இன்று வெளியாகியிருக்கும் "ஹபீபி" திரைப்படம் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான திரைப்படம்.. நேற்று ஒருவர் #baharathiraja நம்மை பரிதவிக்கவிட்டு போனாரே அவருடைய விருப்பம் நல்ல சினிமாக்கள் தமிழில் உருவாகவேண்டும் என்பதே.. அந்த வகையில் இயக்குனர் @meerafilmdr தன்னை அந்த படைப்புக்காக முழுமையாக ஈடுபடுத்தி அற்புதமாக வெளிக்கொண்டு வந்திருக்கிறார்.. கால மாற்றம், பொருளாதாரச்சுமையில் ஒரு குடும்பம் இழக்கும் நிறைய விசயங்கள், பெண் விடுதலை இயல்பாகவே நடக்க ஆரம்பித்ததன் காரணம் படிப்பு என பல தரப்பட்ட விசயங்களை ஒரு இஸ்லாமிய பின்னணியில் இருந்து இயக்குனர் பேசியிருக்கிறார்.. படம் ஆரம்பித்த சிறிது நேரத்தில் நீங்கள் அந்த குடும்ப்பத்திலோ அந்த கிராமத்திலோ ஒருவர் ஆகிவிடுவீர்கள் என்பது நிச்சயம்.. திரையரங்கில் பார்த்து நல்ல திரைப்படம் நிறைய உருவாக பாதை போடுங்கள் மக்களே
@meerafilmdr
#Habeebi