பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டுமருந்து வழங்கும் சிறப்பு முகாம் வருகின்ற 28.06.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ளது.
சேலம், ஓமலூரில் உள்ள மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியில்12ம் வகுப்பு பயின்று JEE Mains மற்றும் Advance நுழைவுதேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்று சென்னை மற்றும் கேரள மாநிலம் பாலக்காடு IIT-யில் சேர்க்கை பெற்றுள்ள மாணவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
2025-26 ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களை சிறந்த மதிப்பெண்கள் பெறச்செய்து பள்ளியளவில் 100% தேர்ச்சி வழங்கிய பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை பாராட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.இளம்பகவத், இ.ஆ.ப., அவர்கள் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்கள்.
சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட அளவிலான வங்கிகளின் 2025-2026 நிதி ஆண்டிற்கான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.இளம்பகவத், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
சேலம் மாவட்டத்தில் தீவிர போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடத்துவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.இளம்பகவத், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில்,1435 பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.க.இளம்பகவத், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், 1435 பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.இளம்பகவத், இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்கள்.
#salem
சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், 1435 பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.இளம்பகவத், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
#salem
சேலம் மாவட்டத்தில், சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 வாக்குப்பதிவின்போது பயன்படுத்தப்பட்ட சின்னம் காட்டும் (VVPAT) இயந்திரங்களில் தெர்மல் காகித சுருள், முகவரி தாள்கள் நீக்கம் செய்யும் பணி மற்றும் காலாண்டு தணிக்கை நடைபெற்றது.
#salem
மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.ஆ.விஜய் தமிழன் பார்த்திபன் அவர்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் கருமந்துறை மலைவாழ் கிராமங்களான தலக்கரை மற்றும் பாச்சாடு கிராமங்களுக்கு புறநகர் பேருந்து வழித்தட நீட்டிப்பு சேவையினை தொடங்கி வைத்தார்கள்.
மாண்புமிகு மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர்
அவர்கள், மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் ஆகியோர் 31-வது இளங்கலை மருத்துவப் பட்டமளிப்பு விழாவில் 98 மாணவ, மாணவிகளுக்கு மருத்துவப் பட்டங்களை வழங்கினார்கள்.
#salem
சேலம் மாவட்டம், ஓமலூர் மற்றும் மேச்சேரி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.இளம்பகவத், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
#salem#inspection
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.இளம்பகவத், இ.ஆ.ப., அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டார்கள்.
#salem#inspection
சேலம் மாவட்டம் வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.இளம்பகவத், இ.ஆ.ப., அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டார்கள்.
#salem#inspection
சேலம், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.இளம்பகவத், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
#salem
சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், தோரமங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் அரசு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.இளம்பகவத், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
#salem
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.இளம்பகவத், இ.ஆ.ப., அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டார்கள்.
#salem#inspection