில் இது தற்கொலைக்கு வழிவகுத்துள்ளது.
பாஜக அரசாங்கத்தின் தவறான பொருளாதார நிர்வாகத்திற்கு மனித உயிர் விலையாகிறது. இது நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான, நேர்மையாகப் பணிபுரியும் அலுவலர்களைப் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது மிகுந்த கவலைக்குரிய விஷயமாகும். இந்த தொழிலாள வர்க்கத்தினருக்கு நீதி கிடைக்கவும், பணியிட துன்புறுத்தல் மற்றும் சுரண்டலை முடிவுக்குக் கொண்டுவரவும் காங்கிரஸ் கட்சி இந்தப் பிரச்சினையை முழுமையாக, தீவிரமாக எடுத்துக் கொள்ளும்.
நீங்கள் ஒரு தொழில்முறை நிபுணராக இருந்து இதேபோன்ற அநீதியைச் சந்தித்திருந்தால், உங்கள் அனுபவத்தை,
https://t.co/F16BdGz5hW இல் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
திரு @RahulGandhi
இந்தி திணிப்பு, மாநிலங்களின் நிதிப் பகிர்வில் பாரபட்சம் மற்றும் தொகுதி மறுசீரமைப்பில் அநீதி இழைக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசை கண்டித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் திரு. @PChidambaram_IN எம்.பி., அவர்களின் கருத்துரை.
மாண்புமிகு @CMOTamilnadu திரு. @mkstalin அவர்களை இன்று (24.3.2025) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி திரு @SPK_TNCC காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவர் திரு. @MLARajeshKumar மற்றும் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுடன் சந்தித்து, வெள்ள நிவாரணப் பணிகளுக்காக எங்களது ஒரு மாத ஊதியத்திற்கான காசோலைகளை வழங்கினார்கள்.
இன்று, இந்தியாவின் எதிர்காலத்தையும் அதன் கல்வி முறையையும் அழிப்பதில் RSS ஈடுபட்டுள்ளது.
நமது கல்வி முறை ஆர்.எஸ்.எஸ்ஸின் கைகளுக்குச் சென்றால், நாட்டில் யாருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்காது, நாடு நாசமாகிவிடும்.
இன்று, இந்தியப் பல்கலைக்கழகங்களில் உள்ள அனைத்து துணைவேந்தர்களும் ஆர்.எஸ்.எஸ்ஸால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். வரும் காலங்களில், மாநிலப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களும் ஆர்.எஸ்.எஸ்ஸால் தேர்வுசெய்யப்பட்டவர்கள்தான் நியமிக்கப்படுவார்கள்.
இது நாட்டிற்கு ஆபத்தானது, இதை நாம் தடுத்துநிறுத்த வேண்டும்.
: எதிர்க்கட்சித் தலைவர் திரு @RahulGandhi
📍 ஜந்தர்-மந்தர், டெல்லி
இன்று சத்தியமூர்த்தி பவனில்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்
திரு.#கு.#செல்வப்பெருந்தகை அவர்களையும்,
அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் திரு.#கிரிஷ்சோடங்கர் அவர்களையும்,
அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் தமிழ்நாடு பொறுப்பாளர்
திரு.#சுரஜ் #எம்.#என்.#ஹெக்டே அவர்களையும்,
தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. துறையின் தலைவர் #திரு.#M.#P.#ரஞ்சன்குமார் அவர்கள்
தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி.துறையின் அலுவலகத்திற்கு வரவேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது ....
தமிழ்நாட்டு நலன்களுக்கு விரோதமாக செயல்படும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடே கடும் கொந்தளிப்பில் இருக்கிறது. இந்தி பேசாத மக்களுக்கு பண்டித நேரு கொடுத்த வாக்குறுதியையும், சட்டப் பாதுகாப்பையும் மீறி தமிழகத்தின் மீது இந்தியை திணிக்கிற முயற்சிக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் 90 நாட்கள் கையெழுத்து இயக்கம் நடத்துகிற அண்ணாமலைக்கு வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் உரிய பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்.
தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA
வாழ்த்துச்செய்தி
அரசியல் களத்தில் நீண்ட நெடிய அனுபவம் பெற்றவரும், கட்சி பேதமின்றி பல்வேறு அரசியல் தலைவர்களுடன் நட்பு பாராட்டியவரும், எனக்கு தனிப்பட்ட முறையில் சிறந்த ஆலோசனைகளை வழங்குபவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான அண்ணன் திரு.கே.வீ.தங்கபாலு அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று தலைநகர் டெல்லியில்
*அகில இந்திய காங்கிரஸ் தலைவர்*
*திரு.மல்லிகார்ஜுன் கார்கே அவர்களை*
*தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி.துறை தலைவர்*
*திரு.M.P. ரஞ்சன்குமார்AICC* அவர்கள்*
மரியாதை நிமித்தமாக சந்தித்தபோது ....