கல்வி நிலையங்களில் அறிவியல் கருத்துக்களை மட்டுமே கற்பிக்க வேண்டும்; பகுத்தறிவுக்கு எதிரான, முட்டாள்த்தனமான கட்டுக்கதைகளை பரப்பும் இடமாக கல்விக்கூடங்கள் ஒருபோதும் இருக்கக்கூடாது. இதற்கு மாறான நிகழ்ச்சிகளை நடத்துவதோ, இதற்கு எதிராக பேசுபவர்களை சிறப்பு விருந்தினர்களாக அழைத்தாலோ இந்த அரசின் REACTION கடுமையாக இருக்கும்! கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள்
#DMK4TN
மக்களால் எளிதில் அணுகக்கூடிய - எல்லோருடைய குறைகளையும் காது கொடுத்துக் கேட்டுத் தீர்வுகாணக் கூடிய நமது #DravidianModel அரசில், எனது நேரடிக் கட்டுப்பாட்டில், திருமிகு. அமுதா இ.ஆ.ப., அவர்களது தலைமையில் மக்களின் குறைகளைக் களைந்து - ஏற்றத்துக்கு முதற்படியாய் விளங்குகிறது #முதல்வரின்_முகவரி துறை!
பொதுமக்கள் இந்தத் திட்டத்தினைச் சிறப்புறப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
பாசிசத்தின் எதிரி கம்யூனிசம்.
கம்யூனிசத் தோழர் ஸ்டாலின்.
பாசிசத்தை வீழ்த்தும் வலிமை ஸ்டாலினுக்கு உண்டு.
இந்த வரலாறு தொடரும்..
கம்யூனிச தத்துவத்தை வழங்கிய கார்ல் மார்க்ஸ் பிறந்தநாள் இன்று (மே 5)
சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில், பல்கலைக்கழகங்கள், சுயநிதி பொறியியல் கல்லூரிகள் கூட்டமைப்பு, தனியார் கலைக் கல்லூரிகள் கூட்டமைப்பு, அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளின் சார்பில் மாநில சுயாட்சி நாயகருக்கு மகத்தான பாராட்டு விழாவில் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களுக்கு சுயநிதி பொறியியல் கல்லூரிகள் கூட்டமைப்பின் சார்பில் வெள்ளியிலான செங்கோல் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.
இன்று பிறந்தநாள் காணும் திருப்பூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சருமான அன்புச் சகோதரர் திரு@mp_saminathan அவர்களுக்கு இனிய நல்வாழ்த்துகள்!
உடன்பிறப்பே,
“நாடு போற்றும் நான்காண்டு - தொடரட்டும் பல்லாண்டு” என நமது #DravidianModel அரசின் சாதனைகளை எட்டுத் திக்கும் எடுத்துச் செல்வோம்!
2026-இல் மக்கள் ஆதரவுடன் மாபெரும் வெற்றியைப் பெற்றிட ஜூன் 1-ஆம் நாள் மாமதுரையில் கூடுவோம்!
The terrorist attack in #Pahalgam, Jammu and Kashmir, that targeted innocent tourists and claimed multiple precious lives is a barbaric act that shocks the conscience. It deserves the strongest condemnation. My thoughts are with the bereaved families.
I am deeply saddened to learn that victims include people from Tamil Nadu. I have directed the Resident Commissioner in Delhi to coordinate with J&K authorities and ensure all necessary assistance to the families of those affected.
தமிழ்நாட்டின் அறிவுசார் சொத்துரிமையைப் பாதுகாத்து பேணிக்காக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
69 பொருட்களுக்குப் புவிசார் குறியீடு பெற்று இந்திய அளவில் தமிழ்நாடு 2-வது இடத்தில் உள்ளது.
பெருமைமிகு தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்றைய கேள்வி நேரத்தின் போது,
🏑விளையாட்டு வீரர்களுக்கு இந்த ஆண்டும் 3 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்படுமா?
🏑காவல்துறையில் விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டின்படி பணி வாய்ப்புகள் உறுதி செய்யப்படுமா?
🏑மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு பணி வாய்ப்புகள் வழங்கப்படுமா? என மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் @sinthanaivck அவர்கள் கேள்வி எழுப்பினார்.
📩“விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ், சென்றாண்டு 104 வீரர்களுக்கு அரசுத்துறை மற்றும் அரசுப் பொதுத்துறையில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், இந்த ஆண்டும் 100 வீரர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
📩காவல்துறையில் விளையாட்டு வீரர்களுக்கு #SportsmenReservation மூலம் ஏற்கனவே 11 பேருக்கு காவலர் பணி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டும் காவல்துறையில் விளையாட்டு வீரர்களுக்கு பணி வாய்ப்புகள் வழங்கப்படும். அதற்காக @SportsTN_ மூலம் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
📩முக்கியமாக மாற்றுத்திறனாளி வீரர்கள் 5 பேருக்கு சென்றாண்டு 3 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்ட நிலையில், இந்தாண்டு குறைந்தபட்சம் 25 மாற்றுத்திறன் வீரர் - வீராங்கனையருக்கு, பணி நியமன ஆணைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பதில் அளித்தோம்.
தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்கள், ஆடுகளத்தில் மட்டுமின்றி அனைத்து தளங்களிலும் வெற்றி பெற என்றும் துணை நிற்போம்.
தேர்வில் வெற்றி பெற்ற 57 மாணவர்களில் 50 மாணவர்கள் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகை பெற்றவர்கள். இதில் 18 பேர் நான் முதல்வன் உறைவிட பயிற்சி திட்டத்தால் பயன் பெற்றவர்கள் என்பதை நான் பெருமையோடு சொல்லிக்கொள்கிறேன்!
- சட்டப்பேரவையில், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள்
#நான்_முதல்வன்
#PahalgamTerroristAttack-இல் உயிரிழந்த அப்பாவி பொதுமக்களுக்குத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் மௌன அஞ்சலி செலுத்தினோம்!
We observed a two-minute silence in memory of the victims of the #PahalgamTerroristAttack in the Tamil Nadu Legislative Assembly.
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.@Udhaystalin அவர்கள், தமிழ்நாடு சட்டப்பேரவையில், இன்றைய தினம், ‘நான் முதல்வன்’ போட்டித்தேர்வுகள் பிரிவு தொடங்கப்பட்ட பிறகு, தமிழ்நாட்டு இளைஞர்கள் ஒன்றிய அரசு குடிமைப்பணிகள் தேர்வுகளில் வெற்றி பெற்று வரும் எண்ணிக்கை உயர்ந்து வருவது தொடர்பாக உரையாற்றினார்கள்.
காஷ்மீர் பஹல்காம் பகுதியில் அப்பாவி சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்டுள்ள பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனத்தையும், அதில் உயிர் இழந்த அனைவரின் குடும்பத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
- சட்டப்பேரவையில் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்
#PahalgamTerrorAttack
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு@mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, சென்னை இரயில்வே கோட்டத்தின் வளர்ச்சி நடவடிக்கை மற்றும் பயணிகள் வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக தென்னக இரயில்வே அலுவலகத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றபோது...
உடன் கழகப் பொருளாளரும் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான திரு.டி.ஆர்.பாலு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு@dmkathiranand திரு @gselvam_mp, திரு@s_kanth, மாநிலங்களவை உறுப்பினர்கள் திரு.@rgirirajanmp , @DrKanimozhiSomu, தென்னக இரயில்வே பொது மேலாளர் திரு.ஆர்.என்.சிங் மற்றும் கழகமுன்னணியினர்…
#WorldBookDay2025:
புத்தகங்கள் - புதிய உலகிற்கான திறவுகோல்கள். நாம் வாழ்ந்து பார்க்காத வாழ்க்கை, நாம் சந்திக்காத மனிதர்கள், நாம் பார்த்திராத காலம் என அனைத்தையும் நமக்கு அறிமுகப்படுத்தும் நல்ல நண்பன்தான் புத்தகங்கள்.
அதனால்தான், சென்னை, மதுரையைத் தொடர்ந்து கோவை, திருச்சியிலும் தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர் பெயரில் மாபெரும் நூலகங்களை எழுப்பி வருகிறோம்.
மாவட்டந்தோறும் புத்தகக் காட்சிகள், இலக்கியத் திருவிழாக்கள், சொற்பொழிவுகள் என வாசிப்புப் பழக்கத்தைத் தீவிரமாக நமது #DravidianModel அரசின் சார்பில் ஊக்குவித்து வருகிறோம்.
"புத்தகத்தில் உலகைப் படித்தால் அறிவு செழிக்கும்; உலகத்தையே புத்தகமாய்ப் படித்தால் அனுபவம் தழைக்கும்!"
கழக இளைஞரணிச் செயலாளரும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சருமான திரு@Udhaystalin அவர்களின் இல்ல உதவியாளர் அன்புத் தம்பி திரு.த.பாலன் அவர்களின் இல்லத் திருமண வரவேற்பு விழாவில் கலந்துகொண்டு, மணமக்களை வாழ்த்திய இனிய நிகழ்வில்…
தமிழ்நாடு சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு நேரத்தின் போது, ‘நான் முதல்வன்’ போட்டித்தேர்வுகள் பிரிவு தொடங்கப்பட்ட பின்னர், தமிழ்நாட்டு மாணவர்கள் UPSC தேர்வில் படைத்து வரும் சாதனைகள் குறித்து இன்று எடுத்துரைத்தோம்.
2016-க்கு முன்பு வரை தமிழ்நாட்டிலிருந்து ஆண்டுக்கு சராசரியாக 100 மாணவர்கள் வரை UPSC தேர்வில் வெற்றி பெற்ற நிலையில், 2016-க்குப் பிறகு இந்த எண்ணிக்கை படிப்படியாக குறைந்தது. 2020-2021-ல் 27 மாணவர்கள் மட்டுமே தமிழ்நாட்டிலிருந்து UPSC தேர்வில் வெற்றி பெற்றனர்.
இந்த நிலையை மாற்றிட மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் உத்தரவின்பேரில் 2023-ஆம் ஆண்டு நான் முதல்வன் போட்டித்தேர்வுகள் பிரிவு தொடங்கப்பட்டது. இதன் மூலம், Prelims-க்கு தயாராகும் 1000 மாணவர்களுக்கு மதிப்பீட்டு தேர்வின் மூலம் 10 மாதங்களுக்கு தலா ரூ.7,500 உதவித்தொகையும், Prelims-இல் வென்று Mains எழுத தயாராகும் மாணவர்களுக்கு தலா ரூ.25,000 உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.
இந்தத் தொடர் நடவடிக்கைகளின் காரணமாக, 2024-ஆம் ஆண்டு, தமிழ்நாட்டிலிருந்து 47 மாணவர்கள் UPSC தேர்வில் வெற்றி பெற்றார்கள். இது முந்தைய ஆண்டுகளை விட 30 சதவீதம் அதிகம்.
அதுமட்டுமல்ல, நேற்றைய தினம் வெளியான UPSC தேர்வு முடிவுகளில், 57 தமிழ்நாட்டு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில் 50 பேர் நான் முதல்வன் போட்டித் தேர்வு பிரிவின் கீழ் உதவித்தொகை பெற்றவர்கள். 18 பேர் நான் முதல்வன் உறைவிட பயிற்சித் திட்டத்தின் மூலம் பயன்பெற்றவர்கள் என்பது மகிழ்ச்சிக்குரியது.
Prelims, Mains தேர்வுகளில் வெற்றி பெறுவோர், தொடர்ந்து டெல்லியில் நடைபெறும் Personality Test-இல் வெற்றி பெற ஏதுவாக ரூ.50,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று இந்த ஆண்டு நிதி நிலையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர்கள் IAS, IPS, IFS தேர்வுகளில் அதிகளவில் வெற்றி பெற்றார்கள் என்ற வரலாற்றை நான் முதல்வன் திட்டம் நிச்சயம் மீண்டும் நிலைநாட்டும்.
இன்னும் அதிக எண்ணிக்கையில் நம் மாணவர்கள் ஒன்றிய அரசின் குடிமைப்பணிகள் தேர்வில் வெற்றி பெற அயராது உழைப்போம் என்று உரையாற்றினோம்.
#NaanMuthalvan #நான்_முதல்வன்
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளை நியமன முறையில் தேர்வு செய்வதற்கான சட்ட முன்வடிவை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் சட்டப்பேரவையில் அண்மையில் அறிமுகம் செய்த நிலையில், அதற்காக டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் @Deepak_TMN உள்ளிட்ட மாற்றுத்திறனாளி சகோதரர்கள் இன்று நம்மை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்கள்.
திராவிட மாடல் அரசின் நடவடிக்கையால், உள்ளாட்சி அமைப்புகளிலும் மாற்றுத்திறனாளிகளின் குரல் ஓங்கி ஒலிக்கவிருக்கிறது.
மாற்றுத்திறனாளி தோழர்கள் தங்களுடைய உரிமைக்காக மட்டுமின்றி ஒட்டுமொத்த சமூகத்துக்குமான மேன்மைக்கு குரல் கொடுக்கப்போவதில் மகிழ்கிறோம்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வழியில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் என்றும் மாற்றுத்திறனாளிகளின் ஏற்றத்துக்கு உழைப்போம்.
கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு@mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் ரூ.1.60 கோடி மதிப்பீட்டில், சென்னை கிழக்கு மாவட்டம் துறைமுகம் சட்டமன்ற தொகுதி, பகுதி 5ல் பணிமனை 57ல் உள்ள டேவிட்சன் சாலையில் 33/11 KV துணை மின் நிலையம் மற்றும் மின் மாற்றி அமைக்கும் பணிகளை, மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழும அமைச்சர் திரு@PKSekarbabu அவர்களுடன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்த நிகழ்வில்… உடன் பகுதிக் கழகச் செயலாளர்கள் திரு.எஸ்.முரளி, திரு.எஸ்.ராஜசேகர், மண்டலக் குழுத் தலைவர் திரு.ப.ஸ்ரீராமுலு, வட்டக் கழகச் செயலாளர் திரு.ராமமூர்த்தி, மாமன்ற உறுப்பினர்கள் திரு.ராஜேஷ் ஜெயின், திரு.வி.பரிமளம் மற்றும் கழக முன்னணியினர் …