ஒரு மனிதரை காலம் நம்மிடமிருந்து பிரிக்கலாம்… ஆனால் ஒரு சகாப்தத்தை ஒருபோதும் அழிக்க முடியாது.
பாக்யராஜ் என்ற பெயர் தமிழ் சினிமா இருக்கும் வரை ஒலித்துக்கொண்டே இருக்கும்.
இந்த பேரிழப்பை எதிர்கொண்டு நிற்கும் பூர்ணிமா ஆண்டி , சாந்தனு மற்றும் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். ஒரு கணவரையும், ஒரு தந்தையையும் இழந்த இந்த துயரத்தை எந்த வார்த்தைகளாலும் ஆற்ற முடியாது. இறைவன் உங்களுக்கும் உங��கள் குடும்பத்தினருக்கும் இந்த தாங்க முடியாத வேதனையை எதிர்கொள்ள மனவலிமையையும், அமைதியையும் அளிக்க பிரார்த்திக்கிறேன். #Bhagyaraj #RIPBhagyaraj Uncle 💔
ஐம்பது ஆண்டு காலம் தமிழ்த் திரையுலகில் தன் அசாத்தியமான திறமையாலும், படைப்பாற்றலாலும் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து, தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நண்பர் திரு. பாக்யராஜ் அவர்கள்.
அவருடைய திடீர் மறைவு எனக்கு மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது.
அவர் குடும்பத்தினருக்கும், சார்ந்தோருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்தியடையட்டும்.
#Bhagyaraj
திரைப்பட உலகின் முக்கிய தயாரிப்பாளரான ஆர்.பி. சௌத்ரி அவர்களின் மறைவு செய்தி மிகுந்த துயரத்தை அளிக்கிறது.
தமிழ் சினிமாவுக்கு அவர் செய்த பங்களிப்பு என்றும் மறக்க முடியாதது.
அவரது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள். 🙏🏻
என் அருமை நண்பர் சூப்பர் குட் ஃப்லிம்ஸ் ஆர்.பி. செளத்ரி அவர்கள் தலை சிறந்த தயாரிப்பாளர். அருமையான மனிதர். எத்தனையோ இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து திரையுலகை வாழவைத்தவர்.
அவருடைய அகால மரணச் செய்தி எனக்கு பேரதிர்ச்சியையும், மிகுந்த வேதனையையும் அளிக்கிறது.
அவர் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடையட்டும்🙏
#RBChoudhary
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு விஜய் அவர்களுக்கும், அவர் கட்சியினருக்கும் என்னுடைய வாழ்த்துகள். @TVKVijayHQ
ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் யாராலோ வெளியிடப்பட்டிருப்பது அதிர்ச்சியையும்,வேதனையையும் அளிக்கிறது.
திரை அமைப்புகள் இதற்கு எதிராகக் குரல் எழுப்பி, அரசு இதைச் செய்தவர்களைக் கண்டுபிடித்து கடுமையான தண்டனை அளிக்க வேண்டும்.
இது போன்ற குற்றம் இனியும் தொடரக்கூடாது.
What a film … #Dhurandhar2 !!! Aditya Dhar 🫡 box office -ka baap !!! Many congratulations to Ranveer and the entire cast and crew. A must watch film for every indian. Jai hind 🇮🇳
@AdityaDharFilms@RanveerOfficial
நம் இந்திய நாட்டின் பெரும் மதிப்புமிக்க ஞான பீட விருதைப் பெற்றிருக்கும் என் அருமை நண்பர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். @Vairamuthu#JnanpithAward