பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டுமருந்து வழங்கும் சிறப்பு முகாம் வருகின்ற 28.06.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ளது.
சேலம், ஓமலூரில் உள்ள மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியில்12ம் வகுப்பு பயின்று JEE Mains மற்றும் Advance நுழைவுதேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்று சென்னை மற்றும் கேரள மாநிலம் பாலக்காடு IIT-யில் சேர்க்கை பெற்றுள்ள மாணவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
2025-26 ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களை சிறந்த மதிப்பெண்கள் பெறச்செய்து பள்ளியளவில் 100% தேர்ச்சி வழங்கிய பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை பாராட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.இளம்பகவத், இ.ஆ.ப., அவர்கள் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்கள்.
சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட அளவிலான வங்கிகளின் 2025-2026 நிதி ஆண்டிற்கான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.இளம்பகவத், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
சேலம் மாவட்டத்தில் தீவிர போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடத்துவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.இளம்பகவத், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில்,1435 பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.க.இளம்பகவத், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், 1435 பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.இளம்பகவத், இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்கள்.
#salem